சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Tuesday, May 21, 2013

தண்ணீர் லாரி சாலையில் தேடி

சென்னைக்கு வரும் வரை
கண்டதில்லை இப்படி ஒரு காட்சியை
சாமானியனும் சரி அயிட்டங்காரனும் சரி
கார்ப்பரேசன் தண்ணி லாரியைக் கண்டதும்
சாதுவாக குடங்களுடன் வரிசை கட்டியதை


வூடுகட்டும் வஸ்தாதும் செல்லாக்காசே
இங்கு தண்ணீர் பிடிக்கும் போது
கிளீனர் வண்டியிலிருந்து இறங்கியதும்
மிக லாவகமாக ஐம்பது பைசா வாங்கி
கண்ணாலேயே மிரட்டி தண்ணீர் விடுவதை
வெளியிலிருந்து பார்த்து மிரண்டு விட்டேன்

நாளெல்லாம் பார்த்து ஜொள்ளு விட மாட்டோமா
என ஏங்கிய தேவதைகள் எந்த பந்தாவும்
காட்டாமல் வரிசையில் நிற்பதை
பார்த்து கண்கள் பூத்துப் போகும்
பின்வரிசை பெண்களை வார்த்தைகளால்
மிரட்டும் போது தான் தெரியும்
இவள் பூஜிக்கும் பூவல்ல
பூவின் வேடம் அணிந்த புயல் என்று

இரண்டு தினங்களில் வரிசையில் நின்று
கரெக்ட் பண்ணிய ஆண்ட்டிகள் ஏராளம்
தினமும் புது அனுபவமாய் சென்ற நினைவுகள்
காலங்கள் மாறியதால் கோலங்களும் மாறின
கேன் வாட்டரும் சுலபமாய் கிடைத்ததால்
வரிசையில் நிற்கும் தொல்லை இல்லை

வாழ்க்கை ஒரு வட்டம் என்று
விஜய் சொன்ன வார்த்தைக்கு ஏற்ப
போனவாரம் மீண்டும் கிடைத்தது
ஒரு தண்ணீர் லாரி அனுபவம்
தெருவில் நின்று பொருள் தூக்க
யோசித்த கெளரவம் போய்
தேவைக்காக மீண்டும் குடத்துடன்
தேடியலைந்தேன் தெருக்களில்

தண்ணீர் பிடித்து வரும்பொழுது
நினைவுகளெல்லாம் பின்னோக்கி
மடிப்பு கலையாத தாவணியுடன்
அசைந்து வரும் சிந்தாமணி
ஜன்னலில் கண்ணசைவு காட்டி
வரிசையில் இடம் கொடுத்து
மனதில் பிடித்தேன் இடம்

இன்றும் கண்டேன் அவளை
கலைந்த கேசமும் முடிந்த கூந்தலுமாக
ஓங்கி சத்தமிட்டு வரிசையில் முன்னேறி
தனக்கு மட்டும் பத்து குடம் பிடித்ததை
இன்று கூட மாறவில்லை அவள் குணம்
அன்று நளினமாய் இன்று ஆங்காரமாய்
காரியத்தில் மட்டும் விடாக்கண்டனாய்

நல்ல காலம் தப்பித்தேன்
மயக்கத்தினால் கைப்பிடித்திருந்தால்
அவளுக்கு இணையாக நானும் நின்றிருப்பேன்
தண்ணீர் குடம் கை கொண்டு

ஆரூர் மூனா செந்தில்

7 comments:

 1. //பின்வரிசை பெண்களை வார்த்தைகளால்
  மிரட்டும் போது தான் தெரியும்
  இவள் பூஜிக்கும் பூவல்ல
  பூவின் வேடம் அணிந்த புயல் என்று//
  .
  அன்றாட பிரச்சனைகளை கவிதையாக்கும் வித்தை உங்களுக்கு கைவந்து விட்டது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி முருகபூபதி

   Delete
 2. இப்போது துணைக்கு உதவி செய்வதில்லையா...?

  ReplyDelete
  Replies
  1. அதெல்லாம் செய்றோமுங்க தனபாலன்

   Delete
 3. சிந்தாமணி கண்ணீர் சிந்த வைச்சிருப்பாள்,நல்ல காலம் தப்பீச்சிங்க.!! :-)

  ReplyDelete
  Replies
  1. சிக்கியிருந்தா சிதைச்சிருப்பா

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...