படம் பார்க்கிறதுக்கு ஒரு குடுப்பினை வேணும் போல. முதல் நாள் பார்க்க வேண்டிய படமான எதிர்நீச்சல், சில பல காரணங்களால் போக முடியவில்லை. ஆனாலும் மறுநாள் முயற்சித்தேன். அன்று பார்த்து 4 ரயில்பெட்டிகள் கூடுதலாக கொடுத்து பெண்டு நிமிர்த்தி விட்டார்கள். நேற்றும் முடியவில்லை.
சரி இன்றாவது போவோம் என்று நினைத்திருந்தேன். அதற்கேற்றாற் போல் இன்று எங்கள் ஏரியாவில் ஷட்டவுன். மாலை 5 மணி வரை கரண்ட் வராது. அது வரை வீட்டில் வியர்வையில் குளித்துக் கொண்டு இருக்கவும் முடியாது.
எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று காலையிலேயே முடிவு செய்து விட்டேன். காலையில் ஒரு வேலையாக மருத்துவமனை செல்ல வேண்டியிருந்தது. போன வேலை 1 மணிக்கு முடிந்து விடும் அதன் பிறகு சினிமாவுக்கு போகலாம் என்று எண்ணியிருந்தேன்.
வேலை இழுத்துக் கொண்டு முடியவே 1.30 மணியாகி விட்டது. பிறகு அருகில் இருந்த அபிராமி மாலுக்கு சென்றேன். இவ்வளவு பெரிய திரையரங்கில் பிக்காளி பயலுவ டெம்ரவரி பார்க்கிங் வைக்க மாட்டேங்கிறானுவ. கேட்டா வெளியில் நிறுத்த சொன்னானுங்க. வெளியில் நிறுத்தினால் நோ பார்க்கிங்கில் வண்டியை தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள்.
வேறு வழியில்லாமல் 20 ரூவாய் கொடுத்து பார்க்கிங் போட்டு மாலுக்குள் நுழைந்து முதல் மாடியில் டிக்கெட் எடுக்கச் சென்றால் ஹவுஸ்புல். பயங்கர கடுப்பு, பார்க்கிங்கிற்காக 20 ரூவாய் பணால்.
சரி 3 மணிக்காட்சிக்காக சங்கம் திரையரங்கிற்கு செல்வோம் என தலை சுற்றி மூக்கைத்த தொடுவது போல அபிராமியிலிருந்து கெல்லீஸ் வந்து சுற்றிக் கொண்டு ஹால்ஸ் ரோட்டுக்கு முன்பு உள்ள ரோட்டில் திரும்பி பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு வந்து திரையரங்கிற்கு சென்று கேட்டால் அங்கேயும் ஹவுஸ் புல்.
பிறகு அக்கம்பக்கம் என இன்னும் சில பல தியேட்டர்கள் சென்று அலைந்தும் டிக்கெட் கிடைக்கவில்லை. ஒழுங்காக நான் அயனாவரத்திலிருந்து கிளம்பி கொளத்தூர் வந்திருந்தால் கங்காவில் டிக்கெட் கிடைத்திருக்கும். கொஞ்சம் தூரம் கூடுதலாக சுற்றி வர சோம்பேறித்தனப்பட்டு பக்கத்தில் சுற்றியதற்கு இரண்டு மணிநேரம் சுற்றியும் டிக்கெட் கிடைக்கவில்லை.
இடையில் சுய பச்சாதாபம் வேறு. எப்பொழுதாவது படம் பார்க்கிறவனுங்களுக்கு எல்லாம் டிக்கெட் கிடைக்கிறது. வாரம் மூன்று சினிமா பார்த்து மாதம் 2000 ரூபாய் டிக்கெட்டிற்கு மட்டும் செலவு செய்யும் எனக்கு இன்று இந்த படத்திற்கு கிடைக்கவில்லை. இனிமேல் இந்த படத்தை பார்க்கக் கூடாது என்று முடிவு செய்து விட்டேன்.
பசித்தது போகும் வழியில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று பார்த்துக் கொண்டே வந்தால் தாஸப்பிரகாஷ் அருகில் கிருஷ்ணா ஸ்வீட்ஸின் கோகுலம் உணவகம் வந்தது. சாப்பிடச் சென்றால் இனிமேல் இந்தக் கடைப் பக்கமே வரக்கூடாது என்று நினைக்கும் அளவுக்கு சுகாதாரம் மற்றும் சர்வீஸ்.
தெண்டத்துக்கு மினி மீல்ஸ் என்ற வஸ்துவுக்கு 70 ரூவாய் அழுது விட்டு வீட்டுக்கு திரும்பி 5 மணி வரை வியர்வை மழையில் நனைந்து கொண்டு இருந்தேன். இன்றைய நாளைப் போல் இன்னொரு நாளும் அமைந்தால் நானும் அதிதீவிர பாக்கியசாலி தான்.
ஆரூர் மூனா செந்தில்

சரி...சரி...நண்பரே அக்கினி வெயில் ஆரம்பம் ..அலையாதீரும் உடம்புக்கு ஆகாது..
ReplyDeleteநன்றி நண்பரே, ஆனா நேற்றை ஒப்பிடும் போது இன்று வெயில் குறைவு தான்.
Deleteஅய்யோ பாவம்..... இந்தப் படம் புளிக்கும் :))))))
ReplyDeleteஇந்த படம் கசக்குது மாதேவி.
Deleteசெந்தில் , தொழில் சங்க தேர்தல் என்ன ஆச்சு , நீங்க ஆதரிச்ச யூனியன் வெற்றி பெற்றதா இல்லையா , ஏனேன்றால் தோற்றால் சாம்பார் சாதம் ஆடி வாங்கிய சங்கத்தினர் உங்கள் பிரிவுக்கு பிரச்சினை பண்ணுவார்கள் என்று சொல்லியிருந்திர்களே .
ReplyDeleteநண்பா அஜீம், நான் பதிவில் போட வில்லை. ஆனால் பேஸ்புக்கில் பகிர்ந்து இருந்தேன். எதிர்பார்த்தபடி SRMU வெற்றி பெற்று விட்டது. ஆனால் இணையாக வரும் என்று நினைத்த SRES தோற்று விட்டது. சென்ற தேர்தலில் வெற்றி பெற்ற DREU வும் இந்த தேர்தலில் தோற்று விட்டது. தனிப்பெரும்பான்மையுடன் ஒரு தொழிற்சங்கம் வெற்றி பெறுவது நல்லதல்ல. அதனால் என்ன பிரச்சனைகள் உண்டாகும் என்பதை வரும் காலம் ரயில்வே தொழிலாளர்களுக்கு உணர்த்தும்.
Deleteதமிழ் சினிமாவை வாழவைக்கும் புண்ணியவான் உங்களுக்கு இந்த நிலமையா? ஐயோ பாவம்ஆழ்ந்தவருத்தங்கள்
ReplyDeleteசில சமயம் நமக்கு கூட அடி சறுக்குமுங்க.
Deleteஆமா சங்கர்ஜி உங்க பெயருக்கு பின்னாலே இருக்கிற ஜாங்கிரி எழுத்தெல்லாம் எந்த மொழி .
Deleteஅது கன்னடம். [பெங்களூருவில் தமிழை ஜிலேபி என்கிறார்கள், இக்கரைக்கு அக்கறை பச்சை!!]
Deleteஅக்னி பகவான் முத நாளே உங்க கிட்ட வேலை காட்டிட்டாரா? மன்னிச்சு விட்டு படம் பார்த்துவிமர்சனம் பண்ணுங்க தலைவா!
ReplyDeleteநன்றி சுரேஷ். இந்த பழம் புளிக்கும்
Deleteஎதிர்நீச்சல் போடுங்க நண்பா
ReplyDeleteவாழ்க்கையில எதிர் நீச்சல் போடலாங்க. ஆனா இந்த படம் பார்க்க எதிர்நீச்சல் போட்டா அது கேவலமுங்க.
Deleteஎன்ன பாஸ்!
ReplyDeleteபடம் நல்ல இருக்கு இன்னும் ஒரு நாள் முயற்ச்சி செய்யுங்கள்
அடவிடுங்க பாஸூ. எப்படியும் ஆறு மாசத்துல டிவியில போடுவான் அப்ப பாத்துக்கலாம்.
Deleteநானும் இன்னும் இந்த படத்த பார்கவில்லை
ReplyDeleteநீங்களாவது பார்த்து விமர்சனத்தைப் போடுங்கள்.
Deleteகடைசியில படத்தை இன்னமும் பார்க்கலையா? அடப்பாவமே.......??
ReplyDeleteநாம தான் ஒடுற படம், ஓடாத படம் எல்லாத்தையும் பார்த்து சினிமாவை வாழ வைக்கிறோம். என் டிக்கெட் காசு அவனுக்கு இழப்பு தான்.
Deleteதங்களுக்கு ஒரு வேண்டுகோள்
ReplyDeleteஅத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com
அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்
இப்படியே எல்லா படமும் பார்க்காம இருந்திங்கண்ணா மாதம் 2000 மிச்சமாகும்.
ReplyDeleteBoss, I always wait for your review. I can't wait anymore... please.
ReplyDeletePlease see the movie and review.
Delete