கொஞ்சம் லேட்டான விமர்சனம் தான். போட வேண்டாம் என்று தான் இருந்தேன். ஆனாலும் சில வாசக நண்பர்கள் விமர்சனம் போடுங்கள் என்று தனி மெயிலிலும் உள்டப்பியிலும் கேட்டதால் இந்த பதிவை பகிர்கிறேன். (டேய் செந்திலு, போதும் சுயதம்பட்டம் பதிவுக்கு போ)
கதையெல்லாம் ஏகப்பட்ட பதிவுகளில் கிழித்து தோரணம் கட்டி தொங்க விட்டு விட்டார்கள். அதனால் அந்த பக்கம் போக வேண்டாம், எனக்கு படம் எப்படி இருந்தது, மற்றும் நான் ரசித்த காட்சிகளை தங்களுடன் பகிர்கிறேன். நன்றி.
மாட்டுப் பொங்கல் அன்று மதியம் நண்பன் போலி பன்னிக்குட்டி டிக்கெட்டை வாங்கி வைத்துக் கொண்டு சினிமாவுக்கு வா வா என்று அழைத்துக் கொண்டு இருந்தான். இரவு தாத்தாவுக்கு அனைத்து அசைவ வகைகளையும் வைத்து படையல் போட வேண்டியிருந்தது, அந்த வேலைகளை காலையில் இருந்து செய்து கொண்டு இருந்தேன். மதியம் வீட்டுக்கே வந்து அழைத்ததால் ஒன்றும் சொல்ல முடியாமல் திரையரங்கிற்கு போய் விட்டேன்.
கடந்த நான்கைந்து படங்களாக எப்போதும் விரைத்துக் கொண்டே திரியும் அஜித்தைப் பார்த்து சற்று அலுப்படைந்திருந்தேன். ஆனால் இந்த படத்தின் துவக்கத்தில் இருந்தே இயல்பான நடிப்புக்கு வந்து ரசிக்க வைத்தார்.
பக்கா மசாலா தான் என்று தெரிந்தும் பல இடங்களில் அஜித்தின் ஆக்சன் காட்சிகளில் விசிலடித்து கைதட்டி மகிழ்ந்தேன். அதே மாதிரி பல இடங்களில் புகையவும் வைத்தார்.
இடையில் ஒரு விஷயம், இணையத்தில் ஜில்லாவை புறந்தள்ளி விட்டு வீரம் படத்திற்கு ஏகப்பட்ட புரமோசன்கள். படம் வராமலேயே படத்தின் கதை இது தான் என்று ஆளாளாளுக்கு கலந்து கட்டி அடித்தார்கள். இதன் காரணமாக முன்பதிவு நேரத்தில் ஜில்லாவுக்கு டிக்கெட் தாராளமாக கிடைத்தது. வீரம் எங்கு பார்த்தாலும் ஹவுஸ்புல்.
கடைசியில் பார்த்தால் இரண்டுமே மாற்றான் படத்து சூர்யா போல தான் என்று தெரிய வந்த போது நொந்தே போனேன். இணையத்தில் அஜித்தை புடிச்சவன் கூட குறைவா தான் இருப்பான். விஜய்யை புடிச்சவன் ஒருத்தன் கூட கிடையாது போல. வர்றவன் போறவன் எல்லாம் ஜில்லாவை கண்டமேனிக்கு கழுவி ஊத்துறானுங்க.
தமன்னா நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் பார்ப்பதால் ப்ரெஷ்ஷாக தெரிந்தார். அஜித்துடன் ஒப்பிடும் போது தான் சற்று தொங்கலாக இருந்தது. தமன்னாவின் கொச்சச்சன் போலவே அஜித் தெரிந்தார்.
முதல் பாதியில் எந்தவித இடையூறும் இல்லாமல் கலகலவென படத்தை நகர்த்தி இருந்தார்கள். சந்தானத்தின் காமடி சிறிது நாட்களுக்கு பிறகு வாய்விட்டு சிரிப்பது போல் இருந்தது. இப்படியே நடிச்சிட்டு வாங்க, இல்லைன்னா விவேக் கதி தான், உங்களுக்கும்.
விதார்த்தை போட்டு வீணடித்து இருக்கிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் தமிழில் பீலாவாசு சாரி பீ.வாசு இயக்கத்தில் காதல்கிசுகிசு படத்தில் நாயகனாக நடித்த பாலாவும் படத்தில் வந்து போகிறார்.
இடைவேளைக்கு பிறகு எனக்கு என்டிஆர் படத்தை பார்த்த மாதிரியே இருந்தது. இருந்தாலும் தெலுகு படங்களையே அசால்ட்டாக கடந்து வந்தவனுக்கு முன்னால் இந்த படம் எம்மாத்திரம்.
தம்பிராமையா ரொம்பவே கடுப்பேத்துகிறார். என்ன வகை நடிப்பு, இந்த ஸ்டீரியோ ரக கத்தல். போங்க சார். போய் புள்ளக்குட்டிகள படிக்க வையுங்க. அது மாதிரி பேராசிரியர் பெரியார்தாசனுக்கு இது தான் கடைசி படம். திரையில் பார்க்கும் போது என்னவோ செய்தது.
அது என்னய்யா ரயிலு மேல சண்டை. ஏன் செயினை புடிச்சி இழுத்து காட்டுக்குள்ள இறங்கி சண்டை போட வேண்டியது தானே. தயாரிப்பாளருக்கு செலவாவது குறைஞ்சிருக்கும்.
படம் பார்த்து ரெண்டு நாள் ஆயிடுச்சா, அதான் பல காட்சிகளும், பார்க்கும் போது நான் எழுத நினைத்த பாயிண்ட்டுகளும் மறந்து விட்டது. சீக்கிரம் சிட்டுக்குருவி லேகியம் தின்னு ஞாபக சக்தியை அதிகப்படுத்திக்கனும். நினைவில் இருப்பதை வைத்து விமர்சனம் மாதிரி இருக்குமளவுக்கு ஒப்பேத்தி உள்ளேன், ஏதோ பாத்து செய்யுங்க.
ஆரூர் மூனா
//சீக்கிரம் சிட்டுக்குருவி லேகியம் தின்னு ஞாபக சக்தியை அதிகப்படுத்திக்கனும்.//
ReplyDeleteஎது எதுக்கெல்லாம் சிட்டுக்குருவி லேக்கியத்தை இழுக்கறாங்க பாருங்க மக்களே!!
மக்களே நல்லாப் பாத்துக்கங்க, தேரை இழுத்து தெருவுல விடுறது நான் இல்லை.
Delete+1, பிரியாணி ங்கிற மாபெரும் இலக்கிய பதிவுக்கு அப்புறம் வந்ததாலோ என்னவோ உங்க டச் கம்மியா இருக்கு இந்த பதிவுல!! :)
ReplyDeleteஇருக்கலாம். அப்புறம் மறந்துடாம இந்த சனி ஞாயிறு புத்தக கண்காட்சிக்கு வந்து விடவும்.
DeleteSenthil,
ReplyDeletehindi padangal parpathillayo ? adutha varam salman khan naditha Jai Ho varugirathu athai paarthu ungal parvayil vimarsanam seiyyavum...
பார்ப்போம், முயற்சிக்கிறேன், சரவணன்
Deleteஏன் ஏன் இப்டி..
ReplyDeleteஅதான் அதான் அப்படி அண்ணே.
Deleteஇருவருமே பாவம் : தம்பிராமையா + பேராசிரியர் பெரியார்தாசன்...
ReplyDeleteஇப்பவே சி.கு. லேகியமா...?
இது ஞாபக சக்திக்கு மட்டுமே, ஆங்.
DeleteBoss really i slept i the theatre in the second half and eveyone likes vijay and his movies but its now a fashion to tease . Elati epdi jilla 45c vanthurukum
ReplyDeleteகண்டிப்பாக சிட்டுகுருவி லேகியத்தோட மகிமையலா இன்னும் நிறைய மொக்க படங்களை பார்க்கும் தெம்பு வரு
ReplyDeleteமொத்தத்தில் படம் நல்லா இருக்கா இல்லையா?
ReplyDeleteவளவளக்காமல் சுருக்கமாக விமர்சனம்! நன்றி!
ReplyDelete