ஒரு சின்ன கேப் விட்டால் அது அப்படியே வளர்ந்து பெரிய கேப்பாக மாறி விட்டது. நான் என்ன செய்ய, சொந்தப் பணிகளுக்கிடையே புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களை படிக்க வேண்டிய அவசியமும் இணைந்துக் கொண்டதால் எழுதவே முடியவில்லை.
நிறைய நண்பர்கள் கேட்டுக் கொண்டே இருந்ததால் இன்று பதிவிடுகிறேன். நாளையும் நாளை மறுநாளும் இரண்டு சினிமா விமர்சனங்களும் தொடர்ந்து படம் பார்க்க போன கதையும் வர இருப்பதால் நீங்கள் தப்பிக்க வழியே இல்லை.
சில மாதங்களாகவே வேலை முடிந்தால் வீடு, வீட்டு வேலை என்று இருந்த நான், தம்பி மற்றும் பங்காளிகளின் கூட்டு முயற்சியுடன் மறுபடியும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை தம்பியின் பெயரில் துவங்கி இருக்கிறேன். அதனால் சற்று வேலைப் பளு அதிகமாக இருந்தது.
போன முறை தேங்காய் ஏற்றுமதி நல்ல முறையில் செய்து வந்து ஒரு மலையாளியின் துரோகத்தால் 5 லட்ச ரூபாய் பட்டை நாமம் விழுந்து கம்பெனியை மூடினேன். எனது 13 தோல்விகளில் அந்த நிறுவனமும் ஒன்று.
முயன்று கொண்டே இருப்பது தான் மனிதனின் செயல். அதற்கேற்ப இந்த முறை தவறுகளை களைந்து விட்டு கடல் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய இருக்கிறோம். நல்ல முறையில் முன்னேறுவோம் என்ற நம்பிக்கையின் அடுத்த படி இது.
புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களை புயல் வேகத்தில் படித்து முடித்து வருகிறேன். மரப்பல்லியை முதலில் படித்த நான் வாமுகோமுவின் பால் ஈர்க்கப்பட்டு அவரின் எல்லாப் புத்தகங்களையும் படித்து முடித்து விட்டேன்.
மரப்பல்லி சரோஜாதேவி டைப் புத்தகங்களை எல்லாம் ஒன் ஸ்டெப் பேக் நிற்க வைக்கும். மனிதர் கலா ரசனை உள்ளவர். நாகரீகமாக ஜில்பான்ஸை நுழைக்கிறார். முழுப் புத்தகத்தையுமே நீங்கள் சிலாகித்து படிக்க வேண்டியிருக்கும். வக்கிரம் எங்குமே எட்டிப் பார்க்கவில்லை. சின்னப் பசங்களுக்கு மட்டும் படிக்க கொடுத்துடாதீங்க.
ராஜீவ்காந்தி சாலை சாரு கன்னாபின்னாவென்று திட்டியிருக்கிறாரே என்று முதல் நாளே படித்து முடித்து விட்டேன். படிக்க படிக்க கோவம் தான் வந்தது. எழுதியவரின் மனம் முழுக்க வக்கிர புத்தி என்பது வார்த்தைகளில் தெரிகிறது. இருப்பதை தான் எழுதினேன் என்று சொன்னால் கழிவறையும் இருப்பது தான் அதையும் உட்கார்ந்து ரசித்து எழுத வேண்டியது தானே.
இது போன்ற எதிர்மறை விமர்சனங்கள் தான் இந்த புத்தகத்தை வாங்க வைக்கிறது என்பதால் இத்துடன் இதன் விமர்சனத்தை நிறுத்திக் கொள்கிறேன்.
வா.மணிகண்டனின் லிண்ட்சேலோஹன் புத்தகம் சில சிறுகதைகள் நன்றாக இருந்தது. சில யோசிக்க வைக்கிறது. சில வெகுசுமாராகவே இருக்கிறது. ஆனாலும் கொடுத்த காசுக்கு மோசமில்லை.
புத்தக கண்காட்சியில் வாங்கிய சுஜாதாவின் அனைத்து புத்தகங்களையும் படித்து முடித்து விட்டேன். எப்போதும் போல தலைவர் தலைவர் தான். ஒவ்வொரு புத்தக கண்காட்சியிலும் அவரின் புத்தகங்களை அதிகம் வாங்கி படித்து விட்டால் ஒரு நேரத்தில் அவர் புத்தகங்களில் படிக்காதவையே இல்லையே என்னும் நிலை வரும்போது தான் வெறுமை வரப் போகிறது.
தினமும் இரவு 9 மணியிலிருந்து நள்ளிரவு 2, 3 மணிவரை புத்தகம் படிக்கிறேன். மறுநாள் வேலைக்கு போக சிரமமாக இருந்தாலும் படிக்கும் போது கிடைக்கும் சுகானுபவம் படிப்பதை கைவிடாதே என்று இழுக்கிறது. ஒரு நாளைக்கு 4 புத்தகங்கள் வரை படித்து விடுகிறேன்.
தி.ஜாவின் வெறி பிடித்த ரசிகர் நான். அவரின் மோகமுள் நாவலை ஒரு முறை முழுதாக படிப்பதற்கே நான்கு நாட்கள் வரை ஆகும். நான் அந்த புத்தகத்தை இது வரை 20 முறைக்கு மேல் படித்து இருக்கிறேன். எனது படிப்பு ஆர்வத்துக்கு தீனி போடும் மனிதர் அவர் தான்.
எனக்கு ஒரு பழக்கம் உண்டு. படிக்கும் போது களத்திற்குள் கற்பனையிலேயே புகுந்து விடுவேன். மோகமுள் நாவல் நடக்கும் அந்த காலத்து கும்பகோணத்தில் கதாபாத்திரங்களுடன் நான் பயணிப்பது போலவே எண்ண வைக்கும் அவரது எழுத்து. பக்கத்து வீட்டு வயதான கிழவரின் இளவயது மனைவி நடுராத்திரியில் நாயகனின் அறைக் கதவை நள்ளிரவில் தட்டி இருவரும் இணையும் காட்சியை படிக்கும் போது எனக்குள்ளே உணர்வுகள் பரவசமடையும். வாரே வாஹ் என்ன ஒரு பீலிங்.
இந்த முறை வாங்கிய அம்மா வந்தாள் நாவல் படிக்கும் போதும் எனக்கு அதே உணர்வுகள் தான் ஏற்பட்டது. இளவயது நாயகனும் சிறுவயதில் விதவையான நாயகியும் தனித்து ஒரு வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அந்த நேரத்தில் நாயகியின் சலனத்தையும் நாயகனின் ஒழுக்கத்தையும் மிக நுட்பமாக பதிவு செய்திருப்பார் தி.ஜா. நான் கூட அந்த வீட்டின் நெல் மூட்டைகளுக்குப் பின்னால் இருந்து கவனிப்பது போலவே நினைத்துக் கொண்டேன்.
இதே இப்போது வக்கிரமாக எழுதும் ஆட்கள் கையில் இந்த கரு சிக்கியிருந்தால் மிகவும் தரம் தாழ்ந்த நாவல்களுள் ஒன்றாக இது ஆகியிருக்கும். பிராமண குடும்பங்களே அவரது பாத்திரங்களாக படைக்கப்பட்டு இருக்கும். என்னவோ எனக்கு அந்த பகுதி சம்பாஷணைகளும் பழக்க வழக்கங்களும் புதிதாக ஈர்ப்பது போலவே இருக்கும்.
இப்போது தான் ஜெமோவின் வெள்ளையானையை கையில் எடுத்து இருக்கிறேன். ஜெமோவின் சின்னச் சின்ன கட்டுரைகள் படித்து இருந்தாலும் அவரின் முழு நாவலை படித்ததில்லை. இந்த நாவலில் அவரின் உவமைகளும் காட்சி விவரிப்பும் சுதந்திரத்துக்கு முந்தைய சென்னைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இன்று இரவுக்குள் முடித்து விடுவேன் என்று நினைக்கிறேன்.
இன்னும் படிக்காமல் மிச்சமிருக்கும் பெரிய நாவல் ஓநாய் குல சின்னம் தான். மற்றபடி பெரும்பாலான நாவல்களை படித்து முடித்து விட்டேன். இது தவிர பெரியார் புத்தக நிலையத்தில் வாங்கிய புத்தகங்கள் மற்றும் ரெட்டீ, வெலிங்ட்டன், இன்ன பிற சிறிய புத்தங்கள் தான் மிச்சமிருக்கின்றன. இன்னும் ஒரு வாரத்திற்குள் எல்லாத்தையும் முடித்து விடுவேன். பிறகென்ன எல்லாத்துக்கும் விமர்சனப் பதிவு போட்டு உங்களை கதற வைக்காமல் விட மாட்டேன்.
புத்தக திருவிழாவில் நான் நிறைய புத்தகங்களை வாங்குவது பார்த்து இவன் வீண் செலவு செய்கிறான். பணத்தை இறைக்கிறான் என்று என் அப்பா திட்டுவதைப் போல் பலரும் திட்டலாம். இது அப்படி அல்ல. நான் வருடம் முழுவதும் இதற்கென சிறு தொகையை சேர்க்கிறேன்.
மாதம் 800 ரூபாய் எடுத்து இதற்கென வைத்து இருக்கும் தனி பேங்க அக்கவுண்ட்டில் போட்டு விடுகிறேன். புத்தக கண்காட்சி வரும்போது எடுத்து புத்தகங்களும் இன்ன பிற செலவுகளும் இதிலேயே அடங்கி விடுவதால் புத்தகங்கள் நிறைய வாங்க முடிகிறது.
நீண்ட நாள் கழித்து எழுதுவதால் எந்த தங்கு தடையுமின்றி வார்த்தைகள் வந்து விழுகின்றன. எழுதுவதும் ஒரு வகையில் எனக்கு சுகானுபவமே, ஆனால் அதை படிப்பது தான் உங்களுக்கான நரகானுபவம்.
ஆரூர் மூனா
நிறைய புத்தகங்களை வாங்குவது பார்த்து இவன் வீண் செலவு செய்கிறான். பணத்தை இறைக்கிறான் என்று என் அப்பா திட்டுவதைப் போல்
ReplyDelete>>
என் அப்பா, உங்க மாமாவும் இப்படிதான் திட்டுறாங்க என்னை!!
யக்கா வீட்டுக்கு வீடு திருவிழா தான் போல
Deleteஅருமை அண்ணே வாழ்க வளமுடன்
ReplyDeleteநன்றி பாலசுப்ரமணியன்
Deleteநல்ல முறையில் முன்னேறுவோம் என்ற நம்பிக்கையின் அடுத்த படி இது.வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி கவியாழி அண்ணே
Delete13க்கு (!) அப்புறம் ஜெயம் தான்... வாழ்த்துக்கள்...
ReplyDelete"ஒன் ஸ்டெப் பேக்" புத்தகம் எனக்கும் கொடுக்க கூடாது... ஹிஹி...
விமர்சனப் பகிர்வுகளை விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்...
கண்டிப்பாக பதிவிடுகிறேன் டி டி
Delete//மறுநாள் வேலைக்கு போக சிரமமாக இருந்தாலும் படிக்கும் போது கிடைக்கும் சுகானுபவம் படிப்பதை கைவிடாதே என்று இழுக்கிறது//
ReplyDeleteசூப்பர்... தூக்கத்தைத் தொலைத்துவிட்டு புத்தகத்துக்கு நேரம் ஒதுககிறீர்களே....
அது தான் பிரச்சனையே ஸ்பை.
Deleteபடிச்சு முடிச்ச புக்ஸ் எல்லாம் கொஞ்சம் கைமாத்து கெடைக்குமா?
ReplyDeleteஉங்கள் முகம் கிடைத்தால் கிடைக்கும் சகோ
Delete//முயன்று கொண்டே இருப்பது தான் மனிதனின் செயல். அதற்கேற்ப இந்த முறை தவறுகளை களைந்து விட்டு கடல் உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய இருக்கிறோம். நல்ல முறையில் முன்னேறுவோம் என்ற நம்பிக்கையின் அடுத்த படி இது.//
ReplyDeleteமனம் நிறைந்த வாழ்த்துக்கள். நம்பிக்கையே வாழ்க்கை. உழைக்க தயங்காதவர் என நினைக்கிறேன். அதே போல, ரிஸ்க் எடுப்பதும் உங்களை பயமுறுத்தவில்லை. வெற்றிக்கு தேவையான எல்லாம் உங்களிடம் இருப்பதால், கண்டிப்பாக இந்த முறை வெற்றி தான்! கொஞ்சம் உற்சாக(இறுதியில் இழக்கவைக்கும்) பானம் பக்கம் போவதை குறைத்துக்கொள்ளுங்கள்!
அதெல்லாம் கைவிட்டு ரொம்ப நாளாச்சுங்க
DeleteCongratulations on your export venture Senthil. I wish you good luck on that.
ReplyDeleteநன்றி அமரபாரதி
Delete///வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை தம்பியின் பெயரில் துவங்கி இருக்கிறேன்.///
ReplyDeleteமுதலில் பிஸினஸ் மிகவும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
நன்றி ம.த
Deleteநீங்கள் ஏற்றுமதி செய்கிற பொருட்கள் எல்லாம் சரியாக போய் சேருகிறதா என்பதை சோதிக்க வாங்கிய புத்தகங்களை எல்லாம் படித்துவிட்டு .இந்த புக்கையெல்லாம் உங்க கம்பெனி மூலம் நம்ம விலாசத்தீற்கு ஏற்றுமதி செய்துவிடுங்கள்
ReplyDeleteரெண்டாவது ஏற்றுமதி உங்களுக்கு தான்.
Deletenice post
ReplyDeleteநன்றி அரவிந்தன்
Deleteபுத்தகமாக வாஙகிச் சேர்ப்பதால் என்ன பிரயோஜனம்? என்றும் வீட்டில் திட்டு விழும்1 இருந்தாலும் புதிய புத்தகத்தை வாங்கி சுடச்சுட அதை வாசித்து மனதில் இறக்கிக் கொள்வதில் உள்ள சுகம் படிப்பார்வம் இல்லாதவர்களுக்குப் புரிவதில்லையே செந்தில்...! வாங்கறதுக்கு நிறைய புத்தகங்கள் தென்பட்டும், பட்ஜெட்டால கையைக் கட்டிப் போடற எனக்கு, உங்க ஐடியா நல்லாயிருக்கு... அடுத்த புத்தகக் கண்காட்சிக்கு நானும் இப்பருந்தே சேர்க்க ஆரம்பிச்சுடறேன்!
ReplyDeleteஅதான்ணா எனக்கும் புரியலை. கககபோங்கள்.
Delete//அவர் புத்தகங்களில் படிக்காதவையே இல்லையே என்னும் நிலை வரும்போது தான் வெறுமை வரப் போகிறது. // முழுக்க முழுக்க சரிண்ணே..
ReplyDeleteராஜீவ் காந்தி சாலை ஆரம்பித்துவிட்டேன் சுவாரசியம் இல்லை
உங்கள் வாசிப்பு வேகம் கண்டு மெய்யாலுமே பிரம்மிக்கிறேன்
நன்றி சீனு
Deleteநீங்கள் தொடங்கும் இந்த தொழில் அமோகமாக நடைபெற வாழ்த்துக்கள் நண்பரே !
ReplyDeleteநன்றி நண்பா
Deleteஇந்த தொழிலில் நல்ல வெற்றி பெற்று வெற்றி பெற்ற கதையை எழுத வேண்டும்.
ReplyDeleteகண்டிப்பாக, தங்களின் ஆசீர்வாதத்திற்கு நன்றி
Deleteஏன்ய்யா, தண்ணி அடிக்கிறத விட்டுட்டேன்னு சொன்னே, ஆனா இப்ப இன்னொரு போதையிலே சிக்கிட்டியே!
ReplyDeleteஅதான் புத்தகம் வாசிப்பத சொல்றேன்.
நாலு நாள்லே மோக முள்ள முடிப்பியா... அய்யோடா!
தினமும் 9pm - 2am வாசிப்பா... கேட்கவே பிரமிப்பா இல்லே இருக்கு!
பொதுவா புத்தகத்த வாங்கி "சும்மா" இருப்பவர்கள் மத்தியில் இப்படி சுனாமி போல வாசிப்பதை கேள்விபட்டு பிரமித்துவிட்டேன்.
அப்புறம் அந்த sea food export... இதுலேயும் சாப்பாடுதானா?
சாப்பாடு என்பது அப்படியே ரத்தத்தில் ஒன்றி கலந்துள்ளதால்...
உமக்கு எடையும் குறையாது... வியாபாரமும் குறையாமல் அமோகமாக வர வாழ்த்துகிறேன்.
நன்றி நன்றி நன்றி அஜீஸ் அண்ணே
Deleteஅண்ணா...உங்கள் தொழில் நல்லபடியாக நடைபெற்று அதில் மென்மேலும் உயர நான் இறைவனிடம் பிரார்திக்கிறேன். நான் உங்கள் பதிவுகளை அதிகம் படிப்பவன். இதில் குறிப்பிட்ட உங்கள் வாசிப்பு ஆர்வம் என்னை பிரமிக்க வைக்கிறது. புத்தக வாசிப்பின் பயன்கள் & படித்தவைகளை மனதில் பதியவைத்துகொள்வது எப்படி என்பது பற்றிய ஒரு பதிவை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteமிக்க நன்றி நிஸார்.
Deleteசெந்தில்ஜி, தொழில் சிறக்க வாழ்த்துக்கள். இனியெல்லாம் ஜெயமே.
ReplyDeleteபுதிய தொழில் சிறக்க வாழ்த்துக்கள்! கதையில் ஒன்றி கதை நடக்கும் இடத்தில் நம்மை நுழைத்துக்கொண்டு படிப்பது சுகானுபவம்! சுஜாதா நாவல்கள், கல்கியின் கதைகள் என்னை அந்த மாதிரி ஈர்க்கும்! சிறிய விமர்சனங்கள் அருமை! நன்றி!
ReplyDeleteHappy to hear about your business. I pray for you brother.
ReplyDeleteNejzajímavější a nejvýhodnější bonusy najdete zde https://top10casino.cz/casino/playamo/
ReplyDelete