சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Thursday, November 24, 2011

காலத்தினால் கலர் மாறிய சினிமா வில்லன்கள் - பகுதி 2


அந்தக் காலத்தில் வில்லன்களுக்கு எப்போதாவது கற்பழிக்க வேண்டிய தேவை மட்டும் ஏற்படும். அதிலும் பெரும்பாலும் நாயகியாகத்தான் இருக்கும். இல்லாவிட்டால் கிளப்பில் இரண்டு அரைகுறை ஆடையுடன்கூடிய நங்கைகளின் தோளில் சரிந்து கொண்டு மது அருந்துவது, அல்லது மது அருந்திக்கொண்டே ஃபோன் பேசுவது இதுதான் அவரது முக்கிய பணி. (பேசாமல் அந்த காலத்து வில்லனாக பிறந்திருந்தால் செம வாழ்க்கை!)

அதேபோல "பாஸ்' அவ்வளவு சீக்கிரம் சுலபமாக காட்சியளிக்கமாட்டார். மேடைமேல் நிழல் உருவமாகத்தான் காட்சி கொடுப்பார். அவரை எல்லோரும் ""பாஸ்...பாஸ்'' என்றுதான் அழைக்க வேண்டும். ஒரு கட்டத்தில் ""சுட்றாதீங்க பாஸ்...பாஸ்...'' என ஒருவர் அலற அவரை பாஸ் துப்பாக்கியால் சுட்டு புகையை வாயால் ஊதுவார்.

படத்தின் இறுதிக்காட்சியில் காலி கள்ளி பெட்டிகள் அல்லது அட்டைப்பெட்டிகள் அடுக்கப்பட்ட குடோவுனில் கதாநாயகனின் அண்ணி, அம்மா, காதலி, தங்கை அல்லது தங்கச்சி புருஷன் இவர்களில் யாராவது மூன்றுபேரை கயிற்றில் கட்டிபோட வேண்டும். வில்லன்களுக்கும் இந்த கள்ளிபெட்டிகளுக்கும் அப்படி என்ன தொடர்போ? சினிமா ஷூட்டிங்களுக்கு கள்ளிபெட்டி சப்ளை செய்தே கோடீஸ்வரர் ஆன ஏஜெண்ட் கதைகளும் உண்டு. மற்றபடி க்ளைமாக்சில் மட்டும் நேரடியா கதாநாயகனுடன் சண்டை போட வேண்டிவரும். அப்போது மட்டும் நான்கைந்து குத்துக்களை வாங்க உடம்பை தேத்திவைத்துக் கொண்டால் போதும். மற்றபடி பாஸ்களின் வாழ்க்கை ஜாலி வாழ்க்கை.

1977-க்கு முன் தமிழ் சினிமா எப்படி இருந்தது என்பதற்கு இந்த "பாஸ்'களின் அட்டூழியம் ஒன்றே போதும். அதன் பிறகு "பாஸ்'கள் கொஞ்சம் கொஞ்சமாக அரசியல்வாதி, கதாநாயகியின் அப்பா அல்லது அண்ணன் என யதார்த்த முகங்களுக்கு மாறினர். ஹெலன், சி.ஐ.டி. சகுந்தலாவுக்கு பதில் சில்க், அனுராதா கச்சைக் கட்டினார். எம்.ஜி.ஆரிடம் வாங்கிய அடிகளைத் தொடர்ந்து நம்பியார் பாவம் ரஜினி, கமல்களிடமும் கொஞ்சநாள் அடி வாங்கினார். பிறகு அந்தப் பொறுப்பை ஜெய்சங்கர், விஜயகுமார் ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டு வயதுக்கு தகுந்த கேரக்டர் பக்கம் ஒதுங்கிக் கொண்டார். இவர்களைத் தொடர்ந்து கொஞ்சநாள் தியாகராஜனும் பிறகு ராதாரவியும் நாயகிகளுக்கு அண்ணனாக அல்லது அப்பாவாக அல்லது கிராமத்து பண்ணையாராக வலம் வந்து வில்லத்தனங்கள் செய்தனர்.

"மம்பட்டியானு'க்குப் பிறகு தியாகராஜன் கொஞ்சம் ஹீரோ பக்கமாக ஓரம் கட்டப்போக, ராதாரவி மட்டுமே ரொம்ப நாளைக்கு வேட்டி கட்டிய வில்லனாக வெற்றி வலம் வந்தார். அப்படியே அவர் பேண்ட் போட்டாலும் கோட்டு சூட்டுடன் தொழிலதிபர் வில்லனாகவே வந்தாரே ழிய, நகரத்து வில்லன் வேஷத்துக்கு அவரை யாரும் கூப்பிடவில்லை என்றே சொல்லலாம். இடைப்பட்ட காலத்தில், தமிழ் ரசிகர்களுக்கு உயரமான வில்லன்களைப் பார்க்கும் ஆசை வந்தது. மேலும் அவர்கள் ஒரே மாதிரி சுயமற்றவர்களாக க்ளைமாக்சில் கோழைகளைப்போல கதாநாயகனுக்கு பயந்து ஓடுபவர்களாக இல்லாமல் கொஞ்சம் விவரமானவர்களாகவும், சுயமரியாதை மிகுந்தவர்களாகவும் இருக்க வேண்டுமெ ரசிகர்கள் எதிர்பார்த்தனர். சத்யராஜும், ரகுவரனும் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய, பிற்பாடு இதே பாணியில் பிரகாஷ்ராஜும் அதே உடல் தகுதியுடன் வில்லனாக நெடுங்காலத்துக்கு வலம் வந்தார்.
தியாகராஜன் படத்தில் கூட எதுக்குடா சிலுக்கு என்று கேட்கிறீர்களா, ஹி ஹி ஹி பழைய பாசம் தான்.

இப்படி உயரமானவர்களை வில்லனாக்கி பார்க்கும் மனோபாவம் தமிழ் ரசிகர்களுக்கு வர காரணம் என்ன? என ஒரு கலாச்சார ஆராய்ச்சியே கூட செய்யலாம். இப்படியான வில்லன்கள் "வில்லர்' எனும் மரியாதையான இடத்துக்கு வந்தாலும் க்ளைமாக்சில் அவர்கள் தர்ம அடி வாங்குவது மட்டும் குறையவில்லை. என்ன சாகும்போது மட்டும் கொஞ்சம் விறைத்துக் கொண்டு அப்போதும் அதே திமிருடன் இறந்தார்கள். இடைப்பட்ட காலத்தில் சில படங்களில் எதிலுமே சேத்தி இல்லாமல் மன்சூர் அலிகான் வில்லனாக வலம் வந்தார்.

இப்படியாக பல "வில்லர்'கள் வலம் வந்தாலும் தனது யதார்த்தமான நடிப்பால் வில்லத்தனத்திற்கும் மரியாதை கொடுத்தவர் நாசர். கமல்ஹாசனுடன் அவர் வில்லனாக நடித்த பல படங்களில் குணச்சித்திரமும், ஹாஸ்யமும் களைக்கட்டின. இன்னும் சொல்லப்போனால் "தேவர் மகன்' படத்தில் அவரது நடிப்பு கமல் மற்றும் சிவாஜியின் நடிப்புக்கு இணையாக இருந்தது என்பது குறிப்பிடத் தகுந்தது. இதுவரையிலான வில்லன் நடிப்பில் நாசருடைய சிறந்த நடிப்பு வெளிப்பட்ட படம் எதுவென்று கேட்டால் "தேவர் மகன்'தான் என கண்ணை மூடி கூறிவிடலாம். அது பற்றி . . .

(தொடரும் . . .)ஆரூர் முனா செந்திலு


5 comments:

 1. ரகுவரனின் ஸ்டில் இதுவரை நான் பார்க்காதது.. செம.. பதிவும் சுவராஸ்யம்.

  ReplyDelete
 2. அலெக்‌ஷா ரேங்கிங்கில் செம ஃபாஸ்ட் முன்னேற்றம்.. நானும் நோட் பண்ணிட்டுதான் வர்றேன்

  ReplyDelete
 3. // சி.பி.செந்தில்குமார் said...

  ரகுவரனின் ஸ்டில் இதுவரை நான் பார்க்காதது.. செம.. பதிவும் சுவராஸ்யம்.

  அலெக்‌ஷா ரேங்கிங்கில் செம ஃபாஸ்ட் முன்னேற்றம்.. நானும் நோட் பண்ணிட்டுதான் வர்றேன் ///

  வாழ்த்துக்கு மிக்க நன்றிண்ணே, நல்ல பதிவுக்காகத்தான் முயற்சிக்கிறேன். ஆனால் ஹிட்டு கிடைக்க மாட்டேங்குதே, அதான் அப்பப்ப இடையில் சினிமாவை கலக்குறேன். மறுபடியும் சொல்றேன். நீங்க தான் என் குருநாதரு. உங்கள் வழிதான் என் வழியும்.

  ReplyDelete
 4. வாயே திறக்காமல் மக்களுக்கு மிகப்பெரிய வில்லனாக இருக்கும் பன்மோகன் கிங் தான் என்னைப்பொறுத்தவரை நம்பர் ஒன் வில்லன்.

  ReplyDelete
 5. /// ! சிவகுமார் ! said...

  வாயே திறக்காமல் மக்களுக்கு மிகப்பெரிய வில்லனாக இருக்கும் பன்மோகன் கிங் தான் என்னைப்பொறுத்தவரை நம்பர் ஒன் வில்லன். ///

  அவர் வில்லன் இல்லப்பா ஜோக்கர்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...