சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Saturday, November 12, 2011

ஏழாம் அறிவு படத்தின் வசூல் விமர்சனங்களால் பாதிக்கப்படவில்லை

தீபாவளிக்கு வெளியாகும் முன்பே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படு்த்தியிருந்த படம் ஏழாம் அறிவு. சூர்யாவும் .ஆர். முருகதாஸ் ஏழு வருடங்களுக்கு பிறகு இணைவதாலும், நடிப்பின் இலக்கணமான கமலின் மகள் ஸ்ருதி ஹாசன் அறிமுகமாவதாலும். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பதாலும் எதிர்ப்பார்ப்பு எகிறியிருந்த படம் ஏழாம் அறிவு.

ஆனால் படம் வெளி வந்த பிறகு அத்தனை வலைப்பதிவுகளிலும், ஆனந்த விகடனைத் தவிர ஏறக்குறைய அனேக பத்திரிக்கைகளாலும் விமர்சிக்கப்பட்ட படமானது ஏழாம் அறிவு. வலைப்பதிவுகளில் அவரவர் ரேஞ்சுக்கு படத்தை கழுவி கழுவி ஊற்றினார்கள்.

'ஏழாம் அறிவு' படம் சொன்ன போதிதர்மன் தமிழர் இல்லை, அவர் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்தார் என்பதற்கு எந்தவித எழுத்துபூர்வ ஆதாரம் இல்லை என்று பல்வேறு தகவல்கள் வலைப்பூக்களிலும் பத்திரிக்கைகளிலும் வெளியானது. இத்தகைய தகவல்களினால் இந்த வாரம் வரை வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டின் படி படத்தின் வசூலில் எந்தவித பாதிப்பும் இல்லை.

ஏழாம் அறிவு படம் தமிழ்நாட்டில் மட்டும் வெளியான 14 நாட்களில் 45 கோடி வசூல் செய்து இருக்கிறது. உலகம் முழுவதும் ஆன வசூலை பார்த்தால் கண்டிப்பாக படம் வணிக ரீதியான வெற்றி தான் என்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள்.

ஆரூர் முனா செந்திலு


3 comments:

  1. 'ஏழாம் அறிவு' படம் சொன்ன போதிதர்மன் தமிழர் இல்லை, அவர் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்தார் என்பதற்கு எந்தவித எழுத்துபூர்வ ஆதாரம் இல்லை என்று பல்வேறு தகவல்கள் வலைப்பூக்களிலும் பத்திரிக்கைகளிலும் வெளியானது.அவர் தமிழன் ஆக இருந்தால் நாமே இல்லை என்கிறோம்.

    ReplyDelete
  2. ஙொய்யால மொத்ல்ல இத மாத்து: "வருகைக்கு நன்றி. விருந்தினராக வந்தால் நீங்க வீரன். பின்னூட்டமிட்டால் நீங்க மனுஷன். 100 வது விருந்தினராக வந்ததால் நீங்க வீரனாகிட்டிங்க. எப்ப மனுஷனாக போறீங்க."
    எவனாவது மனுஷன் இல்லாம வீரனாக முடியுமா?

    ReplyDelete
  3. இந்த ஒன்றுமில்லாத படம் எப்படி இப்படி வசூலை வாரிக் குவிக்கிறது என்று தான் புரியவில்லை.ஆனந்த விகடன் விமர்சனம் அதிர்ச்சியாக இருந்தது. 38 கூட பெறாத படத்துக்கு 48 ?!? வரலாறு தெரியாத மக்களின் அறியாமை + ஈழ உணர்வை மார்கட் பண்ணும் யுக்தி= 45 கோடியா?

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...