இந்தியா முழுவதும் உள்ள மீட்டர்கேஜ் ரயில்பாதைகள் ப்ராட்கேஜாக மாற்றப்பட்டு வருகின்றன. கிட்டத்த அனைத்து பாதைகளும் மாற்றப்பட்டு விட்ட நிலையில் திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டைக்கு இந்தியாவின் கடைசி மீட்டர்கேஜ் ரயில்கள் சென்று கொண்டிருந்தன.
கடந்த மாதம் அவையும் நிறுத்தப்பட்டு ப்ராட்கேஜாக மாற்ற வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இதுநாள் வரை ஒடிக் கொண்டு இருந்த ரயில் பெட்டிகள் மற்றும் இன்ஜின்கள் மற்றொரு ரயிலில் ஏற்றப்பட்டு திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்தியாவின் கட்டேக்கடேசியான உபயோகத்தில் இருந்த மீட்டர்கேஜ் இன்ஜின்கள் இவை தான். திருவாரூரில் இருந்த தம்பி தியாகேசன் செல்லும் வழியில் நின்று கொண்டிருந்த இன்ஜின்களை போட்டோ எடுத்து அனுப்பினார். அனுப்பிய தியாகேசனுக்கு நன்றிகள் பல.
ஹ்ம்ம் சிறு வயதில் நிலக்கரி என்ஜினில் பயணித்த நியாபகம் வருகிறது ..
ReplyDeleteநிறுத்தத்தில் பெண்கள் என்ஜினில் இருந்து வெளியேறும் சூடான நீரை பிடிப்பதற்கு காத்திருப்பார்கள் .
நல்ல பதிவு .
நன்றி செல்வின்
Deleteகொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது :( staySmile''என் பையன் பர்ஸ்ட் க்ளாசில பாஸ் பண்ணிட்டான்.''
ReplyDelete'அப்படியா சந்தோசம்.அடுத்து என்ன படிக்க வைக்கப் போறீங்க?'
'' வேறென்ன....செகண்ட் க்ளாஸ்தான்.''
இங்கே பிரான்சில் அப்படிப்பட்ட பழைய இஞ்சின்
ReplyDeleteரயில் பெட்டிவை ஓர் ஊர் துவங்கும் இடத்தில் (ஆதாவது நம்மூரில் சிலை வைப்பது போல்) வைத்து விடுகிறார்கள்.
அதைப் பார்க்கும் பொழுதும் அழகாகத் தான் இருக்கிறது.
நம் முன்னோர்கள் பயன்படுத்திய விதம் என்று
இன்றைய தலைமுறைகள் அறிந்து கொள்ள முடிகிறது.
நம் நாட்டில் இதை என்ன செய்வார்கள்?
பகிர்விற்கு நன்றி.