சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Thursday, October 27, 2011

7ம் அறிவு படத்தினை குறை சொல்லும் பதிவர்களின் கவனத்திற்கு
பதிவுலகில் சத்தமில்லாத சமாச்சாரம் இப்பொழுது மெல்ல மெல்ல வெளிவருகிறது. அதாவது ஒரு படத்தைப் பற்றி யாராவது ஒருவர் முதலில் விமர்சனம் எழுதிவிட்டால் மற்ற அனைத்து விமர்சனங்களும் அதனையொட்டியே எழுதப்படுகின்றன. உண்மையில் விமர்சனம் எழுத நினைக்கும் ஒருவர் படத்தை பார்த்து விட்டு எந்த வகையான விமர்சனங்களையும் படிக்காமல் எழுத வேண்டுமே தவிர மற்ற விமர்சனங்களையெல்லாம் படித்து விட்டு எழுதினால் அந்த விமர்சனத்தில் அதன் தாக்கம் கண்டிப்பாக இருக்கும்.
நேற்று 7ம் அறிவு படம் வெளிவந்தது. பதிவர்களிடையே போட்டியே யார் படத்திற்கு முதலில் விமர்சனம் எழுதுவது என்பதில் தான் நேற்று இருந்தது. கண்டிப்பாக ரசனை என்பது ஒருவருக்கொருவர் மாறுபட கூடியது. நானெல்லாம் பக்கா Bகிளாஸ் ரசிகன். எனது ரசனை என்பது அதற்குட்பட்டே இருக்கும். அது மற்ற கிளாஸ் ரசிகர்களுடன் ஒத்துப்போக வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.நான் சொந்த ஊரான திருவாரூர் வந்து விட்டதால் என் PCயில் டைப் அடிப்பது போல் இலகுவாக என் தம்பியின் லேப்டாப்பில் டைப் அடிக்க முடியவில்லை. அதனால் படம் முடிந்து வந்ததும் மற்ற விமர்சனங்களை படிக்காமல் 3மணியிலிருந்து டைப் அடித்து முடிக்கவே 4 மணியாகி விட்டது.


இதில் டைப் செய்வதில் உள்ள சிரமம் காரணமாகவும் படத்தின் குறைகளை விரிவாக எழுதமுடியவில்லை. நேற்று மதிய சாப்பாடு வீட்டில் தோசையுடன் கறி பிரட்டல், சிக்கன் வறுவல் என பெரும் விருந்து காத்திருந்ததால் அவரச அவரசமாக பதிவெழுதி திரட்டிகளில் இணைத்து விட்டு சரக்கடிக்க சென்று விட்டேன். பிறகு சரக்கடித்து விட்டு வீட்டில் சாப்பிட்டு விட்டு மீண்டும் கடைக்கு வந்து லேப்டாப்பை எடுத்துப் பார்த்தால் தான் தெரிகிறது. மற்ற எல்லார் விமர்சனமும் ஒன்று போல் படத்தின் குறைகளை மட்டும் மையப்படுத்தியே இருந்தது. யாராவது ஒருவர் ஒரு குறையை சுட்டிக்காட்டினால் மற்றவரும் அதையே குறை என்று பதிவிடுகிறார். இந்த சீன் அருமை என்று யாராவது பதிவிட்டிருந்தால் மற்ற விமர்சனங்களும் அதையே சுட்டிக்காட்டுகின்றன.
படம் சுமார் என்று எனக்கு தெரியும். ஆனால் அதனை நாம் முன்னிலைப்படுத்த வேண்டாம் என்று தோன்றியதால் நான் எழுதவில்லை. ஒரு வேளை நான் இந்த விமர்சனங்களையெல்லாம் எழுதுவதற்கு முன் படித்திருந்தால் கண்டிப்பாக நானும் குறைகளையே சுட்டிக்காட்டி எழுதியிருப்பேன். இதனால் ஒருவர் துவங்கி வைத்த 7ம் அறிவு படம் சுமார் என்ற விமர்சனம் மற்றவர்களால் முன்மொழியப்பட்டு இன்று சிலரின் விமர்சனத்தில் மோசம் என்று ஆகி விட்டது.
******
இந்த லேப்டாப்பிலிருந்து என்னுடைய பெயரில் பின்னூட்டமிட முடியவில்லை. பதிவுலக நண்பர்கள் என்னடா இவன் நாம் எழுதும் பின்னூட்டத்திற்கு பதில் எழுதமாட்டேங்றானே என்று நினைக்க வேண்டாம். வரும் திங்கள் அன்று சென்னை வந்ததும் கண்டிப்பாக பதில் எழுதுகிறேன். நன்றி


ஆரூர் முனா செந்திலு


7 comments:

 1. நீங்கள் சொல்வது சரியே. ஒருவர் ஒரு கருத்தை சொன்னால் அதையே சொல்லும் மனோபாவம் தான் நம்மில் பலருக்கு இருக்கிறது. ஆனால் அதையே வேறு கோணத்தில் பார்ப்பது கிடையாது. இனிமேலும் இதுபோல எழுதாமல் இருந்தால் சரி.

  ReplyDelete
 2. நீங்க சொல்வது தான் சரி. ஒருவரின் மனநிலை அடுத்தவருக்கும் பிரதிபலிக்கிறது.

  ReplyDelete
 3. ஒருவருக்கு கொட்டாவி வந்தால் அடுத்தவருக்கு வருவது மனித இயல்பே அதை நாம் செய்ய தவரினால் நாம் சாதாரன மனிதரே அல்ல.சிலர் இது போல் பதிவு இடலை பொருத்து போக தான் வேண்டும்.

  ReplyDelete
 4. வர வர சுயமாக சிந்திக்காமல், ஆட்டு மந்தைகள் ஆகிவிட்டோமா? அருமையான பதிவு!

  ReplyDelete
 5. இன்று வரை 7ம் அறிவு என் வலைப்பூவில் அதிகம் பேர் பார்த்தது

  ReplyDelete
 6. கமர்சியலா படம் இருக்கு..........

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...