சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Tuesday, February 5, 2013

வாஞ்சூர் என்னும் வெளங்காதவன்

காரைக்கால் நகர்ப்புற எல்லையோரம் உள்ள கிராமம் வாஞ்சூர். திருவாரூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி போன்ற பகுதிகளில் இருந்து குடிகார நண்பர்கள் பாண்டிச்சேரி மாநிலத்தில் சரக்கு விலை குறைவு என்பதனால் வாஞ்சூருக்கு தான் வருவர். அந்த ஊரில் உள்ள மக்கள்தொகைக்கு இரண்டு ஒயின்ஷாப்பே அதிகம். ஆனால் அங்கு நாற்பதுக்கும் மேற்பட்ட ஒயின்ஷாப்புகள் உண்டு என்றால் அந்த ஊர் எதற்கு பெயர் பெற்றது என்று நினைத்துப் பாருங்கள்.


கீழத்தஞ்சை பகுதியில் நண்பர்கள் ஒன்று கூடினால் பேசும் முதல் வார்த்தையே வாஞ்சூருக்கு போகலாமா என்று தான் இருக்கும். அந்தளவுக்கு விலை குறைவு. 10 பேர் போனால் 600 ரூபாய்க்கு நிறைபோதையுடன் வருவோம்.

எங்கள் பகுதியில் திருமணம் என்றால் முதல்நாளே கும்பலில் வெட்டியாக இருக்கும் இருவரை அழைத்து பணம் கொடுத்து விட்டால் 25 முதல் 30 புல் பாட்டில்கள் வரை வாஞ்சூரில் இருந்து வாங்கி வந்து விடுவர். பிறகென்ன கல்யாணம் முதல்நாள் இரவு மண்டபமே களைகட்டியிருக்கும். மறுநாள் காலை நண்பர்கள் விழித்தெழும் போது பெரும்பாலும் திருமணம் முடிந்திருக்கும்.

இப்படிப்பட்ட பெருமைக்குரிய வாஞ்சூரில் எங்கள் நண்பர்கள் குழாம் வழக்கமாக செல்லும் பார் ஒன்று உள்ளது. அதில் ஒரு சப்ளையர் பையன் வேலை பார்த்து வந்தான். நாங்கள் வாரம் இருமுறை வாஞ்சூர் செல்வதுண்டு. அவன் நன்றாக சப்ளை செய்வதால் எப்பொழுதுமே அதிகம் டிப்ஸ் கொடுப்பதுண்டு.

அவன் அந்த ஊரை சேர்ந்தவன் என்பதால் அவனுக்கு நாங்கள் வைத்த பட்டப்பெயர் வாஞ்சூர். நாங்கள் எப்பொழுது பாருக்கு வந்தாலும் எனது பேவரைட் சைட்டிஷ்ஷான முட்டை முந்திரி போட்டி மற்றும் கலக்கியை எனக்கு பக்காவாக செய்து கொண்டு வந்து வைப்பான்.

அதனாலேயே எனக்கு ரொம்ப நெருக்கமானான். அவன் என்னிடம் இருந்து பெரும் டிப்ஸே மாதம் 2000த்தை தாண்டும். பிறகு நான் சென்னைக்கு வந்த பிறகும் ஊருக்கு செல்லும் போதெல்லாம் வாஞ்சூருக்கு செல்வதால் பழக்கம் நீடித்து இருந்தது. என்னிடம் செல்நம்பர் வாங்கிக் கொண்டு அடிக்கடி போன் செய்து பேசுவான்.

ஒரு நாள் அசந்து தூங்கிக் கொண்டு இருக்கும் போது விடியற்காலை நாலு மணிக்கு போன் வந்தது. எடுத்து பேசினால் வாஞ்சூர் அண்ணே என்றான். என்னடா இந்த காலையில் என்று கடிந்து கொண்டதும் அவன் அழ ஆரம்பித்தான். என்னவோ ஏதோ என்று பயந்து அவனிடம் சமாதானமாக பேசின பிறகு தான் பேசினான். ஊரில் அப்பாவுடன் பிரச்சனை ஏற்பட்டு தனியாக கிளம்பி வந்து இருக்கிறான்.

பிறகென்ன நான் தங்கியிருக்கும் அறைக்கு அவனை வரவழைத்து ஒரு வீட்டில் டிரைவர் வேலைக்கு சேர்த்து விட்டேன். சில வருடங்கள் அங்கேயே தங்கியிருந்து சம்பாதித்து வந்தான். இடையில் அவன் வேலை பார்த்த வீட்டு பெண்ணையே காதலித்து இருக்கிறான்.

விஷயம் பெண்ணின் அப்பாவிற்கு தெரிய வந்ததும் முதலில் எதிர்த்து வந்தவர் இவர்களின் காதலின் தீவிரம் தெரிய வந்ததும் வேறு வழியின்றி திருமணத்திற்கு சம்மதித்து இருக்கிறார். அத்துடன் எனக்கும் அவனுக்குமான தொடர்பு நின்று விட்டு இருந்தது.

சென்ற வருடம் நான் மீண்டும் வாஞ்சூர் நண்பர்களுடன் சரக்கடிக்க பாருக்கு சென்றால் அங்கே இவன் சப்ளையராக வந்து ஆர்டர் கேட்டான். பிறகு என்னைப் பார்த்தவன் சத்தமின்றி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். விரட்டிச் சென்று பிடித்து "என்னடா எப்படி இருக்க வேண்டியவன் நீ ஏன் இங்கு சப்ளையாராக வந்தாய் என்ன ஆனது" என்று கேட்டால் அழ ஆரம்பித்து விட்டான்.

பிறகு சமாதானப்படுத்தி இரண்டு ரவுண்டு அவனை சாப்பிட வைத்ததும் தான் உண்மை வெளிவந்தது. இந்த பையன் அந்த வீட்டில் ஒழுங்காக வேலை பார்த்து வந்தவன் சபலம் காரணமாக அந்த வீட்டு பெண்ணின் அம்மா குளிக்கும் போது எட்டிப் பார்த்து இருக்கிறான்.

இதை கண்டுபிடித்த அந்த அம்மா தன் வீட்டுக்காரனிடம் சொல்லி விட வாஞ்சூரானை வீட்டை விட்டு அவர் அடித்து விரட்டி விட்டாராம். ஒரு வீட்டில் மாப்பிள்ளையாக போக வேண்டியவன் சபலத்தினால் வாழ்க்கையை இழந்து மீண்டும் சப்ளையராக புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தால் அவனை வெளங்காதவன் என்று சொல்லாமல் என்ன சொல்வது.ஆரூர் மூனா செந்தில்

65 comments:

 1. இதில் உள்குத்து” வெளிக்குத்து” எதுவும் இல்லையே??????????

  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி ஹி. நோ கமெண்ட்ஸ்.

   Delete
 2. நிச்சயம் இது உள் குத்தே தான் ஹா ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. சீனு அவ்வளவு விவரமானவனா நீ.

   Delete
  2. ஏண்ணே நான் விவரமானவனா இருக்கக் கூடாதா... உங்க பேச்சுல ஒரு கிண்டல் தெரியுதெ.. ஹா ஹா ஹா

   Delete
  3. ச்சே சும்மா சொன்னேனப்பா, நான் கலாய்க்காம யாரு உன்னை கலாய்ப்பா?

   Delete
 3. நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன் - தலைப்பைப் பார்த்து :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க மணி நம்ம பக்கம் வந்திருக்கீங்க வணக்கம், நலமா.

   Delete
  2. நான் நலம் செந்தில்! நீங்கள் நலமா? இனி அடிக்கடி வருவேன்! நண்பர் வாஞ்சூரின் கதை சிந்திக்க வைக்குது! அவசரப்பட்டு, சபலத்தினால், மாப்பிள்ளை எனும் தகுதியை இழந்துவிட்டாரே?

   Delete
  3. அடுத்த கதை இதை விட வில்லங்கமா இருக்கும். இப்ப விட்டா வில்லங்கமாகும்னு அடுத்த வாரம் விடலாம்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.

   Delete
 4. தலைப்பைப் பார்த்து ஷாக் ஆகிட்டேன். :)

  ReplyDelete
  Replies
  1. அய்யய்யோ தலைவா எதுலயும் கோத்து விட்டுறாதீங்க, கட்டுரை நல்லாயிருக்கான்னு மட்டும் சொல்லுங்க.

   Delete
  2. மிக அருமையான கட்டுரை.
   இப்படி ஒருசிலர் நம் நம்பிக்கையை தகர்ப்பதால் அடுத்த முறை உதவி செய்ய மனம் தயங்குகிறது.

   Delete
  3. சரியாக சொன்னீர்கள் குருநாதன்

   Delete
 5. அவன் என்னிடம் இருந்து பெரும் டிப்ஸே மாதம் 2000த்தை தாண்டும்.

  //வெளங்கிடும் :-)

  ReplyDelete
  Replies
  1. இது கூட அவன் நமக்கு நல்ல சேவை செய்கிறான் என்ற நம்பிக்கை தான்.

   Delete
 6. செம பதிவுயா இப்படிதான் நாகூர்லேயும் ஒரு வெளங்காதவன் இருக்கான் ................
  நானும் பிலாசிப்பியும் அங்கு போயிருந்தோம் .

  ReplyDelete
  Replies
  1. நாகூர்ல வாஞ்சூர்ன்னு ஒரு லாட்ஜ் சித்த வைத்தியன்தான் இருக்கான் (நன்றி : வாரமலர்) அவன்கிட்ட உனக்கும் பிலாசபிக்கும் என்ன வேலை..? சம்திங் ராங்..!

   Delete
  2. ஐ திங்க் நான் இப்பத்தான் யோசிச்சேன். நாளைக்கு இருக்கு கச்சேரி.

   Delete
 7. மச்சி வாஞ்சூர் மடையன், மூளையில்லாதவன் பொண்ணு குளிக்கும் போது எட்டிப்பார்க்காம மாமியா குளிக்கறதை எட்டிப்பார்த்திருக்கான் பாரு படவா! ராஸ்கோல்..!

  ReplyDelete
  Replies
  1. அவன கொல்லனுமா இல்லையா?

   Delete
 8. ஆமாம்யா அதை படம் பிடித்து யூ டுபிள் போட்டு லிங்க் குடுக்காமல் இருந்தானே அதுவரைக்கும் அவனை பாராட்டலாம் . இதுவே அவன் பதிவராக இருந்திருந்தால் . செய்திருப்பான் இதுதான் மாமியார் என்று டைட்டிலும் வைத்திருப்பான்

  ReplyDelete
  Replies
  1. அப்படி வைத்திருந்தால் அவன் விளங்காதவன்.

   Delete
 9. சபலம் நல்ல வாழ்க்கையையே கெடுத்து விட்டதே! உண்மையில் அவன் வெளங்காதவந்தான்!

  ReplyDelete
  Replies
  1. அப்படி இனி நடக்காது ஆமாண்ணே.

   Delete
 10. அய்யய்யோ...எல்லோரும் இந்தமாதிரி புனைவு எழுத ஆரம்பிச்சா...பதிவுலகம் தாங்காதே...இன்னொரு சுனாமிக்கு அறிகுறியாட்டம் இருக்கே...

  ReplyDelete
  Replies
  1. நானும் பார்க்கிறேன் என் நண்பரே.

   Delete
 11. ம்ம் அப்புறம்.சொறிகடை,டாட்டா ஆப் universal,பிரியமே இல்லாத நோயாளி,இப்படி நிறைய பேரை நீங்க சந்திச்சீர்ப்பீங்களே.

  அந்த அனுபவத்தையும் போடுறது.

  ReplyDelete
  Replies
  1. நாள் இருக்குல்ல காத்திருங்கண்ணே.

   Delete
 12. "வெளங்காதவன்" என்றொரு பதிவர் இருக்கிறார். அவரை நீங்கள் "வாஞ்சூர்" என்று அழைத்து அசிங்கப்படுத்தி விட்டதால், கூகுளில் சொல்லி உங்கள் ப்லாகுக்கு தடை வாங்க வேண்டும். நாங்கள் மொத்தம் 23 பிளாக்கர் கூட்டணி வைத்துள்ளோம். எங்களை மீறி நீங்கள் எப்படி ப்ளாக் எழுதுகிறீர்கள் என்று பார்க்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. வெளங்காதவன் என் நண்பன் அவன் தப்பா நினக்க மாட்டான் என்ற நினைப்பில்

   Delete
 13. அட பாவி ஏன்யா இந்த கொலை வெறி.....?????????
  இருந்தாலும் தத்துவம்....ஓகே....

  ReplyDelete
  Replies
  1. என்ன தலைவரே, கொஞ்ச நாளா ஆளக்காணோம்.

   Delete
  2. இணைய பிரச்சனை,,,அதைவிட சொந்த பிரச்சனை,,,இது எல்லாத்தைவிட வேலை பிரச்சனை....

   அநேகமாக வரும் மே மாதம் நடுத்தெரு என்று நினைக்கிறேன்....பார்ப்போம்...என்ன நடக்கிறது என்று...நீங்கள் எல்லாம் இருக்கீங்க...அறுதல் சொல்லுவதை விட வேலை தரமாட்டீங்களா என்ன?????

   மேலும் நம்ம வவ்வால் இருக்காரு...என் ஊர்காரரு....
   எனக்கு கண்டிப்பா வழி செய்வார்.:-)))))

   நம் பதிவுலக அன்பர்கள் மேல் எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது...

   மனது,லேசான உடன் முழு வீச்சில் மீண்டும் வருவேன்...அதுவரை அவ்வப்போது.
   :-))))))))

   Delete
  3. நக்ஸ் அண்ணாத்த,

   பல்கலைக்கழக ஓனரு ,நீங்களே இப்படி சொன்னா எப்பூடி?

   சரி பிரச்சினை தீர்ந்துடுச்சுன்னு கேள்விப்பட்டேன் இன்னுமா இருக்கா அப்போ?

   பேசாம அரசுடமையாக்கிட சொல்லி ஒரு போராட்டம் நடத்துங்க, வழிப்பிறக்கும்.

   ugc and aicte rules படி பணியாளர் பட்டியல் ஒன்றை அவர்களுக்கு அனுப்பனும், அப்பட்டியலில் இடம் பெற்றவர்களை நீக்க முடியாது.

   என்ன நடக்குதுனு பார்க்கலாம், கவலைப்படாதீங்க.

   Delete
 14. மூனா,

  வாஞ்சூர், டி.ஆர்.பட்டிணம் ஆகிய காரை பகுதி ஊரில் எல்லாம் நிலவரம் இப்படித்தான் இருக்கும், ஆனால் அதை தவிர வேறு ஏதேனும் நுண்ணரசியல் பேசப்பட்டிருக்குமானால் ,அது தேவையில்லாதது, நம்ம வேலையைப்பார்ப்போமே, யாரோ எப்படியோ பினாத்தினால் அதுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை, கருத்து ரீதியாக பதிலடி கொடுப்பதே சிறந்தது என்பது எனது தனிப்பட்டக்கருத்து.

  ReplyDelete
  Replies
  1. நுண்ணரசியல் பேசுற அளவுக்கு நாம ஒர்த் இல்லையே.

   Delete
 15. Replies
  1. விதி செய்த சதி அண்ணே.

   Delete
 16. தக்க நேரத்தில் விஸ்வரூபம் எடுத்த அந்த குடும்ப தலைவனை வாழ்த்துவோம் ! ! !

  ReplyDelete
 17. செந்தில், வாஞ்சூர் என்கிற பேருக்கு இருக்கிற ராசி அது. தமிழ்மணத்துல கூட ஒரு வெட்டி முண்டம் வீனா போன தண்டம் ஒன்னும் சுத்திகிட்டு இருக்கு.
  சும்மா இல்ல, அடுத்தவங்க மேல சேத்த வாரி பூசிகிட்டு இருக்கு. என்னைக்கு அது அடி பட்டு மிதி பட்டு சாக போகுதோ தெரியல...

  ReplyDelete
  Replies
  1. நான் சொன்னது எங்க ஊர் பக்கத்துல இருக்குற ஊரப்பத்திதான், மத்ததெல்லாம் எனக்கு தெரியாது ராஜ்.

   Delete
 18. மூஞ்சூர், ச்ச்சா சாரி வாஞ்சூர் சுற்றுப் பயணம் அருமை அருமை ..இந்தக் கடைக்கு இரவில் ஒருவர் 8 மணிக்கே மேல முக்காடு போட்டுக் கொண்டு ரகசியமாக சில பல தீர்த்தங்களை வாங்கிக் கொண்டு செல்வதாக, இடியப்ப பூதனாரின் திருவிசிறிகள் சிலரிடம் இருந்து வந்த உளவறிக்கைக் கூறுகின்றது.. எல்லாம் வல்ல இடியப்ப பூதனார் அவர்களுக்கு வாந்தியும் ச்சா சாந்தியும் சமாதானமாக போகும் படி அருள் பாலிக்கட்டும் ! அவ்வ்வ்வ்

  ReplyDelete
  Replies
  1. நன்றி இக்பால்.

   Delete
 19. ஹா... ஹா... ஹா... அருமை!

  ReplyDelete
 20. தலைப்பை பார்த்துவிட்டு என்னமோ ஏதோன்னு ஓடி வந்தா நீங்கள் சொல்றது ஒரு பழைய கதை. ஆனாலும் டைமிங் அபாரம். நமக்கு எதுக்கு நுன்னறிவு அரசியல் நண்பா ,

  ReplyDelete
  Replies
  1. நன்றி அஜீம்பாஷா

   Delete
 21. தமிழ் நாட்டில் வாஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் வாஞ்சூறான் . அதே பகுதியை சேர்ந்த பிலால் என்பவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த இவர், அந்த பெண்ணின் உறவினர்களிடம் கையும் களவுமாக பிடிபட்டார்.

  வாஞ்சூறான் ஐ அடித்து, உதைத்து பஞ்சாயத்தாரிடம் இழுத்துச் சென்ற அவர்கள், வாஞ்சூறான் மனைவி கல்சூம் மய் என்பவரை பஞ்சாயத்துக்கு வரவழைத்தனர். தங்கள் குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு நேர்ந்த அவமானத்துக்கு பழிக்குப்பழியா வாஞ்சூறான் னின் மனைவியை நிர்வாணப்படுத்தி தண்டிக்க வேண்டும் என அவர்கள் பஞ்சாயத்தாரிடம் கேட்டுக் கொண்டனர்.

  இதனையடுத்து, கல்சூம் மய்யை நிர்வாணப்படுத்தி பஞ்சாயத்தார் தண்டனை வழங்கினர். இச்சம்பவத்தை பற்றி கல்சூம் மய் அளித்த புகாரின் அடிப்படையில் வாஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிலாவின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த குற்றத்துக்காக வாஞ்சூறான் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  ReplyDelete
  Replies
  1. இது பாகிஸ்தானில் நடந்ததா இப்போதானே தட்ஸ் தமிழ்லே படித்து விட்டு வந்தேன் , சொர்ணக்கா நீங்க கற்பனை கதை அடிச்சு விட்டிருகிங்க .

   Delete
  2. ஏன் சொர்ணாக்கா, இந்த கதை, இந்த நேரத்துல.

   Delete
 22. வாஞ்சூரின் தொல்லையை கூட தங்கிக்கலாம். ஆனா இந்த "RIE" கொரங்கோட தொல்லை தாங்க முடியல.
  யாராவது தட்டி கேக்க மாட்டேங்களா (இந்த கொசுவோட தொல்லை தாங்க முடியல)
  http://goo.gl/eEWiR

  வவ்வால் ஜி ப்ளீஸ் ஏதாவது செய்யுங்க

  ReplyDelete
  Replies
  1. வவ்வால் அண்ணே, உங்களுக்கு சொர்ணாக்கா அழைப்பு விட்டுருக்கு, வர்றது.

   Delete
  2. மூனா,

   என்னை வச்சு காமெடி ,கீமெடி செய்யலையே...அவ்வ்வ்!

   சொர்ணாக்கா சொன்ன சுட்டிக்கு போனால்,

   சொர்க்கத்தில டிராபிக் சிக்னலில் மாட்டாம எட்டு திசையிலும் போகலாம்னு ஒருத்தர் எழுதி வச்சிருக்கார், என்னத்த சொல்ல அவ்வ் :-))

   எங்கேயிருந்து கிளம்பிவர்ரானுங்களோ தெரியலை எதாவது பழம் புத்தகத்தை அப்படியே காப்பி அடிச்சு தத்துவமா சொல்லி கொலையா கொல்லுரானுங்களே, இதை எல்லாம் எழுதுறானுங்க ஒரு பயலும் காமசூத்திராவுக்கு தெளிவுரை ,விளக்கவுரை எழுத மாட்டேங்கிறாங்க, படிச்சா வாழ்க்கை இன்பமாக இருக்குமே :-))

   Delete
 23. அவர் தாடி எனக்கு ரொம்ப பிடிக்கும்...-:)

  **Followers.அன்பர்கள்.** தாங்களும் அப்படி வளர்க்கலாமே !!!

  ReplyDelete
  Replies
  1. இது நல்ல ஐடியாவா இருக்கே.

   Delete
 24. வாஞ்சூர் நாகையில் இருந்து சைக்கிளில் செல்லும் தொலைவு தான், செக்போஸ்டே ஒரு மாதிரி போதையோடு தான் சாய்ந்து இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. கோவி. கண்ணன், நீங்களும் சைக்கிள்ல தான் வருவீங்களா?

   Delete
 25. ஏண்டா வாஞ்சூரு..இதெல்லாம் என்னடா மானங்கெட்ட பொழப்பு...ஒரு மொழ கயிறு கெடைக்கல ஒனக்கு , நாண்டுக்கிட்டு சாவ? ...(செந்தில்ணே ...மாமியாவ எட்டிப் பாத்ததினால கோவம் வந்திருச்சு பாத்துக்கங்க..)

  ReplyDelete
  Replies
  1. நமக்கு மாமியா கிடையாதுங்கோ.

   Delete
 26. Replies
  1. நன்றி கரிகாலன்

   Delete
 27. அருமை!

  #சொல்லிவைப்போம்
  #$ஒன்னுமே புரியலை ஒலகத்துலே.

  ReplyDelete
  Replies
  1. தம்பி, இது எல்லாம் நுண்ணரசியல், உனக்கு புரியாது, போய் சின்னப்பசங்களோட பல்லாங்குழி விளையாடு போ.

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...