தாவணியில் தேவதையாய்
கண்ணுக்கு தோன்றியதால்
தினம் அவளை காணவேண்டி
வேட்டியும் விபூதி பட்டையுமாய்
சாயரட்சை வேளையில்
பெரிய கோவிலில் காத்திருந்தேன்
தோழியுடன் வந்தமரும் அவளை
தரிசனம் செய்ய வேண்டி
எப்பொழுதும் பின்வரிசை
இடத்தினிலே நிரந்தரமாய்
நின்றிருந்தேன் ஒத்தையிலே
கண்கள் மெல்ல மூடி
மெல்லியதாய் மந்திரத்தை
மனமுருகி வேண்டிக் கொண்டே
பிரார்த்திக்கும் அவள் முகத்தை
காண கண் கோடி வேண்டும்
வருடங்களும் செல்லச் செல்ல
தேஜஸ் கூடிய அவள் முகத்தை
ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே
நின்றிருந்தேன் தனிமரமாய்
காதலை சொல்லி விடும்
தைரியம் தான் வரவில்லை
வேகமாக மறுத்து விட்டாலோ
கோவிலுக்கு வராவிட்டாலோ
மீண்டும் காண வாய்ப்பில்லா
கணங்களை உழண்டு யோசித்து
மனதினிலே ஆசைகளை
புதைத்து வைத்து மரமானேன்
காலங்கள் சென்றிருந்த
நான் அறியா ஒரு தருணம்
மின்னும் வெளிச்சத்தில்
அரைகுறை ஆடையுடன்
நிற்கமுடியா நிறை போதையிலே
குலுக்கலாய் ஆடிக் கொண்டு
நின்றிருந்த என் அவளை
மீண்டும் கண்டதிர்ந்தேன்
நள்ளிரவு பப்பினிலே
கணினியைப் படித்து விட்டு
வேலையிலே சேர்ந்தினால்
பூர்வீகம் மறந்திடுமோ
நிலை அதுவும் மாறிடுமோ
சிறு கீற்றாய் திருநீறை
நெற்றியிலே அளவாய் இட்டு
தெருவிலே நடந்து வந்த
என் ஆசை தேவதையை
உரித்து வைத்து கோழிபோல
காண நேர்ந்ததினால் என்
வருத்தத்தை பகிர்கின்றேன் சபையினிலே
இது நியாயமா சொல்லுங்கள்
என் நட்பு நியாயமாரே
ஆரூர் மூனா செந்தில்
கண்ணுக்கு தோன்றியதால்
தினம் அவளை காணவேண்டி
வேட்டியும் விபூதி பட்டையுமாய்
சாயரட்சை வேளையில்
பெரிய கோவிலில் காத்திருந்தேன்
தோழியுடன் வந்தமரும் அவளை
தரிசனம் செய்ய வேண்டி
எப்பொழுதும் பின்வரிசை
இடத்தினிலே நிரந்தரமாய்
நின்றிருந்தேன் ஒத்தையிலே
கண்கள் மெல்ல மூடி
மெல்லியதாய் மந்திரத்தை
மனமுருகி வேண்டிக் கொண்டே
பிரார்த்திக்கும் அவள் முகத்தை
காண கண் கோடி வேண்டும்
வருடங்களும் செல்லச் செல்ல
தேஜஸ் கூடிய அவள் முகத்தை
ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே
நின்றிருந்தேன் தனிமரமாய்
காதலை சொல்லி விடும்
தைரியம் தான் வரவில்லை
வேகமாக மறுத்து விட்டாலோ
கோவிலுக்கு வராவிட்டாலோ
மீண்டும் காண வாய்ப்பில்லா
கணங்களை உழண்டு யோசித்து
மனதினிலே ஆசைகளை
புதைத்து வைத்து மரமானேன்
காலங்கள் சென்றிருந்த
நான் அறியா ஒரு தருணம்
மின்னும் வெளிச்சத்தில்
அரைகுறை ஆடையுடன்
நிற்கமுடியா நிறை போதையிலே
குலுக்கலாய் ஆடிக் கொண்டு
நின்றிருந்த என் அவளை
மீண்டும் கண்டதிர்ந்தேன்
நள்ளிரவு பப்பினிலே
கணினியைப் படித்து விட்டு
வேலையிலே சேர்ந்தினால்
பூர்வீகம் மறந்திடுமோ
நிலை அதுவும் மாறிடுமோ
சிறு கீற்றாய் திருநீறை
நெற்றியிலே அளவாய் இட்டு
தெருவிலே நடந்து வந்த
என் ஆசை தேவதையை
உரித்து வைத்து கோழிபோல
காண நேர்ந்ததினால் என்
வருத்தத்தை பகிர்கின்றேன் சபையினிலே
இது நியாயமா சொல்லுங்கள்
என் நட்பு நியாயமாரே
ஆரூர் மூனா செந்தில்
kavitha aruma boss...seriousa nalla iruku neenga innum short film edukama irukeenga ?
ReplyDeleteதிரைக்கதை தயாராகிக்கிட்டு இருக்கு, நான் தான் ஹீரோ ஹா ஹா ஹா
ReplyDelete\\குலுக்கலாய் ஆடிக் கொண்டு
ReplyDeleteநின்றிருந்த என் அவளை
மீண்டும் கண்டதிர்ந்தேன்
நள்ளிரவு பப்பினிலே//
அதெல்லாம் அப்படிதான் பாஸ் கண்டுக்காதீங்க.
என்ன செய்ய பாஸூ, இத்தனை வருடமாகியும் நமக்கு பெருநகர வாழ்க்கை ஒத்து போக மாட்டேங்குதே.
Deleteஇப்போது அதிகமாகி விட்டது கொடுமை...
ReplyDeleteஆமாம், நன்றி தனபாலன்
Deleteமீண்டும் கண்டதிர்ந்தேன்
ReplyDeleteநள்ளிரவு பப்பினிலே//
முதிர்ச்சியான அதிர்ச்சி.கவிதை அருமை
நன்றி அண்ணா
Deleteஹி ஹி காயம் பலம் போல!!
ReplyDeleteகொஞ்சம் அதிகம் தான்.
Deleteஉங்களுக்குள் கவித் திறமையும் உண்டோ ! அருமை ..
ReplyDeleteநன்றி நிரஞ்சன்
Deleteஎல்லாம் காலம் செய்த கோலம்.
ReplyDeleteஅட! இப்ப எல்லாம் கவிதையிலும் கலக்குறீங்க!
நன்றி முரளிதரன்
Deleteகிராமத்து குயில்கள் நகரத்து மயில்களாகி விட்டனவோ? எல்லாம் காலமாற்றம்தான்!
ReplyDeleteபார்ரா.. கவிதையெல்லாம் எழுதியிருக்குது பயபுள்ள...!
ReplyDelete