சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, March 22, 2013

பஞ்சேந்திரியா - பதிவெழுதாத பதிவர்களும் எண்டே கேரளமும்

பதிவர்களுக்கு பதிவெழுதாமல் இருப்பது தான் பேஷன் என்று ஆகிவிட்டது. ஆரம்பத்தில் சுறுசுறுவென பதிவுகள் எழுதுவது, பிறகு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு பேஸ்புக்கிலும் கூகிள்பிளஸ்ஸிலும் கூடி கும்மியடிப்பது என வழக்கப்படுத்திக் கொண்டனர்.

படிப்பதை ஆதர்சமாக கொண்ட எனக்கு படிப்பதற்கு பதிவுகள் இல்லாமல் கடுப்படிக்கிறது, அதனால் தான் வேறுவழியில்லாமல் நானே பதிவு எழுதி உங்களை படிக்க வைத்து கொலையாய் கொன்று வருகிறேன். எனவே எழுதுவதை விட்ட நண்பர்கள் மீண்டும் ஒழுங்காக வந்து பதிவெழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். இல்லையென்றால் இன்னும் பல மொக்கைப் பதிவுகள் உங்களை வந்து அடையும் என்று எச்சரிக்கிறேன்.

கடந்த ஒரு மாதமாக பதிவெழுதுவதை குறைத்துக் கொண்ட மெட்ராஸ் பவன் சிவக்குமார், நல்லவரா கெட்டவரா என்று இன்று வரை எங்களால் யூகிக்க முடியாத கேஆர்பி செந்தில் அண்ணன், ஒரு வருடமாகவே குறைவான அளவில் எழுதும் வீடு சுரேஷ்,

மொக்கையாக எழுதி உயிரை வாங்கினாலும் அதைக்கூட எழுதாத நாய் நக்ஸ் நக்கீரன் மற்றும் பட்டிக்காட்டான் ஜெய், அரசியல் வரலாற்று பதிவுகளை எழுதும் திறமை கொண்ட செல்வின், படிக்கும் போதே குலுங்கி சிரிக்க வைக்கும் பன்னிக்குட்டி ராமசாமி,

நிரூபன், அவ்வப்போது வந்து காணாமல் போகும் மாத்தியோசி மணி, வேடந்தாங்கல் கருண், சிறுகதை சிற்பி மதுரை மணிவண்ணன், திருப்பூர் இரவுவானம் சுரேஷ், தமிழ்வாசி பிரகாஷ், புதுச்சேரி கோகுல் இன்னும் பலர் சட்டென நினைவில் வரவில்லை. ஒழுங்காக வந்து வாரம் இரண்டு பதிவுகளையாவது எழுதி இந்த ரசிகரை உய்விக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

யோவ் சீக்கிரம் எழுத வாங்கய்யா.

----------------------------------------------------

எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு சாதாரணமா சொல்லிப்புட்டானுங்க

-----------------------------------------------

இன்று ஒரு வேலையாக வீட்டம்மாவுடன் வெளியில் சென்று விட்டு சாப்பிடுவதற்காக அண்ணா நகரில் இருக்கும் எண்டே கேரளம் என்ற உணவகத்திற்கு சென்றோம். நீண்ட நாட்களுக்கு பிறகு கேரள உணவை ருசி பார்க்கப் போகிறோம் என்று நாக்கு சப்புக் கொண்டி உள்ளே சென்றேன்.

ஒரு அசைவ சாப்பாடும் நெய்மீன் பொலிச்சதுவும் எனக்கு ஆர்டர் செய்தேன். வீட்டம்மா கோதுமை பரோட்டாவும் பீஸ் மசாலாவும் ஆர்டர் செய்தார். முதலில் வந்த நன்னாரி சர்பத் ருசி கூட்டியது கூடவே பசியையும்.

அசைவ சாப்பாட்டில் திருவனந்தபுரம் ஸ்டைல் ப்ரைடு சிக்கன், முட்டை ரோஸ்ட், தலச்சேரி மீன் கறி, அவியல், தோரன், கூட்டுக்கறி, சாம்பார், ரசம், தயிர், பப்படம், பரோட்டா, இடியாப்பம், சிவப்பரிசி, சோறு, பால்பாயசம், பயறுபாயாசம் ஆகியவை அடங்கியிருந்தன.

தட்டில் அனைத்தும் ஒரு சேர பார்த்ததும் கண்முழி டொய்ங் என்று வெளியில் வந்து விழுந்தது. பரோட்டாவில் ஆரம்பித்து ஒவ்வொன்றையும் ருசி பார்த்து முடிப்பதற்குள் வயிறு நிரம்பியிருந்தது. அதற்கு அப்புறம் தான் நெய்மீன் பொலிச்சது வந்து சேர்ந்தது.

கேரளாவில் நெய்மீன் சாப்பிடுவற்கு என்றே தினமும் 15 கிலோமீட்டர் பயணம் செய்து திருவனந்தபுரம் பத்மநாபா தியேட்டர் பின்புறமுள்ள ஒரு சிறு கடைக்கு செல்வேன். அந்தளவுக்கு நெய்மீன் அங்கு சுவையாக இருக்கும்.

ஆனால் இங்கு நெய் மீன் என்ற பெயரில் வஞ்சிரம் மீனை வைத்து பொலிச்சதுவை தீய்த்து விட்டு இருந்தனர். மீன் குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பு வாங்கி ப்ரீஸ் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நல்லாவேயில்லை. கேரள பப்படத்தின் சுவையே தேங்காய் எண்ணெயில் பொரித்தால் தான் வரும். இங்கு ரீபைண்ட் ஆயிலில் பொரித்து இருக்கின்றனர்.

இந்த குறையை தவிர சாப்பாடு சூப்பர் சுவை. ஒரு முறை டிபிக்கல் கேரள சாப்பாட்டை ருசித்துப் பார்க்க செல்லலாம் தப்பேயில்லை. விலை தான் சற்று கூடுதல் ஒரு அசைவச் சாப்பாடு 395 ரூபாய். ஒரு மீன் பொலிச்சது 390 ரூபாய், கோதுமை பரோட்டா ஒன்று 45 ரூபாய்.

ஒரு வழியாக எல்லாத்தையும் முடித்து விட்டு வீட்டுக்கு வந்து ஆட்டை முழுங்கிய மலைப்பாம்பு போல் புரண்டு கொண்டு இருக்கிறேன்.

-----------------------------------------------------

இன்னைக்கு நைட்டு உனக்கு இருக்குடி கச்சேரி


-------------------------------------------------------

பொதுவாக எந்த ஒரு முக்கியப் படத்தையும் முதல் நாள் பார்ப்பதே வழக்கமாக வைத்திருப்பேன். ஆனால் இந்தப் படத்தை எப்படித் தவற விட்டேன் என்று தான் தெரியவில்லை. திரையரங்கிலும் பார்க்கவில்லை, டிவியில் போட்டும் பார்க்கவில்லை.

நேற்று முன்தினம் லோக்கல் சானலில் இரவு பத்துமணிக்கு போட்டிருந்தார்கள். அதிலும் அந்த அஜித் வரும் காட்சியில் இருந்து தான் பார்க்க ஆரம்பித்தேன். படம் முடிந்து அரைமணிநேரம் என்னை முழுவதுமாக ஆக்ரமித்திருந்தது இங்கிலீஷ் விங்கிலீஷ்.

என்னா பெர்பார்மன்ஸ் ஸ்ரீதேவியிடம் அப்பப்பப்பா, வீ மிஸ் யூ ஸ்ரீதேவி. ஒவ்வொரு காட்சியிலும், ப்ரேமிலும் என்னை கவர்ந்து விட்டார். இன்றைய ப்ராம்ப்ட் நடிகைகள் இயல்பான நடிப்புக்கு பாடம் கற்றுக் கொள்ளலாம் இவரிடம்.

தயக்கத்துடன் ஆங்கில வகுப்புக்கு போன் செய்யும் போதும், தயக்கத்துடன் அந்த ஆங்கில கல்வி நிறுவனத்துடன் நுழைந்து தயங்கித் தயங்கி ஷஷி என்று சொல்லும் போதும், ஏன் இந்தியாவை த இந்தியா என்று சொல்லக்கூடாது ஏன் யுஎஸ்ஏவை த யுஎஸ்ஏ என்று சொல்கிறோம் என்று கேட்கும் போதும், தலைவலி என்று வீட்டில் பொய் சொல்லிவிட்டு வகுப்புக்கு சென்று வந்து இழுத்துப் போர்த்தி நடிக்கும் போதும், கணவரிடம் கால் வலிக்கிறது என்று பொய் சொல்லி வகுப்புக்கு செல்லும் போதும், இறுதியில் திருமணத்தைப் பற்றி பட்லர் இங்கிலீஷில் பேசும் போதும், கணவனுக்கு மட்டும் இரண்டு லட்டு வைத்து ப்ரியத்தை வெளிப்படுத்தும் போதும் ஸ்ரீதேவி ஸ்ரீதேவி தான்.

படம் முழுவதுமே என்னை ஆக்ரமித்து இருக்கிறது. எந்த காட்சியை விடுத்து எந்த காட்சியை சொல்ல மக்களே தவற விடாதீர்கள். சூப்பரான பீல்குட் மூவி. எந்த மொழியில் டிவிடி கிடைத்தாலும் வாங்கிப் பார்த்து விடுங்கள்.


ஆரூர் மூனா செந்தில்

50 comments:

  1. ////பதிவர்களுக்கு பதிவெழுதாமல் இருப்பது தான் பேஷன் என்று ஆகிவிட்டது. ஆரம்பத்தில் சுறுசுறுவென பதிவுகள் எழுதுவது, பிறகு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு பேஸ்புக்கிலும் கூகிள்பிளஸ்ஸிலும் கூடி கும்மியடிப்பது என வழக்கப்படுத்திக் கொண்டனர்.
    //// நிஜம் பலருக்கு தாங்கள் பதிவர் என்பதே மறந்துவிட்டது

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் ராஜ்

      Delete
  2. அண்ணே சரியாய் சொன்னிங்க நீங்க சொன்ன பதிவர்கள் எல்லாம் லாங் ஒப்சென்ட்

    ReplyDelete
    Replies
    1. இன்னும் பலர் இருக்கிறார்கள் சஃபி, எடிட் செய்து எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

      Delete
  3. நல்லதொரு பகிர்வு! இங்கிலீஷ் விங்கிலீஷ் நானும் பார்க்கவில்லை! கிடைத்தால் பார்த்துவிடுகிறேன்!

    ReplyDelete
  4. Replies
    1. வாய்யா வாய்ச்சொல் வீரரு.செளக்கியமா? பயங்கர பிஸியோ

      Delete
  5. தல....இப்போதைக்கு வர சுழல் இல்ல....ஆனாலும் கமெண்ட் போட்டுகிட்டுதான் இருக்கேன்....

    என்ன முன்பு ,மாதிரி கும்மி அடிக்க முடியலை...

    எனக்கும் வருத்தம்தான்....காலம் மாற்றும்...

    என் அன்பு வாசகர்கள்(??????!!!!!!) யாரும் தீ குளிக்க வேண்டாம்...
    பொறுத்தருள்க...இது பற்றி ஐநா சபையில் தீர்மானம் நிறைவேறியதும்
    நான் மீண்டும் வருவேன்....

    (கொய்யால....செந்தில்...இனி ????)

    ReplyDelete
    Replies
    1. இன்னைக்கு உலக தண்ணீர் தினம்னு அவனவன் குளிக்காம சுத்துறான், இது தீக்குளிக்கனுமா, வெளங்கிடும்

      Delete
  6. ஆனா செந்தில்காரு....பதிவுக்கு வந்துட்டு கமெண்ட் போடாம போறாங்க பாரு....அவங்களை கரெக்ட்-ஆ
    இழுத்துட்டு வந்துட்ட....

    என்னா ஐடியா???????
    ஒத்துக்குறேன்...நீர் கில்லாடிதான்....!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. உங்களை விடவா தலைவரே.

      Delete
  7. நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் தான் ஆரம்பித்து விட்டாரே...

    ReplyDelete
    Replies
    1. ஆரம்பித்து விட்டார் ஆனால் நான் சொல்வது முன்பு போல் வாரம் குறைந்தது இரண்டாவது எழுதி நான் படிக்க வேண்டும் என்பது தான்.

      Delete
  8. பதிவுலகில் சிந்தனை வறட்சியோ... அந்த ரெண்டாவது படம் சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. போட்டோவை விரும்பியதால் நீங்களும் என் நண்பரே

      Delete
  9. ராஸ்கல் ஒன்னை மேரி நாங்க மத்தியரசு ஊழியரா....? இல்ல பட்டிக்காட்டான் மாதிரி திருட்டுக் கணக்கு எழுதியே சம்பாரிக்கிற அக்கவுண்டண்டா......... பிச்சுபுடுவேன்...பிச்சு...!

    ReplyDelete
    Replies
    1. யோவ் யார் என்ன வேலை பார்த்தா என்ன பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட தெரியுதுல்ல. அதை ஈடுகட்டி ஒரு பதிவ போடுறது

      Delete
  10. செந்தில்,

    இதே போல் எனக்கும் ஒரு அனுபவம் நேர்ந்தது. ஒரு கேரள உணவகத்தில் கறி மீன் ஆர்டர் செய்தேன். ஆனால் கறியைத் தவிற வெறும் எண்ணெய்தான் அதில் இருந்தது. அந்த மொக்கைக்கு 250 ரூபாய் தண்டம் அழுதேன். அன்றிலிருந்து கேரள உணவகங்களுக்கு செல்லக் கூடாது என்று முடிவெடுத்தேன்.

    ReplyDelete
    Replies
    1. எல்லா ஹோட்டல்களிலும் ஏமாத்துறாங்க அருண். அவர்களுக்கு லாபம் ஒன்றே குறிக்கோளாக இருக்கிறது.

      Delete
    2. மிகவும் சரி செந்தில். அவர்களின் பண வெறிக்கு நாம் பலியாகிறோம்.

      Delete
    3. நன்றி அருண்

      Delete
  11. சென்ற வாரம் கேரளா விசிட், இவ்வாரம் ஆபீஸ் வெட்டுக்குத்து முடிந்து இப்போது சற்று ரிலாக்ஸ். சபரிமலை மற்றும் கேரளா நிழற்படங்கள்..சிற்சில பதிவுகள் விரைவில்.

    அதுசரி.. என்ன மாதிரி உப்மா பதிவரை எல்லாம் ஏன் லிஸ்ட்ல சேத்தீங்க :)

    ReplyDelete
    Replies
    1. எனக்கு உப்புமா ரொம்ப புடிக்கும்ல

      Delete
  12. செந்திலு.... இனி வாரம் ஒரு பதிவாச்சும் எழுதுவேன்யா...

    ஆனா, எழுதுனாலும், எழுதாட்டியும் பதிவுகளை தெனமும் வந்து வாசிச்சிரு. அதுல குறை வச்சுற வாணாம்/

    ReplyDelete
    Replies
    1. ஏங்க ஒரு நாயம் வேணாங்களா படிச்ச பதிவையே எத்தனை முறைதானுங்க படிக்கிறது. இருந்தாலும் வாரம் ஒரு பதிவை போட ஒத்துக் கொண்டதற்கு நன்றி

      Delete
  13. பக்தன் மூஞ்சூரை உங்கள் லிஸ்ட் இல் சேர்க்காததுக்கு கண்டனங்கள்

    ReplyDelete
    Replies
    1. அவரு தான் தினமும் காப்பிபேஸ்ட் பதிவு எழுதி தான் கொலையா கொல்றாரே

      Delete
  14. யாருலே, அது பதிவு எழுதாத பதிவருக... ஒழுங்கு மரியாதையா பதிவெழுதி, அண்ணன சந்தோஷ படுத்துங்கய்யா....

    நீங்க வேறண்ணே, இப்போல்லாம் வாசிகிறதுக்கே டைம் கெடைகிறது கஷ்டமா இருக்கு, இதுல எங்கண்ணே எழுதுறது? ஆனாலும் தூங்குவதற்கு முன் சில பிளாக்ஸ்ஸ கொஞ்சம் தட்டி பார்த்து, இன்டரிஸ்டிங்கா இருந்தா வாசிச்சிட்டுதாண்ணே தூங்குவேன்.. என்னா ஒன்னு, கமெண்ட் போடுறதுல்ல!! :-)

    ReplyDelete
    Replies
    1. அது கரெக்ட்டு தான். பதிவு எழுதினதா தாங்க புதுசா படிக்க கிடைக்கும்

      Delete
  15. தலைவரே புது அலுவலகம் ஒன்று திறக்கிறேன் அதன் வேலை நடந்து கொண்டிருக்கிறது அதனால் தான் முன் போல் கணணி முன் அமர முடிய வில்லை . அடுத்த மாதம் எல்லாம் சரியாகிவிடும் ..

    ReplyDelete
    Replies
    1. எந்த ஏரியாவுல தலைவரே.

      Delete
  16. யோவ் அதென்ன நல்லவரா? கெட்டவரா? இன்னும் புரியலன்னு சொல்றீங்க!!

    இப்ப சொல்றேன் " நான் ஒரிஜினல் ISO 9001 அக்மார்க் கெட்டவன் "

    ReplyDelete
    Replies
    1. நீங்க கெட்டவர்னு நினைச்சி நெருங்கினா அநியாயத்திற்கு நல்லவரா இருக்கீங்க. நல்லவர்னு நெருங்கினா நினைச்சிப் பார்க்கக் கூட முடியாத அளவுக்கு கெட்டவரா இருக்கீங்க. எதுதான் உண்மை. உலக அரசியல் முதல் உள்ளூர் தகராறு வரை உங்களின் கருத்து ஒரே குழப்பம் தான்.

      Delete
  17. பதிவெழுதுவதை குறைத்துக் கொண்ட /எழுதுவதை விட்ட நண்பர்கள் இன்னும்......உண்டு..

    1) Vallathan
    2) Kadalpayangal going for 3 months break tour
    3) Radiospathy
    3) Karundhel
    4) Suka - Venuvanam

    and others......

    - பின்னூட்டப் புலி

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி பில்லா

      Delete
  18. பதிவர்கள் எல்லாம் களப்பணியாற்றி வருகின்றனர் போலும், என்ன எழுதலாம் என ரூம் போட்டு யோசிச்சிட்டு இருக்காங்க என உளவுத்துறை தகவல் சொல்லுது. சிலர் டிஸ்கஸனில் இருக்காங்களாம், யார் கூட என மட்டும் எனக்குத் தெரியாதுங்க ..

    மீன் பொலிச்சதுக்கு இவ்ளோ விலையா? இந்தியா காஸ்ட்லி நாடாயிடுச்சுப்பா, ம்ம்ம் .. :o

    ReplyDelete
    Replies
    1. சில பேரு களப்பணியை பேஸ்புக்கோடவே முடித்து விடுகிறார்கள். இன்னும் சிலர் ரூம் போட்டு மட்டையாகிறார்கள். மற்றவர்கள் பின்புலத்தில் நின்று கிண்டலடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களை மீண்டும் பதிவில் இழுப்பதற்கான முயற்சி தான் இது.

      கேரள சுவைக்கு நாக்கை தொங்க போட்டுக் கொண்டு போனதற்கு விலை இது. இவ்வளவு கேவலமான மீன் பொலிச்சதை நான் எங்கேயும் சாப்பிட்டது இல்லை.

      Delete
  19. வான்சூர்தான் நல்ல பதிவர், ஏதோ ஒரு பதிவு தினமும் போட்டுடரரே , அப்புறம் என்ன படிப்பதும் படிக்காததும் நம்ம இஷ்டம் . என்ன கேட்டா நீங்களும் , மோகன் , வாஞ்சூர் (அவர் பதிவை படிப்பதும் படிக்காததும் உங்கள் இஷ்டம் ஆனா இந்த வயசுலேயும் பதிவு போடுகிறாரே அதே ஆச்சரியம் ) , இசெல்வன்,ஜெயதேவ் ,அவர்கள் உண்மைகள் , நல்ல பதிவர்கள் .
    அப்புறம் நம்ம ஊர்காரர் வைகோ சார் நல்ல பதிவு போடுகிறார் , ஆனா ரொம்ப கறாரா இருப்பார் , இன்ன நாள்தான் பதிவு வரும் என்று தேதி கொடுத்துவிடுவார்.(gopu1949.blogspot.com )

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்றது புதிய விஷயமா இருக்கே அஜீம்

      Delete
    2. வை கோபாலகிருஷ்ணன் சார் (என்றும் இளமை ) (எங்க ஊர்காரர் )எங்கள் பிரிய பதிவர் .
      அவர் பதிவுக்கு வாங்க படிங்க புடிச்சு இருந்தா திரும்பவும் வாங்க .

      Delete
    3. ஒரு ரவுண்டு போய் பல கட்டுரைகள் படிச்சிட்டு வந்திட்டேன்

      Delete
  20. வந்துடறேண்ணே.,

    ReplyDelete
    Replies
    1. எழுத வாங்கம்மா.

      Delete
  21. பாஸ், கண் பேசும் வார்த்தைகள் படம் திருவாரூரில் எடுத்து இருக்காங்களாம் .. பார்த்துட்டு ஒரு பதிவு போடலாமே :-)

    ReplyDelete
    Replies
    1. பாக்கனும் தலைவரே, அடுத்த வாரம் தான் பார்க்க முடியும் போல இருக்கு.

      Delete
  22. இங்கிலீஷ் விங்கிலீஷ் பார்த்தேன் எனக்கும் பிடித்திருந்தது.

    ReplyDelete
  23. என்னது சிறுகதை சிற்ப்பியா ?

    எழுதணும்னே மறுபடியும் எழுத தொடங்குகிறேன்

    ReplyDelete
    Replies
    1. அந்த நாளைத்தான் எதிர்பார்க்கிறேன்

      Delete
  24. Dear senthil...

    Ungaludaya ente keralam anubavathai padithen.... anna nagar branch ex restuarant manager nan than.. oru varudam munbu varai naan angu velai parthen.. Poes garden il innoru branch enagalukku irukirathu.. innoru murai try panni parungal.. atha branch il irunthu kuda tharpothu than vidai petren.. Unmaile enga meen fresh illai..

    ReplyDelete
  25. Dear senthil...

    Ungaludaya ente keralam anubavathai padithen.... anna nagar branch ex restuarant manager nan than.. oru varudam munbu varai naan angu velai parthen.. Poes garden il innoru branch enagalukku irukirathu.. innoru murai try panni parungal.. atha branch il irunthu kuda tharpothu than vidai petren.. Unmaile enga meen fresh illai..

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...