சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Wednesday, January 23, 2013

பெரியமேடு பிரியாணியில் தில்லுமுல்லு நடக்கிறதா?

ரொம்ப வருடங்களாக அதாவது கிட்டத்தட்ட 15 வருடங்களாக சென்னையில் பிரியாணி என்றால் என் முதல் சாய்ஸ் பெரியமேடு பிரியாணி தான். அதன் சுவையை அடிச்சிக்கவே முடியாது. இன்றும் கூட வெறும் 90 ரூபாய்க்கு நான்கு பெரிய பீஸ் மட்டனுடன் பிரியாணி கொடுக்கிறார்கள்.எப்பொழுது சென்ட்ரல் பக்கம் வந்தாலும் வேலை முடிந்ததும் நடந்து வந்தாவது பெரியமேட்டில் பிரியாணி தின்று விட்டு பிறகு நடந்தே சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்து ரயிலில் செல்வது வழக்கமாக வைத்திருந்தேன்.

நண்பர்கள் ஒன்று கூடி கெட்டூகெதர் பார்ட்டி குடும்பத்துடன் கொண்டாடினால் கூட விருந்துக்கு கிலோக்கணக்கில் இங்கிருந்து பிரியாணி வாங்கி கொண்டு போய் விழாவை சிறப்பிப்பது வழக்கம்.

நமது பதிவுலக நண்பர்கள் பலபேர் கூட பெரியமேடு பிரியாணி கடையின் வழக்கமான கஸ்டமர்களே. எந்தவித சர்ச்சையும் இன்றி இத்தனை நாட்கள் சென்று கொண்டிருந்த இந்த விஷயம் இரண்டு நாட்களாக போட்டு மனதை வருத்தப்பட வைத்துக் கொண்டு இருக்கிறது.என்னுடைய நண்பனின் மாமா ஒருவர் விஜயவாடாவில் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகின்றார். திங்களன்று நண்பன் வீட்டில் அவரை பார்த்து அளவளாவிக் கொண்டு இருந்தேன். பேச்சு பல இடங்களில் சுற்றித் திரிந்து பிரியாணிக்கு வந்தது.

நான் பெரியமேடு பிரியாணியைப் பற்றி அவரிடம் பெருமையாக கூற அவரோ 90 ரூபாய்க்கு நான்கு துண்டு மட்டனுடன் பிரியாணி வாய்ப்பே இல்லையென்றும் நான் வேண்டுமானால் சாப்பிட்டுப் பார்த்து சொல்வதாக கூறினார்.

அவரை அழைத்துக் கொண்டு நான் வழக்கமாக பிரியாணி சாப்பிடும் கடைக்கு அழைத்துச் சென்றேன். அந்தக் கடை பெரியமேடு மசூதியின் எதிர்ப்புறம் உள்ள சந்தில் முதல்மாடியில் உள்ளது. தரைத்தளத்தில் லாட்ஜ் மற்றும் பார்சல் கட்டித்தருவது உண்டு.

எப்பொழுதும் கூட்டம் நிறைந்து காணப்படும் அந்த இடத்திற்கு நாங்கள் சென்று சாப்பிட அமர்ந்தோம். பிரியாணி இலையில் பறிமாறப்பட்டது. மட்டன் துண்டுகளை கையால் சோதித்தும் சாப்பிட்டும் பார்த்தவர் இது மட்டனே கிடையாது வீல் என்று கூறினார்.

வீல் என்ற வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை. பிறகு விளக்கம் வெளியில் வந்து கேட்ட பிறகு தான் சொன்னார். மாட்டுக் கன்றுக்குட்டி கறி தான் ஆங்கிலத்தில் வீல் என்று கூறினார்.எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இது வழக்கமாக விஜயவாடாவில் நடைபெறும் ஒன்று தான் என்று சொன்னார். எலும்புத்துண்டுகள் மட்டும் மட்டனுடையது என்றும் கறித்துண்டுகள் எல்லாம் வீல் என்றும் அவை தெரியா வண்ணம் கலக்கப்படும் என்றும் சொன்னார்.

சரி இன்றும் மற்றொரு கடையில் சோதித்து பார்த்து விடலாம் என்று அதே சந்தில் முன்சொன்ன கடைக்கு முன்பு உள்ள மற்றொரு கடையில் இன்று சாப்பிட்டோம். அதையும் சாப்பிட்டுப் பார்த்து வீல் கறி என்றே சொன்னார்.

சொன்னவர் தனது வேலையை முடித்து விட்டு சத்தமில்லாமல் விஜயவாடாவுக்கு ரயிலேறி போய் விட்டார். கேள்விப்பட்ட நாங்கள் தான் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு உள்ளோம். காலம்காலமாக சாப்பிட்டு வந்த கடையில் இந்தளவுக்கு டகால்டி நடக்கிறதா என்று தெரியவில்லை.

ஒரு வேளை அவர் சொன்னது பொய்யாகக் கூட இருக்கலாம் ஆனால் உண்மையாக இருந்தால் இது ஏமாற்று வேலையல்லவா. நண்பர்களே தங்களுக்கு இந்த அனுபவம் இருந்தால் பகிருங்கள். நான் சொன்னதில் தவறு இருப்பினும் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன்.

எது உண்மை என்று புரியாமல் மண்டை குழம்பி கிடக்கும்


ஆரூர் மூனா செந்தில்

38 comments:

 1. எதையெல்லாம் கலக்குறாங்க பாவிகள்.பொய்சொல்லி விற்கக்கூடாது.தகவலுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணே.

   Delete
 2. வீல்...இது நான் அலறுகிற சத்தம்..
  மட்டன் பிரியாணி என்று சொல்லி பெரியாடு பிரியாணி போட்டு இருக்காங்க..எதற்கும் நம்ம ஆபிசர் கான்டாக்ட் பண்ணவும்.

  ReplyDelete
  Replies
  1. மச்சி இது சென்னை, இங்க அரசியல் தான் அதிகம்.

   Delete
 3. its true senthil, i have seen (calf beef/ weel) it in vijayawada and my friend already exposed it to me about periyamet briyani (AKBAR MESS Isn't it) ..

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி ரஞ்சித்.

   Delete
 4. did you tried E சேட் briyani / Tambaram .. its the topper to concern ..

  ReplyDelete
  Replies
  1. முயற்சிக்கிறேன் நண்பா.

   Delete
 5. சென்னையில் மட்டன் கலப்படம் சர்வ சாதாரணம்.இதுநாள் வரை வித்யாசம் தெரியாமலே சாப்பிட்டுக்கொண்டு வந்திருக்கீர்.பீப் பிரியாணி கோவையில் சகஜம்.

  ReplyDelete
  Replies
  1. பீப் பிரியாணி சென்னையிலும் சகஜம். நான் கூட தாசமக்கானில் நிறைய கடைகளில் சாப்பிட்டு இருக்கிறேன். நான் சொல்ல வர்றது போர்ஜரி பற்றி.

   Delete
 6. நிச்சயம் அது மாட்டுகறிதான். கோயம்பேட்டில் உள்ள சில கடைகளில்கூட இந்த கூத்துதான்.

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி நண்பரே.

   Delete
 7. அது மட்டுமல்ல,கெட்டுப்போன ்மாமிசத்தை வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து உணவகங்களில் வழங்கி வருகின்றனர்.கெட்டுப்போன இறைச்சியை கண்டு பிடித்து காவல்துறை அதனை அழித்து வருகிறது என்பது அவ்வப்பொழுது படிக்கும் பத்திரிகை செய்தி.

  ReplyDelete
  Replies
  1. மேற்தகவலுக்கு நன்றி ஸாதிகா.

   Delete
 8. மூனா,

  இது வழக்கமான ஒன்று தான் , வட சென்னைய நன்கு அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும். மேலும் மாட்டுக்கொழிப்பினைத்தான் நெய்க்கு பதில் பய்ன்ப்படுத்துவார்கள்.

  அப்புறம் கழிவு மாமிசம் எனப்படும் , மலிவு விலை கறித்தான் எல்லாக்கடையிலும்.

  சிக்கனில் முட்டை கோழியை தான் பயன்ப்படுத்துவார்கள்.

  முட்டைக்கோழி என்பது நிறைய முட்டைப்போட்டு வயதானக்கோழி,இனிமேல் முட்டைப்போடாது என்ற நிலையில் அழிக்க வேண்டியது ஆனால் அதனையும் கறியாக விற்கிறார்கள். ஒரு கிலோ வெறும் 35 ரூவா தான். இதற்கென மொத்தக்கடைகள் உண்டு. சிறிய உணவகங்களுக்கு நேரடியாக சப்ளை செய்வார்கள்.

  பெரும்பாலும் இதெல்லாம் ஆந்திராவில் இருந்து டிரெயினில் காலையில் சென்ட்ரல் வரும், விசாரித்துப்பாருங்கள் சொல்வார்கள்.

  ReplyDelete
  Replies
  1. அண்ணே நீங்க சீனியர்ணே.

   Delete
  2. நன்றி நண்பா.

   Delete
 9. Anna vavaal annan sonnathuthan correct daily early morning centralku varum trainlathan calf flush andrala irunthu varuthu
  athu fullah periyamedu kadaikalukku mattumthan supply..... ineme emara vendaamnae.......

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி மாணிக்.

   Delete
 10. நாய் கரி இல்லன்னு சந்தோஷ படுங்கபா

  ReplyDelete
  Replies
  1. அது என்னமோ சரிதான் சதீஷ்.

   Delete
 11. ஒரு காலத்தில் பெரியமேடு பிரியாணிதான் சவுகார்பேட்டை கடை வீதிகளில் பெரும்பான்மையோரின் மதிய உணவு ..! பின்னர் உண்மை அதாவது கன்றுக்குட்டியின் கறி என தெரியவந்த பிறகு அதனை யாரும் சீண்டுவதில்லை.....! அது கன்றுக்குட்டி கறி என்பது உண்மைதான்...!

  ReplyDelete
  Replies
  1. மேலதிக தகவலுக்கு நன்றி அமுதன்

   Delete
 12. செந்தில், இதைப் பற்றி முன்பே எழுதியுள்ளேன்...காக்கா கடைகளில் கிடைக்கும் மட்டன் சமூசா பற்றி.

  கொஞ்சம் துக்குணூண்டு கறியை எடுத்துக் கொண்டு வேப்பேரியில் உள்ள Vet. College-க்கு கொண்டு போனா பார்த்து படிச்சு எந்த மிருகத்தோட cell என்று சொல்லிவிடுவார்கள்...!

  ReplyDelete
  Replies
  1. அப்படியா, படித்து விடுகிறேன் நண்பா.

   Delete
 13. நான் பெரியமேடு ‘யாகூப் மெஸ்’ன் ரெகுலர் வாடிக்கையாளராக இருந்தேன். ஏரியா நண்பர்கள் சொன்ன போது கூட நம்பாமல் மட்டன் தான் என உறுதியாக இருந்தேன். ஆனால், ஒரு நாள் நண்பருடைய வீட்டிற்கு பார்சல் எடுத்துப்போய் லேட்டாக சாப்பிட்ட போது தான் கரியின் சுவையிலும் வாசனையிலும் வித்தியாசம் உணர முடிந்தது. நல்ல மட்டன் பிரியாணி ஒரு நாள் ஃப்ரிட்ஜில் வைத்திருந்து சாப்பிட்டால் கூட டேஸ்ட் மாறாது. ஆனால், இது 2 மணி நேரத்திலேயே சாயம் வெளுத்து விட்டது.

  ஆனால், நான் இன்னமும் கூட எப்போதாவது அங்கே போய் சாப்பிட்டு கொண்டு தான் இருக்கிறேன், என்ன அது பீஃப் தான் என்பதை உணர்ந்தே சாபிடுகிறேன். அது தான் வித்தியாசம்.

  ReplyDelete
  Replies
  1. அதாங்க தேசாந்திரி. சொல்லிட்டு செஞ்சா மனச மாத்திக்கிட்டு சாப்பிடலாம். ஏமாத்திட்டாங்கன்னு தெரியும் போது தான் அதிர்ச்சியா இருந்தது.

   Delete
 14. நான் சைவத்துக்கு மாறி 10 வருஷத்துக்கு மேல இருக்கும். அதனால இதைப் பத்தி கவலை இல்லை. ஆனா வெஜிடேரியன் ஹோட்டல்ல என்னென்ன ஏமாத்து வேலை நடக்குதோ?

  ReplyDelete
  Replies
  1. நல்ல விஷயம் தாங்க சரண். நமக்கு தான் முடியமாட்டேங்குது.

   Delete
 15. Senthil.,Yes, It's True..I checked with one of my friend..He proved that also. I used to go periyamedu weekly once, but after heard my friend feedback I put end card to periyamedu priyani.
  But, it's too bad. Esp.."AK**R Mess"

  ReplyDelete
  Replies
  1. நன்றி மோகன், மேலே நான் குறிப்பிட்டு இருப்பதும் அந்த ஹோட்டல் தான்.

   Delete
 16. கொஞ்சம் ரிலாக்ஸ் ப்ளீஸ், ஒரு ஜோக் சொல்கிறேன்.

  இம்மாதிரித்தான் சிக்கனுடன் பீஃபை கலப்படம் செய்தவன் நீதிபதியிடம் தான் இரண்டையும் சரிசமமாகக் கலந்து விற்றதாகக் கூறினான். அது எங்ஙனம் எனக் கேட்டால், ஒரு மாட்டுக்கு ஒரு கோழி என்றான்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
  Replies
  1. நன்றி டோண்டு

   Delete
 17. என்னிடமும் என் நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

  ReplyDelete
 18. அண்ணா,பேசாம சைவத்துக்கு மாறிடலாமா?

  ReplyDelete
 19. Hi boss,

  This mess name is KHAJA mess, i live near by few streets only. I am a regular until few years ago, when my father told that he saw the flesh coming from andhra in a lorry at early morning times everyday. I didn't believe it initially because of the good taste, and i myself saw it one day. THIs is real that most of the mess in periamet using these...

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...