சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Tuesday, January 8, 2013

பஞ்சேந்திரியா - 2013 குடிகாரர்களுக்கு உகந்த ஆண்டல்ல

இந்த ஆண்டு குடிகாரர்களுக்கு எல்லாம் ஆப்பு போல. வழக்கமாக போதையப் போட்டு சலம்பும் ஆண்மக்களே சற்று அடக்கி வாசிக்கவும். மாயன் காலண்டர் முடிந்த பிறகு ஒவ்வொரு குடிகாரனாக போட்டு தள்ளுதுன்னு நினைக்கிறேன்.

மாயனின் விதிவசத்திற்கு முதலில் பலியானது நான் தான். வாங்கிய அடியின் காரணமாக இப்பொழுதெல்லாம் மதுவிற்கு எதிரான பிரச்சாரத்தை நானே துவக்கி விட்டேன், மாட்டியவனுக்கெல்லாம் அட்வைஸ் மழையை பொழிய அவனவன் என்னைக் கண்டதும் மம்மியைக் கண்ட மினிஸ்டர்ஸ் போல வளைந்து குனிந்து விலகிச் செல்கின்றனர்.

என்னுடன் பணிபுரியும் செல்வராஜ் என்பவருக்கு 59 வயதாகிறது, 60,000 ரூபாய் மாத சம்பளம் வாங்குகிறார். தினமும் குடிக்கவில்லை என்றால் அவருக்கு பொழுதே போகாது, அவர் சரியாக புத்தாண்டன்று குடித்து விட்டு கலாட்டா செய்ய அவரது மகனே காலை உடைத்து விட்டான். இப்பொழுது மெடிக்கல் லீவில் இருக்கிறார்.

நேற்று முன்தினம் எங்கள் குடும்ப விழாவில் இது போல் ஒரு நெருங்கிய சொந்தக்காரர் ஒருவர் குடித்து விட்டு என் அப்பாவை கன்னாபின்னாவென்று போதையில் பேசத் தொடங்க என் தம்பி அவரை அடித்து உதைத்து விட்டான். அவருக்கு மற்றவர்கள் முன் மரியாதையும் போய் யாரிடமும் பேசாமல் விலகி விலகி செல்கிறார்.

எனக்கு தெரிந்த இன்னும் சிலருக்கும் அசம்பாவிதங்கள் நடைபெற்று இருக்கின்றன. எனவே நான் மற்றவர்களிடம் குடிப்பதை தவிர்க்கச் சொல்ல இதுக்கு முன்னாடி என்னைப் பார்த்தால் குடிச்சா அலும்பு பண்ணுவானே என்று மற்றவர்கள் விலகிய காலம் போய் இப்பல்லாம் ஓவரா அட்வைஸ் பண்றானேன்னு தெறிச்சி ஒடுறானுவ. குடிச்சாலும் தப்பு, குடிக்காதேன்னு சொன்னாலும் தப்பாடா நடத்துங்க ராசா நடத்துங்க.

----------------------------------------------

மறுபடி மறுபடி தெலுகில் ஹீரோக்களின் சலம்பலை பார்ப்பது எனக்கு விதிக்கப்பட்ட சாபமோ தெரியவில்லை. நேற்று முன்தினம் கூட அப்படி ஒரு கொடுமை என் முன்னாடி ஜிங்கு ஜிக்குனு ஆடுச்சி.

அந்த படத்தின் பெயர் யுத்தபூமி, கதாநாயகன் சிரஞ்சீவி, கதாநாயகி விஜயசாந்தி, வில்லன் மோகன்பாபு. கிளைமாக்ஸ் மட்டும் தான் பார்த்தேன். கடுமையான சண்டையின் கடைசியில் எல்லா வில்லன்களையும் ஹீரோ வீழ்த்திய பிறகு மெயின் வில்லனான மோகன்பாபுவை கொல்லத்துரத்த அவரோ ஹெலிகாப்டரில் ஏறி தப்பிக்கிறார்.

இதனை கண்டு பொறுக்காத ஹீரோ அப்படியே ஓடிச்சென்று யாரோ ஒரு அப்பாவி விவசாயி உழுதுக் கொண்டு இருக்க அவரிடம் இருந்து ஏர்கலப்பையை புடுங்கி சென்று ரெண்டு சுத்து சுத்தி மேலே வீச அது பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரில் ரெக்கையின் நடுவில் விழ ஹெலிகாப்டர் வெடித்து சிதறுகிறது.

அதப்பார்த்துக் கொண்டிருந்த நான் அப்படியே ஷாக்காயிட்டேன். நல்ல வேளை இந்த படம்லாம் அந்த காலத்துல தமிழ்ல வரல. நாம அப்பவே பார்த்திருந்தம்னாக்கா தறிகெட்டு திரிஞ்சிருப்போம். நல்லவேளை நம்ம ரசனை உயர்ந்து இருப்பதனால் தப்பித்தோம். இன்னொரு முறை அது போன்ற படம் என் கண்ணுல மாட்டிச்சி கிறுக்கு புடிச்சி திரிய வேண்டியது தான்.

--------------------------------------------------------

மலையாளத்தில் உஸ்தாத் ஹோட்டல், மாயமோகினி, இந்தியில் ஜோக்கர், அய்யா படங்களை சமீபத்தில் பார்த்தேன். ஒவ்வொரு படங்களையும் சிலாகித்து ஒவ்வொரு பதிவெழுதலாம், அவ்வளவு அருமை.

உஸ்தாத் ஹோட்டல் கோழிக்கோடு முஸ்லீம்களின் வாழ்க்கை முறையை பேக்டிராப்பாக வைத்து நடக்கிறது. தாத்தாவுக்கும் பேரனுக்குமான நட்பே படத்தின் மிளகுரசம் ச்சே.. சாராம்சம்.

வாரிசுநடிகர்கள் என்றால் முதல் படத்திலேயே நூறு பேரை அடித்து வீழ்த்தி அறிமுகம் கொடுக்கும் இந்த காலத்தில் எந்தவித ஹீரோயிசமும் இல்லாமல் அசத்தியிருக்கிறார் துல்ஹர் சல்மான். எனக்கு முதலில் அவரின் நடிப்பில் பெரிய ஈர்ப்பில்லாமல் இருந்து நேரம் செல்லச் செல்ல எனக்குள் அட்டகாசமாக சாய்வு நாற்காலி போட்டு அமர்ந்து விடுகிறார். இனி எனக்கு மலையாளத்தில் அபிமான நடிகர் துல்ஹர் தான்.

தமிழகத்தில் இருக்கும் நமக்கு தெரியாத நாரயணன் கிருஷ்ணன் கேரக்டரை ஜெயப்பிரகாஷ் கண்முன்னே நிறுத்துகிறார். அவருக்கு இந்த ரோட்டோரம் இருக்கும் வயதானவர்களுக்கு உணவு கொடுக்க துவங்கிய காரணத்தை சொன்ன போது நான் நெகிழ்ந்து விட்டேன்.

நீங்களும் ஒரு முறை வாய்ப்பு கிடைத்தால் பார்த்து மகிழுங்கள்.

--------------------------------------------------------

மாயமோகினி படம் ஆரம்பித்ததிலிருந்து பாபுராஜூம் பிஜுமேனனும் மட்டுமே வந்து கொண்டிருக்க திலீப் கெஸ்ட் ரோல் மட்டும் தானோ என்று பயந்து விட்டேன், ஆனால் எதிர்பார்க்காத தருணத்தில் எதிர்பார்க்காத கதாபாத்திரமாக அறிமுகமாகும் போது வெடித்து சிரித்தேன்.

ஒரு பெண்ணை வைத்து எந்தெந்த போஸ்களை எடுக்கக்கூடாதோ அத்தனை போஸ்களையும் திலீப்பை வைத்து எடுத்து விட்டனர். ஆனால் ஒன்னு குடும்பம் சகிதம் படம் பார்க்க சிரமம் தான், பல இடங்களில் நெளிய வேண்டியதாகி விட்டது.

அதை தாண்டி சுவாரஸ்மான படம் தான் மாயமோகினி. ஒரு காட்சியில் பாபுராஜுக்கு முத்தம் கொடுப்பார் பாருங்கள். அதிர்ந்து விட்டேன். டேய் இது U சர்டிபிகேட் படம் என்று கூவ வேண்டியதாகி விட்டது.

பிகினி உடையில் ஒரு ஆட்டம், அழகிய லைலா பாடலில் ரம்பா பாவாடை பறக்க ஆட்டம் போடுவாரே அப்படி ஒரு ஆட்டம், புடவை கட்டியிருக்கும் போது அவசரமாக ஒன்னுக்கு வந்து விட மரத்தடி பின்பு ஓதுங்கும் காட்சி என அனைத்துமே காமெடியின் உச்சம். வழக்கம் போல சினிமா கிளைமாக்ஸ் தான். ஆனால் இரண்டு மணிநேரம் பார்த்து ரசிக்க சூப்பர் டைம்பாஸ் படம். மொழி புரியாவிட்டாலும் பார்த்து ரசியுங்கள்.

-------------------------------------------------------

ஜோக்கர் படம் துவங்கி அரைமணிநேரத்திலேயே படம் மொக்கை என்று தெரிந்து விட்டது. சிடி வாங்கி விட்டோமே என்ற காரணத்தினால் பார்க்க வேண்டியதாகி விட்டது. மூன்று மாநில எல்லையில் இருக்கும் ஒரு கிராமத்தை அனைத்து மாநிலங்களும் புறக்கணிக்க அந்த கிராமத்தில் இருந்து படித்து அமெரிக்காவுக்கு வேலைக்கு போன அக்சய் குமார் தனது கிராமத்திற்கு விடிவுகாலம் வர விண்கலங்கள் கிராமத்தில் இறங்குவதாக கதையடித்து ஊரை நம்ப வைக்கிறார்.

அதன் பரபரப்பு காரணமாக உலக மீடியாக்களின் கவனம் அந்த கிராமத்தினுள் விழ மூன்று மாநில அரசுத்துறைகளும் விழுந்தடித்து ஊரை கவனிக்கிறது. அதில் ஒரு இடைஞ்சல் வர அதனை சமாளித்து எப்படி வெற்றி காண்கிறார் என்பதே படத்தின் கதை.

சுமாரான படம் தான்.


ஆரூர் மூனா செந்தில்

11 comments:

 1. சரிங்கன்னா.....

  நானும் திருந்திட்டேன்....

  பிரபல பதிவர்னா இப்படித்தான் சொல்லணுமாம்....
  :)))))))))

  ReplyDelete
  Replies
  1. அப்படினா நானும் பிரபல பதிவரா நக்ஸு

   Delete
 2. அப்ப மூத்த குடிமகன்களுக்கு உகந்த ஆண்டா?

  ReplyDelete
  Replies
  1. அத மூத்த குடிமகன்கள் தானே சொல்லனும்

   Delete
 3. nama kudikkartha nippatiyachunna advise panna thodnganumnu yaar sonnathu...athan therichu oduranga....adakki vasinga

  ReplyDelete
  Replies
  1. அதென்னமோ கரெக்ட்டு தான் சகா

   Delete
 4. "ஏர்கலப்பையை புடுங்கி சென்று ரெண்டு சுத்து சுத்தி மேலே வீச அது பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரில் ரெக்கையின் நடுவில் விழ ஹெலிகாப்டர் வெடித்து சிதறுகிறது. அதப்பார்த்துக் கொண்டிருந்த நான் அப்படியே ஷாக்காயிட்டேன்."

  உங்களுக்கு பொறாமை, எங்கடா நம்மால இந்த மாதிரி ஹீரோயிசம் பண்ண முடியலையேனு.. ஹி ஹி..

  ReplyDelete
  Replies
  1. ஏங்க இதுக்கு பேரு ஹீரோயிசமா, உங்களுக்கே அக்கிரமமா தெரியலை.

   Delete
 5. குடியை விட்டமைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. ///ஆரூர் மூனா செந்தில்January 8, 2013 10:10 PM

  அத மூத்த குடிமகன்கள் தானே சொல்லனும்///

  …அப்ப அன்பழகன் கருணாநிதி போன்றவர்கள் என்ன சொல்கின்றார்கள்?

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...