சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Friday, November 11, 2011

பெருந்தலைவர் காமராஜரின் கடைசி நாள். . .


இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்தாரா என்பதை நம்பாத ஒரு தலைமுறையும் இங்கு வந்து விட்டது. இந்நிலையில் ஒரு அரசியல்வாதியின் இலக்கணமாக வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் கடைசி நாள் சம்பவங்களின் தொகுப்பு -

1975ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி காலை 06,30 மணிக்கு காமராஜர் எழுந்தார். காலைப்பத்திரிக்கைகள் அனைத்தும் அவரிடம் கொடுக்கப்பட்டன. எல்லாப் பத்திரிக்கைகளையும் படித்தார். பின்னர் குளித்து விட்டு வந்து சிற்றுண்டி சாப்பிட்டார்.

10 மணிக்கு காமராஜரை தினந்தோறும கவனிக்கும் டாக்டர் வந்து உடல் நிலையைப் பார்த்து இன்சுலின் ஊசி போட்டு விட்டு சென்றார். 11 ணியளவில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 50 பேர் காமராஜர் வீட்டிற்கு வந்தனர், அவரைப் பார்க்க விரும்புவதாக கூறினார்கள். உடல்நலமின்றி இருந்த காமராஜரின் அறைக்குள் அவர்கள் அனைவரும் நுழைந்தனர். இந்த சிறிய அறைக்குள் இத்தனைப்பேருக்கும் இடமில்லையே என்று காமராஜர் கூறியபடியே அறைக்குள் நுழைந்தார். அவரை கைத்தாங்கலாக வெங்கட்ராமன் அழைத்து வந்தார். அவரைப் பார்த்ததும் மாணவர்கள் காந்தி வாழ்க, காமராஜர் வாழ்க என்று கோஷமிட்டனர். மூன்று நிமிடம் அவர்களுடன் உரையாடிய காமராஜர் நிற்க முடியாமல் அவர்களிடம் விடைப்பெற்று சென்றார்.காங்கிரஸ் செயலாளர்களுக்கு 12 மணிக்கு செய்து அவர்களை வந்து சந்திக்கும்படி அழைத்தார். பின்னர் சிதம்பரம் நகர காங்கிரஸ் இணைச்செயலாளரும், பத்திரிக்கை நிருபருமான தணிக்கை தம்பி காமராஜரை சந்தித்து உரையாடினார். வழக்கமாக 1 மணிக்கு உணவருந்தும் காமராஜர் அன்று 01.30 மணிக்கு சாப்பிட்டார்.பாவக்காய் கறி, முளைக்கீரை மசியல், பருப்பு துவையல், மோர் சாதம் ஆகியவற்றை காமராஜரின் உதவியாளர் வைரவன் பறிமாறினார். உணவு அருந்தும் போது மின்விசிறி ஒடியபோதும் வியர்ப்பதாக கூறினார். வைரவன் அதெல்லாம் ஒன்றுமில்லை, பிரமை என்று கூறி காமராஜருடைய உடம்பை துடைத்து விட்டார்.

சாப்பிட்ட பிறகு பாத்ரூம் சென்று விட்டு தன்னுடைய படுக்கை அறைக்கு சென்றார். அவர் மணியடித்தால் தான் உதவியாளர் உள்ளே நுழைவது வழக்கம். இரண்டு மணிக்கு காமராஜர் மணியடித்தார். வைரவன் உள்ளே சென்று பார்த்தால் காமராஜருக்கு உடம்பெல்லாம் வியர்வையாக இருந்தது. ஆனால் அந்த ரூம் A/C செய்யப்பட்டிருந்த ரூம். பயந்து போன வைரவன் காமராஜரின் தலையை தொட்டுப் பார்த்தார். ஜில்லென்று இருந்தது. உடனே அவர் டாக்டரை கூப்பிடட்டுமா என்று காமராஜரிடம் கேட்டார். டாக்டர் செளரிராஜனுக்கு போன் செய்து தரும்படி காமராஜர் கேட்டார்

உடனே பல இடங்களில் தேடிப்பார்த்து அவர் எங்கிருக்கறார் என்று தெரியாததால் மற்றொரு டாக்டரான ஜெயராமனை போனில் பிடித்த வைரவன் காமராஜரை டாக்டரிடம் பேச வைத்தார். காமராஜர் டாக்டரிடம் A/C ஒடிக்கொண்டிருக்கிறது, ஆனால் வேர்க்கிறதே என்று கேட்டார். டாக்டர் மூச்சு திணறுகிறதா, மார்பில் வலியிருக்கிறதா என்று காமராஜரிடம் கேட்டு விட்டு உடனே புறப்பட்டு வருவதாக கூறினார். டாக்டரிடம் பேசி முடித்த பிறகு வைரவனை அழைத்த காமராஜர் வரும்போது ரத்த அழுத்தம் பார்க்கிற கருவியை எடுத்துக் கொண்டு வரச் சொல்லு, டாக்டர் வந்தவுடன் எழுப்பு, விளக்கை அணைத்து விட்டு போ என்று கூறினார். உதவியாளரும் விளக்கை அணைத்து விட்டு சென்றார். மூன்று மணியளவில் முதலில் காமராஜர் அவர்கள் தேடிய டாக்டர் செளரிராஜன் விஷயம் கேள்விப்பட்டு வீட்டுக்குள் ஓடிவந்து அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே போனார்.

கட்டிலின் இடதுபுறம் திரும்பிக் கொண்டு இரண்டு கைகளையும் தலைக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு கால்களை மடக்கியவாறு காமராஜர் அவர்கள் படுத்திருந்தார். ஆனால் காமராஜரிடம் இருந்து வழக்கமாக வரும் குறட்டை ஒலி வராததை கண்ட டாக்டர் பயந்து போய் காமராஜரை தோளைத் தொட்டு எழுப்பினார். பதில் எதுவும் இல்லை. நாடித்துடிப்பை பார்க்கலாம் என்று கையைத்தொட்டார். ஜில்லென்று இருந்தது. கையில் இருந்த ரத்த அழுத்தக் கருவியையும், ஸ்டெதஸ்கோப்பையும் தரையில் அடித்து, அழுது புரண்டார். அதற்குள் வந்த டாக்டர் ஜெயராமன் நிலைமையைப் பார்த்து நேரிடையாக இதயத்திற்குள் ஊசி மருந்தை செலுத்த முயன்றார். பயனில்லை. அடுத்ததாக டாக்டர் அண்ணாமலையும் அங்கு வந்தார். அவரும் முயற்சித்துப் பார்த்து விட்டு வெளியில் வந்து அதிகாரப்பூர்வமாக காமராஜர் இறந்து விட்டதை அறிவித்தார். அப்போது மணி 03.20.

காந்தியத்தின் கடைசி தூண் சாய்ந்தது.

ஆரூர் முனா செந்திலு


16 comments:

 1. வரலாற்று பதிவினை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

  ReplyDelete
 2. பாவப்பட்ட மனிதர்கள்மீது எப்போதாவது கடவுள் கருணைகொண்டு இம்மாதிரி மீட்பர்களை அனுப்புவதுஉண்டு.

  ReplyDelete
 3. காமராஜ் இறந்த பொது அவரது பீரோ-வில் இருந்து எடுத்த தொகை நூறு ரூபாய் சொச்சம். ஹிம்ம்ம்மம்மம்ம்ம்ம் இப்படியும் வாழுந்து போன(அரசியல்வாதிகள்) மனிதர்கள் உண்டு உலகத்தில்.

  ReplyDelete
 4. Such a great person's death was really a great loss for tamil people

  ReplyDelete
 5. என் வாழ்நாள் முழுக்க அவர்தான் தலைவர்.
  அவரை நினைவு கூர்ந்து பதிவிட்ட உங்களுக்கு பாராட்டுக்கள்... நன்றியுடன்.

  குண்டாய் இருக்கும் பெண்ணின் அக உளைச்சல்களை மிக அற்ப்புதமாக படமாக்கி உள்ளார் ஒரு பெண் இயக்குனர்.
  ஆண் இயக்குனர்கள் தொட முடியாத உயரத்தில் காட்சிகள் அமைந்துள்ள
  FAT GIRL என்ற படத்திற்க்கு பதிவிட்டுள்ளேன்.
  வருகை புரிந்து கருத்துரைக்கவும்.

  ReplyDelete
 6. /// suryajeeva said...

  வரலாற்று பதிவினை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி //

  ஒவ்வொரு தலைவரின் கடைசி நாள் . . தொடரும்.

  ReplyDelete
 7. /// johnny said...

  i am getting tears in my eyes ///

  உங்களுக்கு மட்டுமில்லண்ணே. உலகில் நல்லாட்சி தேவைப்படுவோர் அனைவருக்கும் வரும். ஆனால் நாம் அவருக்கு என்ன செய்தோம். வெறும் தி.மு.க வினரின் வாய் ஜாலத்திற்கு மயங்கி அவரையே தோற்கடித்த ஏமாளி ஜனங்கள் தானே.

  ReplyDelete
 8. /// HariV is not a aruvujeevi said...

  காமராஜ் இறந்த பொது அவரது பீரோ-வில் இருந்து எடுத்த தொகை நூறு ரூபாய் சொச்சம். ஹிம்ம்ம்மம்மம்ம்ம்ம் இப்படியும் வாழுந்து போன(அரசியல்வாதிகள்) மனிதர்கள் உண்டு உலகத்தில் ///

  நாம் அவருக்கு என்ன செய்தோம். வெறும் தி.மு.க வினரின் வாய் ஜாலத்திற்கு மயங்கி அவரையே தோற்கடித்த ஏமாளி ஜனங்கள் தானே

  ReplyDelete
 9. விளக்கை அனைத்து விட்டு போ! வார்த்தை சரித்திரமாகியது. தொகுப்புக்கு நன்றி!

  ReplyDelete
 10. salaam...

  Such a great leader...thanks for the post..

  Your brother,
  aashiq ahamed

  ReplyDelete
 11. எங்க வீட்ல இருக்குற ஒரு அரசியல் தலைவர் படம் காமாராஜர் மட்டும்தான்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...