நான் கூட படம் பார்த்து விட்டு வந்து வெளியே கிர்ராகத்தான் திரிஞ்சேன். உடனே போய் விமர்சனம் அடிக்க கிளம்பினேன். அப்ப மணி 10.15. 10.30 மணிக்காட்சி பாண்டிய நாடு இருந்தது. வீட்டுக்கு போய் திரும்பவும் ஏன் திரையரங்கிற்கு வரணும் பேசாம இந்த படத்தையும் பாத்துட்டே போய்டலாமேன்னு நினைச்சேன்.
வீட்டம்மாவுக்கு போனைப் போட்டு பர்மிசன் கேட்டேன். "எது வேணும்னாலும் செஞ்சிக்க எனக்கு 1.30 மணிக்கு சாப்பாடு வந்துடனும்"னு மறைமுக அனுமதி கிடைத்தது. நண்பனுக்கு போனைப் போட்டு வீட்டில் எக்ஸ்ட்ரா சமைத்து டப்பாவில் போட்டு வைக்கவும் நான் வந்து எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு டிக்கெட் எடுத்துட்டு சினிமாவுக்கு போயிட்டேன்.
படம் முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தா ஆல்இன்ஆல் அழகுராஜாவை ஆளாளுக்கு கழுவி ஊத்தியிருக்காங்க. நான் அப்படியே ஷாக்காயிட்டேன். படம் மொக்கை தான், ஆனால் பார்க்க முடியாத அளவுக்கு சூர மொக்கை கிடையாது.
ஒருத்தர் கடுமையாக கலாய்த்து விமர்சனம் போட அடுத்தடுத்தவர்கள் அப்படியே தொடர்ந்து விட்டார்கள். நாங்க இதைவிட கடுமையான மொக்கையை எல்லாம் ஜஸ்ட் லைக் தட் கடந்து போனவர்கள், இந்த படமெல்லாம் எங்களுக்கு எம்மாத்திரம்.
எப்போதுமே ராஜேஷ் படங்களில் சொல்லிக் கொள்வது போல் நெஞ்சை நக்கும் கதையெல்லாம் இருக்காது. நல்லா நாலு சீன், சுமாரா ஆறு சீன் அதுக்கு பட்டி டிங்கரிங் பார்த்து ரசிக்கக் கூடிய படமாக எடுத்து விடுவார். இந்த படத்தையும் அப்படித்தான் எடுத்துள்ளார். ஆனால் பெரும்பாலான காட்சிகளை ரசிக்க முடியவில்லை. அதற்காக ஒரேடியாக ஒதுக்கி விட முடியாது.
அதற்கு மிக முக்கியமான காரணம் எம்எஸ் பாஸ்கர் காஜலின் நகைச்சுவை காட்சிகள். நான் பெரிய விமர்சகன், தரமான காட்சிகளைத்தான் ரசிப்பேன் என்றெல்லாம் தலையில் வைத்துக் கொள்ளாமல் சி கிளாஸ் ரசிகனாக என்னை மறந்து வாய் விட்டு சத்தமாக சிரித்தது அந்த காட்சிகளில் தான், நான் மட்டுமல்ல, அரங்கமே சிரித்தது.
படத்தின் பெரும் குறையாக தெரிவது கார்த்தி சந்தானம் சம்பந்தப்பட்ட நகைச்சுவை காட்சிகள் தான். அவர்கள் சிரிப்பு வரும் என்று எடுத்திருக்கிறார்கள். நமக்கு தான் வரவில்லை.
கார்த்தி ஒரு சிறுநகரத்தில் லோக்கல் சானலை நடத்திக் கொண்டு வருகிறார். அதில் சந்தானம் வேலை பார்க்கிறார். பக்கத்து ஊரைச் சேர்ந்த காஜலைக் கண்டதும் கார்த்திக்கு காதல் வருகிறது. அவரிடம் காதலை சொல்லி அவரை சம்மதிக்க வைக்க சிரமப்படுகிறார்.
ஒரு வழியாக காதலுக்கு காஜல் சம்மதம் தெரிவிக்கிறார். அப்பா அம்மாவான பிரபு சரண்யாவுடன் பொண்ணு பார்க்க செல்லும் போது காஜல் யார் வீட்டுப் பெண் என்பதை அறிந்த பிரபு திருமணத்திற்கு மறுக்கிறார். அதற்கு காரணத்தை பிளாஷ்பேக்கில் சொல்கிறார். அதுவும் இன்ட்ரஸ்ட்டாக இல்லை.
பிறகு உண்மைகள் தெரிந்து நாயகனும் நாயகியும் ஒன்று சேர்வதே படத்தின் முடிவு.
கார்த்திக்கு கண்டிப்பாக ஹிட் தேவைப்படும் நேரம் இது. வரிசையாக பிளாப்புகளாக வந்துக் கொண்டு இருக்கிறது. அவரும் சிரத்தை எடுத்து நடித்துக் கொடுத்து இருக்கிறார். காட்சியமைப்புகளில் சரக்கில்லாததால் எல்லாம் வீணாகிப் போய் விட்டது.
சந்தானம் சார், கொஞ்சம் கவனியுங்கள். இந்த படம் போல் இன்னும் ஐந்து படங்கள் கொடுத்தால் உங்கள் நிலைமையும் கவலைக்கிடமாகி விடும். அது என்ன அந்த கேவலமான சிரிப்பை ப்ளாஷ்பேக் முழுவதும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டுமா.
அதுவும் கரீனா சோப்ரா கதாபாத்திரமும் கோட்டா சம்பந்தப்பட்ட சீன்களும் கூட போரடிக்கத்தான் செய்கிறது. மக்களின் ரசனை மாறி விட்டது. ராஜேஷ் அவர்களே நீங்களும் மாறிக் கொள்ளுங்கள்.
காஜல் இந்த படத்துலயே உருப்படியான ஒரே பீஸூ. இந்த பொண்ணு மாதிரி எங்கூர்லயும் நிறைய பொண்ணுங்களை பார்த்து இருக்கிறேன். ஆங்கிலத்தில் ஒழுங்கா பேசத் தெரியாமல் பசங்க முன்னாடி பீ்ட்டர் விடும் என் பள்ளி கால தோழி நந்தினி கூட காஜல் வகையறா தான்.
எம்எஸ் பாஸ்கர் சாட்டையால் அடித்துக் கொண்டு பிச்சை எடுப்பவர். காஜலிடம் பெரிய பரத நாட்டிய குரு என்று கார்த்தி கோர்த்து விடுகிறார். பாஸ்கரும் அவர் சாட்டையை அடிக்கும் போது செய்யும் மேனரிசங்களை பரதநாட்டியம் என்று காஜலுக்கு கற்றுக் கொடுக்கிறார்.
அந்த காட்சிகளில் திரையங்கமே சிரித்து தெறிக்கிறது. உண்மை தெரிந்து காஜல் காட்டும் எக்ஸ்பிரசன்களும் சூப்பர். இதைத் தவிர நல்ல விஷயம் 80களின் சாயலில் உள்ள பாட்டு.
மற்றபடி மோசமான படம்லாம் சொல்ல முடியாது. யாராவது டிக்கெட் வாங்கிக் கொடுத்தா போய் பாத்துட்டு வாங்க.
ஆரூர் மூனா

'யாராவது டிக்கெட் வாங்கிக் கொடுத்தா போய் பாத்துட்டு வாங்க.'
ReplyDeleteசெம விமர்சனம்..!
நன்றி நண்பா
Deleteசொந்தகாசுல பார்த்தா வேஸ்ட்டுனு சொல்றிங்க. . . . ஆரம்பம், AAA, பாண்டியநாடு மூன்றையும் வரிசைபடுத்துங்கள்.
ReplyDeleteஅதான் நம்ம நண்பர்கள் பண்ணிட்டாங்களே, அது தான் என் வரிசையும் கூட
DeleteBoss nenga sona scenela kuda enaku siripe varala . Thala vali . Ella comedy padamum mokka vangum pothe doubt anen ethuvum apdithanu . Sontha kasulaye mayajaala soniyam vachukitan
ReplyDeleteசேம் பிளட்
Deleteஎப்பா யாராவது சீக்கிரமா டிக்கெட் எடுத்து தாங்கய்யா....
ReplyDeleteஅந்த அளவுக்கு தைரியம் யாருக்கும் இல்லைப்பா
Deleteஉங்களின் கடமையுணர்ச்சி வியக்கவைக்கிறது செந்தில்
ReplyDeleteபோட்டுத்தாக்குறீங்களே
Deleteபலதரப்பட்ட விமர்சனம் படிச்சேன் - துறு அப்படின்னு ஒரு குறும்படம் (வி சேதுபதி நடிச்சது)... அதையே பட்டி டிங்கரிங் பாத்தமாதிரி இருக்கு ? உண்மையா ?
ReplyDeleteஇருக்கலாம், நான் இன்னும் அந்த குறும்படத்தை பார்க்கலையே
Deleteசந்தானம் இந்த படம் போல் இன்னும் ஐந்து படங்கள் கொடுத்தால் உங்கள் நிலைமையும் கவலைக்கிடமாகி விடும்.
ReplyDeleteஇதையே தான் பல படங்களாய் எழுதி வருகிறீர்கள்.(ஒரு வேலை நீங்க இல்லையோ).ஆனால் சந்தானம் சரக்கு காலி ஆகிகொண்டிருக்கிறது உண்மை.
அதென்னமோ கரெக்ட்டு தான். இன்னும் கொஞ்ச நாள்ல சந்தானம்னு ஒரு காமெடி நடிகர் இருந்தார்னு நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை
Deleteசிறப்பான விமர்சனம்! நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Delete"காஜல் இந்த படத்துலயே உருப்படியான ஒரே பீஸூ. " - இதுக்காகவே உங்களை பாராட்டலாம்.. - அழகு காஜல் பாசறை, ஒன் அண்ட் ஒன்லி ஓணர்- பலசரக்கு..
ReplyDeleteரொம்ப வழியிறேனோ... ஹ்ம்ம்ம்ம்
ஆமா ஆமா தொடச்சிக்கங்க
Delete