சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Saturday, November 2, 2013

பாண்டிய நாடு - சினிமா விமர்சனம்

ரவுடிகள் சூழ்ந்த ஊரில் பயமின்றி நண்பர்களுடன் பொழுதை கழித்து நாயகியுடன் காதல் செய்து குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை என்றதும் ஆக்சன் அவதாரம் எடுக்கும் தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் கதை தான். ஆனால் திரைக்கதையில் பழைய படங்களின் சாயல் செய்ததில் வித்தியாசப்பட்டு நிற்கிறார்கள்.


படத்தின் ஆகச்சிறந்த பலம் பாரதிராஜா தான். என்னா நடிப்பு, மனிதர் பிச்சு உதறியிருக்கிறார். இது போன்ற பாத்திரங்களில் இனி கவனம் செலுத்தினால் இயக்கத்தைப் போல் நடிப்பிலும் உச்சத்தை அடையலாம். மகன் இறந்ததும் தப்பாக கொடுக்கப்பட்ட இறப்பு சான்றிதழில் கையெழுத்து போட மறுத்து பொங்கி அழும் காட்சியிலும் மகனை கொன்றவர்களை கூலிப்படை வைத்தாவது கொல்ல வேண்டும் என்று செயலில் இறங்கும் போதும் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.

ரவுடிகளால் ஆளப்படும் மதுரையில் ஒரு மிடில் கிளாஸ் குடும்பம். குடும்பத் தலைவர் பாரதிராஜா. இளைய மகன் விஷால் ஒரு செல்போன் கடை வைத்துக் கொண்டு, காமெடிரவுடி அடித்தால் கூட அடியை வாங்கிக் கொண்டு செல்லும் சாதுவான பையன். மூத்த மகன் சுரங்கத் துறையில் அதிகாரி. ஒரு பிரச்சனையில் பெரிய ரவுடியின் கனிம சுரங்கத்தை சீல் வைக்கிறார்.


கொதித்தெழும் ரவுடி விபத்து ஏற்பட்டது போல் அந்த பெரிய பையனை கொன்று விடுகிறார். மகனை கொன்றவர்களை பழி வாங்க கூலிப்படையினரைத் தேடி அலைகிறார் பாரதிராஜா. அப்பாவுக்குத் தெரியாமல் ரவுடியை கொல்ல பின் தொடர்கிறார் விஷால். பல மாதங்கள் காத்திருப்புக்கு பிறகு வில்லனை கொன்று குடும்பத்தையும் ஊரையும் காப்பாற்றுகிறார் விஷால்.

விஷாலுக்கு இந்த நேரத்தில் முக்கியமான படம் இது. கொஞ்சம் கூட ஹீரோயிசம் காட்டாமல் இயல்பான இளைஞனாக வருகிறார். பஞ்ச் டயலாக் கிடையாது. அதிரடி அறிமுகம் கூட கிடையாது. கடைசி நிமிடத்தில் ஆக்சன் அவதாரம் எடுக்கும் போது பின்னி எடுக்கிறார்.


லட்சுமி மேனன் அம்சமாக இருக்கிறார். புடவை கட்டும் விதத்திலும் சரி, மேக்கப்பிலும் சரி. அதே போல் அடக்கமாக நடிக்கவும் செய்கிறார். இடைவேளைக்கு பிறகு தான் கதையின் தேவை கருதி காணாமல் போகிறார்.

சூரியின் காமெடிகள் சில இடத்தில் எடுபடுகின்றன. நகைச்சுவைக்கென்று மட்டும் இல்லாமல் கதையின் போக்குக்கு ஏற்ப சீரியஸாகவும் நடித்துப் போகிறார். நட்புக்காக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் விக்ராந்த். நன்றாக செய்திருக்கிறார்.

சிறு வயதில் ஒரு வில்லனை கண்டால் நாமும் கொல்ல வேண்டும் போல்  ஒரு எண்ணம் தோன்றும். சற்று மெச்சூர்ட் ஆன பிறகு அப்படி எந்த படத்திலும் தோன்றியதில்லை. ஆனால் இந்த படத்தில் வில்லனை நாமே கொல்ல வேண்டும் தோன்றியதில் நிற்கிறது படத்தின் வெற்றி.

பாடல்கள் நன்றாக இருக்கின்றன எடுக்கப்பட்ட விதத்திலும் கூட. படத்தில் ஆரம்பத்திலிருந்து சண்டை பிரச்சனை என்று காட்டாமல் சண்டை நடக்கப்போகிறது என்ற பெப்பை கிரியேட் பண்ணி க்ளைமாக்ஸ் வரை கொண்டு சென்றிருப்பது நன்றாக இருக்கிறது.

ஆல்இன்ஆல் அழகுராஜா பார்த்துட்டு பே..ன்னு முழிச்சிக்கிட்டு இருந்த என்னை பாண்டிய நாடு தான் மீட்டெடுத்தது.

கொளத்தூர் கங்கா தியேட்டர் காம்ப்ளக்ஸில் என்ன கொடுமை என்றால் ஆரம்பம் படத்துக்கும் ஆல்இன்ஆல் அழகுராஜா படத்துக்கும் ஹவுல்புல் பாண்டிய நாடு என்னுடன் திரையரங்கில் பார்த்தவர்கள் 50பேர் தான் இருக்கும், அதுவும் முதல்நாள் முதல் காட்சி அதுவும் சென்னையில்.

ஆரூர் மூனா

18 comments:

 1. அது சரி ஆல் இன் ஆல் அழகுராஜா விமர்சனம் எங்க அண்ணே?

  ReplyDelete
  Replies
  1. இன்னும் ஒரு மணிநேரத்துல போட்டுடுறேனே

   Delete
 2. காலையில 11.30 மணிக்கு விமர்சனம் வெளியிடப்படும்னு நீங்க சொல்லிட்டு காணாம போனதுமே நினைச்சேன்... ஏதாவது ஆபத்துல சிக்கியிருப்பீங்கன்னு.

  திருவாரூர்லயும் ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்துக்கு பத்தரை மணி வரை பெரிய கூட்டம் இல்லை. 11 மணிக்கு பெல் அடிச்சு படம் போட்டதும் ஹவுஸ்புல்னு கதவை சாத்திட்டாங்க. நான் அலுவலகத்துல வேலை பார்த்துகிட்டு இருந்ததால கார்த்தி ரசிகர்களோட பேண்டுவாத்திய குத்தாட்டத்தை எல்லாம் பார்க்க வேண்டியதாயிடுச்சு.

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க இரண்டு சினிமாவுக்கும் போயிட்டு வந்து வீட்டு வேலைகளை முடிச்சிட்டு டைப் பண்ண உக்காந்தா கரண்ட் போயிடுச்சி. அடப் போங்கடான்னு படுத்துட்டேன். இப்பத்தான் எழுந்தேன்

   Delete
 3. படம் பார்கனும்ய்யா...

  ReplyDelete
  Replies
  1. பாருங்கள், பார்த்து மகிழுங்கள்

   Delete
 4. வணிக சினிமா எல்லைக்குள்ளிருந்து கொண்டு ‘உலக சினிமாவுக்கு’ ஊரை தயார்படுத்தும் உத்தமர்கள் வரிசையில் நின்று விட்டார் இயக்குனர் சுசீந்திரன்.
  அந்த வரிசையிலேயே நிலை கொண்டு நிற்க வாழ்த்தி வரவேற்போம் சுசீந்திரனை.

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீர்கள் நன்றி பாஸ்கரன் சார்

   Delete
 5. Replies
  1. இத்தனை படத்தை பாத்ததே கண்ணைக்கட்டுது. இன்னொரு படமா

   Delete
 6. Replies
  1. நன்றி சதீஷ்

   Delete
 7. படம் நன்றாக இருந்தால் ஓடுமா? சமீபத்தில் ஆதலால் காதல் செய்வீர்,மூடர் கூடம் போன்ற படங்கள் காலி ஆனதை போல் இதுவும் ஆகாமல் இருக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. நானும் இதையேத்தான் நினைக்கிறேன்

   Delete
 8. பாண்டிய நாடு செழிப்பா இருக்குன்னு சொல்றீங்க! சரி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ்

   Delete
 9. Nalla vimarsanam koduthatharku nandri aarur muna anne

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஆறுமுகம்

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...