சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, January 10, 2014

ஜில்லா - சினிமா விமர்சனம்

இணையமும் மக்களும் வீரம் படத்திற்கு முன்னால் ஏன் ஜில்லாவை குறைத்து மதிப்பீட்டார்கள் என்று தான் தெரியவில்லை. கங்கா காம்ப்ளக்ஸில் முன்பதிவு துவங்கிய அன்று நான் டிக்கெட் வாங்க சென்றது வீரம் படத்திற்கு தான் கவுண்ட்டரில் இருந்தவன் அசால்ட்டாக வீரம் முன்பதிவு முடிந்து விட்டது, வேணும்னா ஜில்லா வாங்கிக்க என்று சொன்னான். 


இணையத்தில் மக்களும் முடிந்த அளவுக்கு ஜில்லாவை காலி செய்தனர். எனக்கு கூட சந்தேகமாவே இருந்தது.................... போதும் இத்துடன் நிறுத்திக்குவோம். இது எல்லாம் படம் பார்த்த கதை பதிவில் எழுத வேண்டும். அதனால் நேரடியாக படத்துக்கு போய் விடலாம்.

பெரிசா மனதை உலுக்கும் கதை, நெஞ்சை பிழியும் செண்ட்டிமெண்ட், வித்தியாசமான திரைக்கதை இந்த ஒரு புண்ணாக்கையும் இந்த படத்துல எதிர்பார்க்க முடியாது. 

போக்கிரி ஸ்டைல்ல படம் இருக்கிறது. அதாவது ஒரு சண்டை, அது முடிந்த பின்னால் அறிமுகப்பாடல், பிறகு நகைச்சுவை, பிறகு சண்டை, பிறகு காதல், பிறகு பாட்டு, பிறகு சண்டை.


இந்த டெம்ப்ளேட்டை இம்மி பிசகாமல் படத்தை எடுத்து இருக்கின்றனர். ஆனால் படம் பார்கக ஒரளவுக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது என்பது தான் ஆச்சரியம். போக்கிரி அளவுக்கு எல்லாம் படம் ஓடாது. ஆனால் ஓடும், பெப் முடியும் வரை ஓடும்.

படத்தின் முதல் ஆச்சரியம் ஓவர் பில்டப் இல்லாத விஜய். படத்திற்கு ஏற்ற ஹீரோயிசம் மட்டும காட்டியிருக்கிறார். வழக்கம் போல காமடி, நடனத்தில் அசத்துகிறார். சண்டைக்காட்சியில் நிஜம் போல பல்டிகள் அடித்து பிரமிக்க வைக்கிறார். 


படத்தின் கதைக்கு போவோம். மதுரையில் உள்ள டான் மோகன்லால். அவரது வளர்ப்பு மகன் விஜய். போலீசுடன் லாலுக்கு உரசல் ஏற்பட தனது தேவைக்காக போலீசே பிடிக்காத விஜய்யை அசிஸ்டெண்ட் கமிசனராக்குகிறார். 

போலீசான விஜய்க்கு லால் செய்வது தவறு என புரிய வருகிறது. அதனால் அவரை திருந்த வைக்க முயற்சிக்கிறார். பிடிவாதம் பிடிக்கும் லாலேட்டன், படம் துவங்கி மூன்று மணிநேரமாகி விட்டதே என்று கவலைப்பட்டு க்ளைமாக்ஸில் திருந்துகிறார்.


இதற்கு இடையே மானே தேனே பொன்மானே எல்லாம் பொருத்தமான இடத்தில் போட்டு ஓரளவுக்கு ரசிக்கத்தக்க வகையில் படமாக்கியிருக்கிறார்கள்.

எந்த இடத்திலும் எதற்காகவும் லாஜிக் பார்க்கக் கூடாது. பார்த்தால் நாம் மடையனாகி விடுவோம். இதனை நம்பி படக்குழுவும் நம் தலையில் நல்லா மசாலா அரைத்து இருக்கிறார்கள். ஆனாலும் ஒரு இரவில் கமிசனர் நினைத்தால் வேலைக்கு புதிதாக சேர்ந்த அசிஸ்டெண்ட் கமிசனரை டெபுடி கமிசனராக்குவது எல்லாம் ரொம்ப ஓவர்.

லாலேட்டன் மீண்டும் தமிழில். லாலேட்டனை நம்பி நான் பார்த்த தமிழ்ப்படம் பாப்கார்ன். அது இரண்டாம் ஆட்டம் போய் படம் முடிந்து தலைவலி தாங்க முடியாமல் ப்ளாக்கில் சரக்கு வாங்கி விடிய விடிய குடித்தவன். அதன் பிறகு அவரது மலையாள படம் என்றாலும் நிலவரம் தெரிந்து தான் படத்திற்கு போவேன். ஆனால் இந்த முறை காப்பாற்றி இருக்கிறார்.

ஊறுகாயாக தொட்டுக் கொள்ள காஜல். யம்மாடி நீ வர்றதே கவர்ச்சிக்காக மட்டும் தான். இந்த மேக்கப்பையாவது ஒழுங்கா போட்டு வந்தா என்னவாம். ஏன் இப்படி ஒரு மேக்கப், இப்படி ஒரு காஸ்டியும், சகிக்கல போ.

பாடல்கள் நான் இதற்கு முன்பு கேட்கவில்லை. படத்தில் கேட்கும் போது காது வலிக்கிறது. கண்டாங்கடி சேலை பாட்டு மட்டும் ஓகே. ரீரெக்காடிங் நன்றாக இருக்கிறது. ஆக்சன் சீக்வன்ஸில் விஜய்க்கு வரும் ஆர்ஆர் நன்றாக இருக்கிறது. 

சூரி முயற்சிக்கிறார். வேறென்ன சிரிக்க வைக்கத்தான். நாம் தான் சிரிக்க மாட்டேங்கிறோம். ரவிமரியாவுக்கு சர்க்கார் படத்தில் வரும் ரவிகாலேவை மனதில் வைத்து மொட்டை போட்டு இருப்பார்கள் போல. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாகத்தான் இருக்கிறது.

விஜய்யும் காஜலும் மாறி மாறி பின்பக்கத்தில் புடித்துக் கொள்கிறார்கள். இது என்ன தமிழ்சினிமாவின் புது பேசனா. ஆனாலும் பார்க்க நல்லாத்தான் இருக்கு. ஹிஹி.

படத்தில் போரடிக்கும் விஷயமென்றால் கடைசி அரைமணிநேரம் ஜவ்வு மாதிரி இழுக்கிறது தான். வில்லன் யாரென்று தெரிந்த பிறகு அவரை விட்டு வைப்பதில் ஹீரோயிசம் அடிபட்டு போகிறது. அப்புறம் தம்பி செத்ததும் பொங்குறது பொருத்தமா இல்லை.

மற்றபடி ஒரு முறை பார்க்கலாம், தப்பில்லே

ஆரூர் மூனா

29 comments:

  1. //ஊறுகாயாக தொட்டுக் கொள்ள காஜல். யம்மாடி நீ வர்றதே கவர்ச்சிக்காக மட்டும் தான். இந்த மேக்கப்பையாவது ஒழுங்கா போட்டு வந்தா என்னவாம். ஏன் இப்படி ஒரு மேக்கப், இப்படி ஒரு காஸ்டியும், சகிக்கல போ.//

    பிலாசபி பிரபாகரன் கவனத்துக்கு...

    ReplyDelete
    Replies
    1. நல்லா கவனிச்சிக்கப்பா பிரபாகர்ர்ரு

      Delete
  2. பிடிவாதம் பிடிக்கும் லாலேட்டன், படம் துவங்கி மூன்று மணிநேரமாகி விட்டதே என்று கவலைப்பட்டு க்ளைமாக்ஸில் திருந்துகிறார்."

    3 மணி நேரமா . . . ?

    மஹா பொறுமைசாலி . .

    நல்லா வருவ தம்பி . . .

    ReplyDelete
    Replies
    1. வரணும்ணே, நான் நல்லா வரணும்

      Delete
  3. தல படத்தையும் பாத்துட்டு விமர்சனம் எழுதுங்க சீக்கிரம்..

    ReplyDelete
    Replies
    1. நாளைக்குத்தான் தினேஷ் வீரம் போகிறேன்

      Delete
  4. தல படத்தையும் பாத்துட்டு விமர்சனம் எழுதுங்க சீக்கிரம்..

    ReplyDelete

  5. தலைவாவின் பாதிப்பிலிருந்து இன்னும் யாரும் மீளவில்லை போல... நடுநிலைமையாக பார்த்தால் படம் மொக்கை கிடையாது. விஜயின் முந்தைய ஹிட் படங்களுக்கு எந்த விதத்திலும் ஜில்லாவை குறைத்து மதிப்பிட முடியாது.

    ReplyDelete
    Replies
    1. க்கும். இதுக்கே என்னை பேஸ்புக்ல துவைச்சு தோரணம் கட்டி தொங்க விட்டுக்கிட்டு இருக்காங்க. இதுல இப்படி வேற போட்டுருந்தேன் வேற வெனையே வேணாம்

      Delete
  6. ண்ணா உண்மையை சொல்லுண்ணா................படம் நல்லாவா இருந்திச்சு?

    ReplyDelete
    Replies
    1. ஒருக்கா பாக்கலாம்ணா

      Delete
    2. அது என்ன ஒருக்கா சாகலாம் மாதிரி .?

      Delete
  7. ஜவ்வென்றால் பூட்ட கேசு.. சூசூ...

    விரைவில் தொலைக்காட்சியில்...?

    ReplyDelete
    Replies
    1. ஏப்ரல் 14 தொலைக்காட்சியில் எதிர்பார்க்கலாம்

      Delete
  8. Boss.. enge ungal "veeram"..?
    We're waiting. .

    ReplyDelete
    Replies
    1. நாளைக்கு நண்பா

      Delete
  9. Achacho...! namma boys today this padam parka ticket vaangi irukangale...! me too going...! avvvv! Lalettenai nambi pogalamnu ninaichen!

    ReplyDelete
    Replies
    1. சிக்கிட்டீங்க, தப்பிக்க முடியுமா அண்ணே

      Delete
  10. அடுத்து வீரம் விமர்சனாமா ?

    ReplyDelete
    Replies
    1. அடுத்தது தெலுகு படம் விமர்சனம்

      Delete
  11. Replies
    1. நன்றி சுரேஷ்

      Delete
  12. வர வர விஜய் படத்தில் லாஜிக்கே பார்க்கக்கூடாது போல. சரி நேரம் கிடைத்தால் பார்க்கிறேன்.
    உடனடி விமர்சனத்துக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி சொக்கன்

      Delete
  13. படம் சுமாருக்கும் மொக்கைக்கும் நடுவில்.

    வீரம் பாருங்க மாஸ் படம் தெலுகு படம் ஸ்டைல்ல முதல் முறையாக தமிழில் தெளிவாக எடுத்திருக்கிறாங்க

    ReplyDelete
  14. மற்றபடி ஒரு முறை பார்க்கலாம், தப்பில்லே
    >>
    உங்களவுக்கு திடமான மனசு இங்க யாருக்கும் இல்ல

    ReplyDelete
  15. உங்கள் விமர்சனங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சீக்கிரம் தலயின் வீரம் பட விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  16. மொத்தத்தில பாக்காம்கிறீங்க.. ஆனாலும் வேற வழி இல்லை. வீட்டம்மா விஜய்யின் கரண்ட் இல்லாத விசிறி. வருசத்துக்கொரு தண்டனை உண்டு. சமயத்தில ரெண்டு.

    பொங்கல் நல்வாழ்த்துக்கள். பொங்கல் ஆரூர்லதானே?

    ReplyDelete
  17. Dear Senthil ,
    Neat and simple flow . Even I used to visit ur blogs this is the first time I am putting my comments. good to know from philosophy prabakaran's page that u buy lots of books wonder how u find time to read !

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...