சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Thursday, January 16, 2014

சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

இந்த பதிவை போன மாத இறுதியில் எழுதியிருக்க வேண்டும். கிறிஸ்துமஸ் விடுமுறைக்காலத்தில் திருவாரூரில் இருந்து மகாதியானத்தை தொடர்ந்து வந்ததால் போன மாத இறுதியில் பதிவே எழுத முடியவில்லை. இப்போது கொஞ்சம் நேரம் கிடைத்ததால் எழுதுகிறேன்.


இது சாதா ரக பிரியாணி இல்லை. சென்னையின் புகழ்பெற்ற கல்யாணபவன் பிரியாணி கடைகளில் கிடைக்கும் ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி. நார்மல் சிக்கன் பிரியாணி 150 ரூபாய் எனில் இந்த ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி 200 ரூபாய் இருக்கும்.

தேவையான பொருட்கள்
8 லிட்டர் கொள்ளளவுள்ள அலுமினிய குண்டான் - 1
குண்டான் வாய் அளவுக்கு சரியான மூடி - 1
நாலுஅடி உயரமுள்ள டேபிள் - 1
இரண்டு அடி உயரமுள்ள ஸ்டூல் - 1
பல்லாரி வெங்காயம் - 1/4 கிலோ
ஹட்சன் தயிர் - 1/2 லிட்டர்
உப்பு 1 கிலோ பாக்கெட் - 1
ரேபான் கூலிங்கிளாஸ் - 1
வெட்டும் பலகை - 1
கத்தி - 1
சிறிய பீங்கான் கிண்ணம் - 1
போர்க் ஸ்பூன் - 1
குஸ்கா - ஆப் பிளேட்
(மன்னார்குடி பேருந்து நிலையம் எதிரில் உள்ள புட் பிளாசா கடையில் கிடைக்கும் குஸ்காவாக இருந்தால் நலம் - நம்ம மச்சான் கடை தான், அதான் ஒரு வெளம்பரம்)
சிக்கன் 65 - 1 பிளேட்
(பிளேட்டில் எக்ஸ்ட்ராவாக இருக்கும் வெங்காயம், எலுமிச்சம்பழ துண்டு முதலியவற்றை எடுத்து விடவும்)
வெள்ளைக் கலர் பீங்கான் பிளேட் - 1


முதலில் டேபிளை எடுத்து நடுஹாலில் வைக்கவும். அதைவிட முக்கியமான ஒரு காரியம். வேலை செய்யும் போது வியர்க்கும் அதனால் சீலிங்பேனை போட்டுக் கொள்ளவும்.

டேபிளுக்கு எதிரில் உட்காரும் விதத்தில் ஸ்டூலை போட்டு வைக்கவும். வேலை செய்யும் போது களைப்பாக உணர்ந்தால் சிறிது உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும்.


டேபிளின் மீது குண்டானை வைக்கவும். கவரைப் பிரித்து குஸ்காவை குண்டான் உள்ளே கொட்டவும். சிக்கன் 65ஐ எடுத்து குண்டானில் போடவும். மூடி போட்டு மூடி கையில் எடுத்து மேலுக்கு கீழாக ஐந்து முறை குலுக்கவும். கீழிருந்து மேலாக ஐந்து முறை குலுக்கவும். 

வலமிருந்து இடமாக ஐந்து முறை. இடமிந்து வலமாக ஐந்து முறை குலுக்கவும். டேபிளின் ஓரத்தில் குண்டானை வைத்து விட்டு டேபிளில் வெட்டும் பலகையை வைத்து அதன் வலது புற ஓரத்தில் கத்தியை வைக்கவும். அப்போது தான் விரைவாக எடுத்து வெட்ட வசதியாக இருக்கும்.

வெங்காயத்தை எடுத்து உரிப்பதற்கு முன் ரேபான் கூலிங்கிளாஸை போட்டுக் கொள்ளவும். (கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டு உரித்தால் கண்ணில் நீர் வராது, எல்லாம் டெக்னாலஜி, டெக்னாலஜி) பிறகு தோலை உரித்து சரியாக 2 எம் எம் அளவுக்கு நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

பீங்கான் கிண்ணத்தில் வெட்டிய வெங்காயத்தை போட்டு அதில் ஹட்சன் தயிர் பாக்கெட்டை பிரித்து வெங்காயம் மூழ்கும் வரை ஊற்றவும். உப்பு பாக்கெட்டை பிரித்து அதில் கட்டைவிரலுக்கும் ஆள்காட்டிவிரலுக்கும் இடையே தாங்கும் அளவுக்கு உப்பை எடுத்து அதில் போடவும். மிச்சமிருக்கும் உப்பு பாக்கெட்டை வீட்டு உபயோகத்துக்கு வைத்துக் கொள்ளவும்.

போர்க் ஸ்பூன் பயன்படுத்தி நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும். ஆள்காட்டி விரலில் தொட்டு நக்கிப் பார்த்துக் கொள்ளவும். உப்பு சரியாக இருந்தால் விட்டு விடவும். இல்லையென்றால் கட்டைவிரலுக்கும் ஆள்காட்டிவிரலுக்கும் இடையே தாங்கும் அளவுக்கு உப்பை எடுத்து மீண்டும் போட்டு நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது மறுபடியும் நாம் ஓரமாக வைத்து இருந்த குண்டானை எடுத்து மறுபடியும் நாலு திசையிலும் குலுக்கி வைத்துக் கொள்ளவும். ஸ்பெஷல் பிரியாணி தயாராகி விட்டது. இப்போது ஸ்டூலில் ஐந்து நிமிடம் உக்கார்ந்து ஓய்வு எடுத்துக் கொள்ளவும்.

பீங்கான் பிளேட் எடுத்து அதில் பிரியாணியை கொட்டி அதன் ஓரத்தில் தயிர் பச்சடியை சைட்டிஷ்ஷாக வைத்து பரிமாறினால் சுவையான ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி தயார்.

ஆரூர் மூனா

36 comments:

 1. Replies
  1. நன்றி தினேஷ்

   Delete
 2. படத்துல இருக்கறதை பார்த்தா ரசம் சாதம் மாதிரி இருக்கே...!!!

  ReplyDelete
  Replies
  1. அது பிரியாணிக்கு அப்புறம் சாப்புடுறது, ஜீரணத்துக்கு நல்லது.

   Delete
 3. அண்ணே, குஸ்கா கிடைக்காட்டி, புளி சாதம், தக்காளி சாதம் கிடைச்சாக் கூட போதும்கிறது தான் இந்த பிரியாணி யோட ஸ்பெஷாலிட்டி.

  ReplyDelete
  Replies
  1. அண்ணே நீங்க சமையலில் ஒரு படிமேலே போயிட்டீங்க.

   Delete
 4. //கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டு உரித்தால் கண்ணில் நீர் வராது, எல்லாம் டெக்னாலஜி, டெக்னாலஜி// அடடேயப்பா :-)))

  ReplyDelete
  Replies
  1. கிண்டலா தெரிஞ்சாலும் உண்மையப்பா இது.

   Delete
 5. ஏன் பாஸ்...!

  இதுக்கும் அந்தப் பதிவுக்கும் ஒன்னும் சம்பந்தம் இல்லையே..

  ReplyDelete
 6. இதெல்லாம் ரொம்ப ஓவருங்கோ!!

  ReplyDelete
 7. Replies
  1. நன்றி ஜெயக்குமார் சார்.

   Delete
 8. வெங்காயத்தை எடுத்து உரிப்பதற்கு முன் ரேபான் கூலிங்கிளாஸை போட்டுக் கொள்ளவும்.//

  யோவ்...இதை படிச்சுட்டு என் கண்ணில் நீரா கொட்டுதுய்யா.

  ReplyDelete
  Replies
  1. கவலைப்படாதீங்க, இதுக்கான வைத்தியத்தை தனிப்பதிவா எழுதுறேன்

   Delete
 9. சூப்பர்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி தனபாலன்

   Delete
 10. இந்த லிஸ்ட்ல கூலிங்க்ளாஸ் மட்டும் தான் வாங்கணும்..

  ReplyDelete
  Replies
  1. பரவாயில்லை அவசரத்துக்கு எக்ஸ்ரே பிலிம் கூட பயன்படுத்திக்கலாம்

   Delete
 11. அண்ணே ஆவி's கிச்சனுக்கு போட்டியா தொடங்கிட்டீங்க போலிருக்கு.. எங்களோட ஸ்பெஷாலிட்டி ஐட்டம் இங்க இல்ல, ஆனாலும் பிரியாணி வெங்கட் பிரபு கொடுத்தத விட சூப்பராவே இருக்கு!! :) :)

  ReplyDelete
  Replies
  1. இதை நான் அந்த சமயத்திலேயே போட்டிருக்கனும். இது டூ லேட்டு.

   Delete
 12. அண்ணே ரேபான் ரொம்ப காஸ்ட்லி பேசாம ஹெல்மெட் போட்டுக்கலாம்....

  ReplyDelete
  Replies
  1. போட்டுக்கலாம், ஆனா அரிப்பு வந்தா சொறிஞ்சிக்க வேண்டியிருக்கும். அதனால் பிரியாணி செய்முறையிலிருந்து கவனம் சிதறி சுவை கெட்டு விட வாய்ப்பு இருக்கிறது.

   Delete
 13. இதான் சிக்கன் பிரியாணி செய்முறையா!? இது தெரியாம மணி கணக்குல அடுப்படில நின்னு செஞ்சிருக்கேனே!

  ReplyDelete
  Replies
  1. பேசாம எனக்கு ஒரு போனை போட்டு இருக்கலாம்.

   Delete
 14. Dear Senthil,
  naan theevira non vegetarian aaga irundhu adhi theevira vegetarian aanavan, irundhalum ungal saralamana nadai matrum nagaichuvaiyanl kavarapattu indraya ungal idugaiya padikka thuvanginen.... seiya thevayana porulgalil , 4 adi table 2 adi bench matrum rayban glass pathavudan idi sirippu vanthu vittathu....

  ungaludaya pazhaya idukkaikalai padithu varugindren
  sooper
  sarav

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சரவணன்

   Delete
 15. சாகித்ய விருது பெறக்கூடிய அல்லது தகுதியுள்ள பதிவு.தயவுசெய்து
  இந்த பதிவை சம்பந்நதப்பட்ட கமிட்டிக்கு அனுப்பிவைக்கும்படி பரிந்துரைக்கிறேன்.
  அடுத்து வெஜிடேபிள் பிரியாணி செய்யும் முறையையும் எழுதி உதவிசெய்யவும்.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete
  Replies
  1. அவார்டு கிடைச்சதுன்னா உங்களுக்கு சிக்கன் பிரியாணி விருந்து வைக்கிறேன், நன்றி தேவதாஸ் சார்.

   Delete
  2. மகா தியானத்துடன் கூடிய சிக்கின் பிரியாணி விருந்துதானே?
   வாழ்க வளமுடன்
   கொச்சின் தேவதாஸ்

   Delete
 16. Replies
  1. அவ்வ்வ்வ்வ், அதுவா வருது

   Delete
 17. மகா தியானத்திலிருந்து பிரியானி பதிவுஎழுதிட்டிங்களா !!!

  ReplyDelete
  Replies
  1. மகாதியானத்தை தான் துறந்தாச்சே

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...