சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Wednesday, October 26, 2011

7ம் அறிவு - திரை விமர்சனம்தீபாவளியாச்சே புதுப்படம் போகலாம் என்று முடிவு செய்து மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியதால் 7ம் அறிவு படத்துக்கு சென்றோம். திருவாரூரில் டிக்கெட் விலை 200 ரூபாய். இதுக்கு சென்னையிலேயே படம் பார்த்திருக்கலாம். படத்துக்கு வருவோம்.
5ம் நூற்றாண்டில் வாழ்ந்த போதிதர்மர் காஞ்சிபுரத்திலிருந்து சீனாவுக்கு செல்கிறார். அங்கு சென்று சீன மக்களை மிகப்பெரும் நோயிலிருந்து காப்பாற்றுகிறார். பிறகு அந்த மக்களுக்கு தற்காப்பு கலையை கற்றுக் கொடுக்கிறார். அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க அங்கேயே சமாதியாகிறார்.தற்காலத்திற்கு கதை வருகிறது, சீனாவிலிருந்து ஒருவர் ஸ்ருதியை கொல்வதற்கு அந்த நாட்டு அரசாங்கத்தால் அனுப்பப்படுகிறார். இங்கு, சென்னையில் சர்க்கஸ் கலைஞரான சூர்யா ஸ்ருதியை காதலிக்கிறார். ஸ்ருதியோ சூர்யாவின் டி.என்.ஏ போதி தர்மருடையது என்பதால் ஆராய்ச்சிக்காக அவரை சுற்றி வருகிறார். சீனாவின் ஆபரேசன் ரெட் என்ற திட்டம் இந்தியாவில் துவங்கப்படுகிறது. அந்த திட்டம் முறியடிக்கப்பட்டதா? வில்லனிடம் இருந்து ஸ்ருதியை சூர்யா காப்பாற்றினாரா? போதிதர்மர் சூர்யாவுக்குள் வந்தாரா என்பதை திரையில் காண்க.உண்மையில் தமிழர்கள் பார்க்க வேண்டிய படம். எங்களூர் பாஷையில் சொல்வதானால் முதல் பத்து நிமிஷத்துக்கே கொடுத்த காசு போய் விட்டது. சூர்யாவின் நடிப்பு பிரமாதம். ஸ்ருதிக்கும் கொஞ்சம் வெயிட்டான கேரக்டர். அந்த நோக்கு வர்மத்தின் மூலம் இந்தியர்களை சரமாரியாக சூர்யாவின் மீது ஏவும் காட்சியும் அதற்கான பின்னணி இசையும் பிரமாதம். ஈழப்போரினைப் பற்றிய விளக்கம் எனக்கு கண்ணில் நீரை வரவழைத்து விட்டது. ஆமாம் உண்மையில் வீரத்திற்கும் துரோகத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஈழத்தில் நடந்தது துரோகம் என்பதற்கான விளக்கமும் சூப்பர்.


ஆனாலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. சராமரியாக வில்லன் போலீசாரை கொல்வதும் அதனை பல நாட்களுக்கு அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதும் இடிக்கிறது.இருந்தாலும் பிளாஷ்பேக் காட்சிக்காகவும் உழைப்புக்காகவும் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

ஆரூர் முனா செந்திலு

9 comments:

 1. சொல்லிட்டீங்கல்ல பாத்திடுவோம், நடுநிலமையான விமர்சனமா படுது, படம் பார்த்திட்டு மீதிய சொல்றேன்.

  ReplyDelete
 2. தமிழர் பெருமையை உணராத பலருக்கு சிறிதாவது அறிவு ஒளியேற்ற முயற்சித்த 7ஆம் அறிவு திரைப்படக் குழுவினருக்கு பாராட்டுகள். அனைவருக்கும் எங்கள் தீபாவளி நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 3. நல்லா சொல்லியிருக்கிறீர்கள். பார்க்க வேண்டும்.

  ReplyDelete
 4. மத்தவங்க வித்தியாசமா விமர்சனம் பண்ணுனாங்களே

  ReplyDelete
 5. நீங்க உணர்ச்சிகளுக்கு அடிமை ஆகியிருக்கீங்க... So sad...

  ReplyDelete
 6. 7Am Arivu......... Supper AwsM.Non Entertainment Movie................ Loving IT so Much......Luv tht Historical And Scientific Part...........♥ ♥ Dual Salute Surya And MurugaDos.............♥♥♥ suruthi ♥ ♥ ♥

  ReplyDelete
 7. ///ஈழத்தில் நடந்தது துரோகம் என்பதற்கான விளக்கமும் சூப்பர்.//
  I don't agree with this fully, but I understand your feelings.Besides that, I really enjoy your blog posts.

  You can understand my comment thoroughly, if you read this post:

  http://orupadalayinkathai.blogspot.com/2011/11/blog-post_15.html

  Especially, JK's the following explanation about his post:
  //இந்த கதை நம்மை பார்த்து நாமே காறித்துப்பும் கதை. இதிலே ஒன்பது நாடு எங்கே வந்தது என்பது ஒரு தொக்கி நிக்கும் கேள்வி.//

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...