ஆரோக்கியம் & நல்வாழ்வு என்ற பேஸ்புக் பக்கத்தில் செல்வினை தொடர்பு கொண்டால் உங்களுக்கு உதவுவார்.
இது ஒரு பதிவர் அறிமுகம்.
நான் ஒரு சிறந்த பதிவரை எல்லாம் அறிமுகப்படுத்தப் போவதில்லை. அது மொக்கை என எனக்கும் தெரியும். இது வரை பதிவெழுதியவர்களும் எழுதப் போகிறவர்களும் மெத்தப் படித்தவர்கள் அல்லது சுமாராகவாவது படித்தவர்கள்.
ஆனால் போலி பன்னிக்குட்டி என்ற பெயரில் எழுதும் இவர் பள்ளிக்கூடம் சென்றது மூன்றாவது வரை மட்டும் தான். படிக்க பிடிக்காமல் அழுது அடம் பிடித்து அதன் பிறகு பள்ளிக்கே செல்லாமல் ஒரு டெய்லர் கடையில் வேலைக்கு சேர்ந்து தொழில் கற்று படிப்படியாக உயர்ந்து சொந்தமாக டெய்லர் கடை வைத்து நான்கு பேருக்கு வேலை கொடுக்கிறார்.
தமிழ் படிக்கத் தெரியாது. ஆனாலும் கவிதையில் மேல் ஆர்வத்தால் மற்றவர்களை படிக்கச் சொல்லி கேட்டு ரசிப்பார். இப்போ தனது கவிதைகளையும் இணையத்தில் பிரசுரிக்க முடியும் என சென்ற பதிவர் சந்திப்பிற்கு வந்த போது அறிந்ததால் தனக்கென தனி வலைப்பக்கம் துவக்கித்தரச் சொல்லி வற்புறுத்தியதால் துவக்கிக் கொடுத்தேன்.
இப்போ தினம் ஒரு கவிதையை யோசித்து வந்து தட்டச்சு செய்து தரச்சொல்லி வற்புறுத்தி பதிவிடுகிறார். அவரது எல்லாப்பதிவுகளையும் நான் தான் தட்டச்சு செய்கிறேன். அது மொக்கை என எனக்கு தெரிந்தாலும் அவரது ஆர்வத்தினை கெடுக்க விரும்பாமல் நான் தலையிடுவதில்லை.
அவர் என்ன சொல்கிறாரோ அப்படியே பதிவிடுகிறேன். அதனை படிக்கச் சொல்லி கேட்டு ரசித்து பெருமிதப்பட்டுக் கொள்கிறார்.
கன்னாபின்னாவென்று உயர் படிப்புகளை படித்து விட்டு வந்து பதிவெழுதுகிறேன் என்று படிப்பவர்களை கொல்லும் எவ்வளவோ பேர்களை விட ஏன் என்னையும் விட (ஆமாம் இவரு பெரிய இவரு) போலி பன்னிக்குட்டி மெச்சத்தக்கவர் தான்.
அவரது வலைத்தளம் http://adhithyarb.blogspot.com/
இந்த பதிவுகில் தவிர்க்க முடியாத, அனைவருக்கும் தெரிந்த ஒரு பதிவர் உண்டென்றால் அது திண்டுக்கல் தனபாலன் தான். எந்த புது பதிவரின் பதிவாக இருந்தாலும் சரி நன்கு அறியப்பட்ட பதிவரின் பதிவாக இருந்தாலும் சரி. முதலில் படித்து கமெண்ட் இடுபவர் தலைவர் தான்.
பதிவுலகம் பக்கம் வந்த எல்லோருக்கும் ஆரம்பத்தில் இந்த பழக்கம் இருந்திருக்கும். போகப் போக இதனை யாருமே செய்ய மாட்டார்கள். ஆனால் விதிவிலக்காக இன்று வரை விடாமல் அனைத்து பதிவர்களின் பதிவுகளையும் விடாமல் படித்து கமெண்ட் இடுபவர் தனபாலன் தான்.
தங்களுக்கு என் பாராட்டுகளும் சிரம் தாழ்ந்த நன்றிகளும் தனபாலன் சார்.
ஆரூர் மூனா
முதலில் நன்றிகள் பல...
ReplyDeleteஅம்மா ஒரு வருடம் சென்னையில் இருக்க வேண்டும்...! (எப்பூடி..?)
நண்பருக்கு செய்யும் சேவைக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
இப்படி கோத்து விட்டா எப்படி. ஹி ஹி.
Deleteநன்றியோ நன்றி தனபாலன்
இதுக்கும் மொத வெட்டா
Deleteஅடடா, போலி பன்னிக்குட்டியை நாளை எனது கலர் பென்சிலில் அறிமுகப்படுத்தலாம்னு இருந்தேன்....
ReplyDeleteநல்ல விஷயமே படுத்துங்கள். உங்களால் முடிந்ததை செய்யவும்
Delete///கன்னாபின்னாவென்று உயர் படிப்புகளை படித்து விட்டு வந்து பதிவெழுதுகிறேன் என்று படிப்பவர்களை கொல்லும் எவ்வளவோ பேர்களை விட போலி பன்னிக்குட்டி மெச்சத்தக்கவர் தான். //
ReplyDeleteஆமாம் இவர் மிகவும் மெச்சதக்கவர்தான் காரணம் இவர் சுயமாக சிந்தித்து தன் கருத்தை வெளிப்படுத்த செய்கிறார், அவர் பதிவை படித்தேன் நன்றாகத்தான் இருக்கிறது. உங்கள் அறிமுகத்திற்கு நன்றி
குண்டாக இருந்தாலும் நீங்க ஒரு கருப்பு அஜீத்.
ReplyDeleteம்ம். அவர் பதிவு சென்று பார்த்தேன். உங்கள் சேவை அளப்பரியது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteபதிவை அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
புலி ஸாரி போலி பன்னிகுட்டிக்கும், திண்டுக்கல் தனபாலுக்கும் எனது மனமார நன்றிகளும் வாழ்த்துகளும்...
ReplyDeleteஉடம்பு கன்னா பின்னான்னு ஏறிக்கிட்டே போகுதே உடல் வெயிட்டை குறைக்கனும் என்ன செய்யலாம்ன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கும்போது எனக்கு பயனுள்ள தகவலை சொல்லி இருக்கீங்க, போய் பார்த்து முயற்சி செய்து பார்க்குறேன். வெயிட் குறையுதான்னு!!?? பகிர்வுக்கு நன்றி செந்தில்
ReplyDelete