சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Saturday, October 15, 2011

காப்பியடிக்கும் பதிவர்களிடம் விசாரணை

காப்பியடிக்கும் பதிவர்களிடம் விசாரணை என்று இப்போது ஒரு புது டிரெண்ட் துவங்கியுள்ளது. யார் ஏதாவது ஒரு புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டி பதிவிட்டிருந்தாலோ அல்லது நாளிதழில் உள்ள கார்டூனை அதிலுள்ள குறைகளையோ அல்லது நமது கருத்தை பதிவிட்டாலோ சரி. உடனடியாக நீ காப்பியடிப்பவன். இந்த பதிவில் உள்ளது இந்த நாளிதழில் வந்துள்ளது என்று கூறி அனானிமஸ்ஸாக பின்னூட்டமிடுகிறார்கள். அடுத்தவர் குறையை சுட்டிக்காட்டும் அளவுக்கு சமூக பொறுப்புள்ளவன் என்றால் பெயரைப்போடு. இத்தனைக்கும் நான் எல்லாப்பதிவுகளையும் காப்பியடித்து போடுபவன் அல்ல. பத்தில் ஒன்று தான் இருக்கும். ஆனாலும் அதன் கீழ் நன்றி என்று எந்த பத்திரிக்கையோ அல்லது எழுதியவரின் பெயரைப் போட்டு விடுவேன்.

என்னால் ஒரு கவிதையை எழுத முடியாது. ஆனால் ரசிக்கத் தெரியும். ரசித்த கவிதையை என்னுடைய வலைப்பூவில் எழுதியவரின் பெயருடன் வெளியிட்டால் அது எப்படி காப்பி பேஸ்ட் ஆகும். அதற்கென்று வேறு நபர்கள் இருக்கிறார்கள். என்னுடைய விமர்சனத்தையே அப்படியே காப்பியடித்து தன்னுடைய வலைப்பூவில் வெளியிட்ட பதிவரையும் நான் அறிவேன். இது அதற்காக எழுதப்பட்டது அல்ல, குறைகளை சுட்டுக்காட்டும் கோமகன்கள் தன்னுடைய பெயரைப்போடவே தைரியமில்லாதவர்கள் எப்படி சரியானவர்களாக இருக்க முடியும்.


ஆரூர் முனா செந்திலு

8 comments:

 1. அவனா நீ என்று தெரிந்து கொண்டால் என்ன செய்வது... அனானிகள் வேண்டாம் என்றால் அவர்களுக்கு ஏன் நீங்கள் வாய்ப்பு கொடுக்கிறீர்கள்... வேறு ஒரு பெயரிலும் இதற்கென்று தனி கணக்கு வைத்து கொண்டு சத்தாய்ப்பவர்களும் உண்டு

  ReplyDelete
 2. ஆதங்கம்... நன்றியுடன் வெளியிடுவது தப்பில்லைதான்.. ஆனால் மற்றவரின் வலைப்பதிவிலிருந்து எடுத்து கையாலப்பட்டதாக இருந்தால், அந்த நன்றியுடன் அந்த பதிவரின் சுட்டியையும் சேர்த்து வெளியிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்..

  அனானிமஸ்களை லூஸ்ல விடுங்க பாஸ்..

  ReplyDelete
 3. //
  அடுத்தவர் குறையை சுட்டிக்காட்டும் அளவுக்கு சமூக பொறுப்புள்ளவன் என்றால் பெயரைப்போடு.
  //

  நல்ல சொன்னிங்க

  ReplyDelete
 4. //
  என்னால் ஒரு கவிதையை எழுத முடியாது. ஆனால் ரசிக்கத் தெரியும். ரசித்த கவிதையை என்னுடைய வலைப்பூவில் எழுதியவரின் பெயருடன் வெளியிட்டால் அது எப்படி காப்பி பேஸ்ட் ஆகும்
  //
  இதை சொன்னதுக்குதான் தமிழ்மணம் என்னை நீக்கிவிட்டது

  ReplyDelete
 5. நமக்கு ப்ரூ காப்பிதான் தெரியும்

  ReplyDelete
 6. வணக்கம் செந்தில் அண்ணா நீங்க செய்யவேண்டியது dashboard -> settings ->comments -> who can comment எதிரே Registerd Users click செய்யவும்
  Anonymous comments போடமுடியாது
  உங்களுக்கு தெரியும் என்றால் இந்த comments ஐ பொருட்படுத்த வேண்டாம்

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...