சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Wednesday, January 30, 2013

முதிர்கண்ணன்கள்

சென்னையின் பேச்சிலர் தங்கும் இடங்களில் நாம் விதவிதமான மனிதர்களை சந்திக்க நேரிடும். புதிதாக சென்னைக்கு வந்து வேலை தேடும் பட்டதாரிகள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், திரைப்பட வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டு இருக்கும் விருச்சிககாந்த்கள், குடும்ப சூழ்நிலை காரணமாக தன்கையே தனக்குதவி என 40 வயதிலும் திருமணமாகாமல் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் முதிர்கண்ணன்கள் என வெரைட்டி, வெரைட்டி கதாபாத்திரங்கள் நிறைந்த வாழ்க்கை அது.


இன்றைய கட்டுரையில் நாம் பார்க்கப் போவது இந்த முதிர்கண்ணன்கள் பற்றி தான். எந்த ஹீரோயிசமும் பண்ணாத வாழ்வின் நிஜ ஹீரோக்கள் அவர்கள் தான். சிறுவயதிலேயே அப்பன் காசில் பைக் வாங்கி ரவுசு விட்டு ஹீரோயிசம் காட்டும் அரைவேக்காடுகள் வாழும் இந்த சென்னையில் கண்ணுக்கு தெரியாத தியாக உருவங்கள் முதிர்கண்ணன்கள் தான்.

முதலில் ஆளாக நாம் பார்க்கப் போவது சுந்தரேசனைப் பற்றி. அவரது ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல். என்னுடன் 2001 காலகட்டத்தில் ரூம்மேட்டாக தங்கியிருந்தவர். அப்பொழுது அவருக்கு 35 வயதிருக்கும். குரோம்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

ஐடிஐ முடித்தவர் என்பதால் சம்பளம் குறைவு தான். ஆனாலும் கிடைத்த சம்பளத்தை பெருமளவு ஊருக்கு அனுப்பி வைத்து விட்டு சொற்ப காசில் தான் சென்னையில் காலம் தள்ளுவார். காலை 10 மணி வேலைக்கு 7 மணிக்கே கிளம்ப வேண்டும். இரவு 10 மணிக்கு தான் திரும்ப வருவார். நாங்கள் எல்லாம் துணி துவைக்க ஆள் வைத்திருந்த போதும் அந்த காசையும் மிச்சப்படுத்த வேண்டி சொந்தமாகவே துவைத்துக் கொள்வார்.


ஊரில் நிறைய பேர் 100பவுன் நகையுடன் பொண்ணு தர காத்திருந்தும் வீட்டோடு மாப்பிள்ளையாக விருப்பமில்லாமல் குடும்பத்தின் நலன் வேண்டி எல்லாத்தையும் புறக்கணித்தவர். சனி இரவு நடக்கும் பார்ட்டியில் குடித்து விட்டு புலம்பும் போது தான் ஒரு வயது வந்த ஆண், பெண் துணையின்றி வாழ்வது சிரமம் என்பது புரியும்.

பிறகு நான் அந்த அறையிலிருந்து வெளியே வந்து விட்டேன். பத்து வருடம் கழித்து சென்ட்ரலில் அவரை சந்தித்தேன். ஆளே மாறியிருந்தார். முன்வழுக்கை விழுந்து கொஞ்சம் தொப்பை வேறு போட்டிருந்தார். பக்கத்தில் இருந்த பாரில் அமர்ந்து நெடுநேரம் பேசிக் கொண்டு இருந்தோம்.

துபாயில் வேலை செய்வதாகவும் இரண்டு தங்கைகளுக்கு திருமணமாகி விட்டது எனவும் கடைசி தங்கையின் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க வேண்டி சென்னை வந்ததாகவும் கூறினார். அடுத்த வருடத்தில் கண்டிப்பாக தனக்கு திருமணம் என்றும் கூறினார்.

எனக்கு பெருமையாக இருந்தது. எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும் சற்றுகூட சலனப்படாமல் தங்கைகளுக்கு திருமணம் செய்து கொண்ட பின்பே தனக்கு திருமணம் என உறுதியாக இருந்த அவர் எனக்கு ஹீரோவாகவே தெரிந்தார்.

அடுத்தவர் நான் பணிபுரிந்த கம்பெனியில் சமையற்காரராக கேரளாவில் என்னுடன் பணிபுரிந்த தமிழர். மதுரைக்காரர். மலேசியாவில் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து குடும்பத்தை கறையேற்றியவர். ஆனால் தனது இளமையை தொலைத்தவர். ஊரில் சொந்த வீடு கூட இருந்தது.

தம்பியை படிக்க வைத்து தங்கைக்கு திருமணம் செய்து வைத்து வீடு கட்டி முடித்ததும் வயது தாண்டியிருந்தது. இனிமேல் எங்க திருமணம் செய்வது என யோசித்து அந்த எண்ணத்தையே கைவிட்டவர். இரவானால் எங்களோடு தான் குடிப்பார். குழந்தை மனசுக்காரரான அவர் குடித்ததும் செய்யும் காரியங்கள் சிரிப்பை வரவழைக்கும். தனக்கு திருமணமாகவில்லையே என்ற வருத்தம் சிறிதும் இல்லாத நல்ல மனசுக்காரர்.

உண்மையில் நாம் நினைத்துக்கொண்டிருப்பது பெண்கள் தான் உணர்ச்சி மயமானவர்கள், குடும்ப பொறுப்பு உள்ளவர்கள், ஆண்கள் எல்லாம் வாழ்க்கையை அனுபவிப்பவர்கள். பொறுப்பற்றவர்கள். ஆனால் எத்தனை ஆண்கள் சென்னையில் கிடைக்கும் சிறு சம்பளத்திற்காகவும் வாய்ப்புக்காகவும் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு அவர்களது ஆசாபாசங்களை தியாகம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா.

அவர்கள் போற்றப்பட தக்கவர்கள். ஆனால் அவர்கள் மீது வைக்கப்படும் பொதுவான குற்றசாட்டு அவர்கள் குடிகாரர்கள். சிகரெட் பிடிப்பவர்கள். இவை இரண்டும் தான் ஒருவரின் ஒழுக்கத்தின் அளவீடா. குடித்து விட்டு வம்பு வளர்க்கிற ஆளை விட்டு விடுங்கள். இவ்வளவு ஏக்கத்தையும் வருத்தத்தையும் மனதில் வைத்துக் கொண்டு சற்று நேர ரிலாக்சுக்காக குடித்து விட்டு வருபவர்களை எவனும் மனிதனாகவே மதிப்பதில்லை.

ஆனால் எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் எல்லா துர்குணங்களும் உள்ள ஒருவனை கொண்டாடும் சமூகம் இது. உதாரணம் வேண்டுமா? காஞ்சியில் விக்ரகத்தின் முன் பெண்களை புணர்ந்த அர்ச்சகர் குடிக்கும் பழக்கம் சிகரட் பழக்கம் இல்லாதவர். நித்யானந்தா காபி டீ கூட குடிக்கும் பழக்கம் இல்லாதவர். ஆனால் அந்த புண்ணியவான்கள் செய்த காரியம் என்ன .

இது போல் குடும்பத்திற்காக இளமையை அழித்துக் கொண்டு கடமையில் கண்ணாக இருக்கும் இவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் அல்ல. கும்பிடப் படவேண்டியவர்கள்.

ஆரூர் மூனா செந்தில்


30 comments:

 1. முதிர் பிரமச்சாரிகள் என்று குறிப்பிட்டிருக்கலாம் முதிர் கண்ணன்கள் என்பது தவறான பொருளை குறிக்கிறது( அது சில்மிசம் செய்பவர்களை குறிப்பதாக பொருள்படும்).
  முதிர் கன்னிகள் இருப்பதை போன்று இவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ன செய்வது எனக்குத்தெறிந்து அவர்களை அவர்களுடைய குடும்பம் சுயனலமாக பயன்படுத்திக்கொள்ளும்.

  ReplyDelete
  Replies
  1. சுயநலம்னு சொல்ல முடியாது. குடும்பத்திற்கு செய்ய வேண்டியது ஆண்மகனின் கடமையல்லவா.

   Delete
 2. நல்ல கருத்து. பகிர்ந்துகொண்டேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே.

   Delete
 3. நித்யானந்தா காபி டீ கூட குடிக்கும் பழக்கம் இல்லாதவர்..........paal kudippaaro? I mean Cow milk..............

  ReplyDelete
  Replies
  1. குசும்பா மாணிக்.

   Delete
 4. மிக நல்ல பதிவு.. தொடர் பதிவாக்கியிருக்கலாம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதைக்கு சொந்தக்காரர் போல தெரிகிறது.
  சரியான நேரத்தில் கல்யாணம் பண்ணிக்கொள்ளாமல் (பண்ணிக்கொள்ள முடியாமல்) வாழ்க்கையை இழந்தவர்கள் நிலை பரிதாபம்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி பந்து.

   Delete
 5. நல்ல செய்தி குரு ...
  சிலரின் நிலைகள் இன்னும் கொடுமையாக இருக்கும் .. அதில் நான் சிலரை நேரிடையாகவே கண்டிருக்கிறேன் ..

  ReplyDelete
  Replies
  1. நன்றி சீடரே.

   Delete
 6. Marriage in 40-45 age range is possible. But it should be with a girl or woman of 30-35 range. Happiness is not uniform for all. A young man of 27 with a young woman 24 finds happiness in marriage ( I mean sex ) but the man of 40 with a woman of 35 also can find happiness ( I mean sex ) and the only difference is the difference in happiness. But it is happiness still. ATHAAVATHU, MAKIZHCHI ENPATHU AVARAVARUKKU THAKKA MAADIRI IRUPPATHUTHAAN. KUZHANTHAYIN MAKIZHICHYUM UNGKAL MAKIZHCHYUM VEREVERE. AANAAL IRUVARUKKU MAKIZHCHII UNDALALLAVAA?

  The old bachelors can get a child and live a happy married life Indeed, real happiness comes in marriage only after we enter our 35-45 age range.

  So, advise your friends not to worry about their age and get married and enjoy life.

  Please note: There are thousands and thousands of women waiting for men to marry in the age range of 40-45.

  Your blog post gives negative feelings. No body needs to cry. Every body can be happy.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் மேலதிக தகவலுக்கு நன்றி குலசேகரன்.

   Delete
 7. செந்தில் போட்ட பதிவை விட திரு.குலசேகரன் போட்ட பின்னூட்டம் சிறப்பாக இருக்கின்றது

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா அதென்னவோ சரிதான்.

   Delete
 8. //காஞ்சியில் விக்ரகத்தின் முன் பெண்களை புணர்ந்த அர்ச்சகர் குடிக்கும் பழக்கம் சிகரட் பழக்கம் இல்லாதவர். நித்யானந்தா காபி டீ கூட குடிக்கும் பழக்கம் இல்லாதவர். ஆனால் அந்த புண்ணியவான்கள் செய்த காரியம் என்ன //
  "மதவாதிகளை அசிங்கப் படுத்துகிறார்",என வழக்கு தொடர்ந்து இப்பதிவை தடை செய்ய முடியுமா?
  பின்னூட்டத்தின் மூலம் கை கோர்ப்போம் ஒன்று கூடுங்கள் மத வியாதிகளே

  ReplyDelete
  Replies
  1. நெத்தியடி சேக்காளி.

   Delete
 9. இந்த மாதிரி ஆண்கள் பாவம் தான். இவர்களுக்கு நல்ல மனைவி கிடைத்து பிந்தைய வாழ்க்கையாவது ரொம்ப நல்லாயிருக்கணும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி அமுதா கிருஷ்ணா.

   Delete
 10. நல்லதொரு பகிர்வு! இவர்கள் போற்றப்படவேண்டியவர்கள்தான்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ்.

   Delete
 11. Replies
  1. நன்றி ரவிச்சந்திரன்.

   Delete
 12. நல்ல பதிவு நிச்சயமாக இவர்கள் ஆலமரம் போன்றவர்கள் தான் வளர்ந்து அடுத்தவர்களுக்கு நிழலை தந்து மகிழ்விப்பவர்கள். இவர்களுக்கு நல்லதே நடக்கும்.
  உங்க அப்பா எப்படி இருக்கிறார் செந்தில்,

  ReplyDelete
  Replies
  1. அப்பா நன்றாக இருக்கிறார். நன்றி பாஷா.

   Delete
 13. குடும்ப பொறுப்புகளில் முழுதுமாய் ஈடுபடுத்தி தங்களின் வாழ்கையை தொலைத்த பலபேர் உண்டு. நீங்கள் சொன்னதுபோல இவர்களும் கவனிக்கப் படவேண்டியவர்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி கவியாழி அண்ணே.

   Delete
 14. நல்ல பதிவு , உண்மை நிகழ்வுகளுடன் . நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஞானம் சேகர்.

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...