சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, September 27, 2013

ராஜா ராணி சினிமா விமர்சனம்

ஆர்யாவும் நயன்தாராவும் ஒருவருக்கு ஒருவர் பிடிக்காமல் பெற்றோர்களின் கட்டாயத்தினால் திருமணம் செய்து கொள்வார்கள். திருமணத்திற்கு முன்பாக ஆர்யா நஸ்ரியாவை காதலிப்பார். நயன்தாரா ஜெய்யை காதலிப்பார்.


ஆனால் நஸ்ரியாவும் ஜெய்யும் செத்துப் போயிருப்பார்கள் அல்லது காணாமல் போயிருப்பார்கள். பிடித்துக் கொள்ளாமலே வாழும் நயனும் ஆர்யாவும் நாளாக நாளாக ஒருவருக்கு ஒருவர் பிடிக்கத் தொடங்கி மனசுக்குள் காதலிக்க ஆரம்பித்து இருப்பர்.

ஒரு சமயத்தில் நயனுக்கு நிரந்தரமாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல வேண்டிய தேவை இருக்கும். ரயில் நிலையத்திற்கோ அல்லது விமான நிலையத்திற்கோ ஆர்யா நயன்தாராவை விடச் செல்லுவார்.

அங்கு நயன்தாரா பிரிந்து சென்ற பின் அவரின் அருமை தெரிய வந்து ரயிலையோ விமானத்தையோ நிப்பாட்டி பிளாட்பாரத்தில் விழுந்து புரண்டு எழுந்து சென்று நயன்தாராவை கைப்பிடித்து படத்தை முடித்து வைப்பார்.


இது படத்தின் கதை அல்ல. டிரைலர் பார்த்ததும் நானே எனக்குள் கற்பனையாய் முடிவு செய்து வைத்திருந்த கதை. கடைசியில் பாருங்கள் இது தான் படத்தின் கதையாய் இருக்கிறது அங்கங்கே சிற்சில மாற்றங்களுடன்.

எனக்கு படத்தில் மிகவும் பிடித்து பெர்பார்மன்ஸில் அடித்து நகர்த்தியிருப்பவர் சந்தேகமேயில்லாமல் ஜெய்தான். என்ன ஒரு இன்னொசன்ட் நடிப்பு. ஜெய் உனக்கு ஒரு பர்பெக்ட்டான பிரமாதமான எதிர்காலம் காத்திருக்கிறது.

கால்சென்டரில் போனின் எதிர்ப்புறத்தில் பெண்களிடம் இருந்து வரும் கமெண்ட்டிற்கும் கலாய்ப்பிற்கும் ஏற்ப மாறும் முகபாவங்களும் எதற்கெடுத்தாலும் அழுவதும் க்ளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட்டும் என அசத்தியிருக்கிறார். கைவலிக்க கைத்தட்டுகிறேன். கண்ணு வேர்க்குது டயலாக்குக்கு தியேட்டரை அதிர்ந்து கைதட்டுகிறது.

ஆர்யா, என்ன ஒரு மேன்லி, வாவ். எனக்கு இது போன்ற மேன்லியாய் இருப்பது தெலுகின் பிரபாஸ் மட்டும் தான் என நினைத்திருந்தேன். அதற்கு நிகராக ஆர்யா என்ன உடற்கட்டு, ஹூம் நானெல்லாம் பெருமூச்சு தான் விடமுடியும்.
 

முதல் பாதியில் தண்ணியடித்து விட்டு அப்பார்ட்மெண்ட்டில் குடியிருப்பவர்களை கலாய்ப்பதும் நயன்தாராவுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதும், நயன்தாராவின் காதல் பற்றி தெரிந்ததும் கண்ணீருடன் மாறும் முகபாவமும் சூப்பர் ஆர்யா.

நயன்தாராவுக்கு வெயிட்டான கேரக்டர். நடிப்பில் ஊதித் தள்ளியருக்கிறார். என்ன முகம் தான் முத்தலாய் உறுத்துகிறது. வயசாகிடுச்சில்ல. ஆனாலும் மேக்கப்பில்லாமல் சத்யராஜிடம் திருமணத்திற்கு சம்மதம் சொல்லுமிடத்தில் அழகாய் இருக்கிறார். ஜெய்யை கலாய்க்கும் போது பெண்கள் எல்லாம் விசிலடிக்கின்றனர்.

படுப்ரெஷ்ஷாய் நஸ்ரியா. கண்கள் பேசுகின்றன. ரிங்க ரிங்கா பாட்டுக்கு நைட்டியை மடித்துக் கட்டி வாயில் ப்ரெஷ்ஷூடன் ஆடிக் கொண்டே அறிமுகமாகும் போது ஜொள்ளு விட ஆரம்பித்த நான் அவரது போர்ஷன் முடியும் வரை நிறுத்தவேயில்லை. யம்மா நஸ்ஸூ தெலுகு பக்கம் போயிடாத உன் ப்ரெஷ்னஸை உறிஞ்சி எடுத்துடுவானுங்க கயவாலிப் பசங்க.

சந்தானம் கவுண்ட்டர் காமெடியில் அங்கங்கே கிச்சுகிச்சு மூட்டுகிறார். பல டயலாக்குகளில் விழுந்து விழுந்து சிரித்த நான் இப்பொழுது தட்டச்சு செய்யும் போது யோசிக்கிறேன் ஒன்றும் நினைவில் இல்லை.

பெரிய ஆக்சன், ரீலுக்கு ரீலுக்கு ட்விஸ்ட் என எதுவுமில்லாமல் மிக இயல்பான புன்முறுவலுடன் கூடிய நகைச்சுவையுடன் கூடிய நீரோடையாய் படம் சிறந்த குடும்பச்சித்திரம்.

படத்தின் இயக்குனர் அட்லிக்கு முதல் படமே வெற்றிப்படம். மேக்கிங்கில் ஒரு ஸ்டைல் தெரிகிறது. பாடல்கள் மட்டும் தான் சற்று யோசிக்க வைக்கிறது.

சில குறைகள் இருப்பினும் அதனை பெரிதுபடுத்த தேவையில்லை. காதலிக்கிறவங்களையெல்லாம் கல்யாணம் பண்ணிக்கனும்கிற அவசியமில்லை. ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களை காதலியுங்கள். இது படத்தில் வரும் டயலாக், ஆனால் இதுதான் இந்த படத்தின் தீம்.

ராஜா ராணி - மெளனராகம் வெர்ஷன் 2.

ஆரூர் மூனா

32 comments:

  1. சூடா விமர்சனமா... நான் 3.30 காட்சிக்குப் போகிறேன்....

    ReplyDelete
    Replies
    1. சென்று ரசித்து வருக

      Delete
  2. என்னனே ஓநாய் பார்க்கலாமுன்னு இருந்தேன் என்னைய இப்படி யோசிக்க வட்சுட்டீங்களே//

    ஜெய் எங்கேயும் எப்போதும் படத்திலேயே அசத்தி இருந்தார் அவருக்காகவே பார்கலாம்

    ReplyDelete
    Replies
    1. அதே போன்ற கதாபாத்திரம் தான் இதிலும்

      Delete
  3. அடடா... கற்பனையில் நினைத்ததே திரையில்...! படத்தின் "தீம்" பழசு தான்... இருந்தாலும் பார்த்திடுவோம்... நஸ்ரியா ரசிகத் தலைவர் (ஆவி) என்ன விமர்சனம் எழுதப் போகிறாரோ...?

    ReplyDelete
    Replies
    1. பழைய தீம் தான் அதனை ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார்கள்

      Delete
    2. நன்றி DD.. :-) நம்ப மன்றத்தை பற்றி இங்கே கூறியதற்கு..

      Delete
  4. சூப்பர்.. கண்டிப்பா படம் பார்க்கணும் நினைக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. பாருங்கள் பார்த்து ரசியுங்கள்

      Delete
  5. ஜெய் உனக்கு ஒரு பர்பெக்ட்டான பிரமாதமான எதிர்காலம் காத்திருக்கிறது.//

    பட்டிக்ஸ் கவனத்திற்கு

    ReplyDelete
    Replies
    1. இதுக்கும் மேல அந்த பெருசுக்கு எதிர்காலம் தேவையா

      Delete
  6. சந்தானம் கவுண்ட்டர் காமெடியில் அங்கங்கே கிச்சுகிச்சு மூட்டுகிறார். பல டயலாக்குகளில் விழுந்து விழுந்து சிரித்த நான் இப்பொழுது தட்டச்சு செய்யும் போது யோசிக்கிறேன் ஒன்றும் நினைவில் இல்லை//

    அதான் சந்தானம்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது எப்படி மறந்தேன் என்று

      Delete
  7. Replies
    1. ரைட்டுக்கு ரைட்டு

      Delete
  8. film very boring utter slop movie

    ReplyDelete
    Replies
    1. அப்புடீங்களா நெசமாவா ஓ மைகாட்

      Delete
  9. சண்டே பார்த்துட வேண்டியது தான் அண்ணே ... ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போற பிளான் இருக்கா ?

    ReplyDelete
    Replies
    1. ஒரு நாளைக்கு ஒரு படம் தான் அரசா, மற்றவர்களின் விமர்சனங்களை படித்து விட்டு முடிவு செய்யலாம் என நினைக்கிறேன்

      Delete
  10. சூப்பர் பாஸ்....... உங்க விமர்சனமே படத்தை பார்க்க தூண்டுகிறது !

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஸ்

      Delete
  11. Very Fast !!! Mouna Raagam 2.0 -- Crisp !

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜ்மோகன்

      Delete
  12. ஜெய் கதாபாத்திரம் "மௌனராகம்" கார்த்திக் போன்று இருப்பதாக கேள்வி பட்டேன் !!!

    விமர்சனம் அருமை !!!

    எங்க ஆறு நாளா.. ஆளையே காணோம் ...

    ReplyDelete
    Replies
    1. சொந்த வேலைகள் ஏராளம் அதனால் எழுத முடியவில்லை, நன்றி மணிகண்டன்

      Delete
  13. யம்மா நஸ்ஸூ தெலுகு பக்கம் போயிடாத உன் ப்ரெஷ்னஸை உறிஞ்சி எடுத்துடுவானுங்க கயவாலிப் பசங்க.?!!!!!!!


    ஆமா என்ன கொஞ்ச நாளா ஆளை காணும்?

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் பர்சனல் வேலைகள் தலைவரே

      Delete
  14. மூடர் கூடம்?!! =>Attack the Gas Station(Korean Movie). ஆனா நல்லா இருக்குனு சொன்னங்க. நீங்க பார்த்து சொல்ல கூடாதா?

    ReplyDelete
    Replies
    1. எல்லா திரையரங்கங்களில் இருந்தும் படத்தை எடுத்து விட்டார்களே, இனி நல்ல தரமான சிடி வந்ததும் தான் பார்க்க முடியும்

      Delete
  15. //படுப்ரெஷ்ஷாய் நஸ்ரியா. //

    நீங்களே பாராட்டினதுக்கு அப்புறம் சுக்கிரன் உச்சத்துல தான்..

    இப்படிக்கு,

    கோவை நஸ்ரியா ரசிகர் மன்றம்.. ஹிஹிஹி

    ReplyDelete
  16. கலியுகம்"தினேஷ் இந்த படம் பார்க்க போன் பண்ணிருக்கார், நான் சைலன்ட்ல போட்டு தூங்கிட்டேன், ஆஹா நல்ல படத்தை மிஸ் பண்ணிட்டேனே !

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...