இன்று வினாயகர் சதுர்த்தி. வீட்டில் தனியே உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருக்கேன். ஆனால் என் நினைவுகள் மட்டும் திருவாரூரை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
பத்து வயதில் இருந்தே வடக்கு வீதியில் இருந்த சித்தி வினாயகர் கோயில் கமிட்டியில் நானும் இருந்தேன். வினாயகர் சதுர்த்திக்கு பத்து நாள் முன்பே பாரத் மன்றம் என்ற அமைப்பின் மூலம் வசூல் செய்யும் வேலையை ஆரம்பித்து விடுவோம்.
வடக்கு வீதி, வடக்கு மடவிளாகம், மேட்டுத் தெரு, நடவாகனத் தெரு, பிடாரி கோயில் தெரு, ஆண்டித் தோப்பு, காணியாளர் தெரு வரை சுற்றி 2 ரூபாய் முதல் ரூபாய் வரை வசூல் செய்து கணக்கை ஒப்படைப்போம். சங்கத் தலைவர் கவுன்சிலராக இருந்ததால் பெரிய ஆட்களிடம் போய் அவரே வசூல் செய்து வருவார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு சைக்கிள் ரிக்சாவில் மைக் செட் கட்டி 13வது வார்டு முழுவதும் "திருவிழாவை முன்னிட்டு ஆர்க்கெஸ்ட்ரா இருக்கிறது, வினாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் இருக்கிறது. வாரீர் வாரீர்" என்று கூவிக் கொண்டே செல்வோம்.
முதல் நாள் இரவு கோயிலில் பேனர் கட்டுவது, கொடி கட்டுவது போன்ற வேலைகளை பார்ப்போம். நாட்டு மருந்து கடைக்கு போய் தொன்னை வாங்கி வருவது, சமையற்காரருக்கு பொருட்கள் வாங்கித் தருவது போன்ற வேலைகளை செய்து முடித்து விட்டு வீட்டுக்கு செல்வேன்.
மறுநாள் காலை 'ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்' என்ற பழமொழிக்கேற்ப காலையிலேயே பட்டை கொட்டை(உடனே தப்பா நினைக்கிறது, அது உத்திராட்சம்) சகிதம் கோயிலுக்கு வந்து சீர்காழி கோவிந்தராஜனின் பாடல்கள் உச்சஸ்தாயில் கேட்கும் போது அப்படியே சிலிர்ககும். அந்த அனுபவத்தை மட்டும் வார்த்தையால் வடிக்க முடியாது.
மாலையானதும் சந்தன காப்பு அலங்காரத்துடன் வினாயகரை தரிசிக்க கூட்டம் அள்ளும். மக்களை கட்டுப்படுத்தி தொன்னையில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், சுண்டல் வைத்து மக்களுக்கு வினியோகிப்பது போன்ற வேலைகளை செய்வேன்.
வேலைகள் முடிந்ததும் அடடா இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே என வருத்தமாக இருக்கும். அடுத்த வருட வினாயகர் சதுர்த்தியை எதிர்பார்த்து காத்திருப்பேன். இன்றோ மற்ற நாளைப் போல் அதுவும் ஒரு நாளாய் கடந்து போகிறது.
--------------------------------------------
இவன் கண்டிப்பா பெரிய மனுசனாயிடுவான்
-------------------------------------
ஒரு மனுசனை கொலையா கொல்றதில் நம்ம நக்கீரனை அடிச்சிக்கிறதுக்கு ஆளே கிடையாது. நான் வேலை பாக்குறதே உலக அதிசயம். சில சமயம் டைட் ஓர்க்காக மாட்டி விட்டால் பெண்டு நிமிர்ந்து விடும். ரயிலின் கடைசியில் மற்றொரு பெட்டியுடன் மோதாமல் இருப்பதற்கு ஒரு புஷ் இருக்கும். அதனை எடை குறைந்தது 100 கிலோவுக்கு மேல் இருக்கும்.
இரண்டு நாட்களுக்கு முன்பு நான்கு பேர் சிரமப்பட்டு தூக்கி மாட்டிக்கிட்டு இருக்கோம், அப்போது ஒரு போன் வந்தது. நம்ம போன் வேறு பெருசா, எடுக்க யோசிச்சிக்கிட்டு அந்தபுஷ்ஷை மாட்டிக்கிட்டு இருக்கோம். முழுவதும் ரிங் போயி கட்டாயிடுச்சி.
மறுபடியும் போன் வந்தது. ஏதோ அவசரம்னு நினைச்சிக்கிட்டு ஒத்தக்கையில் புஷ்ஷை புடிச்சிக்கிட்டு போனை எடுத்தால் நம்ம நக்கீரன். உனக்கு ஒரு சேதி தெரியுமா. ஒரு பதிவில் நம்ம சந்திப்பை குறை சொல்லி செய்தி போட்டிருக்கு, என்ன பண்ணலாம்னு கேட்டார்.
யோவ் இருய்யா. நான் அவசர வேலையில் இருக்கேன். அப்புறம் பேசுறேன் அப்படின்னு சொன்னேன். வேலையை அப்புறம் பார்க்கலாம். இதுக்கு என்ன பண்ணலாம் அப்படின்னு முடிவு செய்யனும். உடனே ஆன்லைனுக்கு வா. அப்படின்னார். எனக்கு செம கடுப்பு, ஆனாலும் ஐந்து நிமிடம் வரை போனை கட் செய்ய விடவில்லை மனுசன்.
வேலை முடிந்ததும் அப்படியே வீட்டுக்கு வந்தேன். அந்த பதிவுக்கு போய் நாலு கமெண்ட்டு திட்டி போட்டு வந்தேன். மேட்டர் வேற மாதிரி பத்திக்கிட்டு பெரிசாகிப் போச்சு. வாழ்க நக்கீரன்.
ஜெய் போலோநாத். அரே ஓ சாம்பா.
-------------------------------------
நம்ம நக்கீரன் வாரிசா இருக்கும்
------------------------------------------
பதிவர் சந்திப்பு அவசியமா இல்லையா என்ற பட்டிமன்றம் நடந்துக் கொண்டு இருக்கும் காலத்தில் இது மிக அவசியமானதே என்று நான் நினைக்கிறேன். இவ்வளவு நாள் முகம் தெரியாமல் சற்று தூரத்தில் இருந்து மரியாதையுடன் பழகிய நட்புகள் அந்த ஒரு நாள் பழக்கத்தில் இன்னும் நெருங்கி மாமா மச்சான் என்று அழைக்கும் அளவுக்கு ஆகியிருப்பதே இதன் பலம்.
நட்பு என்பது வாங்க போங்க என்று சற்று தூரத்தில் நின்று பேசி எனக்கு பழக்கமே இல்லை. பதிவர் சந்திப்பில் நான் நின்று பேசியதே மிகச் சிலருடன் தான், இவர் மண்டை திமிரு புடிச்சவன் என்று கூட சிலர் நினைத்துக் கொண்டிருக்க கூடும். அதற்கு காரணம் அந்த அந்த நேரத்திற்கு உணவுப் பொருட்கள் வந்து சேர வேண்டிய டென்சனில் சுற்றிக் கொண்டு இருந்தேன். அது தான் காரணம்.
பலரை பார்ககும் போதும் வெறும் வணக்கம் மட்டும் சொல்லி விட்டு ஓடி விட்டேன். எல்லோரும் என்னை மன்னிக்கவும். அடுத்த வருடம் வெறும் பார்வையாளனாக மட்டும் கலந்து கொண்டு எல்லோர் கூடவும் போட்டோவாக எடுத்து தள்ள வேண்டும் என்று ஆசை.
நான் மேடையில் கேடயம் வாங்கிய போட்டோவை யாராவது வைத்திருப்பார்கள் என்று தேடிக் கொண்டு இருக்கிறேன். கிடைக்கவேயில்லை. நான் மேடையில் ஏறியதே ஒரு நிமிசம் தான். அதுவும் இதை வாங்கத்தான். எனக்கு இந்த கேடயத்தை கொடுத்தார்கள் என்றால் தங்கமணி நம்ப மாட்டேங்கிறாள். நாச்சியப்பன் பாத்திரக் கடையில் வாங்கியதா என கிண்டல் செய்கிறாள். எல்லாம் நம்மளை புடிச்ச கெரகம்.
இந்த முறை புதிதாக சந்தித்த சிலருடன் இன்னும் நெருக்கமாகி கலாய்த்தல் ஓடிக் கொண்டே இருக்கிறது. அது தான் எனக்கும் வேணும். நம்ம ஆசிரமத்தில் இப்ப ஏகப்பட்ட சாமியார்கள்
அரே ஓ சாம்பா
ஆரூர் மூனா

நித்யா(ஆ)னாந்தம் தொடர சுவாமிக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநித்யாவுக்கு தெரியாமல் ஆனந்தம் தொடரட்டும்
Delete//மண்டை திமிரு புடிச்சவன் என்று கூட சிலர் நினைத்துக் கொண்டிருக்க கூடும். அதற்கு காரணம் அந்த அந்த நேரத்திற்கு உணவுப் பொருட்கள் வந்து சேர வேண்டிய டென்சனில் சுற்றிக் கொண்டு இருந்தேன். அது தான் காரணம். //
ReplyDeleteஅதெல்லாம் யாரும் நினைக்க மாட்டாங்க... நீங்க ஆளுதான் பாக்க கரடுமுரடா இருக்கீங்க... மனசு சுத்த வெள்ளை....
யாரு சுண்ணாம்பு அடிச்சதுன்னு தெரியலையே
Deleteநம்ம ஆசிரமத்தில் இப்ப ஏகப்பட்ட சாமியார்கள்.........ஆமாம்
ReplyDeleteஅப்படியே அடுத்த பதிவர் சந்திப்ப பிடாதி-ல வச்சிடுவோம்
நம்ம நித்தியானந்தாவ தலைமைதாங்க வைப்போம்....ஓகே...வா?
எங்க வச்சாலும் கமண்டலத்துடன ஆஜராகிவிடுவோம்
Deleteம்ம்ம்ம்.. திருவாரூருக்கு கூட்டிட்டு போனீங்க எங்களையும் உங்கள் நினைவலைகளோடு.... அங்கே வினாயகச்சதுர்த்தி அன்று எல்லோரிடம் காசு வசூலித்து கோயிலில் பக்திமணம் கமழ கொண்டாட்டமாக சதுர்த்தி கொண்டாடிவிட்டு தொன்னையில் சர்க்கரைப்பொங்கல், புளியோதரை, தயிர்சாதம் சுண்டல் இதெல்லாம் வாங்கி சாப்பிட்டுட்டு அடடா இவ்ளோ சீக்கிரம் முடிஞ்சுப்போச்சே சதுர்த்தின்னு சொல்லிட்டு அடுத்த வருட சதுர்த்திக்காக வெயிட் பண்ண ஆரம்பிச்சிருவேன்னு சொன்னீங்க.படிச்சுக்கிட்டே வரும்போது நேர்ல நிகழ்வை பார்ப்பது போல் இருந்ததுப்பா..
ReplyDeleteஎங்க வீட்டுல ஒவ்வொரு வருடமும் எல்லா பண்டிகையும் குவைத்தில் இருந்தாலும் சிறப்பாக கொண்டாடிவிடுவோம்.. முக்கியமாக வினாயகர் சதுர்த்தி.. என் ஃபேவரைட்பா பிள்ளையார்.... இன்னைக்கும் ஜகஜ்ஜோதியா ஜம்முனு இருந்தார் பிள்ளையார் எங்க வீட்டில்...
நம்ம பதிவர் விழா சந்திப்பு நீங்க சொன்னது போல கண்டிப்பா அவசியம் வேண்டும்... முகம் காணா நட்புகள் நேரில் பார்க்கும்போது ஏற்படும் சந்தோஷம் விவரிக்க தெரியவில்லை.. ஆனால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்...
புலவர் இராமானுசம் அப்பா வீட்டில் பதிவர்கள் சிலரை நான் ஊருக்கு வந்தபோது சந்தித்தேன்... நாங்கள் இருந்தா அந்த கொஞ்ச நேரம் என்றாலும் எத்தனை சிரிப்பு, சந்தோஷம், பேச்சு என்று நேரம் போனதே தெரியவில்லை.. வீட்டுக்கு போகும் நேரம் வந்ததும் மனசு சட்டுனு கஷ்டமாச்சு எனக்கு.... அதுக்காக நக்கீரன்ல போய் திட்டி பதிவு போடனுமா செந்தில் ? யார் என்ன சொன்னாலும் நாம அமைதியா இருந்தாலே போதும்பா.. அவர்களே புரிஞ்சுப்பாங்க...
ஆஹா பதிவர் விழாவில் மண்டை கனம் பிடிச்சு “ ஒரு டவுட் மண்டை மட்டுமா கனம்??? போட்டோவை பார்த்தால் உடம்பெல்லாம் கூடா கனமா தானேப்பா தெரிகிறது?? “ சும்மா தமாஷ்...
பார்ப்போர் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும்.. நம்ம ஸ்கூல் பையன் சரவணன் சொல்வதை கேட்டீங்களா? சொல்றவங்க சொல்லிக்கிட்டு தான் இருப்பாங்க... 10 பேரு தப்பா சொன்னாலும் ரெண்டு பேரு உங்களைப்பத்தி நல்லா சொல்றாங்க தானே? அப்ப உங்கக்கிட்ட நல்ல குணம் இருக்குன்னு அர்த்தம் தானே?
என்ன கேடயம் வாங்கினீங்களா? எங்கப்பா போட்டோ??
யாராச்சும் போட்டோ எடுத்திருந்தா சொல்லுங்கப்பா.. நானும் பார்க்கணும்..
அன்பு வாழ்த்துகள் செந்தில் அருமையான பகிர்வுக்கு...
மிக்க மிக்க மிக்க நன்றி Manjubashini Sampathkumar
Delete//நம்ம ஆசிரமத்தில் இப்ப ஏகப்பட்ட சாமியார்கள்..// என்னையும் உங்க ஆசிரமத்தில் உறுப்பினராக்கி, கோவை மாவட்ட பிரான்சைஸீயும் கொடுத்த உங்க மனச என்னன்னு சொல்றது குருஜி. யு ஆர் சிம்ப்ளி கிரேட்.. அரே ஓ சாம்பா!
ReplyDeleteநமது ஆன்மீகப் பணிகள் இனிதே தொடரட்டும் டபுளானந்தா அரே ஓ சாம்பா
Deleteஅடுத்த முறை உங்கள் ஆசைகள் எல்லாம் நிறைவேறும்...
ReplyDeleteநன்றி தனபாலன்
Deleteஒ சம்பா அலெக் ஆனந்தா அடுத்த வருஷம் ஜூன்லே பதிவர் சந்திப்பு வருகிற மாதிரி பாருங்களேன் , கலந்து கொள்ள ஆசை ஆசையா இருக்கிறது . எனக்கு ஜூனில்தான் லீவு கிடைக்கும் .
ReplyDeleteகண்டிப்பாக முயற்சிப்போம் அஜீம்
Delete"விநாயகர் சதுர்த்தி" அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.
ReplyDeleteநன்றி பழனி
Deleteமாப்ள நான் ஊர்ல இல்லாத சமயத்துல என்னய்யா நடந்தது. ஒரே அதகலமா இருக்கு... மறப்போம் , மன்னிப்போம்.
ReplyDeleteஅப்படியே ஆகட்டும் தும்ததா
Deleteஅரே ஓ சாம்பா
விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்களுக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துகள் மாதேவி
Deleteஇந்த (அவசர கால) இயந்திர உலகத்தில் ஒவ்வொருவரும் ஒரு கஷ்டத்தை யேனும் அனுபவிச்சு வலம் வந்திட்டிருக்கோம்.அதையெல்லாம் மறந்துட்டு ஒரு நாள் முழுக்க வேறொரு உலகத்தில் சந்தோசமாய் அளவளாவும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் அது தாங்க இந்த பதிவர் சந்திப்பு. இதை இப்படியும் சொல்லலாம். பாலைவனத்தில் கடும் வெயிலில் அவதிப்பட நேர்கையில் எங்கேனும் நிழல் தரும் மரம் தென்பட்டால் விரைவாக
ReplyDeleteசென்று நிழலில் இளைபாற தோணுமே. அந்த சூழ்நிலைக்கு ஒப்பானது
இது.
பதிவர் திருவிழா பற்றி இப்படி தான் குறிப்பிட்டிருக்கிறேன்
அடுத்த வருடம் வெறும் பார்வையாளனாக மட்டும் கலந்து கொண்டு எல்லோர் கூடவும் போட்டோவாக எடுத்து தள்ள வேண்டும் என்று ஆசை.
வாழ்த்துக்கள்
நன்றி சரவணன்
Deleteஇதுக்கு தான் தங்க மணிய பதிவர் சந்திப்புக்கு கூடி போயிருக்கனும். அடுத்த முறையாவது கூட்டி போங்க.
ReplyDeleteகூட்டிட்டு போவதால் ஏற்படும் சௌகரியங்களை விட அசௌகரியங்களே அதிகம் அண்ணே
Deleteநம்ம ஆசிரமத்தில் இப்ப ஏகப்பட்ட சாமியார்கள்?// இதே என்ன புதுக்கூத்து தம்பி?
ReplyDeleteஅடுத்த மகாதியானத்தில் கலந்து கொண்டு பாருங்கள் உங்களுக்கே புரியும் அண்ணே
Deleteநீங்க ஓடியாடி உழைத்ததை எல்லாரும் பெருமையா சொன்னாங்களே அல்லாமல் தலைக்கனம் பிடித்தவனென்று யாரும் நினைக்கவும் சொல்லவும் இல்லைய்யா டோன்ட் ஒர்ரி...
ReplyDeleteநானும்தான் முதலில் அப்படி நினைத்தேன். அத்னால், பயந்து ஒதுங்கி செல்ல ஆரம்பித்தேன். அப்புறம்தான் தெரிந்தது என் தம்பி கருப்பு தங்கம்ன்னு
Deleteசந்தடி சாக்குல தம்பிய கருப்புன்னு சொல்லிட்டீங்களே
Deleteநீங்கள் மேடைப் பக்கம் வராததைப் பற்றி அங்கேயே உங்களிடம் கேட்டேன். உண்மையிலேயே என்ன தீர்க்க தரிசனம்? எனது பதிவிலும் குறிப்பிட்டிருக்கிறேன்.
ReplyDeleteநன்றி முரளிதரன்
Deleteஅன்பின் ஆருர் மூனா - மலரும் நினைவுகள் - திருவாரூரில் விநாயக சதுர்த்தி - பதிவு நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteநன்றி சீனா அய்யா
Deleteசின்ன வயது நினைவுகள் சிறப்பு! அந்த பதிவுல உங்க கோபமான வார்த்தைகளுக்கு காரணம் நக்ஸ் தானா? பதிவர் சந்திப்புல என்னை சந்தித்தது நியாபகம் இருக்கா? நன்றி!
ReplyDeleteஎன்ன இப்படி கேட்டுட்டீங்க, நன்றாக நினைவு இருக்கிறது, பிஸியாக இருந்ததால் நிறைய பேச முடியவில்லை
Delete