வருடத்திற்கு ஒரு முறை
ஊருக்கு வந்து போகும்
மூத்த அக்கா
சிறுமியாய் மாறுவது
எங்கள் வீட்டில் தான்
காலையில் நீராகாரம்
குடித்து பெருங்கதை பேசி
வயலுக்கு செல்லும் அப்பாவுக்கு
பழைய சோறு கட்டிக் கொடுத்து
தான் பிரசவம் பார்த்த
எருமைகளை குளிப்பாட்டி
அண்ணனிடம் நுங்கு
பறித்து தரச் சொல்லி
ஆசையாய் தின்று மகிழும்
மதியம் சுடுசோறுடன்
மீன் குழம்பை குழைத்து
அள்ளித் தின்னும்
தான் நட்டு வைத்த
செம்பருத்தி செடியுடனே
மனம் விட்டு கதை பேசும்
மாலையிலே பம்புசெட்டுக்கு
தோழிகளுடன் குளிக்கச் செல்லும்
போகும் வழியில் குறி பார்த்து
கல்லெறிந்து கொடுக்காப்புளி
வீழ்த்தி ஆசையுடன் தின்று செல்லும்
அளவாக நீர் எடுத்து
பதமாக நெல் அவித்து
தங்கையுடன் காய வைத்து
அரிசியாகி கட்டி வைக்கும்
அந்திமாலைப் பொழுதுகள்
அக்காவிற்கு சொர்க்கமாய்
செல்லும் நாளன்று
கன்னுக்குட்டியுடன் முட்டி
விளையாடி உறவாடி
யாருமில்லா தருணத்தில்
மெல்லிய கண்ணீருடன்
சுற்றும் பார்க்கும்
விடுமுறை முடிந்து
புறநகர் சென்னைக்கு
வந்த பின்னால்
அத்தானுக்கு சோறுகட்டி
வேலைக்கு அனுப்பி வைத்து
நாள் முழுதும் தனிமையிலே
அடுத்த விடுமுறைக்கு
காத்திருக்கும் அக்காவே
பட்டணத்து மாப்பிள்ளைக்கு
பார்த்து பார்த்து மணமுடித்த
அப்பாவை குறை சொல்ல
நானும் நினைக்கிறேன்
என் வீடு கிராமம் என்று
எனை கட்ட மறுக்கும்
அத்தை பெண்ணை நினைத்து
நானும் தவிக்கின்றேன்
சொர்க்கம் இருக்குமிடம்
கிராமத்திலா நகரத்திலா
புரியாமலே சிரிக்கின்றேன்
ஆரூர் மூனா செந்தில்
"என் வீடு கிராமம் என்று
ReplyDeleteஎனை கட்ட மறுக்கும்
அத்தை பெண்ணை நினைத்து
நானும் தவிக்கின்றேன்
"
Same Feeling... :)
நன்றி சரவணபூபதி
Deleteஅருமையான கவிதை! ஒவ்வொரு கிராமத்து அக்காக்களின் மனதை அருமையாக படம் பிடித்தீர்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Deleteஇந்த வாரம் விகடன்ல வந்ததா ? நல்லாயிருக்கு செந்தில். வாழ்த்துகள்.
ReplyDeleteஅடங்கொப்புரானே, நான் இன்னைக்கு கரண்ட் இல்லாததால் மண்டைய குடைந்து எழுதியது. அசால்ட்டா சொல்டீங்களே.
Deleteஅப்புறம் இன்னொரு விஷயம் நான் விகடன் படிப்பதில்லை.
அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நன்றி தனபாலன்
Deleteதம்பி . . .
ReplyDeleteகவித . . . கவித . . .
நன்றி அண்ணே
DeleteNice
ReplyDeleteநன்றி செந்தில்
Deleteகலக்கீட்டீங்க...ரொம்ப பிடிச்சிருந்தது...
ReplyDeleteநன்றி நண்பா
Deleteஇப்படியும் நிறைய எழுதுங்க...
ReplyDeleteமுயற்சிக்கிறேன்
Deleteஇக்கரைக்கு அக்கரை பச்சை!
ReplyDeleteஅருமையாக எழுதுயுள்ளீர்கள்.
நன்றி யோகன்
Deleteசூப்பரப்பு
ReplyDeleteArumai....Arumai...Miga Arumaiyaana varigal...Boss...
ReplyDeleteUnarnthu Rasithaen....
Kalakkal..very touching lines. first of all I didnt expect a poem from you and it is surprisingly great. I suggest you to send this to some magazine.
ReplyDelete- SP
//சொர்க்கம் இருக்குமிடம்
ReplyDeleteகிராமத்திலா நகரத்திலா
புரியாமலே சிரிக்கின்றேன்//
------
கீழே தொட்டுக்க நம்ம ஊறுகா கொஞ்சம்!
சொர்க்கம் இருக்குமிடம்
கிராமத்திலா நகரத்திலா
என்று இன்றும்
புரியாமலே சிந்திக்கிறேன்
நரகமும் சொர்க்கமாகும்
அமைத்துக் கொண்ட
அன்பு மனைவி
என்றும் அருகிலிருந்தால்!
Nice.ennavo pannuthu.realy touching
ReplyDeleteசொர்க்கம் இருப்பது கிராமங்களில் தான் சந்தேகம் வேண்டாம்.
ReplyDeleteஅக்காவை பற்றி எழுதிவிட்டு கிடைச்ச gapல அத்தை மகளுக்கு ரூட்டு விட்டீங்களே!! சூப்பர்
summa nachunu irukku!
ReplyDeleteகலக்கல் கவிதைதான். செந்தில்.கி ராமப் பெண்களும் நகர வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறார்கள். அதன் இன்னொரு பக்கம் உணராமல்.
ReplyDeleteஎன்னடா இவர் இப்டி கரடு முரடா இருக்காரேன்னு நினச்சேன்.....
ReplyDeleteகாட்டருவியில்
காகித பூக்கள்-எப்போதும்
மிதப்பதுஇல்லை....
என்பதை நிருபித்து விட்டீர்கள்....