புதிதாக பதிவு எழுத வந்திருக்கும் பதிவர்களுக்கு உபயோகமாக இருக்குமே என்று முதலில் பிரபல பதிவராவது எப்படி என்ற பதிவை நமது தோத்தவண்டா வலைத்தளத்தில் பார்த்திருப்பீர்கள்.
அதற்கு அடுத்த கட்டமாக இலக்கிய ஒளிவட்ட பதிவராவது எப்படி என்றும் பார்த்திருப்பீர்கள். இவற்றை பயன்படுத்தி தமிழின் முன்னணி பதிவராக உருவெடுத்திருக்கும் பதிவுலக நண்பர்களே அடுத்த கட்டமாக பின்னூட்ட புலியாவது எப்படி என்று இந்த கட்டுரையில் உங்களுக்கு விளக்குகிறேன்.
இதனை பயன்படுத்தி நீங்கள் புலி மட்டுமல்ல மாட்டும் எலிகளையும் அடித்து விளையாடலாம். இதற்கு நீங்கள் பார்க்கப் போவது முதல் பாடம். நாம் எல்லோருக்கும் போய் பின்னூட்டம் போடுவது பற்றி பிறகு பார்க்கலாம்.
நாம் என்று பதிவு எழுதுகிறோமோ அன்று யாரெல்லாம் பதிவு எழுதியிருக்கிறார்களோ அவர்களது பதிவில் போய் மொக்கையாக ஒரு பின்னூட்டம் இட வேண்டும். அடுத்த பின்னூட்டமாக இன்று என் வலையில் என்று போட்டு தங்களது பதிவை பகிர வேண்டும்.
இந்த கட்டத்தில் நாம் கொஞ்சம் உசாராக இருக்க வேண்டும். ஏனென்றால் இது கொஞ்ச காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன்பிறகு மற்றவர்கள் கடுப்பாகி நம்மை திட்டி விட வாய்ப்புண்டு. அவர்கள் அந்த கட்டத்திற்கு வருவதை அறிந்தவுடன் நாம் அவர்களுக்கு இது போன்ற டெம்ப்ளேட் கமெண்ட் போடுவதை நிறுத்தி விட வேண்டும்.
அடுத்ததாக ஓட்டுக்கு பின்னூட்டம். ஒரு 10 பேரை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இவர்களுக்கான தகுதிகள் பதிவை ரசிக்கும்படி எழுதத் தெரியாமல் பிரபலப்படுத்த மட்டுமே தெரிந்தவர்கள். இதற்கு நீங்கள் ரொம்ப சிரமப்பட வேண்டியதில்லை. ஏதாவது ஒரு பதிவரை மட்டும் பிடித்தால் போதும் அவருக்கு வரும் பின்னூட்டத்தின் மூலமாகவே மற்ற பதிவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இந்த பத்து பேருடைய பதிவும் எப்படியும் சொல்லிக் கொள்வது போல் இருக்காது. ஆனாலும் டெம்ப்ளேட்டாக அருமை, அசத்தல், தொடருங்கள் நன்றி என்று கமெண்ட் போட வேண்டும். பிறகு அவர்களுக்கு ஒரு ஓட்டு போட்டு த.ம 4, கூ.பி 201 என்று பின்னூட்டத்தில் அறிவித்து விட வேண்டும்.
இவ்வாறு செய்தால் அவர்களுக்கு நீங்கள் பின்னூட்டமும் ஓட்டும் போட்டது தெரிந்து அவர்களும் இது போலவே உங்களுக்கும் ஓட்டு போடுவார்கள். நீங்கள் சற்று பிரபலமாவீர்கள். ஆனால் இதிலும் ஒரு பிரச்சனை சில நாட்களில் இந்த குழுவைத் தவிர மற்ற பதிவர்களுக்கு நீங்கள் ஜல்லியடிக்கும் பார்ட்டி என்று தெரிந்து விட வாய்ப்புண்டு. இருந்தாலும் அவற்றையெல்லாம் உதறி விட்டுக் கொண்டால் பின்னூட்ட புலி தான்.
மூன்றாவது பாடம் ஆங்கிலத்தில் பின்னூட்டமிடுவது இந்த வகைப் பதிவரின் பெயரை மட்டும் நான் தைரியமாக சொல்லலாம். நான் என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்ளும் நெருங்கிய நண்பர் அவர். இந்த கமெண்ட் மட்டும் அலை பேசியில் இருந்து போட வேண்டும்.
அவ்வளவு என்பதைக் கூட Avvvvvvvvvvalavvvvvvu என்று போட வேண்டும், படிக்கிறவன் டென்சனாக வேண்டும். இதை படிக்க முடியாமல் ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்னரியை தேடி ஓட வேண்டும். இதனால் உங்கள் பின்னூட்டத்தை பார்த்த பிறகு பதிவெழுதியவர் கதற வேண்டும்.
அடுத்த பாடம் வம்பிழுப்பது. இதற்கு முதல் வேலையாக அண்ணாச்சி கடைக்கு போய் விளக்கெண்ணெய் வாங்கி வர வேண்டும். கண்ணில் இரண்டு சொட்டு விட்டுக் கொண்டு பதிவினை படிக்க வேண்டும். ஒரு பிழை காண நேர்ந்தால் அதனை குறிப்பிட்டு கிண்டலாக பின்னூட்டமிட வேண்டும்.
அவருக்கு கோவம் வந்து விளக்கம் கொடுக்கும் போது ஹி ஹி என்று இளித்து விட்டு ஜகா வாங்கி விட வேண்டும். எழுத்துப்பிழைக்கு இதற்கு மேல் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
இது கடைசி மற்றும் முக்கிய பாடம், பிரபல பதிவர்களை குறி வைக்க வேண்டும். அவர்கள் போடும் எல்லாப் பதிவுக்கும் கண்டனப் பின்னூட்டம் போட வேண்டும். சினிமா விமர்சனம் போட்டிருந்தால் அதில் போய் "உனக்கு படம் பார்க்கவே தெரியவில்லை, அட்டு விமர்சனம்" என்று போட வேண்டும்.
அவர்கள் கடுப்பாகி பதில் அளித்தால் மறுபடியும் கோவப்படுத்துவது போல் பதிலளிக்க வேண்டும். பிறகு அந்த பின்னூட்டத்தையெல்லாம் ஸ்கிரீன் ஷாட் எடுத்து நாம் ஒரு பதிவு போட்டு ஹிட்ஸ் தேத்த வேண்டும். சண்டை போட்டே பரபரப்பான பதிவர் ஆகி விடலாம்.
ஆரூர் மூனா செந்தில்

இவ்வளவு நாள் தெரியாமல் போச்சே...!
ReplyDeleteதெரிஞ்சுகிட்டீங்கள்ல ஜமாய்ங்க தனபாலன்
Deleteச்சா. இதெல்லாம் எனக்கும் தெரியாமல் போச்சே.. சரி நானும் கோதாவில் இறங்கிட வேண்டியது தானுங்கோ .. !
ReplyDeleteநடத்துங்க இக்பால்.
Deleteஇதுக்குத்தான் நான் கருத்துப் பெட்டிய கடிச்சி துப்பிட்டேன்....ஹையா...என்னை யாரும் திட்டவும் முடியாது ..பாராட்டவும் முடியாது ..இது எப்படி இருக்கு ஆ...மு...செ..சார்
ReplyDeleteIvar
Deletechaaru...
Jemo...
Maathiri
WRITER....
Pola....
நீங்க அறிவாளி சார்.
Deleteயோவ் நக்ஸூ இதுக்கு இவர நீ கெட்ட வார்த்தையிலேயே திட்டியிருக்கலாம்.
DeleteSenthil.....
ReplyDeleteIru vareen.....
Innikku...
Ingathaan......
Niraiya perai....
Kanakku....
Theekkanum....!!!!
காத்திருக்கிறேன். சென்று வென்று வரவும்.
Deleteஹி ஹி... இது தெரியாமல் போச்சே...
ReplyDeleteஇனிமே தெரிஞ்சிக்கங்க நண்பா
Deleteஎலேய்....
ReplyDeleteஇப்படியா உண்மைகளைபோட்டு உடைக்கிறது...
பப்ளிக்கா போட்டு உடைச்சதுக்கு கண்டிக்கிறேன்...
புது பதிவர்களும் நம்ம அரசியல புரிஞ்சிக்கனும்ல.
Deleteஅப்புறம் நாம என்ன பண்றது....
Deleteவரலாறு முக்கியம் அமைச்சரே...
இல்லை தலைவரே, நாம அடுத்தக் கட்ட அரசியலை நோக்கி நகர்ந்து செல்லணும்ல.
Deleteநல்லது...
Deleteபரதேசி....
இல்லீங்க பரதேசி படத்துக்கு நாளை போறீங்களான்னு கேட்டேன்....
ஆமாங்கோவ். ஏஜிஎஸ் வில்லிவாக்கத்துல தான் பார்க்கனும்
Deleteஅப்புறம் நம்மகிட்ட இருக்கிற த.ம. ஓட்டுக்காரர்களை பிடிக்க நான் என்ன செய்யனும்...
ReplyDeleteஅவங்களை நம்மபக்கமும் திருப்பிவிடுங்க...
பதிலுக்கு நானும் செம்மையா செய்யிறேன்...
என்ன நான் சொல்றது..!
வாரம் இரண்டு பார்ட்டி டாஸ்மார்க்ல கொடுக்கணும்.
Deleteஅரசியல் வாதிங்கத்தான் கோட்டரும் கோழி பிரியாணியும் கொடுத்து ஓட்டு வாங்குராங்ன்னா இங்கையும் இப்படியா...
Deleteஎன்னமோ சரி....
10 குவாட்டர் பார்சல்...
அடடா எல்லாரும் நம்ம வழிய கண்டுபுடிச்சிட்டா நாம என்ன பண்றது, புதுசா ரூம் போட்டு யோசிக்க விட்டுடுவாங்க போல இருக்கே.
Deleteநடத்துங்க...
Deleteவாங்களேன் சேர்ந்து ரூம் போட்டு யோசிப்போம்.
Deleteகவிதை வீதி... சௌந்தர்...
Delete“அப்புறம் நம்மகிட்ட இருக்கிற த.ம. ஓட்டுக்காரர்களை பிடிக்க நான் என்ன செய்யனும்...“
முதலில் உங்கள் வலைச்சரத்திற்கு வந்தால்
துள்ளாமல் திறந்து பதிவைப் படிக்கும் படி செய்ய வேண்டும்.
உங்களின் ஒரு பதிவையாவது படித்து விட வேண்டும் என்ற என் ஆசை இன்று வரையில் நிறைவேறவே இல்லை.
////////
ReplyDeleteNiraiya perai....
Kanakku....
Theekkanum....!!!!
////////////
என்னய்யா செய்ய போறே.....
பார்த்து செய்யுங்க
ஒன்பதுல குரு இருக்கிறதால நேரம் சரியில்லாம இருக்கு பார்த்து நடந்துக்கங்க நக்ஸ்....
நக்ஸூக்கு ஏழரை சனியாம் எவன் மாட்டி கிழியப் போறானோ.
Deleteஅதுவும் மாலை மற்றும் இரவு நேரம்
Deleteவாழ்க வளமுடன்...
அவரு கூட கடைக்கு போகத்தான் நேரம் கேட்டு இருக்காரு போல.
Deleteமனம் திறக்கிறார் ஆரூர் மூனா செந்தில் பிரபல பதிவர் ஆனது எப்படி வாங்கிவிட்டீர்களாஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்று இதே போஸ்ட்டைப்போட்டால் போகிறது...
ReplyDeleteபிரபல பதிவரை வம்பிழுப்பது நல்லாய்த்தான் இருக்கும் சாரே...அவங்களுக்கு பதிவில்லாமல் போகும் நாட்களில் குலுக்கல் முறையில் இவ்வாறான பின்னூட்டப்பேர்வழியை தெரிவு செய்து குதறிவிடுவார்கள் ஊகும்...பட் அதுகூட பேமஸ்தான்...
இது கூட நல்ல ஐடியாவா இருக்கே.
Deleteஉங்களைப் போல மிகவும் பிரபலமானவர்களின் கருத்தை எதிர்த்து ஏதாவது எழுதினாலும் மற்றவர்கள் பின்னூட்டம் இட மாட்டார்கள். :))
ReplyDeleteநன்றி வியாசன்
Deleteசெந்தில், பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணஏ இல்லாமல் பின்னூட்டம் மட்டும் போடும் என்னைப் போன்றவர்கள் எந்த கேட்டகிரியில் வருவோம்?
ReplyDeleteஅமர பாரதி அதுக்கும் ஒரு பதிவு போட்டுறுவோம்
DeleteWe support students Hungry strike இல்லை, Hunger strike.
ReplyDeleteமாத்திடுறேனுங்க.
Deleteஇந்தப் பதிவில் சம்பந்தப் பட்ட பதிவுகளின் சுட்டிகளையும் கொடுத்திருக்கலாம்.
ReplyDeleteஎதுக்கு அவனவன் பஸ் புடிச்சி வந்து என்னை மொத்தவா
Deleteஉங்க பழைய பதிவு சுட்டி குதுத்தா அதுக்கு எவன் மொத்துவான், எப்படியோ தேடித் பிடித்து படித்து விட்டேன்.
Deleteok...ok....புரிஞ்சது...சார்...
ReplyDeleteநன்றி தங்கம்பழனி
Deleteமூனா,
ReplyDeleteவெளக்கெண்ணை...
ஒரு லிட்டர் என்ன விலை?
ஹி...ஹி..நமக்கெல்லாம் ரெண்டு சொட்டு காணாது அதுக்கு தான் :-))
த.ம.9,நல்லப்பதிவுனு,பதிவாக்கி பகிர்ந்தமைக்கு நன்றி! என சொல்லி பின்னூட்ட காக்கையாக தான் முடியும்,புலியாக முடியாது :-))
கடைசியில் சொல்லப்பட்ட ரெளத்திரமான பின்னூட்ட ஏக்தா டைகர் ஆக சொன்ன செயல்முறை குறிப்புகள் முழுமையாகவில்லை.
ஆவேசமான பாயும் பின்னுட்டப்புலியாக மாறுவது ,அவ்வளவு எளிதல்ல,கடின உழைப்பும்,தேர்ந்த கலை,இலக்கிய,வரலாற்று,புவியியல்,அறிவியல்,அரசியல் மற்றும் எவலுயுஷன் ஆஃப் காஸ்மிக் எனர்ஜி கப்புள்டு வித் அட்டாமிக் பவர் ஆஃப் அண்டார்டிகா போன்றவற்றில் நுண்ணிய அவதானிப்புக்கொண்டிருக்க வேண்டும் :-))
பின்னூட்டப்புலியாக பரிணாமிக்க விரும்புவர் சில பல தியாகங்களுக்கும், மானசீகமாக ரத்தம் சிந்தவும் தயாராக இருக்க வேண்டும், ஏன் எனில் குள்ளநரிக்கூட்டங்களுக்கு மத்தியில் புகுந்து புறப்படும் அரிய வேலை இது :-))
மேலும் பிரபல திரட்டியில் இணைக்காமல், ஓட்டுப்பட்டை இல்லாமல் பரதேசிப்பதிவு வைத்திருக்க வேண்டும் :-))
இம்புட்டுக்கும் அப்புறமும் பின்னூட்டப்புலியாக ஆகிட முடியுமானு கேட்டால் ம்ஹீம் ...பல பிராபல்யப்பதிவர்கள் கமெண்ட் மாடரேஷன் வைத்து ,பின்னூட்டங்களுக்கு கள்ளிப்பால் ஊற்றிவிடுவதால் லேசில் புலியாக முடியாது அவ்வ்.
எனவே மனம் தளராத அம்புலிமாமா விக்கிரமாதித்தன் போல வேதாள வேட்டைக்கு எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும்.
இவ்வளவும் கேட்டப்பிறகு பின்னூட்டப்புலியாகவே வேண்டாம்,ஆணியே புடுங்க வேண்டாம் என நினைத்தால் குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புறப்படுப்பதே மேல் :-))
வவ்வாலு, நீங்க இயல்பாவே பின்னூட்ட புலி. இது என்னை மாதிரி எதிலும் முழு அறிவு இல்லாத பதிவர்கள் மேல வருவதற்கான சிறு குறிப்பு.
Deleteபின்னூட்டப் புலி வவ்வால் சொன்னா சரியாத்தான் இருக்கும்.
ReplyDeleteஆரூர் அண்ணா.... நீங்கள் சொன்னபடி செய்கிறேன்.
ReplyDeleteஆனால்....
உங்களுக்கு மட்டும் ஒவ்வொரு பதிவிற்கும் 20 க்கு மேல் ஓட்டுக்கள் விழுந்து தமிழ்மண மகுடத்திலேயே இருப்பது எப்படி என்பதை (எனக்கு மட்டும்) சொல்லிக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
அறிவுரை சொன்னா அனுபவிக்கனும், ஆராயக்கூடாது.
DeleteTo..evrybody.....
ReplyDelete3/4----qter...
Thaaandiyaachchi.......
Today....
Sindicate ......
-----------------------------------------------
vavvaal....
Vazhga.....vazhga...
----------------------------------
saabam...
Vendaam
நீ என்னய்யா சொல்ல வர்றே முக்கா சாப்ட்டியா, இல்ல குவார்ட்டர்ல முக்கா சாப்ட்டியா ஒன்னியும் வெளங்கல.
Deleteஅட!!!! இம்புட்டு இருக்கா!!!!!
ReplyDeleteஆமாங்க. நன்றி துளசி கோபால்
Deleteஏதோ நாலு பேரு இப்படி பின்னோட்டம் போடறதால பொழைப்பு ஓடிக்கிட்டிருக்கு. ஓட்டும் இல்ல. பின்னூட்டமும் இல்லன்னா ப்ளாக்கர் ஈ அடிக்கும் பாஸ்
ReplyDeleteஅது கரெக்ட்டு தான்
Delete//இது கடைசி மற்றும் முக்கிய பாடம், பிரபல பதிவர்களை குறி வைக்க வேண்டும். அவர்கள் போடும் எல்லாப் பதிவுக்கும் கண்டனப் பின்னூட்டம் போட வேண்டும். சினிமா விமர்சனம் போட்டிருந்தால் அதில் போய் "உனக்கு படம் பார்க்கவே தெரியவில்லை, அட்டு விமர்சனம்" என்று போட வேண்டும்.//
ReplyDeleteஅட போங்க பாசு ஒங்களுக்கு பதிவே எழுத்தே தெரியல .. இதெல்லாம் ஒரு பதிவா ? அட்டு பதிவு ...
//பின்னூட்டங்களுக்கு கள்ளிப்பால் ஊற்றிவிடுவதால் லேசில் புலியாக முடியாது அவ்வ்.// எனக்கும் கள்ளிப்பால் ஊத்திடாதீங்க .......
பலே ஜீவன் சுப்பு ஆரம்பிச்சிட்டீங்க போல.
Deleteஅண்ணே இப்படி தான் எல்லாருக்கும் யோசனை சொல்லி வம்பு இழுத்து விடுறிங்களா
ReplyDeleteபுரிஞ்சவங்க சரியா செய்வாங்க.
Deletenice post....
ReplyDeleteநன்றி அமுதா கிருஷ்ணா
Deleteநீங்க சொன்ன யோசனை எல்லாம் சரிதான் ஆனா நாம எக்கு தப்பா எழுதி நமக்கு டின்னு கட்டிருவாங்களோ ?! நீங்க பாதுகாப்பு உறுதிமொழி கொடுக்க முடியுமா..?!!
ReplyDeleteஅதெல்லாம் யாரும் அப்படி செய்ய மாட்டாங்க. சும்மா வாய் உதார் தான்
Deleteகுரு இனி நானும் இதே வழியை பின் பற்றுகிறேன்! விரைவில் பிரபலமாகி உங்களை வந்து சந்திக்கிறேன்
ReplyDeleteஅய்யா நீ இப்பவே பிரபல மன்மதப் பதிவர் தான்யா.
Deleteநல்ல யோசனைகள்! நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Delete