சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Thursday, November 21, 2013

பஞ்சேந்திரியா - வாகன விபத்தும், பூஸ்ட்டின் நம்பிக்கையும்

கொஞ்ச நாட்களாக பதிவு எழுதவே முடியவில்லை. வேலையில் பிரச்சனை ஒன்றும் கிடையாது. வீட்டில் தான் பயங்கர ஆணி, அதை புடுங்குறதுக்குள்ளயே நாள் முடிஞ்சிப் போயிடுது. இதுல எங்கேருந்து பதிவெழுதுறது.

இன்னிக்கி இதுக்குன்னே நேரத்தை ஒதுக்கிட்டு எழுத உக்காந்தேன். ஆனா பாருங்க, எழுத வரலை. என்ன கொடுமைடா இது. ஏதோ முயற்சி பண்ணி பார்த்ததுல சுமாரா வந்தது. இருந்தாலும் பரவாயில்லைன்னு கூட ரெண்டு பேஸ்புக் ஸ்டேட்டஸ் சேர்த்து வைத்து  போஸ்ட் பண்ணிட்டேன்.

----------------------------------------------------------------
 
முன்பு 90கிமீ வேகத்தில் அதுவும் சென்னையில் போய்க் கொண்டு இருந்த நான் எகப்பட்ட விழுப்புண்கள் வாங்கியதால் இப்பல்லாம் வண்டியில் நாற்பதை தாண்டுவதே இல்லை, ஆனாலும் சில சமயம் ஏதாவது ஆண்ட்டிகளோ அல்லது டீன்ஏஜ் பசங்களோ நம்மை விருட்டென முந்தி செல்லும் போது நமக்கு உச்சந்தலையில் நட்டுக் கொள்ளும்.

பிறகு நானும் அவர்களைப் போல் வேகமாக செல்வேன் ஏதாவது ஒரு திருப்பத்தில் பழைய விபத்துகள் நினைவுக்கு வரும், பிறகு அடக்கிக் கொண்டு பழைய மாதிரியே பொறுமையாக செல்வேன்.


 
நாலு நாட்களுக்கு முன்பு கோயம்பேடு சிக்னலில் காத்திருந்தேன். சிக்னல் விழுந்ததும் ஒரு யமஹா காரன் வண்டியை முடுக்கி சீறிக் கொண்டு பறந்தான். பார்க்கும் போதே சிக்கல் என்று தான் நினைத்தேன். அது போலவே லுகாஸ் கிட்ட பில்லரில் முட்டுக் கொடுத்துக் கொண்டு கிடந்தான்.

இரண்டு கையும் முறிந்திருந்தது. இந்த பயலுகளுக்கு எவ்வளவோ சொல்லியும் புரியமாட்டேங்குது. இனிமே எல்லாத்துக்கும் அடுத்தவன் கையை தான் எதிர்பார்த்து காத்திருக்கனும், எல்லாத்துக்கும்னா எல்லாத்துக்கும் தான். ஆனால் எனக்கு இப்பவரை புரியாத விஷயம், இதே போல் வேகமாக செல்லும் ஆண்ட்டிகள் மட்டும் ஒரு விபத்தில் கூட சிக்குவதில்லையே அது மட்டும் எப்படி.

--------------------------------------------------------------
 
பூஸ்ட் குடித்ததால் தான் சச்சினுக்கு அந்த எனர்ஜி வந்து சென்சுரியாக அடித்தார் என்றும் அதற்கு முன்பு கபில்தேவ் குடித்து தக்க வைத்திருந்த எனர்ஜியை சச்சினுக்கு கொடுத்ததால தான் சச்சின் பெரிய பேட்ஸ்மேன் ஆனார் என்றும் பத்து வயதில் பார்த்த பூஸ்ட் விளம்பரத்தை பார்த்து நம்பினேன். 

 
இது எதற்கு நிகரானது என்றால் ஜீவன்டோன் என்ற லேகியத்தை சாப்பிட்டால் அந்த விளம்பரத்தில் வருவது போல் உடற்கட்டு வரும் என்றும் வாலிப வயது வந்ததும் நானும் ஜீவன்டோன் தின்று பெரிய குஸ்தி பயில்வான் ஆவேன் என்றும் நான் நம்பியதற்கு சமம்.

பொதுவாக யார் என்ன சொன்னாலும் நான் நம்பி விடுவேன் இது என் குணம், நான் பதிவுலகிற்கு வந்த போது நக்கீரனுக்கு போன் டயல் பண்ணவே தெரியாது என்றும் அவர் யாருக்காவது பேச வேண்டும் என்றால் கூட மற்றவர்கள் தான் நம்பர் போட்டுத் தருவார்கள் என்று நம்பினேன். சங்கவியின் கவிப்புலமையை பார்த்து பண்டைய இலக்கியங்களுக்கு கவிவிருத்தம் எழுதும் ஆற்றல் உடையவர் என்றும் நம்பினேன். முதன் முதலில் மெட்ராஸ் பவன் சிவாவைப் பார்த்ததும் மன்மதன் சிம்பு போன்ற கில்மாப்பிரியன் என்றும், வீடு சுரேஷை நல்ல புள்ளை என்றும் நம்பினேன் என்றால் நான் எவ்வளவு வெள்ளந்தியானவன் என பாருங்கள். 

------------------------------------------------------------------------------
 
 ஏண்டாங்கப்பா உங்க அதுவுக்கு ஒரு இதுவே இல்லையா.

அந்த கீரையை சாப்பிட்டதால் நடிகைக்கு தொப்பை குறைந்ததாம் என்று ஒரு பதிவின் தலைப்பில் போட்டு இருந்ததும், ஏதோ அதிசய கீரை போல இருக்கு. அதனை சாப்பிட்டு நாமளும் தொப்பையை குறைக்கலாம் என்று பதிவை ஓப்பன் பண்ணிப் பார்த்தால் பசலைக்கீரையை சாப்பிடுங்கள் தொப்பை குறையும் என்று போட்டு இருக்கிறது. இது தான் எங்களுக்கே தெரியுமே இதுக்கு என்னா மயித்துக்கு ஒரு போஸ்ட்டு.

ஏண்டா வெங்காயங்களா கத்தியை எடுத்து உன் அதுவை ஒரே போடா போடல என் பெயரை மாத்திக்கிறேண்டா

-------------------------------------------------------------------------
 
போன வருசம் ஒரு ஊர்ல(ஊர் பெயர் மட்டும் தெரிஞ்சா பையன் மாட்டிக்குவான்) என் நண்பன் ஒருத்தனை சந்திக்க சென்றோம். நெடுநாட்கள் கழித்து எங்களை பார்த்த சந்தோசத்தில் வீட்டம்மாவிடம் நாங்கள் அவசரமாக கோவை செல்ல வேண்டியிருக்கிறது. இரவு வரமாட்டேன் என்று சொல்லி விட்டு எங்களுடன் அதே ஊரில் ஒரு லாட்ஜில் ரூம் போட்டு சரக்கடிக்க திட்டம் போட்டான்.

என்னுடன் வந்திருந்த மற்ற நண்பர்களோ இரவுக்குள் ஊருக்கு திரும்பியாகனும் அதனால் நாம் சரக்கடிக்க வேண்டாம் அவனை ஏமாற்றி திரும்பி விடுவோம் என்று முடிவு செய்தோம். ஆனால் பையனோ வீட்டில் வெளியூர் செல்வதாக சொல்லி விட்டதால் முதலிலேயே சரக்கடித்து விட்டு எங்களுக்கும் சரக்கு வாங்கி வந்தான். 

அவனிடம் அவசரமாக பக்கத்து தெருவில் ஒருத்தரை பார்க்க வேண்டியிருக்கிறது. சரக்கடித்தால் பேச முடியாது. அதனால் அவரிடம் பேசி விட்டு வந்து சரக்கடிக்கிறோம் என்று சொல்லி விட்டு கிளம்பி ஊருக்கு வந்து விட்டோம். பையன் இன்னும் கூடுதலாக சரக்கை போட்டு எங்களுக்காக காத்திருந்தான். 

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து போன் செய்தான். நாங்கள் ஊருக்கு வந்து விட்டதாக சொல்லவே செம கோவப்பட்டு போனை வைத்து விட்டான். சரக்கடித்து விட்டதால் வீட்டுக்கும் திரும்ப முடியாமல் தனியே அறையில் இருக்கவும் பிடிக்காமல் பேருந்தை பிடித்து ஊர் ஊராக சுற்றி மறுநாள் மாலை வீடு போய் சேர்ந்திருக்கிறான். 

அதற்கப்புறம் ஆறுமாசம் வரை எங்களுடன் பேசாமல் இருந்தான். ரொம்ப கோச்சுக்கிட்டு இருக்கான் பையனை சமாதானப்படுத்துவோம் என்று ஒரு டூர் புரோகிராம் போட்டு அவனிடம் நாங்கள் தான் செய்தது என்று சொல்லாமல் மற்றொரு நண்பனை விட்டு சொல்லச் சொல்லி அந்த இடத்திற்கே வந்து அவனிடம் நிறைய அடிவாங்கி பிறகு சமாதானமாகி .............. பிறகென்ன அதே தான்.

ஆரூர் மூனா

18 comments:

 1. // ஆண்ட்டிகள் மட்டும் ஒரு விபத்தில்
  கூட சிக்குவதில்லையே அது மட்டும்
  எப்படி.///

  ஹைலி ஹைபோதடிகல் கொஸ்டின். . . .

  ReplyDelete
  Replies
  1. இதுக்கான பதிலுக்கு நாம் ரூம் போட்டு தான் யோசிக்கனும்

   Delete
 2. நான் கூட முதலில் உங்களிடம் போன் பேசும் போது குரலை வைத்து நீங்க ரொம்ப ஸ்சாப்டான, ஒல்லியான ஆளுனு நினைத்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ஏங்க இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு. உண்மையிலேயே நான் ஸாப்ட்டுதானுங்க, ஹி ஹி, ஒரு சுய எள்ளல் தான்

   Delete
 3. // ஏண்டா வெங்காயங்களா கத்தியை
  எடுத்து உன்
  அதுவை ஒரே போடா போடல என்
  பெயரை மாத்திக்கிறேண்டா//

  அதுனா எது பாஸ்?? அவன் கையை தானே சொல்றிங்க. . .

  ReplyDelete
  Replies
  1. அதான் அதுன்னு சொல்லிட்டேன்ல, அதை எதன் கூடவும் பொருத்திக்கலாம்

   Delete
 4. // ஆண்ட்டிகள் மட்டும் ஒரு விபத்தில்
  கூட சிக்குவதில்லையே அது மட்டும்
  எப்படி.///

  இதுக்கெல்லாம் ரூமெல்லாம் போடவேண்டாம்!
  காரணாம் ரொம்ப சிம்பிள்!
  ஆண்டிகள் ரோடைப் பார்த்து வண்டி ஓட்டுகிறார்கள்; நாம் ஆண்டிகளைப் பார்த்து வண்டி ஓட்டுகிறோம்!

  ReplyDelete
  Replies
  1. அடடா, எவ்வளவு பெரிய உண்மைய இவ்வளவு சாதாரணமா சொல்லிட்டீங்க

   Delete
 5. நம்பள்கி சொல்வதுதான் சரி

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், நன்றி ஜெயக்குமார் சார்

   Delete
 6. /மெட்ராஸ் பவன் சிவாவைப் பார்த்ததும் மன்மதன் சிம்பு போன்ற கில்மாப்பிரியன் என்று/

  அட கர்த்தரே கர்த்தரே.

  ReplyDelete
  Replies
  1. அதுக்கு ஏங்க கர்த்தரை இழுக்குறீங்க, நீங்க நல்லவர்னு ஊருக்கே தெரியுமே

   Delete
 7. மச்சி அது என்னய்யா கவிவிருத்தம்.....

  ReplyDelete
  Replies
  1. விருது வாங்குற அளவுக்கு கவிதையா எழுதித்தள்ளுறது மச்சி

   Delete
 8. என்னா தல..வீட்டுல ரொம்ப வேளையா..??!!!!

  ReplyDelete
  Replies
  1. இதுல ஏதோ ஒரு குறியீடு அடங்கியிருக்கு போல இருக்கே. செல்வராகவன் படம் பாத்துட்டு எல்லோரும் குறியீடுகளை பாக்கெட்டுகளில் வச்சிக்கிட்டு அலையுறீங்க

   Delete
 9. Replies
  1. அய்யா நலம், தாங்கள் நலமா, நான் தங்களுடன் விரிவாக பேச வேண்டும், ஒரு விரிவான மின்னஞ்சல் அனுப்புகிறேன்

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...