சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Tuesday, November 22, 2011

காலத்தினால் கலர் மாறிய தமிழ் சினிமா வில்லன்கள்

சென்ற வாரத்தில் 10 வருடங்களுக்கு முன் வந்த பத்திரிக்கையை புரட்ட நேர்ந்தது. அந்த கட்டுரையும் உடன் நமது சரக்கும் கலந்து நான்கு பகுதிகளாக உங்களுக்கு. தமிழ் சினிமா வில்லன்கள் ற்றி 90ளின் வரையான கட்டுரையை நீட்சி செய்தால் எந்த காலத்திற்கும் அவற்றினை கொண்டு செல்லலாம் என்று மட்டும் புரிந்தது.

எழுபதுகளில்தான் முதன் முறையாக வில்லன்களுக்கு கோட்டு போடும் உரிமையே வந்தது. அதுவரை பெரும்பாலும் கட்டம் போட்ட லுங்கி, கர்ச்சீப், கன்னத்தில் பெருமாள் கோயில் உருண்டை சைசில் மச்சம் என வில்லத்தனத்தோடு உப காரியமாய் பூச்சாண்டி காட்டுவதையும் செய்து வந்தனர். அதிலும் எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் சொல்ல வேண்டாம். அவர்கள் திரையில் தோன்றினாலே கரிச்சு கொட்ட ஆரம்பித்தனர். பாவம் நம்பியார்தான் அதிகமான திட்டு வாங்கியிருப்பார். ராமதாஸ், பி.எஸ். வீரப்பாவுக்கு கூட அப்படி கிடைத்திருக்காது.

ஒரு பக்கம் எம்.ஜி.ஆரிடம் அடி இன்னொரு பக்கம் பார்வையாளர்களின் வசவு என இரண்டு பக்கமும் கும்மாங்குத்து வாங்கி அவதிப்பட்டனர். இந்த சூழலில்தான் அசோகன் வந்தார். கொஞ்ச நாள் அவரும் எம்.ஜி.ஆரிடம் அடிவாங்கி களைத்துபோய் கடைசியாக ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் காலம் வந்ததும் அப்படியே ஷிப்ட் ஆகினார். ""வாங்கோ...உக்காருங்கோ...'' என குரலை நீட்டி மக்கள் கைதட்டி ரசிக்கத் தக்க வில்லனாக மாறினார். இக்காலத்தில்தான் வில்லன்களின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் துவங்கியது.

அதுவரை நேரடியாக அடிதடியில் இறங்கிய வில்லன்களுக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர ஆரம்பித்தது. உடன் அவர்களும் ஒதுங்கி போய் ஒரு மேசைமேல் இருட்டில் உட்கார்ந்து கொண்டு பல கலர் பல்புகளுடன் மிஷின் ஆபரேட்டர்போல் தோற்றம் தர ஆரம்பித்தனர்.

எழுபதுகளில் சினிமாவுக்கு யாராவது சென்று வந்தால் சிறுவர்கள் அவர்களிடம் கேட்கும் முதல் கேள்வி, "இந்த படத்தில் பாஸ் யாரு?'

"பாஸ்' என்றால் ஏதோ பெரிய மல்டிநேஷ்னல் கம்பெனியின் அதிபர் என நினைக்க வேண்டாம். இவர்கள் கேட்பது கொள்ளை கூட்ட பாஸ். அதுவும் புரியாதவர்களுக்கு இன்றைய பாஷையில் சொல்வதானால் வில்லன்.

இன்று இருப்பதுபோல அன்றைய வில்லன்களுக்கு அரிவாளை தூக்கிகொண்டு அங்குமிங்குமாக ஓட வேண்டியதோ, சரியாக மீசைகூட முளைக்காத கதாநாயக பயல்களின் அடிக்கு பயந்து கடைசியில் மானம்கெட்டு கைகூப்ப வேண்டியதோ, நாயகிகளின் அப்பாவாக, அண்ணனாக, மாமனாக, டாடா சுமோவில் வெள்ளை சட்டை, மீசை சகிதம் ஆயுதங்களுடன் திரிய வேண்டிய அவசியமோ அல்லது முகத்தை அஷ்ட கோணலாக்கி பக்கம் பக்கமாக வசனம் பேச வேண்டிய அவசியமோ இல்லை. சிம்பிள் ஒரே ஒரு மொட்டை மட்டும் போட்டு கொண்டிருந்தால் போதும். கூடுதலாக வித்தியாசமாக சிரிக்க தெரிந்து கொண்டால் போனஸ் பாயிண்ட். பெரிதாக அடிதடி எல்லாம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. எல்லாம் மிலிட்டிரி டிரஸ் போட்டு துப்பாக்கி சகிதம் நடமாடும் ஆட்கள் பார்த்துக் கொள்வார்கள்.

எப்போதாவது கற்பழிக்க வேண்டிய தேவை மட்டும் ஏற்படும். அதிலும் பெரும்பாலும் நாயகியாகத்தான் இருக்கும். இல்லாவிட்டால் கிளப்பில் இரண்டு அரைகுறை ஆடையுடன்கூடிய நங்கைகளின் தோளில் சரிந்து கொண்டு மது அருந்துவது, அல்லது மது அருந்திக்கொண்டே ஃபோன் பேசுவது இதுதான் அவரது முக்கிய பணி. (பேசாமல் அந்த காலத்து வில்லனாக பிறந்திருந்தால் செம வாழ்க்கை!)

(தொடரும் . . .)

ஆரூர் முனா செந்திலு

3 comments:

  1. யாரும் தொடாத சப்ஜெக்ட் வெல் ட்ரை

    ReplyDelete
  2. /// சி.பி.செந்தில்குமார் said...

    யாரும் தொடாத சப்ஜெக்ட் வெல் ட்ரை ///


    குருநாதரின் ஆசி கிடைத்து விட்டது, நன்றியண்ணே.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...