சில அப்பாவி பதிவர்கள் நல்ல திறமையாக எழுதிக் கொண்டு இருப்பார்கள். ஆனால் பாருங்கள் அவர்களது பதிவுகளுக்கு ஹிட்ஸ் ரொம்பக் குறைவாகவே கிடைக்கும். அவர்கள் எல்லாம் ஆத்ம திருப்திக்காக பதிவு எழுதுபவர்கள். அவர்களி்ன் ஆர்வத்துக்கு வாரம் இரண்டு பதிவு எழுதினாலும் வாரம் ஒரு பதிவு நான் சொல்வது போல் எழுதினால் போதும்.
கமெண்ட்டுகளும் ஹிட்ஸூகளும் அது பாட்டுக்கு அள்ளும். அதன் பிறகு அவர்களது நல்ல பதிவுகளும் ஹிட்ஸ் ஆகும். உதாரணத்திற்கு ராபர்ட் ஜி என்ற பதிவர் மெல்லியல் என்ற வலைதளத்தில் பதிவுகள் எழுதி வருகிறார். ஆனால் மிக நேர்மையாக தனக்கு தோன்றியதை எழுதி வருகிறார். அவரது எல்லா பதிவுகளும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஆனால் பாருங்கள் அவரது வலைதளத்திற்கு வருகை தரும் வாசகர்களுக்கும் என்னைப் போன்ற ஹிட்ஸூக்காக அலையும் பதிவர்கள் வலைதளத்திற்கு வரும் வாசகர்களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. அதற்காக அவரையும் இது போல் செய்ய சொல்லவில்லை. மற்ற புதிய பதிவர்கள் கவனித்து ஹிட்ஸ்களை அள்ளவேண்டியே இந்த பதிவு.
சினிமா விமர்சனங்கள் எழுதுவது, இதற்காக பெரிய அளவுக்கு சினிமாவின் டெக்னிக்கல் விஷயங்கள் தெரிந்திருக்கவோ திரைக்கதை பற்றிய சூட்சமங்கள் அறிந்திருக்கவோ தேவையில்லை. முதல் காட்சி காலை நாலு மணிக்கு போட்டாலும் சரி. தமிழ்நாட்டில் படம் வெளியாகாமல் ஆந்திராவில் மட்டும் வெளியானாலும் சரி.
அதிகாலையில் எழுந்து பல்லுகூட வெளக்காமல் தலையை மட்டும் சீவிக் கொண்டு திரையரங்கத்திற்கு சென்று விட வேண்டும். டிக்கெட்டு எவ்வளவு விலையானாலும் வாங்கி படத்தை பார்த்துக் கொண்டே அவ்வப்போது படத்தைப் பற்றிய ஸ்டேட்டஸ் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
படம் முடிந்ததும் வேறு எந்த வேலைக்கும் போகாமல் நேரே கம்ப்யூட்டருக்கு வந்து படத்தின் கதையை விலாவரியாக புட்டு புட்டு வைத்து விமர்சனம் எழுதினால் போதும். அதுவாக ஹிட்ஸ்கள் அள்ளிக் கொண்டு போகும்.
கொசுறாக சினிமா பார்க்கப் போனதையே ஒரு பதிவாகப் போட்டு இன்னும் கொஞ்சம் ஹிட்ஸ் தேத்தலாம். முக்கியமாக செல்லும் சாலை, அதில் இருந்த கற்கள், பள்ளங்கள் வரை குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.
முதன் முதல் விமர்சனம் முடிந்து விட்டதா. அடுத்ததாக எதிர்மறை விமர்சனம். இதற்காக முதல் நாளே படம் பார்க்க போக வேண்டிய அவசியமில்லை. இரண்டு மூன்று நாட்கள் கழித்து படத்திற்கு சென்று பார்த்து விட்டு நேரம் தங்கள் வசதிப்படி விமர்சனம் எழுதலாம்.
அதற்கு முன்பு அதுவரை வெளிவந்த விமர்சனங்களை எல்லாம் படித்து விட்டு அதற்கு நேர்எதிராக விமர்சனம் எழுத வேண்டும். நல்லாயிருக்கு என்று விமர்சனங்கள் வந்த படத்தை கழுவி கழுவி ஊத்த வேண்டும். பார்க்கவே சகிக்காத படங்களை உலகத்தரத்திற்கொரு தமிழ் சினிமா என்று புகழ வேண்டும்.
இன்னும் கொஞ்சம் உயரம் போய் விடுவீர்கள். இந்த மாதிரி விமர்சனங்களுக்கு திட்டி பின்னூட்டங்கள் வரும். அவற்றிற்கெல்லாம் பதில் சொல்லக் கூடாது. அப்போது தான் நீங்கள் பிரபல பதிவர் என்று உணரப் படுவீர்கள்.
அடுத்ததாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டியது நாத்திகம் மற்றும் சாதி மறுப்பு. உண்மையில் நான் நாத்திகன். கடவுள் நம்பிக்கை கிடையவே கிடையாது எனக்கு விவரம் தெரிந்த வயது முதல். அது போல தான் சாதி நம்பிக்கையும். ஆனால் இங்கு ஏகப்பட்ட போலி நாத்திகர்களும் சாதி மறுப்பாளர்களும் இருப்பதால் அதற்காக மதிப்பே போச்சு.
அதனால் நான் எங்குமே வெளிப்படுத்துவது இல்லை. நாம் பிரபலமாக வேண்டுமானால் சமூக விஷயங்களில் பொங்கி எழுந்து அந்தந்த சமயங்களில் கிடைக்கும் கடவுள்களை போட்டு நொங்கியெடுக்க வேண்டும். சாதி பார்த்து நாம் திருமணம் செய்திருந்தாலும் சாதி ஒழிக என்று தான் பொங்க வேண்டும்.
அடுத்ததாக சேகுவேரா மற்றும் பிரபாகரனின் படங்கள். இவர்களின் கொள்கைகளோ வரலாறுகளோ நமக்கு தெரியாவிட்டாலும் பரவாயில்லை. இவர்களின் படங்களை நமது பதிவில் போட்டு நாம் புரட்சி பதிவர் என்பதை மற்றவர்கள் கவனிக்கும் விதம் தெரியப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
அடுத்ததாக மற்ற பதிவர்களை கலாய்த்தல். இதற்கு வகை தொகையே கிடையாது. கிடைத்த பதிவர்களையெல்லாம் கலங்கடிக்க வேண்டும், கதறடிக்க வேண்டும். இதற்கு ஸ்பெசல் கிளாஸ் வேண்டுமென்பவர்கள் பாண்டிச்சேரிக்கு பேருந்து பிடித்து சென்று அங்கு இறங்கி மகாதியான உபவாசப் பொருட்களை வாங்கி சிதம்பரத்திற்கு பேருந்து ஏறுங்கள்.
பாண்டி தாண்டியதும் முகநூல் ஸ்டேட்டஸில் இந்த விஷயத்திற்காகத் தான் வருகிறேன் என்று அறிவித்து விடுதல் நலம். சிதம்பரத்தை நெருங்கியதும் உங்களுக்கு காற்றில் ஜவ்வாது மணம் வீசும். ஆமாம் அங்கு தான் அந்த மகான் வசித்து வருகிறார்.
இறங்கியதும் தங்களை அழைத்துக் கொண்டு மகாதியானவகுப்பு நடக்கும் இடத்திற்கு போவார். இரண்டு நாள் தீட்சை அவரிடம் எடுத்துக் கொண்டால் போதும். நீங்கள் சென்னைக்கு திரும்பும் போது உலகப்புகழ் பெற்ற பதிவராவதற்கான தகுதியை பெற்று விடுவீர்கள்.
அவர் யார் என்று உங்களுக்கு இன்னும் தெரியவில்லை என்றால் நீங்கள் பதிவரே கிடையாது என்றும் உங்களுக்கு பதிவுலகத்தைப் பற்றி அரிச்சுவடி கூட தெரியாது என்று தான் அர்த்தம்.
கிலிபிலி கிலிபிலி ஜெய்போலோநாத். அரே ஓ சாம்பா.
ஆரூர் மூனா
குபீர் பிரபல பதிவர் ஆவதற்கு இவ்வளவு விசயங்கள் இருக்கா...???? அய்யகோ.. நான் எப்போ அப்படி ஆவறது..!!!
ReplyDeleteசிதம்பரத்திற்கு டிக்கெட் போடவும்
Deleteநெற்றிக்கண் திறப்பினும் , உங்கள் பதிவு குற்றமே.. தியான மண்டபம் செல்ல நேரம் ஆகிவிட்டது. பின்னர் விவாதிப்போம்.
ReplyDeleteதியான மண்டபம் சென்று முக்தி நிலையை அடைக.
Deleteஜெய்போலோநாத். அரே ஓ சாம்பா.
ஆலோசனைகள் சூப்பர்
ReplyDeleteஹி ஹி நன்றி முரளிதரன்
Deleteஅரே ஓ சாம்பா
ஹரே ஒ சம்போ ....!!
ReplyDeleteதியான மண்டபம் சென்று முக்தி நிலையை அடைக.
Deleteஜெய்போலோநாத். அரே ஓ சாம்பா.
Super
ReplyDeleteநன்றி வருண்
Deleteஜெய்போலோநாத். அரே ஓ சாம்பா.
மகாதியானத்தின் போது உதிர்த்த கருத்துக்களா இவைகள் !!!
ReplyDeleteகுருஜி போதனைகளை அவசியம் பின்பற்றுவோம்.... சம்போ மகாதேவா !!!
நாம ஒரு பத்து நாளா மகாதியானத்துக்கு போகவே இல்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்
Deleteமற்றபடி நீங்களும் தியானம் செய்யுங்கள்
ஜெய்போலோநாத். அரே ஓ சாம்பா.
http://adirainirubar.blogspot.com/2013/09/blog-post_11.html
ReplyDeleteஏன் இந்த விளம்பரம் அதுவும் நம்மக்கிட்டயே,
Deleteஇருந்தாலும்
ஜெய்போலோநாத். அரே ஓ சாம்பா.
அலெக் ஆனந்தா ஜெய் போலோ பித்(து)யானந்தா
ReplyDeleteபோற போக்கப் பாத்தா ஆசிரமத்துள்ளே இட நெருக்கடியாகிடும் போல இருக்கே, அப்படி நடந்தா ஆசிரமத்தை கொல்லிமலைக்கு மாத்திட வேண்டியது தான்
Deleteஜெய்போலோநாத். அரே ஓ சாம்பா.
அது சரி...அண்ணேன்
ReplyDeleteகிட்ஸ் வைச்சு என்ன பன்றது....?
என்ன இப்படி கேட்டுட்டீங்க, அண்ணா நகர்ல ப்ளாட் வாங்கலாம்ல
Deleteயோவ்வ்வ்வவ்வ்வ்.....
ReplyDeleteவிளம்பரம்...பத்தலை.....
எவரும்...என்னை....தொடர்புகொள்ளவில்லை......
இதுக்கு மேல நான் பில்டிங் மேல நின்னு தான் கத்தனும்
Deleteஜெய்போலோநாத். அரே ஓ சாம்பா.
எழுதுறேன் ஹிட் அடிக்கிறேன்
ReplyDeleteஅவ்வளவு தான் ஜெயம் உனக்கே,
Deleteஜெய்போலோநாத். அரே ஓ சாம்பா.
யோவ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்.....ம்....
Deleteநேத்துக்கு உமக்கு...சொன்ன மேட்டர்...கையில்...எடும்....
அன்பே...அதை...தவிர்க்கவும்....
நாளைக்குள்...போடாவிட்டால்......
நான்..களம்...இறங்குவேன்....
வேண்டுமானால்...இருக்குற...வேய்ட்...எல்லாத்தையும் தூக்கிவிட்டு...{???!!!}.....சொல்லவும்....
இருங்க தலைவரே அடுத்த பதிவு அது தான்
Deleteஅறு முறை பூஜை ஓவர்.ஆனா அருள் இல்லே .எத்தனை முறை ஜெய் போலோ நாத் . உங்க ஆன்மிகம் சரியில்லை .நான் சித்தி, இல்லே நித்தி கிட்ட ஆலோசனை(க்கு) சொல்ல போறேன் இல்ல செல்ல போறேன்
ReplyDeleteஉங்களுக்கு ரொம்ப ரோலிங் ஆகிறது. இரண்டு நாள் மகாதியானத்திற்கு வரவும். எல்லாம் சரியாகி விடும்.
Deleteஜெய்போலோநாத். அரே ஓ சாம்பா.
ஆரூர் மூனா, உம்மை அடுத்த பதிவில் "கவனித்துக்" கொள்கிறேன்.
ReplyDeleteநன்றாக கவனியுங்கள். காத்திருக்கிறேன்
Deleteபிரபலமாக இவ்ளோ வழி இருக்கா...இது தெரியாம போச்சே...
ReplyDeleteஓகே..இனிதான் ஸ்வாமிஜி அருள் கிடைச்சிடுச்சே..தியானத்தில் சாரி பிரபலத்தில் இறங்கிட வேண்டியது தான்....
அவ்வளவு தான் ஜீவிதம்.
Deleteஜெய்போலோநாத். அரே ஓ சாம்பா.
நலமா! விரைவில் சந்திப்போம்!
ReplyDeleteநலம் அய்யா, நான் முன்பு கூறியபடி வேலைகள் செய்து கொண்டு இருக்கிறேன். விவரங்களுடன் தங்களை சந்திக்கிறேன்
Deleteஏற்கனவே பலமுறை தியானத்தில் ஈடுபட்டும் அருள் கிடைக்காதவர்களுக்கு என்ன வழி சுவாமி ???
ReplyDeleteஅதற்கு தான் மகாதியானம் இருக்கிறது. இரவுவானம் சுவாமியடிகளே
Deleteஅரஹர ஓ. சம்போ... மூனாந்தாயாக.. நமக...!!!
ReplyDeleteஎன்ன ஸ்வாமி.. பரம ரஹசியத்தை இப்படி போட்டு உடைக்கறீங்களே...!!
இதில் மறைப்பதற்கு என்ன இருக்கு அய்யா
Deleteபிளாக்கர் தளத்தில் பலரும் வலைப்பதிவுகளை எழதி வருகின்றனர். ஆனால் வலைப்பதிவுகளைப் படிப்பவர்கள் தமிழில் மறுமொழி இட வசதிகள் இல்லை. தமிழ்மறுமொழிப்பெட்டி அமைப்பதன் எளிமையாக தமிழில் கருத்திட முடியும். "தமிழ் மறுமொழிப் பெட்டி" அமைப்பது எப்படி என்பதை எளிமையாக விளக்குகிறது இப்பதிவு. பிளாக்கர் தள வலைப்பதிவர்களுக்கு இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
ReplyDeleteமேலதிக தகவல்களுக்கு சுட்டியைச் சொடுக்கி வாசிக்கவும்.
பிளாக்கர் தளத்தில் தமிழ் மறுமொழிப் பெட்டி அமைப்பது எப்படி?
பார்க்கிறேன் அய்யா
Deleteபலருக்கும் பயன் தரும் எல்லோருக்கும் தெரிந்த (மிகவும் தாமதமான) பகிர்வு... நன்றி...
Deleteஇதுல ஊமைக்குத்து வேறயா, இருந்தாலும் நன்றி தனபாலன்
Deleteமகா தியானத்திற்கு இவ்வளவு வல்லமையா? அறிந்து கொண்டேன் சுவாமி!
ReplyDeleteநன்றி சுரேசு.
Deleteஎல்லோரும் எல்லாவற்றையும் எழுதி விட்டார்கள்.
ReplyDeleteஇனி நான் என்னத்த எழுத அட போங்க சுவாமிகள்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
நன்றி தேவதாஸ்
Delete