சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Saturday, January 12, 2013

பஞ்சேந்திரியா - வாட்டர் பாட்டில் ஊழலும் மலையாளப்படமும்

அலெக்ஸ் பாண்டியன் என்ற உலக சினிமாவை பார்த்ததனால் பிடித்த பித்து இப்போது தான் தெளிந்தது. மணியாகி விட்டது, இரண்டு மணிக்கு திருவாரூர் செல்ல பேருந்தை கோயம்பேட்டில் இருந்து பிடித்தாக வேண்டும். இது போன்ற பண்டிகைள நாட்களில் எப்பொழுதும் முன்பதிவு செய்தே பயணம் மேற்கொண்டிருந்த நான் இந்த முறை, என்று கிளம்புவது என்று குழப்பத்தினாலும், ரயிலா பேருந்தா என்ற குழப்பத்தினாலும், அலெக்ஸ் பாண்டியன் பார்த்ததால் ஏற்பட்ட குழப்பத்தினாலும் முன்பதிவு செய்யவில்லை.

இன்று இரவு புறப்பட்டால் பேருந்து கிடைக்காமல் கூட போகலாம், அல்லது பேருந்தில் நின்று கொண்டே பயணிக்க வேண்டியிருக்கும். அதனால் ஒரு சேப்டிக்கு பகல் பயணமாக கிளம்புகிறேன். மீண்டும் பொங்கலுக்கு பிறகே சந்திப்பேன் என்று எண்ணுகிறேன். ஒருவேளை நாளை கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் பார்த்தால் விமர்சனம் எழுதுகிறேன். இல்லையென்றால் அடுத்த வாரம் புதனுக்கு பிறகு சந்திப்போம்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

-----------------------------------------------------------

நக்கீரன் பிச்சாவரம் காட்டில்

-------------------------------------------------------------

சிஐடியு யூனியனில் ஒரு விஷயம் அரசல் புரசலாக தெரியவந்தது. சென்னையில் சென்ட்ரல் மற்றும் எக்மோரில் மட்டும் ஆண்டுக்கு 300 டன் காலி வாட்டர் பாட்டில்கள் குப்பையில் வந்து சேருகின்றனவாம். இதற்கென இரண்டு உயரதிகாரிளை கொண்ட குழு அமைத்து அந்த காலி பாட்டிகளை சேகரிக்கின்றனர்.

அப்படி சேகரித்த பாட்டில்களை ரெட்ஹில்ஸில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு கிலோ ரூ.35/- வுக்கு விற்கின்றனர். இதில் முறைகேடாக ரூ.1,05,00,000/- கடந்த மூன்று வருடத்திற்குள் ஸ்வாகா செய்திருக்கின்றனர்.

கண்ணுக்கு தெரிந்தே இவ்வளவு கொள்ளை. இதை கேட்பதற்கு யாருமில்லை. கம்யூனிஸ்ட்டுகள் பகிரங்கமாக நோட்டீஸ் போட்டு ஒப்பாரி வைத்தும் இதனை கவனிக்கவோ விசாரணை செய்யவோ யாருமில்லை. ஜனநாயக தேசமடா.

----------------------------------------------------------------

இந்த படுக்கைக்கு சொந்தக்காரன் பட்டிக்ஸ் ஜெய்யின் நண்பனாக இருப்பானோ


--------------------------------------------------------------

நீண்ட நாட்களாக தட்டத்தின் மறயத்து படம் பார்க்காமல் இருந்தேன். பர்மா பஜாரில் போய் எப்போது கேட்டாலும் 5.1 டிவிடி வரவில்லை என்றே சொல்லிக் கொண்டு இருந்தார்கள். கடந்த வாரம் போய் கேட்ட போது கிடைத்தது.

படம் பார்த்ததும் நெகிழ்ந்து போய் விட்டேன். என்னா மேக்கிங். என்னா புரொபசனலிசம். கம்யூனிஸ்ட்கள், முஸ்லீம் பெண்ணுடனாக காதல், அதன் எதிர்ப்பு என இந்த படத்தை சீரியஸாக கொண்டு செல்ல வாய்ப்புகள் இருந்தும் கடைசி வரை மெல்லிய நகைச்சுவையுடனே சற்று கூட போரடிக்காமல் கொண்டு சென்றதே மிகப் பெரிய ப்ளஸ்.

இந்த சுராஜ், பேரரசு, தரணி போன்ற பத்துக்கும் மேற்பட்ட இயக்குனர்களை கேரளாவுக்கு தள்ளி விட்டு இந்த வினித்தை தமிழுக்கு கொண்டு வாங்கப்பா. அப்பவாவது இந்த தமிழ் சினிமா உருப்படுதா பார்ப்போம். விமர்சனத்தை ஊருக்கு போய் விட்டு வந்து எழுதுகிறேன்.

 ஆரூர் மூனா செந்தில்

12 comments:

  1. இனிய பொங்கல் வாழ்த்துகள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ், இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

      Delete
  2. நானும் பார்த்தேன்..தட்டத்தின் மரையது...
    செம கிளாசிக்...சிறுவனாக இருக்கும் போதே அந்த பெண்ணை பார்த்து லவ் பண்ணனும் என்று சொல்வான் ஹீரோ..அதே மாதிரி கடைசியில் காட்டுவார்கள்...செம...

    ReplyDelete
    Replies
    1. நன்றி மச்சி, உனக்கும் குடும்பத்துக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

      Delete
  3. என் இனிய தை பொங்கல் திருநாள் வாழ்த்துகள் செந்தில்.

    அலெக்ஸ் பாண்டியன் படத்தைப்பர்த்துட்டு தெம்பா...தெளிவா... ட்ராவல் பண்ணுற ரேஞ்சுல இருக்கேனா நீயி பெரிய தகிரியசாலிதாம்பா...ஒத்துக்கிடுறோம்....

    படம் பார்த்த அஞ்சாசிங்கம் ஆஸ்பத்திரில அட்மிட்டாயிருக்கானாம்... போய் ஒரு எட்டு பார்த்துட்டுவரனும்... பேசா ஊட்ல கிடங்கடேனா கேக்குறாய்ங்களா.....

    ReplyDelete
    Replies
    1. என்ன ஜெய் பண்ணுறது, எனிவே இனிய பொங்கல் நல்வாழ்த்க்கள்.

      Delete
  4. பொங்கல் நல் வாழ்த்துக்கள் பாஸ்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜ். தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

      Delete
  5. தல, பொங்கல் வாழ்த்துகள்.பயணம் இனிதே அமைய வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆரிப்.

      Delete
  6. இனிய (போ)தை பொங்கல் நல் வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
    Replies
    1. யோவ். தையிலயாவது போதைய விடுய்யா. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...