பாலா படங்களுக்கு என்று ஒரு பார்முலா இருக்கும். படத்தில் மிக முக்கியமான ஒருவர் இறந்து விடுவார். அதனால் கோவப்படும் மற்றொருவர் வில்லனை மிருகவதை சட்டத்தில் கைது செய்யலாம் என்று சொல்லும் அளவுக்கு அடித்து நொறுக்கி படத்தை முடித்து வைப்பார்.அவன் இவன் படம் பார்த்த போது பக் என்று இருந்தது, பாலா டொக்கு ஆயிட்ட மாதிரி இருந்தது.
ஆனால் என்னுடைய எல்லா நெகட்டிவ் எண்ணத்தையும் அடித்து நொறுக்கி மீண்டும் தான் ஒரு சிங்கம் என்பதை சந்தேகமில்லாமல் நிரூபித்து இருக்கிறார். மீண்டும் தைரியமாக சொல்வேன் நான் பாலாவின் ரசிகன் என்பதை.
பொதுவாக தமிழ்ப்படத்தின் இலக்கணம் என்ன? நல்லவனை கெட்டவன் கொடுமை செய்வான். கெட்டவனை வீழ்த்தி நல்லவன் நீதியை நிலைநாட்டுவான். பார்ப்பவனுக்கும் அப்பொழுது தான் ஒரு படம் பார்த்த திருப்தி இருக்கும். அந்த இலக்கணத்தை வீழ்த்தி இருக்கிறார் பாலா.
சந்தேகமில்லாமல் இது ஒரு ஆவணப்படம் தான். நூறு வருடங்களுக்கு முன்பு தமிழகம் குறிப்பாக தென் தமிழகம் எப்படி இருக்கும் என இந்த படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். அந்த குடிசையில் பனைஓலை வேய்ந்திருப்பதில் கூட நேர்த்தி இருக்கிறது. இந்த கோயில் திருமண சடங்குகள், சாப்பாட்டு பந்தி என எல்லாமே நம்மை சுதந்திரத்திற்கு முந்தைய தமிழகத்திற்கு அழைத்து செல்கிறது.
படத்தின் கதையை தைரியமாக வெளியில் சொல்லலாம், இது சஸ்பென்ஸ் படமல்ல, தமிழனின் ஆவணப்படம்.
சாலூர் என்ற கிராமத்தில் படம் துவங்குகிறது. ஒட்டுபொறுக்கி என்று ஊரார்களால் அழைக்கப்படும் அதர்வா வெள்ளந்தியான பையன். ஊரில் வருமானமில்லாமல் தண்டோரா அதற்கு கூலியான அரிசி பிச்சை எடுத்து அதில் தன் பாட்டியுடன் வாழ்பவன். அவனை விரட்டி விரட்டி காதலிக்கும் அங்கம்மாவாக வேதிகா. ஒரு தனிமையில் சலனப்பட்டு ஒன்று சேர்கிறார்கள்.
அந்த ஊர்ப்பக்கம் வந்த கங்காணி ஒருவன் சாலூர் மக்களை எஸ்டேட் கூலி வேலைக்கு அதிக சம்பளம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி அழைத்து செல்கிறான்.வேதிகாவை திருமணம் செய்ய பணம் வேண்டி அதர்வாவும் பயணிக்கிறார். 48 நாட்களுக்கு மேல் நடந்தே எஸ்டேட்டை அடைகிறார்கள்.
அங்கு சென்ற பின்பு தான் அது கொத்தடிமை வேலை என்று தெரிகிறது. அங்கு கைக்குழந்தையுடன் இருக்கும் தன்ஷிகாவை சந்திக்கிறான். எவ்வளவு தான் சம்பாதித்தாலும் ஏதாவது காரணம் சொல்லி கூலியாட்களை வெளியில் அனுப்ப மறுக்கிறான் கங்காணி.
ஊரில் அங்கம்மா கர்ப்பமாக இருப்பதை கடிதம் மூலம் அறியும் அதர்வா அங்கிருந்து தப்பிச் செல்ல முயல்கிறார். அவரைப்பிடிக்கும் கங்காணி அவரது பின்னங்கால் நரம்பை அறுத்து விடுகிறான்.
சில வருங்களுக்கு பிறகு அந்த பகுதியில் தொற்று வியாதி பரவி ஏராளமான மக்கள் இறக்கிறார். தன்ஷிகாவும் இறக்க அவரது மகளை தன்னுடன் வைத்துக் கொண்டு காப்பாற்றுகிறார்.
மேலும் பல வருடங்கள் கழிந்த பின்பு அதர்வாவைத் தேடி வேதிகாவும் கொத்தடிமையாக அந்த எஸ்டேட்டுக்கு வருகிறார். படம் முடிகிறது.
முதல் காட்சியில் வாயை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு சற்று குழப்பத் தமிழில் நியாயமாரே என்று கத்தும் போது நான் பயந்தேன். படம் முழுக்கவே இப்படித்தான் வாயை வைத்துக் கொண்டு பேசுவாரோ என்று. ஆனால் அதன் பிறகு அடிப்பொளி ஆக்கியிருக்கிறார் அதர்வா.
அப்பாவியாக சாப்பாட்டு பந்தியில் தனக்கு மட்டும் சாப்பாடு வைக்காத போது மருகி அழும் போதும், திருமணம் செய்யக் கூடாது என நடக்கும் பஞ்சாயத்தில் வேதிகாவுடன் கண்களால் பேசிக் கொண்டே வெட்கப்படும் போதும், க்ளைமாக்ஸ் காட்சியில் குன்றின் உச்சியில் நின்று கதறும் போதும் நல்ல நடிகராக மிளிர்கிறார்.
வேதிகாவா இது முனி படத்தில் பார்த்த போது வசனம் கூட சரியாக ப்ராம்ட் செய்யத் தெரியாமல் இருந்தார். இந்த படத்தில் அசத்தியிருக்கிறார். முகபாவனைகள் எனக்கு பிடித்திருந்தது.
தன்ஷிகா கதாபாத்திரம் இடைவேளைக்கு பின்பு தான் வருகிறது. ஆனாலும் படத்தின் சிறந்த நடிப்பில் முதல் வரிசையில் வருகிறார். அவருக்கு இயல்பாகவே சற்று முரட்டு குதிரை தோற்றம். அதற்கேற்ற கதாபாத்திரம் அமைந்ததால் இயல்பாகவே நடித்திருக்கிறார்.
கங்காணியாக வரும் ஜெர்ரி வில்லன் பாத்திரத்தை கண்முன் நிறுத்துகிறார்.
கிறிஸ்துவ மதம் எப்படி அப்பாவி மக்களிடம் பரவியது என்பது தெரியும் போது நம் மக்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்று எனக்குள் கோவம் பரவியது தான் அந்த காட்சிக்கான வெற்றி.
பாடல்கள் இதற்கு முன்பு கேட்டதேயில்லை, இப்போது படத்துடன் பார்க்கும் போது நன்றாக இருந்தது. கதையோட்டத்துடன் கூடிய மாண்டேஜ் பாடல்கள் கேட்க அருமையாக இருந்தது.
மக்களே தவற விடக்கூடாத படம் இது. தன் மீதான விமர்சனங்களையெல்லாம் உதறித் தள்ளி விட்டு தான் டொக்கு ஆகவில்லை என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படங்களுக்காக வரிசையில் இந்த படத்திற்கு ஒரு முக்கிய இடம் உண்டு.
இந்த படத்திற்கான வெற்றியே படம் முடிந்ததும் பார்வையாளர்களிடம் இருந்த மெளனம் தான். என்னால் இன்னும் சில நாட்களுக்கு படத்தை விட்டு வெளியில் வர முடியாது.
படம் பார்த்த ஒவ்வொருவருக்கும் தேநீர் அருந்தும் போது நம் முன்னோர்கள் இந்த தேயிலை தோட்டத்திற்காக சிந்திய ரத்தங்கள் நினைவுக்கு வரும்.
பாலா பாலா தான்.
ஆரூர் மூனா செந்தில்

"படம் பார்த்த ஒவ்வொருவருக்கும் தேநீர் அருந்தும் போது நம் முன்னோர்கள் இந்த தேயிலை தோட்டத்திற்காக சிந்திய ரத்தங்கள் நினைவுக்கு வரும். "
ReplyDeleteஎன்ன தம்பி
எல்லோரும் இதையே சொல்றீங்க . . .
பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் போட்டோவை
அதுக்குள்ள மறந்துட்டு . . .
பரதேசி வத்திகுச்சி டாஸ்மாக்கு ipl ன்னு
தமிழன் பிசி யா இருக்குறான
அய்யா நாமெல்லாம் எதனைப் பற்றியும் வருந்தி விட்டு மறந்து போற இனமுங்க. அடுத்த தேர்தலில் கலைஞரை கூட முதல்வராக்கும் அளவுக்கு ஞாபக மறதி கூட்டமுங்க.
Deleteட்ரைலர் பாத்து கொஞ்சம் பயந்து போய் இருந்தேன்.. எங்க தியேட்டர் ல அடிப்பங்கலோனு..
ReplyDeleteநானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் அழ வைத்து விட்டார்கள்
Deleteவிமர்சனம் அருமை
ReplyDelete- பின்னூட்டப் புலி
நன்றி பின்னூட்டப் புலி
Deleteஅருமையான விமர்சனம் தல..
ReplyDeleteநேற்றே படம் இங்கு ரிலீஸ் ஆகிவிட்டது..
இன்னும் என்னால் உறங்க முடியவில்லை அந்த படம் பார்த்தபிறகு.
கிளைமாக்ஸ் காட்சியில் பாலா நெஞ்சில் இடியயே இறக்கியிருப்பார்..
கீழே எனது விமர்சனம் உள்ளது,
பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லவும்.
http://dohatalkies.blogspot.com/2013/03/blog-post.html
தங்களது விமர்சனம் படித்து விட்டேன். இப்பொழுது பின்னூட்டம் இடுகிறேன். தங்களது பதிவில் உள்ள விமர்சனத்தை அப்படியே சிபி செந்தில் போட்டு இருக்காரே கவனித்தீர்களா
Deleteஅப்படியா தல?
Deleteஇருங்க பார்த்துட்டு வரேன்.
என்ன அங்க போய் பொசுக்குன்னு நன்றி சொல்லிட்டு வந்துட்டீங்க. இது அப்பட்டமான திருட்டுங்க. நான் இப்பதான் கொஞ்சம் காரசாரமா கேள்வி கேட்டுட்டு வந்துருக்கேன்.
Deleteஇல்லை தல..
Deleteஇது வஞ்சபுகழ்ச்சி அணி..
நன்றி சொன்னாவாவது அவருக்கு உரைக்கும் என்று தான் போட்டேன்.
அவருக்கு உரைக்காது
Deleteஅவர் ஹிட்சை அதிகரிக்க போட்டு இருக்கிறார் போல தல.
Deleteநீங்கள் போட்ட பின்னூட்டம் மிகவும் உண்மை தான்.
உங்கள் பேராதவிற்கு மிக்க நன்றி தல.
இத்தனைக்கும் சிபி நம்ம நண்பர் தான். இருந்தாலும் அவர் செய்தது தப்புன்னு தோணிச்சி, அதான் கொஞ்சம் கண்டிச்சிட்டு வந்தேன். நன்றி நண்பரே.
Deleteமீண்டும் நன்றி தல...
Deleteநீங்கள் சொல்வது சரி தான்...
அதனால் தான் நானும் எப்படி பின்னோட்டம் போடுவது என்று தெரியாமல் குழம்பிவிட்டேன்....
நச்..விமர்சனம்...படம் பார்க்கப்போகிறேன்....இன்று....
ReplyDeleteபாருங்கள், நீங்களும் அந்த அனுபவத்தை அடையுங்கள்
Deleteஞாயிறு அன்று செல்கிறேன்... நல்ல விமர்சனம்... நன்றி...
ReplyDeleteநன்றி தனபாலன்
Deleteபார்க்குறேன் அண்ணே
ReplyDeleteநன்றி சக்கரகட்டி
Deleteமிகவும் சரியான சிறந்த விமர்சனம், நன்றி செந்தில் அண்ணன். இங்கு துபாயில் படம் சூப்பர் ஹிட். படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது இதயம் வலித்தது.
ReplyDeleteநீங்கள் குறிபிட்டது நூற்றுக்கு நூறு உண்மை. " பாலா பாலாதான் ".
நன்றி செந்தில் அண்ணன்.
நன்றி சிம்பு
Deleteபடம் பார்க்க வைக்கும் விமர்சனம்! நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ்.
Deleteசாதரன மக்களை கவருமா???
ReplyDeleteசாதரன மக்களை கவருமா???
ReplyDeleteவணக்கம் அண்ணே பொதுவா எதுவும் தெரியாம விமர்சனம் பண்றவங்கள பார்த்தா கோவம் வரும் ஆனா ரொம்ப நாள் கழிச்சு ஒரு நேர்மையான விமர்சனம் பார்த்தேன் நல்லா வருவீங்க. நான் இன்னும் படம் பார்கல பார்த்துட்டு விமர்சனம் பண்றேன் நேரம் இருந்தா நம்ம ஏரியாவுக்கு வந்துட்டு போங்க.
ReplyDeletehi arur , same like this tea estate people living style problem story taken by one lady korean director, she got award also that film , i can remember , can you try to find that film name and watch , i also trying if igot i will post forit
ReplyDeleteநண்பர் செந்தில்,
ReplyDeleteநான் படம் பார்க்கவில்லை. ஆனால் ஸ்ரீலங்கவில் மலையகத்தமிழர்களும் இப்படியாகவே உழைத்தனர். இந்தியாவில் இருந்து மந்தைகள் போல் கொண்டுவரப்பட்டு தலைமன்னாரில் இரக்கு மலேரியா மிகுந்த காடுகளுக்குள்ளால் நடையாகவே கண்டி கொண்டு செல்லப்பட்டு மலையகத்தை பொன்கொழிக்கும் பூமி ஆக்கினர். சுதந்திரம்(???) கிடைத்த கையோடு சந்ததி சந்ததி ஆக இருந்தவர்கலெல்லாம் ஒரே இரவில் நாடற்ரவர்களாக்கப்பட்டனர். அரைவாசிப்பேர் மலையகத்திலும் மிகுதி இந்தியாவுக்கும் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் பட்ட கஷ்டம் ஈழத்தமிழர் கஷ்டத்திலும் கொடியது. இன்றும் நிலமை சீரில்லை.இதைப்பார்த்த ஈழத்தமிழர் தலைவர் தந்தை செல்வா இதுவே நமக்கும் நடக்கப்போகிறது என போராட்டத்தை துவக்கினார். இன்னும் முடியவில்லை போராட்டம். இந்தியாவும் கைவிட்டு ஸ்ரீலங்காவும் கைவிட்ட நில்மை. வன்னியில் இறந்துபோன அனேகர் மலையகத்தை விட்டு தப்பியோடி அங்கு குடியேறியோரே. ஆனால் அவர்களின் துயரம் வன்னியிலும் தொடர்ந்தது. இன்று ஈழத்தமிழர் நாமும் அதே நிலைமைக்கு வந்துள்ளோம். ஆனால் உங்களைப்போன்ற நல்ல உள்ளங்களின் ஆதரவு எமக்குண்டு என்கின்ற நம்பிக்கையில் போராட்டம் தொடர்கிறது.
unmai nilayai solli irukireerkal tholare... nandri
Deleteithu solla marantha kathayillai yarum solla marukkum kathai....
மலையக தமிழர்களை இந்தியாவிற்க்கு திரும்ப அனுப்ப ஆதரவாக இருந்ததே யாழ்பாண வெள்ளாள தமிழர்கள்தாம். நீர் என்னவோ புது கதை விடுகிறீர்கள். யாழ்பாண தமிழன் இந்திய மலையக தமிழனை மனிதனாக கூட மதிக்க தெரியாதவன்.
Deleteஇந்த இலங்கை போராட்டதிற்க்கு மலையக தமிழர்கள் ஆதரவு சுத்தமாக கிடையாது.
பீ தமிழன் என மலையக தமிழனை ஒதுக்கி வைத்து யாழ்பாண தமிழர்கள் தற்போது இவர்கள் ஆதரவிற்க்காக மலையக தமிழர்களை இழுப்பது கேவலமாக உள்ளது
தங்களின் விமர்ச்சனமே படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.. நன்றி நண்பரே
ReplyDeleteHai sir very super review
ReplyDelete//..மலையக தமிழர்களை இந்தியாவிற்க்கு திரும்ப அனுப்ப ஆதரவாக இருந்ததே யாழ்பாண வெள்ளாள தமிழர்கள்தாம். நீர் என்னவோ புது கதை விடுகிறீர்கள். யாழ்பாண தமிழன் இந்திய மலையக தமிழனை மனிதனாக கூட மதிக்க தெரியாதவன்....///
ReplyDeleteமுதலில் சரித்திரம் சரியாகப் படியும். தந்தை செல்வா காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தமிழரசுக்கட்சி ஆரம்பித்ததே காங்கிரஸ் கட்சியில் இருந்த பொன்னம்பலம் இந்த குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக வாக்கழித்த என்பதனால். ஸ்ரீலங்காவில் இந்த அனியாயத்துக்கு துணைபோனவர் ஒரே ஒரு தமிழ் எம்.பி. அவர் செய்த குற்ரத்துக்கு ஒட்டு மொத்த யாழ்பாணமும் பொறுப்பா? அந்த எம்.பியின் மகன் (குமார் பொன்னம்பலம்) சாகும் வரை ஈழப்போருக்கு ஆதரவாக இயங்கினார் ஆனால் தமிழர் அவர் எப்போ தேர்தலில் நின்றாலும் அவரைத் தோற்கடித்தனர். அவரின் பேரன் (கஜேந்திரன் பொன்னம்பலம்)நேற்றும் ஐ.நாவில் சாட்சியம் அளித்தார் ஆனால் அவரும் யாழ்ப்பானத்தில் தோல்வியையே தழுவினார்.
//....இந்த இலங்கை போராட்டதிற்க்கு மலையக தமிழர்கள் ஆதரவு சுத்தமாக கிடையாது.....//
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சிறை சென்றவர்கள் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. அண்மையில் கூட சிறையில் இருந்து (19 வருடங்கள்) இறந்து போன காத்தாயி முத்துசாமி என்கின்ற 68 வயது மலையகப் பெண் புலிகளுக்கு வெடிமருந்து எடுத்துவர உதவினார் எனும் குற்ரச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறை சென்ரவர். அங்கேயே இறந்து விட்டார்.
//...பீ தமிழன் என மலையக தமிழனை ஒதுக்கி வைத்து யாழ்பாண தமிழர்கள் தற்போது இவர்கள் ஆதரவிற்க்காக மலையக தமிழர்களை இழுப்பது கேவலமாக உள்ளது....//
ஆதரவுக்கு இழுக்கவில்லை. சமாதான காலத்தில் வன்னிக்கு வந்த மலையகத் தமிழ்த் தலைவர்களுக்கு புலிகள் என்ன சொல்லி அனுப்பினார்கள் என கேட்டுப்பாருங்கள். தெரியும் உண்மை.
அது மட்டுமல்ல மலையகத் தோட்டத்தொழிலாளியின் மகன் மனோகணேசன் இன்றுவரை ஈழத்தமிழர்களுக்காக போராடுபவரே!
சும்மா ஆதாரம் இல்லாமல் கேட்கும் கதைகளை அள்ளித்தெளிக்க வேண்டாம்.
யாழ்ப்பாணத்தமிழர் மட்டும்தான் ஈழம் அல்ல!
//..பீ தமிழன் என மலையக தமிழனை ஒதுக்கி வைத்து யாழ்பாண தமிழர்கள்...//
ReplyDeleteகொழும்பு நகரில் முன்னைய காலங்களில் மலசலகூடம் சுத்தம் செய்வோரில் அனேகர் இப்படி ஆசைகாட்டி அழைத்து வரப்பட்ட இந்திய தொழிலாளரே. அவர்கலைச் சிங்கலவர்கள் ‘சக்கிலி’ என கீழத்தரமாக அழைப்பர். சுதந்திரம் கிடைத்ததும் ஒட்டுமொத்த தமிழர்களையுமே ‘சக்கிலி நாய்களே’ எனச் சொல்லி சிங்களவர் அடிப்பார்கள்.
பரதேசியில் - கிருத்துவ பாதிரியார் மதம் மாற்றுவதாக வரும் காட்சியைக் காட்டி - "பார்த்தீர்களா... அயோக்கியத்தனம்" என்று சிலர் பதிவு செய்திருக்கிறார்கள். ஆம், அது உண்மை என்றே வைத்துக் கொள்வோம்.
ReplyDeleteவால்பாறை எஸ்டேட் உருவாக்கத்தில் கொத்தடிமை நிலைமையில் மக்கள் தவித்த போது, மந்திரித்து தாயத்துக் கட்டி - அவர்களின் கூலியை ஒட்டச் சுரண்டிய சாமியாடி என்ன செய்தார்?
அவர்களை தலித்துகளாக்கி - "நியாயமாரே கூலியைக் குடுங்க நியாயமாரே... " என்று கெஞ்ச வைத்த - இந்து மதம் என்ன செய்தது?? - அவையெல்லாம் அயோக்கியத்தனம் என்று கதறாதவர்களுக்கு, வழிபாட்டு உரிமை மீதான அக்கறை எங்கேயிருந்து வந்தது?
சாதிகளாக மக்களை கூறுபோட்டு வைப்பதே தன் தர்மமாகக் கொண்டிருக்கும் இந்து மதவாதிகளின் ஆதிக்கத்தின் பார்வையிலிருந்து இது வருகிறது.
மதம் மாறுவது இன்றுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வல்ல என்பதை நாம் அறிவோம். ஆனால், இந்து மதத்தின் சாதி ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்ட மக்கள் - சாதியின் கொடுமையிலிருந்து ஆறுதல் தேடி நிமிரும்போது - அவர்களுக்கு எந்த போக்கிடமும் இருக்கக் கூடாதென்பதே மதவாதிகளின் விருப்பம். எனவே கிருத்துவ மதமாற்றம் குறித்து இந்துமதவாதிகள் செய்வது ஒரு மோசடியான வாதமேயன்றி, தலித்துகள் மீதான அக்கறையல்ல
http://sindhan.blogspot.in/2013/03/blog-post.html