சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Sunday, September 29, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பின்னே நானும்

மனதிற்கு பார்ப்பவை அறிவிற்குப் பார்ப்பவை என திரைப்படங்கள் இருவகைப்படும். நாயகனின் அறிமுகக் காட்சியில் விசிலடிச்சி, பஞ்ச் டயலாக்கில் மெய்சிலிர்த்து, நாயகனின் தங்கை கற்பழிக்கப்படும் போது கண்கலங்குவது என எந்த இடத்திலும் மூளைக்கு வேலை கொடுக்காமல் ரசித்து வருவது ஒரு ரகம்.


இன்னொன்று முதல் காட்சிக்கும் மறுகாட்சிக்கும் உள்ள இணைப்பை குறீயிடுகள் மூலம் கொடுத்து நம்ம அறிவுக்கு வேலை கொடுத்து கண்டுபிடிக்கச் செய்வது இரண்டாவது ரகம். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் இந்த ரகம்.

எல்லோருக்கும் பிடிக்காமல் போன முகமூடி கூட எனக்கு முதல் பாதி மிகவும் பிடித்திருந்தது. முதல்பாதியில் மிகச்சரியாக முடிச்சுகளை போட்டு இரண்டாம் பாதியில் அதனை அவிழ்க்கும் இடத்தில் தான் சரியில்லாமல் போனது. மிஷ்கினின் படங்களை அணு அணுவாக ரசிக்கும் எனக்கு அது ஏமாற்றமே.

முந்தைய படத்தில் தவறு நடந்தாலும் அடுத்த படத்தில் நமக்கு நல்ல தீனி போட்டு படைப்பாளி மிஷ்கின் சிங்கம் தான் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார். தலைவணங்குகிறேன் மிஷ்கின்.


படத்தில் எப்பொழுது நுழைந்தேன் என்று எனக்கே நினைவில்லை. படம் போட்டு தான் அரங்கினுள் நுழைந்தோம். அமர்ந்த சில நிமிடங்களில் என்னை மறந்து படத்தில் பயணித்துக் கொண்டு இருந்தேன்.

ஸ்ரீ படத்தில் மிகத்திறமையாக நடித்து இருந்தார் இல்லை இல்லை நடிக்க வைக்கப்பட்டு இருந்தார். அவரின் கண்கள் கூட பரபரக்கிறது. சொல்ல வேண்டியதை வசனங்கள் மூலம் சொல்லாமல் உடல்மொழியில் சொல்லுகிறார்.

அதற்கு நேர்மாறாக அந்த கண் தெரியாத பெண்மணி எந்த முகபாவங்களும் காட்டாமல் அழக்கூட செய்யாமல் அவரது சோகங்களை நமக்கு கடத்தி விட்டு செல்கிறார். அந்த முகத்தில் உள்ள சாந்தம் மிரமிக்க வைக்கிறது. மண்டிப் போட்டு ஸ்ரீயிடம் கதறும் காட்சியில் விஸ்வரூபமெடுக்கிறார்.


சிபிசிஐடியாக வரும் ஷாஜியின் மலையாள வாடையிலான வசன உச்சரிப்பும் அவரது உடல்மொழியும் உயரதிகாரியின் முன்னால் அவரது மருத்துவ நண்பரை மிரட்டும் காட்சியும் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.

உ.த அண்ணனின் விமர்சனத்தை படித்த பிறகு அந்த குழந்தைக்கு மிஷ்கின் கதை சொல்லும் காட்சியை உன்னிப்பாக கவனித்தேன். அவர் கிட்டத்தட்ட நான்கு நிமிடங்களுக்கு மேல் கண்ணை சிமிட்டாமல் கதை சொல்லுவார். நானும் முயற்சித்துப் பார்த்தேன். இருபது வினாடிகளுக்கு மேல் முடியவில்லை. கண்ணில் நீர் வருகிறது.

அந்த சின்னப் பெண்ணின் முகபாவம் பார்த்து பிரமித்துப் போய் இருக்கிறேன். க்ளைமாக்ஸில் சாமுராய் சண்டை போடும் போது மிஷ்கினின் பின்னால் நின்று காட்டும் அவளின் ரியாக்சன்கள் பிரமாதம். படம் சீக்கிரம் முடிந்ததே என்று வருத்தமாக இருந்தது.


படத்தின் குறைகள் என்று சொன்னால் ஓவர் ஆக்ட் செய்த வில்லன்கள் மட்டும் தான். மற்ற பாத்திரங்கள் இயல்பாக நேச்சுரலாக இருக்கும் போது இவர்களின் நடிப்பும் பாவங்களும் எரிச்சலையூட்டுகின்றன. மற்ற அற்புதங்களுக்காக இவற்றை பெரிதுபடுத்த வேண்டாம்.

படத்தின் மிகப்பெரிய ஆகச்சிறந்த தவிர்க்கவே முடியாத பலம் இளையராஜா இளையராஜா இளையராஜா. எங்கு நிசப்தம் தேவையோ அங்கு எதிர்பாராத இனிய பின்னிசையை கொடுத்தும் பின்னிசை வரும் என்று எதிர்பார்க்கும் இடத்தில் நிசப்தத்தை கொடுத்தும் அசத்தியிருக்கிறார்.

மக்களே மிஷ்கின் மற்றும் இளையராஜாவின் பேரற்புதங்களை தவற விடாதீர்கள். லாபங்களுக்காக படமெடுப்பவர்களுக்கு மத்தியில் அறிவுக்கு வேலை கொடுக்கும் இது போன்ற படங்களை நாம் தான் வரவேற்று வெற்றிப் பெற செய்ய வேண்டும்.

நேற்று S2 சினிமாஸில் பவன்கல்யாணின் தெலுகு படம் ஹவுஸ்புல், இந்த படத்திற்கு ஐந்து வரிசை மட்டும் நிறைந்திருந்தது கவனிக்க வேண்டிய கவலைப்பட வேண்டிய விசயம்.

இன்னும் இருக்கு, ஆனால் எனக்கு புரியவைக்கப்பட்ட விசயத்தையும் நான் புரிந்து கொண்ட விசயமும் வேறாக இருக்கும். உங்களுக்கு வேறு மாதிரியாக இருக்கும். உங்கள் அனுபவத்தை நீங்கள் தான் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும். முயற்சியுங்கள். என்ஜாய் செய்யுங்கள்.

இன்று எனக்கு பதிவு போடும் எண்ணமே இல்லை. உத்திர பிரதேசம் வாரணாசி ராணுவ படையில் பணிபுரியும் வாசக நண்பர் ராஜீவ் நிசாந்த் "இன்னிக்கி ரெஸ்ட்டு படிப்பதற்கு எதுனா பதிவை வெளியிடுங்கள்" என்று கேட்டுக் கொண்டதால் இன்று மற்ற வேலைகளை புறந்தள்ளி விட்டு பதிவிட்டு உள்ளேன்.

படத்திற்கு ஓசியில் அழைத்துச் சென்ற மெட்ராஸ் பவன் சிவாவுக்கு நன்றி.

ஆரூர் மூனா

27 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. ஏன் என்ன ஆச்சி மேடம், ஏன் கொலைவெறி

   Delete
 2. வழக்கு எண்..., படத்துல நடிச்சது அந்த பையந்தானே!?

  ReplyDelete
  Replies
  1. அதே அதே அந்த பையன் தான்

   Delete
 3. எனக்கும் படம் பிடிச்சது..ஆனா "வாளமீன்" போன்ற பாடல் மிஸ்ஸானது வருத்தமே.. (சும்மா..) வழக்கம்போல் கேமிரா கோணங்கள் அசத்தல்..

  ReplyDelete
  Replies
  1. சரியாகத்தான் சொன்னீர்கள் , அரே ஓ சாம்பா

   Delete
 4. அற்புதமான படம்... ஆனால் கமர்ஷியலா வெற்றியடைய வைக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கு...

  ReplyDelete
  Replies
  1. சினிமா ரசிகர்களுக்கு அது கடமை

   Delete
 5. வைட்டான விருந்தோம்பலுக்கு எனது நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. இது என்ன மொய்க்கு மொய் மெத்தட்டா

   Delete
 6. //மிஷ்கின் சிங்கம் தான்//
  சிங்கம் 3 ஆ.

  ReplyDelete
  Replies
  1. இது வேறயா

   Delete
  2. //இது வேறயா//
   சிங்கம் 4ஆ

   Delete
  3. //இது வேறயா//
   "ஆருர் மூனா" ன்னு இருக்கும் போது சிங்கம் மூனா(3ஆ) இருக்குமோன்னு கேட்டேன்.

   Delete
  4. ஆக மொத்தம் அடங்குற மாதிரி இல்லை, நாம அடங்கிடுவோம் வணக்கம் அண்ண

   Delete
 7. அப்படியே ஆகட்டும்

  ReplyDelete
 8. //மிஷ்கின் சிங்கம் தான்//
  அப்ப ஓநாய் கதாபாத்திரத்துல நடிக்கலயா?

  ReplyDelete
  Replies
  1. நடிச்சது ஓநாய் கதாபாத்திரத்தில், ஆனால் நடித்தவர் இயக்குனர் சிங்கம்

   Delete
 9. //மிஷ்கின் சிங்கம் தான்//
  சிங்கத்துக்கு பயந்து தான் தியேட்டர் கொடுக்க மறுக்குறாங்களோ?.

  ReplyDelete
  Replies
  1. குதிரைகள் ஓடும் பாதையில் சிங்கத்திற்கு பாதை தர யோசிக்கத்தான் செய்வார்கள்

   Delete
 10. நேர்மையான விமர்சனம். வாழ்த்துக்கள். –கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்)

  ReplyDelete
  Replies
  1. நன்றி செல்லப்பா சார்

   Delete
 11. உங்களது விமர்சனங்கள் நியாயமாக இருக்கிறது, படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது நண்பரே...... இந்த வாரம் புக் செய்ய போகிறேன் !

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக , பார்த்து மகிழுங்கள் சுரேஸ்

   Delete
 12. ஹீரோயின் இல்லை...பாட்டு இல்லை...காமெடி இல்லை....சேஸிங் இல்லை....அதே நேரம்...ஒரு நொடிக்கூட தொய்வில்லை......இளையராஜாவின் இசை உண்மையில் மிகவும் பலமாகவும்....பிரமாண்டமாகவும்....இருக்கிறது....really too good thrill movie.... உங்க விமர்சனம் போல....

  ReplyDelete
  Replies
  1. நன்றி அலாவுதீன்

   Delete
 13. அற்புதமான படம்... ஆனால் கமர்ஷியலா வெற்றியடைய வைக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கு...
  if it is not celebrated.....a story from get2karthick

  “ ஒரு காட்டுல ஒரு கரடிக்கூட்டம் வாழ்ந்து வந்துச்சு.அதுகளுக்கு ஆட்டுக்குட்டி மட்டும் தான் வேணும்.அதுக ஆடுகள மட்டும் தான் வாழ விடும்.அங்க தெரியாத்தனமா சில ஓநாய்கள் மாட்டிக்கிச்சு.கூறுகெட்ட கரடிகளுக்கு ஆட்டுக்குட்டி ருசி மட்டும் தான் தெரியும்.இங்க வாழனும்னா ஆட்டுக்குட்டி தான் இடனும் என்ற விதி ஓநாய்களூக்கு புலப்படல.இதுக இட்ட ஆட்டுக்குட்டி இதுகள மென்மேலும் புண்படுத்துச்சு.ஓநாய்கள் சீழ் ஒழுகி இறந்து போனாலும் அதுகளுக்கு தெரிந்தது என்னவோ ஒநாய் குட்டிகள் தான்.”

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...