சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Monday, March 11, 2013

மாணவர்களின் உண்ணாவிரதத்தால் வலுப்பெறும் போராட்டம்

படித்ததில் பிடித்தது : ஒரு பறவை தனது இனத்துக்காக வீழ்த்தப்பட்ட போதே அடுத்த பறவை போராட்டத்திற்கு தயாராகி விடுகிறது. ஆங்ரி பேர்ட்ஸ்(Angry Birds) சொல்லி தரும் வாழ்க்கை பாடம்


நீண்ட நாட்களாக ஈழ விவகாரத்தில் இது போன்ற ஒரு கொந்தளிப்பு மக்களிடையே ஏற்பட வேண்டும் என்று தான் காத்திருந்தேன். அரசியல்வாதிகளால் ஏற்படாத மாற்றம் மக்களின் கொந்தளிப்பினால் ஏற்படும் என நினைத்தது நிஜமாகத் தொடங்கியிருக்கிறது.

மக்களிடையே போராட்டத்திற்கு ஆதரவு வலுக்கத் தொடங்கியிருக்கிறது. மாணவர்கள் மற்ற ஊர்களில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள். இது நிற்காமல் தொடர வேண்டும். ஈழ மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும். சிங்கள போர் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

நான் இன்று சந்தித்த ரயில்வே தொழிலாளர்களிடையே உண்ணாவிரத பந்தலில் இருந்து மாணவர்கள் அப்புறப்படுத்தப்பட்ட விஷயம் தான் பரவலாக பேசப்பட்டது. ஒவ்வொரு மக்களும் மனதால் கொதித்து போய் இருக்கிறார்கள். இன்றைய ஈழ மக்களின் நல்வாழ்வுக்கு தேவை தமிழக மக்களின் எழுச்சி தான்.


அதிகாரத்தில் இருக்கும் தமிழக தலைவர்கள் நல்லது செய்வார்கள் என்று காத்திருந்து காத்திருந்து ஈழத்தமிழர்களுடன் நாமும் தான் ஏமாந்து போனோம். இன்று அதனை மறைக்க திமுகவினர் என்னதான் போராட்டம் நடத்தினாலும் அதனை நம்பி ஏமாற படித்த மக்கள் தயாராக இல்லை.

வெறும் பொய் வாக்குறுதிகளாலும் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று நம்ப வைத்ததாலும் மொழிபோரை தனக்கு சாதகமாக்கி ஏமாற்றியதாலும் தான் நல்லாட்சி செய்த காமராஜரை வீழ்த்தினார்கள் திமுகவினர்.

படிப்பறிவு குறைந்திருந்த அந்த காலத்தில் மக்கள் மனதால் சிந்தித்தார்கள். வெறும் வாய்ச்சவடால்களில்  ஏமாற்ற முடிந்தது. இன்று படிப்பறிவு பெற்ற மக்கள் நிறைந்திருக்கிறார்கள். புத்தியால் சிந்திக்கிறார்கள். இன்று என்னத்தான் குட்டிக்கரணம் அடித்தாலும் மக்கள் ஏமாறத் தயாராக இல்லை.


ஆனால் பாருங்கள் இந்த மக்கள் படிப்பறிவு பெற்றதே இவர்களிடம் தோற்றுப் போன காமராஜரால் தான். தேவர் மகன் படத்தில் சிவாஜி சொல்லுவார். விதை நான் போட்டது, இதுல என்ன பெருமையா, கடமை என்று. அது அப்படியே காமராஜருக்கு பொறுத்திப் பாருங்கள். சரியாக இருக்கும்.

இவர்கள் வெறும் வாய்ச்சொல் வீரர்கள் தான். 2009ல் மட்டும் இவர்கள் மத்தியில் ஆட்சியை விட்டு வெளியில் வந்து எம்பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்திருந்தார்கள் என்றால், சத்தியமாக சொல்லுகிறேன், நெஞ்சை கிழித்து எழுதியிருப்பேன் தமிழினத் தலைவன் திமுக தலைவர் தான் என்று. என்னைப் போல் லட்சக்கணக்கான இளைஞர்கள் அந்த மனநிலையில் தான் இருந்தனர். அன்று சுயநலத்துக்காக ஒரு உண்ணாவிரத நாடகம் ஆடிவிட்டு இன்று என்னதான் டெசோ புசோ என்றாலும் யாரும் நம்பத்தயாராக இல்லை.

வெளியில் வந்திருந்தாலும் இலங்கையில் நடந்ததை தடுத்திருக்க முடியாது என்று கூறும் உபிக்களே, முட்டைய ஒடச்சா தான்யா ஆம்லேட்டு போட முடியும். இந்த முட்டையை உடைச்சாலும் ஆம்லேட்டு போட முடியாது, இது கூமுட்டைனா யாருய்யா ஒத்துக்குவான்.(கொஞ்ச சீப்பான உதாரணம் தான், ஆனால் அவசரத்திற்கு வேறு உதாரணங்கள் நினைவில் இல்லை)


ஏன் எங்களை மட்டும் சொல்லுகிறீர்கள், அதிமுக அரசு தானே மாணவர்களை அப்புறப்படுத்தியது என்று வெட்டிநாயம் பேசும் உபிக்களே. நாங்கள் என்றுமே அவர்களை ஈழ விஷயத்தில் எதிர்பார்த்தது இல்லை. கலைஞரை மட்டும் தானே காக்கும் கடவுள் என நம்பி வீணாப் போனோம்.

தயவுசெய்து இனியாவது மாணவர்களை சுதந்திரமாக போராட விடுங்கள். இப்பொழுது தான் போராட்டம் தமிழகமெங்கும் பரவ தொடங்கியிருக்கிறது. இதிலும் உங்கள் பாழாய்ப் போன அரசியலை நுழைத்து போராட்டத்தை நீர்த்துப் போக செய்யாதீர்கள்.

உம்மால் முடிகிறதா நீங்கள் தனியாக எதாவது செய்யுங்கள். ஆப்பிரிக்கா போங்கள், அம்பேரிக்கா போங்கள். மாநாடு போட்டு ஆகிற காரியத்தை பாருங்கள். மாணவர்கள் அவர்கள் வழியில் போராடட்டும். ஈழ மக்களுக்கு யார் மூலமாவது நல்லது நடந்தால் போதும் என எதிர்பார்த்து காத்திருக்கும் அப்பாவி தமிழன்.

ஆரூர் மூனா செந்தில்

-----------------------------------------------------------

கேஆர்பி செந்தில் பார்வையில் : மாணவர்கள் போரட்டத்தை மட்டுமல்லாது ஈழப் பிரச்சினையில் தொடர்ந்து எப்போதும் தனி ஈழ கோரிக்கையை முன்வைத்து போராடி வரும் வைகோ, நெடுமாறன், சீமான், கொளத்தூர் மணி, ராமதாஸ், தமிழருவி மணியன் போன்றோரை இணையத்தில் இயங்கும் நாலு புளியங்கொட்டைகள் கிண்டலடித்து வருகிறார்கள்.

தம்பிகளா ஒட்டு மொத்தமாக டி.யெம்,கேவை பின்னுக்கு கொண்டுபோகும் உங்களது முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். மனசாட்சியை கழற்றி வைத்துவிட்டு போடாத பிஸ்கட்டுக்கு வாலாட்டும் நீங்கள் உங்கள் வாரிசுகளையாவது தன்மானத்துடன் வாழவிடுங்கள்.

ஏனெனில், பிரபாகரன் எனும் ஒப்பற்ற தலைவன் இனத்துக்காக களத்தில் தன்னையும், குடும்பத்தையும் பலிகொடுத்தார். உமது தலைவன் குடும்பத்துக்காக இனத்தையே பலி கொடுத்தவர்.

காலம் கடந்திருந்தாலும் சரியான சமயத்தில் போரட்டத்தை கையிலெடுத்திருக்கும் மாணவர் சமுதாயத்துக்கு எனது வணக்கங்கள்...

-----------------------------------------------------------------

உண்மை சுடும் இரா.ச.எழிலன் அவர்களின் பார்வையில் 2009 ...........

2009 என்று கூட சொல்ல முடியாது 2008-ன் பிற்பகுதி.

கைப்பேசி கிடையாது , இன்றைய அளவு இணையப்பயன்பாடு கிடையாது , முக்கிய செய்தி என்றாலும் தொலைபேசி வாயிலாகவே களத்திலிருந்து ' நம்பிக்கையான ' நபர்கள் யாரேனும் செய்தி கொடுத்தாக வேண்டும்.


கிடைத்த தகவல்களை வைத்து கள நிலவரத்தை புரிந்துக்கொண்டு போராடினோம். செய்தி சிறிய அளவு பொய்யென்றாலும் போராட்டம் போச்சு. கைது செய்யப்பட்ட எங்களை பெரியார் திக வின் தீவிர இன உணர்வாளர்கள் வெளியே கொண்டு வந்தார்கள். இதில் ஒரு அமைப்பின் தோழர் சிறு நீர் கூட கழிக்க முடியாத அளவிற்கு தாக்குதலுக்கு உட்பட்டிருந்தார். அந்த செய்தி கூட வெளியே போய் சேரவில்லை.

தேசியத்தலைவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நாளன்றும் அதற்கு முன்னதாக சில நாட்களும் அரிதாக கிடைத்த செய்தியையும் , புகைப்படங்களையும் வைத்தே அங்கே என்ன நடக்கிறதென அவதானிக்க முடிந்தது. போராடினோம். துரோகத்தால் வீழ்ந்தோம்.

என்ன சொல்ல வரேன்னா , இந்த தமிழகத்தின் ஏதோ ஒரு ஈ'சாணி' மூலையில் இருக்கும் வெகு சாதாரண மனிதன் ' எழிலன் ' எனப்படும் எனக்கே இலங்கையில் எம் அக்காள் தங்கைகள் கொல்லப்படும் செய்தி பல தடைகளைத் தாண்டி நேரலையாக கிடைத்து , வீதிக்கு வந்து போராடினோம்.

அக்கா மவன் மிகப்பெரிய ஊடகம் ஒன்ன வச்சிருக்கான் , பத்தாததுக்கு பெரிய ' டமிளர் ' கட்சி தலீவர் வேற , உங்களுக்கு எந்த செய்தியும் வரவே இல்லையா ?????

இல்லை ஏன் இந்த 'டெசொ' வை 2008 ல் அமைக்கவில்லை ??????? என்ற தோழர் சிம்பு தமிழ் க்கு ஏற்பட்ட அதே ஐயம் தான் எனக்கும். ஐ நா வுக்கு அப்போது விடுமுறையா ???????? இல்ல , கட்சியில யாரும் இல்லையா ???? இல்ல, போர் நடந்தது உங்களுக்கு தெரியவே தெரியாதா ????? இல்ல , அது சும்மாக்காச்சும் செய்தின்னு நினைத்து விட்டீர்களா ????

சிங்களவனை விடவும் ஆபத்தான ஓநாய்கள் இந்த உடன்பிறப்புகள். அதற்கு மேலே இருக்கும் வரலாற்று சம்பவங்களே ஆதாரம்.

'தலீவர' பத்தி பேசினா உடனே கோவம் வருதுல்ல , உடனே தலைமைக்கு அழைத்து கேளுங்க இந்த கேள்விகளுக்கு என்ன பதில்ன்னு. அது வரை தலீவர் மீதான 'கருத்து' தாக்குதல்கள் தொடரும்.

பதிலுக்கு உங்களுக்கு தெரிந்த நான்கு தமிழ் உணர்வாளர் தலைவர்களை நீங்கள் திட்டிக்கொள்ளுங்கள். நிச்சயமாக தக்க பதிலடி இருக்கும். சோர்ந்து போய் விட மாட்டோம். கருத்துகளை கண்ணியமாக கையாளுங்கள் , அதிலேயே உங்கள் கட்சியும் கொள்கையும் தெரிந்துவிடும்.

கவலைப்படாதீர்கள் , நீங்கள் மனம் மாறும் வரை உங்களை விடுவதாயில்லை. உங்கள் வழியில் நீங்கள் மனசாட்சியை கொன்று யாருக்கோ விசுவாசமாய் இருங்கள். கட்சி மாறலாம் , கொள்கை மாற்றலாம். ஆனால் , தமிழ் ' இன , மொழி உணர்வை ' மாற்ற முடியாது. இதில் தான் வேறுபட்டு நிற்கிறோம் , நீங்களும் நானும்..

-----------------------------------------------------------

நண்பர்கள் எடக்கு மடக்கு பதிவில் பகிர்ந்துள்ளது

ஈழ விவகாரத்தில் நமது லயலோ கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம், உலகின் ஒட்டு மொத்த தமிழர்களையும், தமிழர் அல்லாத மற்றவர்களையும் சற்றே நினைத்து பார்க்க வைத்துள்ளது. அரசும் அவர்களை நள்ளிரவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதோடு அல்லாமல், போராட்டத்தை பிசுபிசுக்க வைக்க நினைத்தது. இங்கதான் மாபெரும் தவறான ஆலோசனைகளை மிக அறிவுபூர்வமான ஆட்கள் அரசுக்கு சொல்லி இருக்க வேண்டும்.

எல்லாரும் சொல்லுவதை போல் தேன் கூட்டில் கை வைத்தது போல
ஆகிவிட்டது. இன்று தமிழகமெங்கும் மாணவர்களின் போராட்டம் களை கட்டியுள்ளது. இனிதான் அரசுக்கு தலை சொறிதல் ஆரம்பம். மாணவர்களின் போராட்டத்தை இனி வேறு வகையில் திசை  திருப்பும்  அரசு. நடத்திப் பார்க்கட்டும். அதையும் உலக தமிழர்கள் பார்த்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் எப்படி தமிழகம், மற்றும் மாணவர்களிடையே மிகப் பெரிய எழுச்சி உண்டானதோ அதே போல ஒரு எழுச்சி இப்போது உருவாக்கி உள்ளது. அப்போதாவது தி.க., மற்றும் தி.மு.க. போன்ற கட்சிகள் போராட்டத்தை முன் எடுத்து சென்றது.

இன்றைக்கு அனைத்து அரசியல்(வியா)(வா)திகள் தம் சுயநலம் கொண்டு இந்த போராட்டத்தினால் திகைத்து நிற்பது நிஜம். எப்படி எந்த ஒரு கட்சியையும் சாராமல், யாருடைய ஆதரவும் கோராமல் எதன் அடிப்படையில், இவர்கள் போராட்டத்தை முன் எடுத்து செல்கிறார்கள்? எப்படி இது இந்த அளவுக்கு தீ பொறி போல் பரவியது? கடந்த இரண்டு  நாட்களாக தூங்காமல் அனைவரையும் கக்கா போகும்போது கூட யோசிக்க வைத்துள்ளது இந்த வியாதிகளுக்கு.

மேலும் படிக்க எடக்கு மடக்கு பதிவு

20 comments:

 1. சரியாக சொன்னீர்கள் அண்ணே, பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி குமணா. சிவராத்திரிக்கு ஊருக்கு போயிருந்தாயா, எப்படி இருந்தது கொண்டாட்டம்

   Delete
 2. இருந்தாலும் இந்த மாதிரி ஆளுங்களுக்கு இன்னும் கொஞ்சம் உரைக்கிற மாதிரி கேட்டிருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. போதும்ப்பா, இதுவே அதிகம்னு தான் நினைக்கிறேன்.

   Delete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. துணிந்து களம் இறங்கிய மாணவ சமுதாயத்தின் போராட்டம் வெற்றிபெற நாம் துணை நிற்போம்

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக இருப்போம் சீனு

   Delete
 5. எம்புட்டு அடிச்சாலும் இந்த திமுக காரங்க வலிக்காதமாதிரியே நடிக்கிறங்களே.

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீர்கள் ஜெயம்

   Delete
 6. மிஸ்டர் செந்தில்.எங்கள் பதிவை படிக்கவும்.விருப்பம் இருந்தால்___________ கொண்டு வரவும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா. நான் தங்கள் பதிவை படித்து விட்டேன். நான் வெளியில் இருப்பதால் அலைபேசியின் மூலம் பதிலளித்துக் கொண்டு இருக்கிறேன். வீட்டுக்கு சென்றதும் தாங்கள் கேட்டதை செய்கிறேன்

   Delete
 7. செந்தில்.உம்ம பதிவில் மனசாட்சி இருந்தால் எங்கள் பதிவை இணைக்கவும்.இது கெஞ்சல் என்று நினைக்க வேண்டாம்.(கர்ர்ர்ர்.தூ)
  எங்கள் பார்வை,சிந்தனை வேறு.

  ReplyDelete
 8. தங்கள் பார்வைக்கு.

  https://plus.google.com/u/0/103491410655852525797/posts/M6F5z2RCSXh

  ReplyDelete
 9. //2009ல் மட்டும் இவர்கள் மத்தியில் ஆட்சியை விட்டு வெளியில் வந்து எம்பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்திருந்தார்கள் என்றால், சத்தியமாக சொல்லுகிறேன், நெஞ்சை கிழித்து எழுதியிருப்பேன் தமிழினத் தலைவன் திமுக தலைவர் தான் என்று//

  நிச்சயமான உண்மை... தீவிர கலைஞர் விசுவாசியாக இருந்த என்னை போன்ற சிலர் நொறுங்கிய தருணம் இது... இதை விட கொடுமை என்னவென்றால் மனிதகுலம் கண்டறியா படுகொலைகளை பார்த்து சித்தம் கலங்கி நாம் நிற்கும் நிலையில், தனது பிறந்த நாளை பிரமாண்டமான 87 கிலோ கேக் வெட்டி குடும்பத்துடன் கொண்டாடினார் பாருங்கள் தமிழன தலைவர்... அப்போதே அந்த நரி வேஷம் கலைத்து விட்டது...

  ReplyDelete
 10. செந்தில்,நல்ல பதிவு...மாணவர்கள் போராட்டத்தை ஆதரிக்கும் அதே நேரத்தில் அவர்களுக்கு எந்த இழப்பும் நேரக்கூடாது என்றும் மனம் தவிக்கிறது.

  ReplyDelete
 11. இளையதலைமுறையிடம் போராட்ட உணர்வு செத்துப் போனதோ என்று ஐயம் இருந்தது.
  இப்போது தெரிந்து கொண்டேன்.
  இன உணர்வை, சுதந்திர உணர்வை ஒருநாளும் அழிக்க முடியாது.
  போராட்டங்கள் தமிழகம் முழுவதும் தொடர வேண்டும்.
  இந்திய ஆதிக்கத்திற்கு பயம் கொடுக்கட்டும்.

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. அண்ணே, இங்கட நாட்டில உள்ள அப்பாவி மக்க இனி நிம்மதியா வாழ்ந்தா போதும்.எங்களுக்கு ஈழமும் வேனா ஒரு மணணும் வேனாம். லண்டன் ஒஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் தங்களது சொகுசு வாழ்க்கை தொடர வேண்டுமானால் ஈழம் என்ற புண்ணை ஆற விடாமல் இருந்தால்தான் அங்கே வாழ இயலும். தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஈழம் என்பது தங்களை வளர்கும் வியாபாரம். தமிழக ரிவி சேனலகளுக்கு தங்கள் டி.ஆர்.பியை உயர்திக்கொள்ள சிரந்த வாயப்பு. ஆக ஈழம் என்பதே லாபம்.

  ReplyDelete
 14. அண்ணே, இங்கட நாட்டில உள்ள அப்பாவி மக்க இனி நிம்மதியா வாழ்ந்தா போதும்.எங்களுக்கு ஈழமும் வேனா ஒரு மணணும் வேனாம். லண்டன் ஒஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் தங்களது சொகுசு வாழ்க்கை தொடர வேண்டுமானால் ஈழம் என்ற புண்ணை ஆற விடாமல் இருந்தால்தான் அங்கே வாழ இயலும். தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஈழம் என்பது தங்களை வளர்கும் வியாபாரம். தமிழக ரிவி சேனலகளுக்கு தங்கள் டி.ஆர்.பியை உயர்திக்கொள்ள சிரந்த வாயப்பு. ஆக ஈழம் என்பதே லாபம்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...