சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Monday, January 20, 2014

புத்தக கண்காட்சியும், வாங்கிய புத்தகங்களும்

சனிக்கிழமை சிவா, பிரபாவுடன் இணைந்து புத்தக கண்காட்சியில் வேறு எந்த வம்பு தும்புக்கும் செல்லாமல் புத்தகங்களை வாங்கினோமா வீட்டுக்கு திரும்புவோமா என்று இருந்தோம். அது போல் பதிவுலக நண்பர்களையும் அதிகம் பார்க்கவில்லை. நாகராஜசோழனுடன் சிறிது நேரம் கலாய்த்து விட்டு பிறகு குடும்பத்தினருடன் சிராஜை பார்த்து அளவளாவி விட்டு ஏரியாவை விட்டு கிளம்பினோம்.


ஞாயிறு அன்று பெரிய ஜமா கூடி விட்டது. நான், செல்வின், சிவா, பிரபா, புலவர் ஐயா, கவியாழி, பாலகணேஷ், ஸ்கூல்பையன், சீனு, ரூபக்ராம், போலி பன்னிக்குட்டி, ஆர்வி.சரவணன், செல்லப்பா மற்றும் பல பதிவுலக நண்பர்கள் ஒன்று கூடி கலாய்த்துக் கலாய்த்து  பொழுது நன்றாக கழிந்தது.

பல மணிநேரங்கள் நடந்து விட்டு ஓய்வெடுக்க ஜீவா சிற்றரங்கு அருகில் அமர்ந்து கொண்டு இருந்த போது 6174வை விட மிக அற்புதமாக அறிவியலையும் நடைமுறை கால இயல்பு வாழ்க்கையையும் இணைத்து ஒரு நாவலை எழுதி வருவதாக செல்வின் தெரிவித்தார். 


அதனைப் பற்றிய விவரங்களை அவரது வாயில் இருந்து பிடுங்க நானும் சிவாவும் ஏகப்பட்ட வார்த்தை ஜாலங்களை காட்டி முயற்சித்தது தோல்வியில் தான் முடிந்தது. 

பிறகு காலச்சுவடு அரங்கிற்கு சென்று கிருஷ்ணபிரபுவை சந்தித்து புத்தங்களைப் பற்றி கேட்டோம். பெருமாள் முருகனின் நிழல் முற்றம் வாங்குங்கள் என்று சொன்னார். "யாரு பெருமாள் முருகன்" என்று கேட்டது தான் தாமதம். மனிதர் காய்ச்சி எடுத்து விட்டார். பெருமாள் முருகன் யாரென்று தெரியாதது ஒரு குற்றமா. அடங்கப்பா.

ஐந்து மணிக்கு புத்தக வெளியீட்டு விழாவுக்கு சென்று கூடி கும்மாளமிட்டு நிறைவு வேளையில் எல்லோரும் சேர்ந்து குல்ப்பி ஐஸ் வாங்கி சப்பினோம். வாங்கித் தந்த ஆர்.வி. சரவணன் அவர்களுக்கு நன்றிகள் உரித்தாகுக.

இந்த வருட புத்தக திருவிழாவுக்கு டாட்டா காண்பித்து விட்டு சபையை கலைத்து புறப்பட்டோம்.

இந்த வாரம் வாங்கிய புத்தகங்கள்

1, அர்த்தமற்ற இந்துமதம் பாகம் 1 - மஞ்சை வசந்தன்
2, அர்த்தமற்ற இந்துமதம் பாகம் 2 - மஞ்சை வசந்தன்
3, கடவுளும் மதமும் ஒழிய வேண்டும் ஏன் - தந்தை பெரியார்
4, சோளகர் தொட்டி - ச. பாலமுருகன்
5, பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை
6, ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள் - தந்தை பெரியார்
7, தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை (மரண சாசனம்)
8, புரோகிதர் ஆட்சி - ந.சி.கந்தையா பிள்ளை
9, சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்ததேன் - தந்தை பெரியார்
10, கருஞ்சட்டைப் படை - புலவர். பு.செல்வராஜ்
11, இராமாயண பாத்திரங்கள் - தந்தை பெரியார்
12, எழுத்துச் சீர்திருத்தம் - தந்தை பெரியார்
13, தமிழா நீ ஓர் இந்துவா - மஞ்சை வசந்தன்
14, கரையோர முதலைகள் - பாலகுமாரன்
15, கண்ணாடி கோபுரங்கள் - பாலகுமாரன்
16, அறைகள் நிறை உள்ள வீடு - குட்டிரேவதி
17, நிழல் முற்றம் - பெருமாள் முருகன்
18, ஆயிரத்தில் இருவர் - சுஜாதா
19, பெண் இயந்திரம் - சுஜாதா
20, தண்ணீர் - அசோகமித்திரன்
21, ஆதலினால் காதல் செய்வீர் - சுஜாதா
22, அனிதா இளம் மனைவி - சுஜாதா
23, வெல்லிங்டன் - சுகுமாரன்
24, அனிதாவின் காதல்கள் - சுஜாதா
25, பாதி ராஜ்யம் - சுஜாதா
26, ஒரு விபத்தின் அனாடமி - சுஜாதா
27, மாயா - சுஜாதா
28, காயத்ரி - சுஜாதா
29, விதி - சுஜாதா
30, மேற்கே ஒரு குற்றம் - சுஜாதா
31, மேலும் ஒரு குற்றம் - சுஜாதா
32, உன்னைக் கண்ட நேரமெல்லாம் - சுஜாதா
33, மீண்டும் ஒரு குற்றம் - சுஜாதா
34, அம்மன் பதக்கம் - சுஜாதா
35, மெரீனா - சுஜாதா
36, புகார்... புகார்... புகார்... - சுஜாதா
37, ஐந்தாவது அத்தியாயம் - சுஜாதா
38, தமிழ் சினிமாவின் பொக்கிஷம் - பிலிம் நியுஸ் ஆனந்தன்
39, பேரறிவாளனின் உயிர்வலி சக்கியடிக்கும் சத்தம் - டிவிடி
40, அடைக்கப்பட்ட கதவுகளின் முன்னால் - அனுஸ்ரீ
41, இலக்கியம் மாறுமா - அ.ஞா. பேரறிவாளன்

ஆரூர் மூனா

11 comments:


 1. நீங்க வாங்கிய புத்தகங்களின் எண்ணிக்கையை பார்த்தால் இனிமே நீங்கள் இணைய தளத்தில் எதுவும் படிப்பதில்லை என்று முடிவுக்கு வந்து விட்டது போல தெரிகிறதே?

  ReplyDelete
 2. சுஜாத்தாவின் நூல்கள்தான் அதிகம் போல!

  ReplyDelete
 3. ஒரு புத்தகக் கண்காட்சியே வைக்கலாம் போல் இருக்கிறதே!
  இம்முறை கண்காட்சியில் கேபிளாரைத் தவிர வேறு யாரும் கண்ணில் படவில்லை.

  ReplyDelete
 4. நீங்கள் வாங்கிய சுஜாதாவின் நூல்களில் சிலவற்றை தவிர்த்து மற்றவைகளை நான் ஏற்கனவே படித்துள்ளேன். மிகவும் சுவராசியமாக இருக்கும். படித்து மகிழுங்கள். நான் படிக்காத புத்தகங்களை உங்களிடமிருந்து பெற்றுக்கொள்கிறேன். (படித்துவிட்டு கண்டிப்பாக திருப்பித் தந்துவிடுகிறேன்.)

  ReplyDelete
 5. அடேங்கப்பா...! இத்தனையா...? வாழ்த்துக்கள்...

  அப்படியே ஒவ்வொரு நூலைப் பற்றிய விமர்சனத்தை பதிவிடவும்...

  ReplyDelete
 6. அடடா ! பட்டியலையே படிக்க முடியவில்லை!

  ReplyDelete
 7. பட்டியல் பெரிசாத்தான் இருக்கு! படிச்சு முடிச்சுருவீங்களா?

  ReplyDelete
 8. பட்டியலையே படிக்க முடியலையே, புத்தகத்தை எப்போ படிச்சி முடிப்பீங்க!!!!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...