டிஸ்கி : ரொம்ப நாளாக பதிவெழுதவே இல்லை. உடல்
நலக்குறைவும், வேலைப்பளுவும் போட்டு பொரட்டி எடுக்கின்றன. இன்று ஒரு பத்து
நிமிசம் ஓய்வாக கிடைத்தது. அதற்குள் எல்லாம் மண்டையைப் போட்டு கசக்கி ஒரு
பதிவு எழுதிவிட முடியாது. அதனால் மனத்திருப்திக்காக ஒரு மீள்பதிவு.
நான் இரண்டு முறை கேரளாவில் ரஜினி படம் வெளியீட்டின் போது இருந்துள்ளேன். ஒரு முறை படையப்பா வெளியீட்டின் போது திருச்சூரில் இருந்தேன். சந்திரமுகி வெளியீட்டின் போது திருவனந்தபுரத்தில் இருந்தேன். எங்கு இருந்தாலும் தலைவர் தலைவர் தான் என்பதை முதல் நாள் முதல் காட்சியின் போது கண்டவன் என்ற முறையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

(வட்டத்துலநான்தான்பா)
படையப்பா வெளியீட்டின் போது நான் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்பரன்டிஸ் பயிற்சியில் இருந்தேன். அப்பொழுது திருச்சூரில் நடக்கும் பூரம் திருவிழாவுக்காக ரயில்வே ஸ்டால் போட்டிருந்தார்கள். அந்த பணிக்காக ரயில்வே அப்ரெண்டிஸ் குழுவினர் இங்கிருந்து திருச்சூர் சென்றோம்.
சென்று இறங்கிய மூன்றாவது நாள் படையப்பா ரிலீஸ். எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று என்னுடன் இருந்த நண்பர்களுடன் இணைந்து திரையரங்கிற்கு சென்றேன். அப்பப்பா அந்த தெருவின் உள்ளேயே நுழைய முடியவில்லை. கேரளாவில் ரஜினிக்கு இருக்கும் Grace கண்டு ஆச்சரியப்பட்டு போனேன். ஒரு வழியாக மாட்னி ஷோ வுக்கு டிக்கெட் கிடைத்தது.
மிகப்பெரிய
திரையரங்கம். அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் மலையாளிகள். அவர்களே
வசனம் புரியாவிட்டாலும் தலைவர் வரும் காட்சியில் எல்லாம் கை தட்டி
விசிலடித்து ஆரவாரம் செய்தார்கள். படம் சூப்பர் ஹிட். அன்று தான் தலைவர்
தமிழ்நாட்டில் மட்டும் சூப்பர் ஸ்டார் இல்லை. தென்னகத்துக்கே அவர்தான்
என்று புரிந்தது.
அடுத்தது சந்திரமுகி ரிலீஸ் போது நான் தனியார் கட்டுமான நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக இருந்தேன். முன்பே தலைவருக்கு கேரளாவில் இருக்கும் மாஸ் தெரிந்ததால் சென்னையில் திட்டமிடுவது போல் ஒரு வாரத்திற்கு முன்பே எப்படி சினிமாவுக்கு செல்வது என்று பிளான் செய்து விட்டோம்.
படம் ரிலீஸ் அன்று மம்மூட்டி, மோகன்லால், திலீப் ஆகியோரின் படமும், கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் டாகுடர் விஜய்யின் சச்சின் ரிலீஸ். ஆனால் மற்ற படங்கள் எல்லாம் ஒரு தியேட்டரில் தான் ரிலீஸ். சந்திரமுகி மட்டும் 6 தியேட்டரில் ரிலீஸ். எங்களுக்கோ ஆச்சரியம் தாங்கவில்லை. அவர்களின் பெரிய நடிகர்களின் படம் ஒரு தியேட்டரில் வருகிறது. சூப்பர் ஸ்டாரின் படத்தை 6 தியேட்டரில் ரிலீஸ் செய்கிறார்களே என்று.இரவு காட்சிக்கு தியேட்டருக்கு சென்றால் செமகூட்டம். நிறைய தமிழர்களும் இருந்தார்கள். அவகளிடம் நீங்கள் எந்த ஊர் என்று கேட்டால் அவர்கள் எல்லாம் நாகர்கோயிலில் இருந்து வந்திருப்பதாகவும் அங்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றும் சொன்னார்கள். ஆச்சரியப்பட்டு போனேன்.
உள்ளுர் மலையாளி ஒருவன் வரிசையில் நிற்கும் எங்கள் தோளின் மீது ஏறி டிக்கெட் எடுப்பதற்காக முன் சென்றான். அவ்வளவு தான். ஏற்கனவே மலையாளிகளின் மீதான கடுப்பும் சேர்ந்து அவனை கீழே இழுத்துப் போட்டு செம மொத்து மொத்தினோம். பாரபட்சமில்லாமல் எல்லாத் தமிழர்களிடம் இருந்தும் அவனுக்கு அடி விழுந்தது.
படம் முழுக்க ஆரவாரம் தான். மொழி கடந்து, மாநிலம் கடந்து எங்கும் தலைவர் தலைவர் தான்.
ஆரூர் மூனா

என்னது... வட்டத்துல இருப்பது நீங்களா...? !
ReplyDeleteசூப்பர்!!! தலைவர் மாஸ் எப்பவுமே டாப்புதான்!!!!!
ReplyDeleteஉடல் நலம் தேறி மீண்டும் நிறைய்ய்ய்ய்ய பதிவெழுதுங்கள் தல...
ReplyDeleteஆனா, தமிழ்நாட்டுல அவரு பழைய பெருங்காய டப்பா ஆகிட்டாரே சார்!
ReplyDeleteசந்திர முகி முதன் முதலில் எடுக்கப் பட்டதே மலையாளத்தில் தான், அப்படி இருந்தும் கூட்டமா!!
ReplyDeleteஅந்த ரயில்வே ஸ்டாலில் உங்க படத்தை பார்த்தா, "எப்படி இருந்த நான்.......இப்படி ஆயிட்டேன்......." டயலாக் தான் ஞாபகத்துக்கு வருது!!
சமீப காலமாக உங்கள் எழுத்தை தவறாது வாசிப்பவன் என்ற முறையில், உங்களுக்கு தனி நபர்களால் ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்திற்கு மலையாள இனத்தையே தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது எந்த வகையில் சரி என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் ஏமாற்றுக்காரர்களே இல்லையா? இல்லை தமிழகத்தில் ஒரு கொள்ளை, கொலை நடந்தால் தமிழர்கள் எல்லோரும் கொள்ளைக்காரர்கள் கொலைகாரர்கள் என்று முடிவு கொள்ளலாமா?
ReplyDeleteநான் பிறப்பால் தமிழனனாலும் பூர்விகம் கேரளம் தான் சந்தேகம் வேண்டாம்.