புத்தக கண்காட்சிக்கு போயிட்டு வந்து பதிவு போடலன்னா சாமி கண்ணை குத்திடும் என்று எல்லோரும் பயமுறுத்துவதாலும் நேற்று வாங்கிய புத்தகங்களை பட்டியலிடவும் என்று பிலாசபி பிரபா கேட்டதாலும் தான் இந்த பதிவு.
நேற்று முன்தினமே சிவா போன் செய்து சனியன்று மாலை புத்தக கண்காட்சிக்கு வந்து விட வேண்டுமென்றும் பிரபாவையும் செல்வினையும் கூப்பிடுவதாகவும் சொன்னார்.
அதன் படி நேற்று மதியம் வீட்டு வேலைகளை முடித்து விட்டு புத்தக கண்காட்சிக்கு கிளம்ப தயாராக இருந்தேன். தனியாக செல்ல யோசனையாக இருந்தது. நண்பர் போலி பன்னிக்குட்டிக்கு போனடித்தேன். பேச்சுத் துணைக்கு அவரையும் அழைத்துக் கொண்டு கிளம்பினேன்.
வழியில் ஸ்கூல் பையன் போன் செய்து அரங்கினுள் காத்திருப்பதாகவும் வந்து இணைந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
கண்காட்சி வளாகம் உள்ளே நுழைந்ததும் பிரபாவும் சிவாவும் டீக்கடையில் இருந்தார்கள். அவர்களுடன் சிறிது நேரம் அளவளாவி விட்டு எல்லோரும் அரங்கினுள் நுழைந்தேன்.
--------------------------------------------------
நேற்று வாங்கிய புத்தகங்கள்
1, வெள்ளையானை - ஜெயமோகன்
2, கொசு - பா.ராகவன்
3, ஓநாய் குலசின்னம் - ஜியாங்ரோங்
4, பிலோமி டீச்சர் - வா.மு.கோமு
5, நாயுருவி - வா.மு.கோமு
6, திப்புசுல்தான் முதல் விடுதலைப் புலி - மருதன்
7, காங்கிரஸ் முதல் கழகங்கள் வரை - ராவ்
8, தலைகீழ்விகிதங்கள் - நாஞ்சில் நாடன்
9, முசோலினி ஒரு சர்வாதிகாரியின் கதை - ஜனனி ரமேஷ்
10, மாவோ என் பின்னால் வா - மருதன்
11, கர்ணனின் கவசம் - கே.என். சிவராமன்
12, உப்புநாய்கள் - லக்ஷ்மி சரவணகுமார்
13, எம்,கே. தியாகராஜ பாகவதர் - இரா.செழியன்
14, மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள் - மம்முட்டி
15, அண்டார்டிகா மர்மக் கண்டத்தின் வரலாறு - முகில்
16, மார்டின் லுதர் கிங் கருப்பு வெள்ளை - பாலு சத்யா
17, சர்வம் ஸ்டாலின் மயம் - மருதன்
18, கலைவாணி ஒரு பாலியல் தொழிலாளியின் கதை - ஜோதி நரசிம்மன்
19, என் வானம் நான் மேகம் - மா. அன்பழகன்
20, கலைந்த பொய்கள் - சுஜாதா
21, விழுந்த நட்சத்திரம் - சுஜாதா
22, கம்ப்யூட்டர் கிராமம் - சுஜாதா
23, படிப்பது எப்படி - சுஜாதா
24, 57 ஸ்னேகிதிகள் ஸ்னேகித்த புதினம் - வா.மு.கோமு
25, 100 நாற்காலிகள் - ஜெயமோகன்
26, லிண்ட்சேலோஹன் - வா.மணிகண்டன்
27, ராஜீவ்காந்தி சாலை - விநாயக முருகன்
28, அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்
29, எட்றா வண்டிய - வா.மு.கோமு
30, எரியும் பனிக்காடு - பி.எச். டேனியல்
31, மரப்பல்லி - வா.மு.கோமு
32, நளினி ஜமீலா - குளச்சல் மு.யூசுப்-------------------------------------------------------
எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. புத்தகம் வாங்கத் தொடங்கினால் கண்ணு மண்ணு தெரியாமல் அளவுக்கு அதிகமாக புத்தகங்களை வாங்கி விடுவேன். அதனால் இந்த முறை நிறைய வாங்கக் கூடாது என்பதற்காகவே வெறும் ஆயிரம் ரூபாயை மட்டும் கைவசம் வைத்திருந்தேன்.
பிரபாவிடம் இந்த வருடம் வாங்க வேண்டிய புத்தகங்கள் பட்டியல் கேட்டுப் பெற்றுக் கொண்டேன். உள்ளே நுழைந்து வெறும் 5 நிமிடத்தில் ஆயிரம் ரூபாயும் காலி. இனனும் வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியல் நிறையவே இருந்தது. வேற என்ன பண்றது.
பிறகு எங்கெல்லாம் டெபிட்கார்டு அனுமதியிருக்கிறதோ அங்கெல்லாம் தான் புத்தகங்கள் வாங்கினேன். கிழக்கு பதிப்பகம் மற்றும் டிஸ்கவரி ஸ்டால்களில் ஏகப்பட்ட புத்தகங்களை அள்ளி விட்டேன்.
கிழக்கு பதிப்பகத்தில் வாங்கிக் கொண்டு இருக்கும் போது ரூபக்ராம், கோவை ஆவி, ஸ்கூல் பையன் ஆகியோர் எங்களுடன் இணைந்து கொண்டனர். பிறகு கலாட்டாவுடன் தான் அரங்கஉலா நகர்ந்தது.
நேற்று டிஸ்கவரி ஸ்டாலில் தான் முதன் முறையாக வா.மணிகண்டனை சந்தித்தேன். நான் கூட மற்றவர்களிடம் பேச சற்று தயக்கம் காட்டுவேன். நெருங்கி விட்டால் தான் நம்மைப் பற்றி மற்றவர்களுக்கு புரியும். ஆனால் வா.மணிகண்டன் என்னை கண்டதும் தானாகவே வந்து அறிமுகப்படுத்திக் கொண்டு நலம் விசாரித்தார். இந்த பழக்கம் எனக்கு வரமாட்டேங்குதே என்று வருத்தமாக இருந்தது.
அவரிடம் சிறிது நேரம் பேசி விட்டு அகநாழிகை ஸ்டால் நோக்கி நகர்ந்தோம். வழியில் கேபிளை சந்தித்து விட்டு மணிஜியுடன் சிறிது நேரம் அளவளாவினோம். எட்டு மணிக்கு மேலானதால் சபையை கலைத்து விட்டு கிளம்பினோம்.
தினமும் வந்தால் என் பட்ஜெட் எகிறி விடும். அதனால் வரும் சனிக்கிழமை தான் அடுத்த புத்தக கண்காட்சி விசிட்.
ஆரூர் மூனா
அசத்தல் அண்ணே!!
ReplyDeleteநன்றி ஆவி
Deleteசுஜாதாவின் கம்ப்யூட்டர் கிராமம் படித்திருக்கிறேன் நன்றாக இருக்கும் தலைவர் நடையில்
ReplyDeleteநன்றி சரவணன்
DeleteNanba why u have not posted veeram review. I expected ur early review Amarnath
ReplyDeleteநான் நாளைக்கு போய்விட்டு வந்து போடுகிறேன்
Delete100 நாற்காலிகள் அருமையான கதை. அறம் - தொகுப்பையே வேண்டியது தானே அண்ணே...
ReplyDeleteவரும் சனிக்கிழமை அன்று வாங்கி விட வேண்டியது தான்.
Deleteஇவ்வளவு புத்தகங்கள் தேடி தேடிவாங்கிட்டிங்க ஆனா அதை அனுப்ப வேண்டிய முகவரியை மட்டும் என்னிடம் கேட்டு வாங்கலையே
ReplyDeleteஐ ஆச தோச அப்பளம் வட
Deleteஇவ்வளவு புத்தகங்கள் தேடி தேடிவாங்கிட்டிங்க அதில் பாதியை இங்கும் அனுப்பினால் புண்ணியம்!
ReplyDeleteஇதுல என்ன இருக்கு அனுப்பிடுவோம்
Deleteசமயம் கிடைக்கும் போது சென்னையில் வேண்டுவோம் பட்டியல் சேமித்து வைத்தாகிவிட்ட்து.
ReplyDeleteகண்டிப்பாக நண்பா
Deleteஇத்தனையையும் படித்துக்கொண்டு இணையத்திலும் பதிவும் எழுதி, ஒரு படத்தையும் விடுவதாகவும் தெரியவில்லை, எப்படி நேரத்தைச் சமாளிக்கிறீர்கள். தொடருங்கள்.
ReplyDeleteஈழ எழுத்தாளர்கள் எவரின் புத்தகமும் வாங்கவில்லையா?
அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி, எஸ்.பொ இன்னும் பலர் சுவையாக எழுதுவோர் உள்ளனர்.
நாம கொஞ்சம் டியுப்லைட்டு. சொந்தமா தெரிஞ்சிக்கிட்டு புக்கு வாங்கும் பழக்கம் கிடையாது. பெரும்பாலும் நண்பர்கள் பரிந்துரைக்கும் புத்தகங்களையே வாங்குவேன். புத்தகங்களின் பட்டியல் கொடுத்தீர்கள் என்றால் வாங்கி விடுவேன்.
Deleteஎப்பா எவ்வளவு புத்தகம் வாங்கி இருக்கீங்கள். அத்தோடு நம்ம பதிவர் பட்டாளம் வேறு ஒன்று கூடி போட்டோ புடிச்சு இருக்கீங்க.. இம் முறை சென்னையில் இல்லாதத்தால் இந்த புத்தக கண்காட்சியை தவற விட்டு விட்டேன்.
ReplyDeleteநண்பர்களின் சந்திப்பே தனி சுகம் தான். நன்றி நண்பா
DeleteI agree with neelavannan..
ReplyDeleteநன்றி நண்பா
Delete23 padipathu eppadi - sujatha .....which of type book this.....am waiting fr reply ....
ReplyDeleteஅது நாவல் தான்
Delete//நான் கூட மற்றவர்களிடம் பேச சற்று தயக்கம் காட்டுவேன். நெருங்கி விட்டால் தான் நம்மைப் பற்றி மற்றவர்களுக்கு புரியும்.// இங்கயும் அதே பிரச்சினை தான்..புரியாதவங்க திமிர் பிடிச்சவன்னு நினைச்சுக்கிறாங்க.
ReplyDeleteஎல்லாம் நன்மைக்கே
Delete"//, திப்புசுல்தான் முதல் விடுதலைப் புலி - மருதன்
ReplyDelete11, கர்ணனின் கவசம் - கே.என். சிவராமன்//"
இவ்விரண்டையும் நான் இந்தியா வருவதற்குள் படித்துவிட்டு எப்படி இருக்கிறது என்று கூறுங்கள்.
அப்படி கூற வில்லையென்றால்,
நான் இந்தியா வந்தவுடன் தங்களிடம் இருந்து படிப்பதற்கு பெற்றுக்கொண்டு, படிக்க பிடித்திருந்தால் (எனக்கு!!!), தங்களின் அன்பளிப்பாக நானே வைத்துக்கொள்கிறேன். பிடிக்கவில்லையென்றால், திருப்பி தந்து விடுகிறேன்.
கண்டிப்பாக, நன்றி சொக்கன்
Deleteபோட்டோ- ல இருக்கற நண்பர்களை பெயர்களுடன் பதிந்திருக்கலாம்...
ReplyDeleteகோவை ஆவி, பிலாசபி பிரபாகரன், மெட்ராஸ்பவன் சிவகுமார், நான், ஸ்கூல் பையன், ரூபக்ராம்
Deletesorry, i agree with யோகன் பாரிஸ்(Johan-Paris)
ReplyDeleteநன்றி நண்பா
Deleteசெந்தில்!உங்கள் புத்தகத் தாகம் என்னை வியக்க வைக்கிறது!கிரேட்!
ReplyDeleteநன்றி அடையாறு அஜித் ஐயா.
Deleteவியப்பு என்று சொல்லக்கூடாது;பிரமிப்பு என்றே சொல்ல வேண்டும்!
ReplyDeleteஐயா, ரொம்ப புகழாதீங்க, வெக்க வெக்கமா இருக்கு
DeleteP0ngalo pongal
ReplyDeletePongal vAzthukal
பொங்கல் நல்வாழ்த்துக்கள் சிவஞானம்ஜி.
Deleteநல்ல புத்தக தாகம் வாழ்த்துக்கள் மக்கா...!
ReplyDeleteநன்றி மனோ
Deleteநன்றி பாண்டியன், தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்கள் பதிவு புத்தக வாசிப்பாளர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது
ReplyDelete