சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Friday, December 7, 2012

ஒரு கவிஞனின் அரங்கேற்றம்

நாலு வரி சேர்ந்தா மாதிரி எழுதிபுட்டு நடுவுல ரெண்டு எண்டர் தட்டி கவிதைங்கிறான். நாமளும் எத்தனை நாள் தான் வேடிக்கை பாக்குறது. அதான் நானும் தொபுக்கடின்னு களத்துல குதிச்சிட்டேன். இந்த கவிதை தொகுப்பை படிங்க, படிங்க கொமட்டிக்கிட்டு வர்ற வரைக்கும் படிங்க, புரியலைன்னா ஒரு பின்னூட்டம் அனுப்புங்க. நான் பின் நவீனத்துவ கவிஞனாகிட்டேன் என்பதை புரிஞ்சிக்கிறேன்.

தனிமையில் எப்போதும் பேசுகிறேன் நிலவோடு
என் தவம் அறிந்து இறங்கி வா என்னோடு
தனிமையில் செலவழிக்க நேரமில்லை உன்னோடு
உன்னிடம் கவிதை என்ற பெயரில்
மொக்கை போடும் நான் ஒரு கறுப்பாடு

--------------------------------------------------


மனதிற்கினிய பாடல் கேட்கும் போதெல்லாம்
உன் நினைவே என்னை தாலாட்டுகிறது
மறந்து விட்டு பணியில் கவனம் செலுத்த நினைக்கிறேன்
பேருந்தில் பாடல் வந்து தாலாட்ட கவனம் சிதறி
பேருந்து நிறுத்தம் கடந்து போகின்றேன்
பாடல் முடிந்த பின்னே உன்னை நினைத்து சிரித்து
இறங்கி வந்த வழியே நடக்கின்றேன்

-------------------------------------------------------

அன்பே நேசிக்க தகுதி வேணுமா
உன்னை நேசிக்க அழகன் எனும் தகுதி வேணுமா
உன் அருகில் அமர்ந்ததனால்
அழகாகி விட்டதாக உணர்கிறேன்
தெம்பான இளமையும் சேர்ந்திருக்கிறது
உன்னால் கிடைத்த ரெண்டையும் கொண்டு
மன்மதன் அம்பை உன் மீதே வீசுகிறேன்

-------------------------------------------------------


உரசத்தான் நினைக்கிறேன்
நினைத்துன்னை தொடர்கிறேன்
சற்றே தூரம் சென்று
விட்டு விலகி விலகி உன்னை
என் கண்முன்னே காணவில்லையே
அன்பே இன்றென்ன அமாவாசையா

---------------------------------------------------------

ஒன்று சேரும் நாளது வரும் என்று
இந்த கருமேகம் காத்திருக்கிறது
நிலாவின் தயக்கம் தாண்டி
என்னை அடையும் நாளோ பெளர்ணமி

-----------------------------------------------------------

உன்னை நிலவென்று நினைத்திருந்தேன்
சூரியனாய் சுள்ளென்று சுடுகிறாயே,
தெர்மிகூல் வாங்கி தடவிக்கிட்டேன்
வெயிலாவது வியர்வையாவது
சுட்டுப்பார் பொசுங்கிப் போவாய்

----------------------------------------------------------

நெடுந்தூரம் சென்றாலும் என் நினைவெல்லாம் நீதான்
பார்க்க முடியாவிட்டாலும் கண்ணுக்குள் உன் முகம் தான்
உன்னிடம் நேரில் பேசியது கொஞ்ச நேரம் தான்
இன்றும் என் காதுகளில் உன் ஒலிதான்
என்ன மாயம் செய்தாய் என் மனதை கலைத்தாய்

----------------------------------------------------------

உங்களது பொன்னாடைகளை வைத்து தான் இன்னும் மெகா கவிஞனாகி உங்களை வதைக்கலாமா, இல்லை போதும்டா சாமி என்று விலகலாமா என்று முடிவு செய்யலாம் என்று இருக்கிறேன்

ஆரூர் மூனா செந்தில்


31 comments:

 1. அய்யா புலவரே..வணக்கம்..

  ReplyDelete
  Replies
  1. கொங்கு மண்டல சாப்பாட்டு கடைக்காரரே வணக்கம்

   Delete
 2. 2012 ல உலகம் அழியும்னு சொன்னாங்க.நான் நம்பல.ஆனா இப்போ கொஞ்சம் லைட்டா அறிகுறி தெரியுது...மாம்ஸ்..உங்க பங்குக்கு நீங்க ஆரம்பிச்சிட்டீங்க..

  ReplyDelete
  Replies
  1. விதி வலியது ஜீவா. நாம சும்மா இருந்தாலும் நம்மள சுத்தி இருக்கிறவனுங்க. சொறிஞ்சி விட்டுடுறானுங்க.

   ஆமா நீங்களும் ஞாயிறன்று திருப்பூர் வர்றீங்கள்ல.

   Delete
 3. யதார்த்தமான வாழ்வில் எதிர்படும் நிகழ்வுகளை
  எளிய வார்த்தைகளில் எத்தனை பேரால்
  இத்தனை அருமையான கவிதைஆக்கிவிட முடிகிறது
  ஒப்புக்காகச் சொல்லவில்லை
  தயவு செய்து தொடர்ந்து எழுதவும்
  இதுபோன்ற கவிதைகளுக்காகத்தான் பலர்
  பதிவுலகில் ஏங்கித் திரிகிறோம்
  மனம் கவர்ந்த கவிதைகள்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கருருத்துக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி ரமணி அய்யா.

   Delete
 4. Replies
  1. நன்றி ரமணி அய்யா.

   Delete
 5. வேணாம்.. வலிக்குது... அழுதுருவேன்....

  ReplyDelete
  Replies
  1. படிச்சிட்டு அழுவுறீங்களா, இல்ல இவனெல்லாம் எழுதுற அளவுக்கு கவிதை மோசமாகிடுச்சின்னு அழுவுறீங்களா.

   Delete
 6. கவிஞர் மச்சி... கலக்குங்க...

  ReplyDelete
  Replies
  1. நீ தான் மச்சி குரு, உன் கவிதைகளை படிச்சப்புறம் தான் இதுக்கு நானே எழுதலாம்னு தைரியம் வந்துடுச்சி.

   Delete
  2. ஹி ஹி ......அது எப்படி வலிக்காம கலாய்கிரதுன்னு எனக்கும் கொஞ்சம் சொல்லி தாங்க .

   Delete
 7. இதுபோன்ற தொடக்கம் கவிஞனின் தகுதிக்கான அடையாளம்.அதுவும் காதல் கவிதை அருமை தொடருங்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி கண்ணதாசன் அண்ணே.

   Delete
 8. சோதனை...ச்சே...கவித...கவித.....
  சாவு வந்திருமோன்னு பயப்படுறே...சக்தி!

  ReplyDelete
  Replies
  1. நீ கும்பிடுற ஆத்தா உன்ன கைவிட மாட்டா மச்சி.

   Delete
 9. இதுவும் நல்லாத்தான் இருக்கு நண்பரே ...இப்படியே தொடருங்க ....வளவளனு எதையாவது எழுதுவதைவிட..இப்படி எழுதுவது மேல்

  ReplyDelete
  Replies
  1. நமக்கு அதுதான் இயல்பா வருது, இது ரொம்ப சிரமம் வாத்தியாரே.

   Delete
 10. வேண்டாம் வலிக்குது, நான் கீழ விழுந்து புரண்டு அழுதுடுவேன்.. என்டர் கவிதையில் சென்டர் கவிதை நல்லா இருக்கு

  ReplyDelete
  Replies
  1. ஆஸ்பிட்டலிலேயே புரண்டு அழுகவும். உம்ம பெண் தோழிகள் எல்லாம் உங்களை பார்த்து ஏளனமாக சிரிக்கட்டும்.

   Delete
 11. கவிதைகள் நல்லாதானே இருக்கு? எதுக்கு இப்படி ஒரு முன்னுரை? :-(

  ReplyDelete
  Replies
  1. இது சும்மா கலாய்க்கிறதுக்கு எழுதினது லக்கி. நமக்கு இது ஆகாது.

   Delete
 12. யுவ கிருஷ்ணா சொன்னதை நான் வழிமொழிகிறேன் எதுக்கு இப்படி ஒரு முன்னுரை? தொடருங்கள்!

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் லக்கியும் ஓரணியில், இதுவே ரொம்ப சந்தோசமாக இருக்கிறது அய்யா.

   Delete
 13. செந்திளுகாரு.....
  சரக்கு போடாம கணிணி முன்னாடி வரக்கூடாதுன்னு எத்தனை வாட்டி சொல்லுறது...?????????

  இப்ப பாரு உலக இலக்கியம் படைச்சிட்ட ....
  இது நமக்கு தகுமா....அடுக்குமா....??????

  ReplyDelete
  Replies
  1. உலகமே நம்மள கவிஞர்னு சொல்லுறாங்க, பொறாமைப்படாதேய்யா நக்கீரா.

   Delete
 14. தண்ணிய குடி...தண்ணிய குடி...தொடர்ந்து கமெண்ட் போடுரில்ல .....

  ReplyDelete
  Replies
  1. எந்த தண்ணின்னு தெளிவா சொல்லுயா

   Delete
 15. உன்னிடம் கவிதை என்ற பெயரில்
  மொக்கை போடும் நான் ஒரு கறுப்பாடு....

  அடடா சூப்பர்ங்க...
  எனக்கொரு டவுட்டுங்க
  கவிதையில பொய்யைத் தானே சொல்லனும்...?

  ReplyDelete
  Replies
  1. அட ஆமாமுங்க. பாதி கிணறு தாண்டிட்டீங்க, நீங்களும் அரை கவிஞர் தான்.

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...