சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Monday, November 7, 2011

7ம் அறிவை வசூலில் மிஞ்சிய வேலாயுதம்.

விஜய், ஹன்சிகா, ஜெனிலியா நடிப்பில் வெளிவந்த படம் 'வேலாயுதம்'. ஜெயம் ராஜா இயக்க, ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார். தீபாவளி தினத்தன்று வெளியான இப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது. முதல் வாரத்தை விட இரண்டாம் வாரத்தில் அதிக தியேட்டர்களில் வெளியாகி இருப்பதால், அந்த சந்தோஷத்தை கொண்டாட படக்குழுவினருக்கு தனது வீட்டில் விருந்து அளித்தார் விஜய்.

'வேலாயுதம்' குறித்து ஐங்கரன் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. 'வேலாயுதம்' படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கி வெளியிட்டது ஐங்கரன் நிறுவனம். இங்கிலாந்தில் 'வேலாயுதம்' 17 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு (அக்டோபர் 26-30 வரை) 1.03 கோடி வசூலித்து உள்ளது. அதே நேரம் 'ஏழாம் அறிவு' திரைப்படம் 19 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு (அக்டோபர் 26-30 வரை) 85.77 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது.

'வேலாயுதம்' படத்தின் இந்த வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கும் விஜய், அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் 'நண்பன்' படத்தினையும் மிகவும் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்.

'வேலாயுதம்' படத்தின் இந்த வெற்றியால் மீண்டும் விஜய் - ஜெயம் ராஜா கூட்டணி சேர்த்தாலும சேரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


ஆரூர் முனா செந்திலு


4 comments:

 1. ஏழாம் அறிவை விடவே மாட்டேன்னு அடம் பிடிக்கிறீங்களே...

  ReplyDelete
 2. ///Philosophy Prabhakaran said...

  ஏழாம் அறிவை விடவே மாட்டேன்னு அடம் பிடிக்கிறீங்களே...///
  7ம் அறிவு ராசியாகிடுச்சி பிரபா.

  ReplyDelete
 3. Top 2 Movie Collections:

  1) Velayudham - 42 Crores
  2) Avatar - 38

  VijaY The King Of Action..

  Vitta Ipdi Kooda Soliduvinga pola irkey..

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...