சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Thursday, January 30, 2014

இங்க என்ன சொல்லுது - சினிமா விமர்சனம்

ஒரு படத்தில் ஒன்று நல்லாயிருக்காவிட்டால் மற்றொன்று சுமாராகவாவது இருக்கும். ஆனால் எனக்கு தெரிந்து ஹீரோ, ஹீரோயின், படமாக்கம், இசை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என சகலமும்  படு மொக்கையாக இருந்தது இந்த படத்தில் தான்.


இன்னிக்கின்னு பார்த்து நான் மூணு பேரை சினிமாவுக்கு கூட்டிக்கிட்டு போனேன். ஆக 500ஓவா எனக்கு இந்த படம் பார்த்த வகையில டஸ்சு. அடங்கொன்னியா காசு இருக்குன்றதுக்காக இப்படி ஒரு படத்தை எடுத்துட்டு படம் பார்க்க வந்த அப்பாவிகளை கொலையா கொல்றது என்னய்யா நாயம்.

சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என்ற தங்கர்பச்சானின் படத்தை பெரிசா டிங்கரிங் பார்த்து இந்த படத்திற்கு கதை என்ற ஒரு வஸ்துவை உருவாக்கியிருக்கிறார்கள்.


வயது அறுபதை கடக்கும் தோற்றத்தில் இருக்கும் நாயகன், பொறுப்பற்றவனாக இருக்கிறார். நிலையில்லாத வேலை. இந்த சூழ்நிலையில் ஐடி கம்பெனியில் லட்சங்களில் சம்பளம் வாங்கும் ஹீரோயினி திடீரென்று இவரை திருமணம் செய்து கொள்கிறார். 

திருமணத்திற்கு பிறகு பொண்டாட்டி காசில துன்ட்டு வெட்டியா ஊரைச் சுத்திக் கொண்டு இருக்கும் நாயகன் சொந்தப் படம் எடுக்கிறேன் என்று மனைவியின் வீட்டை அடகு வைக்கிறார். படம் எடுக்கப்படாமலே போகிறது. குதிரைப் பந்தயத்திற்காக மனைவியின் நகைகளையெல்லாம் அடகு வைக்கிறார். அந்த பணமும் அம்பேல். 


ஹீரோயினி கர்ப்பமாகிறார். வீடு ஏலத்திற்கு வருகிறது. அவமானம் தாங்காமல் ஹீரோயினி தற்கொலைக்கு முயல்கிறார். அதன் பிறகு திருந்தும் ஹீரோ மனைவியுடன் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்துகிறார். அவ்வளவு தான் உருவப்பட்ட கதை.

இயக்குனர் என்ற ஒருவர் இந்த படத்திற்கு இருக்கிறாரா என்று சந்தேகமே, படத்தின் முக்கால்வாசி காட்சிகள் தொங்கலாகவே இருக்கிறது. மலையாள பிட்டு படங்களில் ஒரு விதம் இருக்கும். ஒரு மொக்கை மலையாளப் படத்தில் இடைவேளைக்குப் பிறகு பத்து நிமிடத்திற்கு பிட்டைப் போட்டு மறுபடியும் அந்த படத்தின் தொடர்ச்சியை போடுவார்கள்.


பிட்டு முடிந்ததும் பெரும்பாலான கலாரசிகர்கள் அரங்கை விட்டு வெளியேறி விடுவார்கள். ஆனால் சில சூரர்கள் படம் முடியும் வரை அரங்கில் அமர்ந்து ஆப்பரேட்டரின் பொறுமையை சோதிப்பார்கள்.

அந்த படத்தின் காட்சியமைப்பை விட படு மொக்கையான காட்சியமைப்பு இந்த படத்தில். ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் லிங்க்கே இல்லை. ஆங்கிள்களும் அப்படித்தான் இருக்கிறது.

நாயகனாக விடிவி கணேஷ். அடங்கப்பா உமக்கு அசாத்திய தைரியம்யா. ஆனா படம் முழுக்க இந்த முகத்தை பார்த்தால் எங்களுக்கு தான்யா கிலியடிச்சிப் போகுது. எதுக்கு சம்பந்தா சம்பந்தமில்லாமல் இங்கிலீஷ் டயலாக்கு. மொக்கை கிராமரோடு. இந்த டயலாக் டெலிவரியும் மாடுலேஷனும் கடுப்பேத்துகிறது.

அதுலயும் அடிக்கடி இந்த முகத்தை குளோசப் வேறு வைத்து அரங்கில் இருக்கும் குழந்தைகளை கதறியழவைக்கிறார்கள். இதுல இவரை மீரா ஜாஸ்மின் ரொமாண்டிக்காக பார்த்து முதலிரவில் விளக்கை அணைக்கும் போது அடிவயிறு பொறாமையில் பற்றி எரிந்தது. 

நாயகியாக பொலிவிழந்த மீராஜாஸ்மின். ரன்னில் பட்டையை கிளப்பிய மீராவா இது. ரன் வந்த சமயத்தில் எனக்கு தெரிந்த நண்பர்கள் அனைவருமே பொண்ணு மீரா மாதிரி இருக்கனும்னு அலைந்து கொண்டு இருந்தார்கள். இப்போது பார்த்தால் சப்பிப் போட்ட மாங்கொட்டை மாதிரி முகம் இருக்கிறது. அய்யகோ, ஐஸ்வர்யா ராயும் ஒரு நாள் கிழவியாவார் என்ற நிஜம் சுடுகிறது.

பாடல்கள் எல்லாம் படுமொக்கை, சூரமொக்கை. வேற ஒன்னும் சொல்றதுக்கில்லை.

கௌரவத் தோற்றத்தில் சிம்பு. எல்லாம் காலக் கெரகம். ஆண்ட்ரியா ஒரு சீனில் வந்து போகிறார். சாயிபாபாவின் மறுஉருவமாக சந்தானம். சந்தானம் இவ்வளவு மொக்கையாக வேறு எந்த படத்திலும் நடித்ததேயில்லை.

சொர்ணமால்யா வேறு இருக்கிறார். ஒரு காலத்தில் தமிழகத்தின் இளைஞர்களை ஜொள்ளு விட வைத்த அவர் காலத்தின் கோலத்தால் வடிவமே மாறியிருக்கிறார். இந்த உடற்கட்டோடு லெக்கின் போட்டு வருகிறார். பாக்கிறவன் எல்லாம் தெறிச்சி ஒடுறானுங்க.

காலையிலேயே பட்சி இந்த படம் வேணாம்னு சொல்லுச்சு. ஆனா ரெண்டு வாரமா சினிமாவுக்கு போகலையேன்னு இந்த படத்துக்கு போனேன். போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சிது, இந்த படத்துக்கு செலவு பண்ண காசுக்கு நாலு குவார்ட்டரை வாங்கி எட்டு பிச்சைக்காரனுக்கு கொடுத்து இருக்கலாம்னு.

ஆரூர் மூனா

15 comments:

 1. //இந்த படத்துக்கு செலவு பண்ண காசுக்கு நாலு குவார்ட்டரை வாங்கி எட்டு பிச்சைக்காரனுக்கு கொடுத்து இருக்கலாம்னு//
  ஹா ஹா ஹா.

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, நன்றி பித்தன் அய்யா,

   Delete
 2. ரெண்டு வாரமா சினிமாவுக்கு போகலையேன்னு இந்த படத்துக்கு போனேன்.
  >>
  இதுக்கு டிவில எதாவது டப்பிங் படம் பார்த்திருக்கலாமோ

  ReplyDelete
  Replies
  1. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ண முடியுமா அக்கா.

   Delete
  2. அண்ணா நல்லவேளை இன்னிக்கு போலாம் னு நினைச்சேன் ரொம்ப நன்றி அண்ணா

   Delete
  3. அப்போ !!! இந்த படத்தை சன் டீவியில் "இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக, திரைக்கு வந்து சில நாட்களே ஆன" என்ற விளம்பரத்தை விரைவில் எதிர்பார்க்கலாம் !!!! ..

   Delete
 3. Nandri thala....innikki night show pogalamnnu ninachinkinnu irunthean...pursai kapathithingae.nalaiki rammyki poyidalamnu mudivai mathikittean..hamzah from singapore

  ReplyDelete
 4. தொலைக்காட்சியில் விளம்பரம் இத்தனை தடவை இப்படி போடுகிறார்களே என்று அப்போதே "டஸ்சு" என்று நினைத்தேன்... சரி தான்... நன்றி...

  ReplyDelete
 5. நான் சிம்பு தான் ஹீரோன்னு நினைச்சேன்....விளம்பரம் பார்க்கும் போது....

  ReplyDelete
 6. //அடங்கொன்னியா காசு இருக்குன்றதுக்காக இப்படி ஒரு படத்தை எடுத்துட்டு படம் பார்க்க வந்த அப்பாவிகளை கொலையா கொல்றது என்னய்யா நாயம்.//
  இப்படி கழுவி ஊத்தீட்டீங்க, திருட்டு சிடி-ல கூட யாரும் வாங்கி பார்க்க மாட்டாங்க அண்ணே.

  ReplyDelete
 7. தலீவா...என்னக் காப்பாத்திடியே தலீவா...இன்றிரவு மீரா ஜஸ்மீன் குட்டிக்காக்ப் போவமென்றிருந்தேன்.

  ReplyDelete
 8. அவ்வளவு மோசமா? ஏதோ கொஞ்சம் எதிர்பார்த்தேன்... ஹ்ம்ம்...

  சரி.. கோலி சோடா பார்த்துட்டு எழுதுங்க நல்ல இருக்குனு சொல்றாங்க

  ReplyDelete
 9. Bit padam specialities
  1. yaar yaro varuvaanga , Hi pitch music le act pannuvaanga , povanga
  2. Padam editor velai - Murder at final and all other sequence no issue
  3. bit mudinjathum ponaa cycle stand and exit le koottam irukkum
  4. Ella perusum ippo veliya pokum, not good time for students

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...