சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Monday, October 3, 2011

நானும் என் பிரியாணியும் - பகுதி 3


இந்த பாகத்தின் முதல் இரண்டு பகுதிகளை படிக்க
நானும் என் பிரியாணியும் - பகுதி 1
நானும் என் பிரியாணியும் - பகுதி 2
எங்கு சென்றாலும் அந்தந்த ஊர் ஸ்டைல்களில் பிரியாணி சாப்பிடுவதை வழக்கமாக்கி கொண்டவன் நான். 2004ம் ஆண்டு இறுதியில் கேரளாவில் திருவனந்தபுரத்திலுள்ள கழக்கூட்டம் என்ற பகுதியில் கின்ப்ரா பார்க் என்ற சினிமா பார்க்கில் அனிமேஷன் பார்க் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் ப்ராஜக்ட்டில் நிர்வாக அலுவலராக பணிமாற்றம் செய்யப்பட்டேன்.

அது எங்களது கம்பெனியில் சிறிய ப்ராஜக்ட் என்பதால் அக்கவுண்ட்ஸ் மற்றும் அட்மினிஸ்ட்ரேசன் இரண்டும் நானே, அங்கு சென்றும் என் பிரியாணி வேட்டையை விடவில்லை. அங்கு ஓருநாள் விட்டு ஒருநாள் வங்கி செல்லும் பணியிருக்கும். வங்கியோ பத்மநாதசாமி கோயிலின் எதிர்புறம் உள்ள பார்க்கின் பின்புறம் இருக்கும், அங்கு பணம் டிராப் செய்ய செல்லும் போதெல்லாம் செலானை கொடுத்து விட்டு டோக்கனை வாங்கிக் கொண்டு பக்கத்தில் உள்ள பத்மநாபா தியேட்டருக்கு பின்புறமுள்ள ஒரு ஹோட்டலுக்கு மதிய சாப்பாட்டு நேரத்துக்கு நானும் என்னுடன் வரும் கார் டிரைவரும் சென்று விடுவோம்.

கேரளா பிரியாணி வித்தியாமான முறையிலும், சுவையிலும் சமைக்கப்பட்டிருக்கும். எப்படியெனில் சமைக்கும்போதே சாதத்தையும் மசாலாவையும் கலக்க மாட்டார்கள். கேட்கும் போது கொண்டு வரும் பாத்திரத்தில் அடிப்பகுதியில் சாதம் நடுப்பகுதியில் மசாலாவும் மேல்பகுதியில் சாதமும் வைத்துக் கொடுப்பார்கள். அருமையா சுவையாக இருக்கும் அங்கு பிரியாணியை சுவைத்து விட்டு அருகில் உள்ள பழரசக்கடையில் ஷார்ஜா என்று ஒரு ஜூஸ் கிடைக்கும். அதையும் சாப்பிட்டால் கேபிள் அண்ணன் ஸ்டைலில் சொல்வதென்றால் டிவைன்.

அந்த ஷார்ஜா என்ற ஜூஸ் பால் கட்டி அதாவது பால் பாக்கெட்டை ப்ரீசரில் வைத்து கட்டியான பின்பு, உடைத்து அந்த பால் கட்டியுடன் வாழைப்பழம், சர்க்கரை கலந்து அடித்து தருவார்கள். அந்த ஜூஸை நான் வேறு எந்த ஊரிலும் சாப்பிட்டதில்லை, யாருக்காவது அந்த ஜூஸ் சென்னையில் கிடைக்குமென்றால் சொல்லுங்கள். மீண்டும் சுவைத்து பார்க்க வேண்டும் போல் உள்ளது.

அதை விட கூத்து என்னவென்றால் எங்களது ப்ராஜக்ட்டில் தமிழர்கள் அதிமென்பதால் சுமாராக சமைக்கும் ஒரு பையனை வேலைக்கு வைத்திருந்தேன். சில மாதங்களுக்கு பிறகு ஒரு மலையாள சமையற்காரர் வேலைக்கேட்டு வந்தார். அவரிடம் பிரியாணி சமைக்கத்தெரியுமா என்று கேட்ட போது மதியம் அவர் வீட்டில் இருந்து சமைத்துக் கொண்டு வந்து கொடுத்தார். சாப்பிட்டுப்பார்த்தேன். அவ்வளவு தான் அன்றிலிருந்து அவர் தான் பிரதான சமையற்காரர். பிறகென்ன நினைவு வரும்போதெல்லாம் மெஸ்ஸில் பிரியாணி தான்.

ஞாயிற்றுக் கிழமையானால் காலையிலேயே சரக்கு துவங்கி விடும். காலையில் இருந்தே பிரியாணி வரத்துவங்கி விடும். பின்புறமுள்ள பாக்கு தோட்டத்தில் அன்று முழுவதும் கிரிக்கெட் விளையாடுவோம். இருட்டும் வரை கிரிக்கெட் கூடவே சரக்கு, அவ்வப்போது பிரியாணி அந்த ஒரு நாளே அந்த வாரம் முழுவதும் வேலை செய்வதற்குரிய உற்சாகத்தை கொடுத்து விடும்.

ஜாலியாக இருப்பதை மட்டும் பேசுகிறானே வேலை இருக்காதோ என்று எண்ண வேண்டாம். அது குறுகிய கால ப்ராஜக்ட் எனவே பகல், இரவு இரண்டு ஷிப்ட் வேலையும் இடையறாது நடந்து கொண்டே இருக்கும். எந்த நல்ல நாளுக்கும் நாங்கள் வீட்டுக்கு வர முடியாது. அதற்கிடையே நடக்கும் ஞாயிற்றுக்கிழமை போன்ற சம்பவங்கள் மற்றும் பிரியாணி ஆகியவையே எங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும். அந்த ப்ராஜக்ட்டில் ப்ராஜக்ட் மேனேஜர் தவிர மற்ற அனைவரும் பேச்சிலர்கள். அதனால் இவையே எங்களுக்கு இன்றும் மறக்க முடியாத நினைவுகளாக நெஞ்சில் நின்கின்றன. ஒரு வருடத்தில் ப்ராஜக்ட் முடிந்ததும் மீண்டும் சென்னை மண்டல அலுவலகத்திற்கே திரும்பி விட்டேன். கேரளாவில் அந்த நாட்களும் பிரியாணியும் என்றும் வாழ்வில் மறக்க முடியாதவை.

ஆரூர் முனா செந்திலு


5 comments:

 1. நீங்க பிரியானி பார்ட்டியா

  ReplyDelete
 2. /// Welcome to Vairai SATHISH said...

  நீங்க பிரியானி பார்ட்டியா ///

  என்னங்க மூணு பதிவை படிச்சிட்டுமா உங்களுக்கு சந்தேகம்.

  ReplyDelete
 3. ஆணி கொஞ்சம் அதிகம்... அதான் வர முடியவில்லை... இந்த வாரம் முழுக்க இப்படித்தான் இருக்கும்... என் வலைப்பூவிலும் பதிவுகள் வராது...

  ReplyDelete
 4. /// Philosophy Prabhakaran said...

  ஆணி கொஞ்சம் அதிகம்... அதான் வர முடியவில்லை... இந்த வாரம் முழுக்க இப்படித்தான் இருக்கும்... என் வலைப்பூவிலும் பதிவுகள் வராது... ///

  ரொம்ப பிஸியாண்ணே

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...