முதலில் இந்த படத்திற்கு போக காரணமாக இருந்த பிலாசபி பிரபாகரனை கட்டிப் பிடித்து பாராட்டியே ஆகணும். இந்த வாரம் சொல்வது போல் படங்கள் வெளியாகவில்லை.
நவீன சரஸ்வதி சபதம் மொக்கை என்று டிரெய்லரிலேயே தெரிந்து விட்டது. ஜன்னல் ஓரம் மலையாளத்திலேயே ஓர்டினரியாக பார்த்தாகி விட்டது. வேறு பெரிய படங்கள் வரவில்லை.
அதனால் இந்த வாரம் படம் பார்க்கும் எண்ணம் இல்லை. நான் பாட்டுக்கு காலையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன். முக்கியமான வேலையில் இருந்த போது பிரபா போன் பண்ணி நாளை காலை 10 மணிக்காட்சி விடியும் முன் போகலாமா என்று கேட்டார்.
எனக்கு நாளை வேலையிருப்பதால் முடியாது என்று கூறினேன். ஆனால் படம் நன்றாக இருப்பதாக கூறி பார்க்க வருமாறு வற்புறுத்தினார். ஆனாலும் சாத்தியமில்லாததால் வரவில்லை. விஷயம் மட்டும் மனதை போட்டு குடைந்து கொண்டே இருந்தது.
வீட்டுக்கு வந்து சமைத்து வைத்து விட்டு மதில்மேல் பூனையாக அலை பாய்ந்து கொண்டு இருந்தேன். அப்புறம் உத அண்ணனின் விமர்சனம் வேறு படித்து தொலைத்தேனா, சட்டென்று முடிவெடுத்து திரையரங்கிற்கு கிளம்பினேன்.
வில்லிவாக்கம் ஏஜிஎஸ்ஸில் 3 மணிக்காட்சி. திரையரங்கிற்கு உள்ளே சென்று பார்த்தால் மொத்தமே 8 பேர் தான் அரங்கில் இருந்தனர். இவ்வளவு கம்மியான பேர் இருந்தாலும் படத்தை சரியான நேரத்தில் போட்ட ஏஜிஎஸ் பெருந்தன்மையானவர்கள் தான்.
பெரிய நடிகர்கள் இல்லை, அரங்கில் கூட்டம் இல்லை. ஒரு விமர்சனத்தை மட்டும் நம்பி வந்தது தப்பாயிடுமோ என்று ஒரு நிமிடம் நினைத்தேன். ஆனால் படம் துவங்கியதிலிருந்து முடிந்தது வரை ஒரு நிமிடம் கூட நம்மை சலிக்க செய்யவில்லை இயக்குனர்.
துவங்க நொடியில் நம்மை ஆட்கொண்ட பரபரப்பு இடைவேளையில் தான் முடிந்தது. இடைவேளை முடிந்ததும் மறுபடியும் படத்தில் பயணிக்கும் நாம் படம் முடிந்து தான் தரையிறங்குகிறோம். படம் வெற்றிபெறுமா என சந்தேகம் இருக்கிறது. ஆனால் சந்தேகமேயில்லாமல் சிறந்த படம்.
ஆரூர் மூனா
டிஸ்கி : எப்போதும் விமர்சனம் எழுதிவிட்டு படம் பார்த்த கதை போடுவேன். ஆனால் இந்த முறை முன்னாலேயே படம் பார்த்த கதை பதிவு போட்டு விட்டு விமர்சனம் போடலாம் என நினைத்து பதிவிட்டேன்.
/// 10 மணிக்காட்சி விடியும் முன் போகலாமா...? ///
ReplyDelete10 மணிக்கு தான் விடிகிறதா...? ஹிஹி...
அரே ஓம் சம்போ...!
நாலை பத்து மணிக்கு விடியுதேன்னு சந்தோசப்படுங்கண்ணா!
Deleteஅடடே வார்த்தை விளையாட்டு, பிரமாதம் நடத்துங்கள்
Deleteசீக்கிரம் விமர்சனம் போடுங்க பாஸ்
ReplyDeleteபோட்டாச்சு ராஜா
Deleteட்ரெய்லர் பாக்கும்போது அந்தக் குழந்தைக்கு என்ன ஆச்சோன்னு மனசு பதறுது. படம் பார்த்துட்டு சீக்கிரம் விமர்சனம் போடுங்க. என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்குறேன்.
ReplyDeleteபடிச்சிப் பாருங்க அக்கா
Delete