சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Thursday, January 31, 2013

சிக்கன் ப்ரையில் நடக்கும் முறைகேடுகள்

காக்கா பிரியாணி துன்னா காக்கா குரல்வராம உன்னிக்கிருஷ்ணன் கொரலா வரும்? என்பது ரன் படத்தில் விவேக் நடிக்கும் ஒரு நகைச்சுவை காட்சி, அதே போன்ற ஆனால் உண்மையான அதிர்ச்சியான தகவல்கள் தான் இது, நீங்கள் சாப்பிடுவது கெட்டுப்போன கோழியாக கூட இருக்கலாம்.

அடிக்கடி ஒரு செய்தி சென்னை பத்திரிக்கைகளில் வருகிறது, நாம் திரைப்பட பகுதி மற்றும் சோசியத்தை\ஆண்மீகத்தை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாத காரணத்தால் இந்த செய்தி நமது கண்களில் படுவதில்லை, அது “கெட்டுப்போன மாமிசம் எழும்பூர் ரெயில் நிலையத்தில் கைப்பாற்றப்பட்டது,


 மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை”, பிறகு மீண்டும் சில நாள் கழித்து மற்றோரு செய்தி வரும் இது தொடர்கதை, ரெயிலில் ஏற்றும் போது என்ன செய்தார்கள் பதில் இல்லை? கெட்டுப்போன மாமிசம் என்று தகவல் சொன்னவர்கள் யார் தகவல் இல்லை, ரெயில்வே நிர்வாகம் என்ன செய்கிறது தகவல் இல்லை, சுமார் 70 சதவீத மக்கள் உணவாக பயன்படுத்தும் மாமிசத்தின் மீதான அக்கரை இது கப்பம் சரியாக வராத நேரத்தில் பிலிம் காட்ட இது போன்ற ரெய்டுகள் அதாவது ஜஸ்ட் வார்னிங் அடுத்த முறை ஒழுங்கா கட்டிடு.

1- மாட்டு மாமிசம் சாப்பிட மாட்டேன் என்று நடிப்பவர்களும் தங்களை அறியாமலேயே மாட்டு மாமிசம் உண்கின்றனர். “முக்கியமாக பள்ளிக்கூட மற்றும் மருந்து கடைகளை விட அதிகம் இருக்கும் சாராய கடைகளின் முன்பு”,

2. கடைகாரர்கள் ஒரு கோழி என்ன விலைக்கு வாங்குகிறார்கள் என்று பார்த்தால் 5 ரூ முதல் 8 ரூ வரை தான் ஆம் கோழிப்பன்னைகளில் நெரிசலில் சிக்கி இறந்து போன கோழிகள், வண்டி வரும் வழியில் இறந்த கோழிகள், நோய்வாய்ப்பட்டு இறந்த கோழிகள், நாய், இதர உயிரினம் (பாம்பை தவிர) கடித்து செத்துப்போன கோழிகள், மற்றும் சில வித்தியசமான நோய்கள் வந்து உடல் வீங்கி நிலையில் உள்ள கோழிகள் போன்றவைகளுக்கு தமிழ் நாட்டில் கிராக்கி அதிகம் ஆம் டாஸ்மார்க் என்னும் கடை வந்த காரணத்தால் எங்கும் அசைவ கடைகள் பெட்டிக்கடைகளை விட அதிகம் திறந்து விட்டன.

இந்த கடைகளை நடத்துபவர்கள் ஒருநாளைக்கு சிறப்பு கவனிப்பாக ரூ 500 முதல் 1000 வரை கொடுக்க வேண்டியுள்ளது, அதன் பிறகு பொருட்கள் வாங்க, வீட்டு செலவு தண்ணீர் :0 என பார்த்தால் 3000 சம்பாதித்தால் தான் அடுத்த நாள் கடை திறக்க முடியும் ஒரு கிலோ சிக்கன் அதிக பட்சம் 100 கொடுத்து வாங்கினால் அடுத்த வாரம் ஊருக்கு போய் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மண் சட்டி சுமக்கவேண்டியதுதான், 

இதை சமாளிக்க ஒரே வழி எதை எதை குறைந்த விலைக்கு வாங்க முடியுமோ அதை வாங்குவது, அரிசி இலவச அரிசி வாங்கி குறைந்த விலைக்கு விற்பவர்களுக்கு பஞ்சமில்லை, காய்கறி கொயம்பேட்டில் கழிவுகழுக்கு பஞ்சமில்லை, அதைக்கூட கூறு போட்டு விற்பார்கள், அதை வாங்க நடைபாதை வியாபாரக்கூட்டம் பெருகும், அடுத்து முக்கிய லாபம் தரும் இறைச்சி(கோழி பொரித்தது) அதாவது 4 துண்டு 70 ரூ 3 கோழி துண்டு 1 பெயர் தெரியாத விலங்கு கறிதுண்டு (சோடா போட்டு ஊறவைத்து சில கோழி எலும்புகளை முக்கியமாக இறகு போன்ற பாகங்களை வெட்டி எறியும் போது அதை பொறுக்கி அதில் உள்ள சின்ன எலும்புகள் சேகரித்து இந்த கறித்துண்டங்களில் சொறுகப்படும். 

குடிகாரர்களுக்கும் சரி மற்றவகளுக்கும் சரி கறி என்ன வென்று இருந்தாலும் பரவாயில்லை கோழி எலும்பு போன்று ஏதாவது இருக்கவேண்டும், சில மரக்குச்சிகள் கூட பயன்படுத்து கின்றன(இங்கு இருப்பதாக தெரியவில்லை ஆனால் டில்லி போன்ற நகரங்களில் உள்ள நடைபாதை உணவகங்களில் கரியின் ஊடாக ஒருவகை மரக்குச்சிகள் சொறுகி விடுகிறார்கள், எலும்பு போல இருக்கும் முக்கியமான பொறிக்கும் வகை கறிகளில் இவை இருக்கும் ஏனென்றால் மேலும் இறுகி உண்மையான எலும்பு போல் ஆகிவிடும்)(சென்னையில் இது இருப்பது போல் தெரியவில்லை)

அடுத்து கெட்டுப்போன கோழிகளின் உடல் கொழகொழப்பு தெரியாமல் இருக்க படிகார கரைசல் தெளிப்பு ஆமாம் எந்த அளவு கொழகொழப்பான மாமிசமாக இருந்தாலும் 5ரூ படிகார கட்டி வாங்கி தண்ணீரில் கரைத்து தெளித்து பாருங்கள் சில நிமிடங்களில் பிரஸ் சிக்கன் ரெடி, இவை வேகுவதிலும் அதிக நேரம் பிடிப்பதில்லை சாப்பிடும் போது பஞ்சுமிட்டாய் போல் கரைந்துவிடுகிறது, ஆகையால் கூட்டம் ஆடிக்கழிவு போல் கடைகளில் அடித்து பிடித்து சாப்பிடுவார்கள்.

இன்னும் பல எழுதமுடியும் மற்றொன்று முக்கிய செய்தி இது அனைவருக்கும் தெரியும், ஆனால் ஏன் வெளியெ சொல்வதில்லை அதுதான் தமிழரின் அற்புத குணங்களில் ஒன்று முகநூலிலும் இதர இணையத்திலும் தமிழனின் பெருமையை பார் என்று பொய்களை அள்ளி அள்ளி வீசுவான், அந்த பொய்யை இரசிக்க ஆயிரம் சேர்களும் லைக்குகளும், 

ஆனால் உண்மையை பகிரமாட்டான் ஏன் தெரியுமா. அடுத்தவன் எக்கேடு கெட்டுப்போகட்டும் நான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் (பேருந்தில் நிற்க முடியாத நிலையில் ஒரு முதியவர் இருக்கும் போது இரண்டு வயது குழந்தையை சீட்டில் உட்கார வைத்து இடம் கொடுக்க கூறினால் குழந்தைக்கு காய்ச்சலுங்க பெரியவர் என்ன அவசர வேலையாகவா போகிறார்) காலியாக வரும் பஸ்ஸில் ஏறவேன்டியது தானே என்று சொல்லும்............................

இதை(கெட்டுப்போன மாமிசம்) அரசு எந்த அளவிற்கு தடுக்க முடியும் என்றால் முடியாத காரியம் தான் ஊறிப்போன லஞ்ச பரிமாற்றம். அரசு திட்டமிட்டால் கீழே வர வர காணாமல் போகும். ஒரு நாள் நடவடிக்கை எடுத்தால் இரண்டு நாள் கழித்து மீண்டும் வந்து விடும் நாம் தான் இதை தடுத்து நிறுத்த முடியும் எப்படி உண்மையை எடுத்துக்கூறுங்கள் பலருக்கு தெரிவியுங்கள் கூட்டம் குறையும் போது தன்னாலேயே நல்ல பொருளை வாங்கி விற்க ஆரம்பிப்பார்கள், அப்போதுஅவர்களுக்கு துணிவு வரும் லஞ்சம் வாங்க வருபவர்களுக்கு பயப்பட தேவையில்லாமல் போகும் நல்ல மாற்றம் வரும்

நன்றி -செந்தமிழ் நாடெனும்

டிஸ்கி : நெட்டில் படித்தேன் பிடித்திருந்தது. பகிர்ந்து கொள்கிறேன். இதில் ஒரு வரி கூட நான் டைப்பவில்லை.
 

14 comments:

  1. எங்க ஊருக்கு நீங்கள் வரும் போது, நண்பரின் கோழிப்பண்ணைக்கு கூட்டிச் செல்கிறேன்... அதன் வளர்ப்பு முறையை அறிந்தால், இனிமேல் No Chicken...

    ReplyDelete
    Replies
    1. அப்படினா ஒரு முறை பார்த்திடுவோம். நன்றி தனபாலன்

      Delete
  2. Nan hotel la sapdurathu chicken mattum than athukum aappu vechachi inni only Veg than sapdanum pola . Inni vittuku nanea check panni vvanguna chicken thavira vear yeathaum samaika vidamatten. Pagirvukku nandri

    ReplyDelete
    Replies
    1. தம்பி, நீ தமிழ்ல டைப் அடிச்சா தப்பு கண்டுபுடிச்சிடுவேன்னு, இங்கிலீஷ்ல அடிச்சி தப்பிச்சிக்கிறியா.

      Delete
    2. கத்துக்கோ ராசா, நீ இன்னும் இணையத்துல போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.

      Delete
  3. இதுக்காக தான் நான் அசைவம் பக்கம் போறதே இல்ல ....மனுஷகறி மட்டும் தான் ...அஹம் பிரம்மாஸ்மி .....ஹீ ஹீ

    ReplyDelete
    Replies
    1. சைவத்துல நடக்கிற கூத்தை தனி பதிவா போடுறேன். பிறகு சைவத்துக்கு வக்காலத்து வாங்குங்கள் பார்க்கலாம்.

      Delete
  4. எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. இனிமேலாவது கவனமாக இருக்கணும்.

      Delete
  5. இந்தியாவில் எங்கும் எதிலும் கலப்படம். நீங்க சொல்றதை பார்த்த கப்பம் கட்டுவதனால் மட்டுமே இப்படி கலப்படம் நடக்கிறதோ என்று தோன்றுகிறது

    ReplyDelete
    Replies
    1. லஞ்சம் நம் ரத்தத்தோட ஊறிப் போயிடுச்சி. என்ன செய்வது வரவர இந்தியனுக்கு எருமைத் தோல் ஆகிக் கொண்டு இருக்கிறது.

      Delete
  6. உண்மையிலேயே அதிர்ச்சியான தகவல். நல்ல மாமிசத்தை எப்படி கண்டுபிடிப்பது என்று தெரிந்தால் பகிரவும்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக தருகிறேன் நண்பரே.

      Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...