சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, January 9, 2012

புத்தக கண்காட்சியில் பதிவர்களுடன் கலாட்டா சந்திப்பு

புத்தக கண்காட்சி துவங்கிய இரண்டாம் நாளே நான் ஒரளவுக்கு வாங்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த புத்தகங்களை வாங்கியாகி விட்டது. சனியன்று பதிவுலக நண்பர்கள், மெட்ராஸ்பவன் சிவா, பிலாசபி பிரபா, கேஆர்பி அண்ணன், ஓஆர்பி ராஜா அண்ணன், கேபிள் அண்ணன் ஆகியோர் புத்தக கண்காட்சியில் இருப்பதாக தெரிய வந்ததாலும் என் சித்தி மகன் சங்கர் புத்தகங்களை வாங்க வேண்டி என்னை அழைத்ததாலும் நான் சென்றேன். வெள்ளியன்று இருந்தது போல் இல்லாமல் சனியன்று கசகசவென்று ஒரே கூட்டம்.

சில புத்தகங்களை சங்கருக்கு வாங்கி கொடுத்து விட்டு டிஸ்கவரி ஸ்டால் பக்கம் வந்த போது பதிவுலக நண்பர்கள் அனைவரையும் சந்தித்து அளவளாவினேன். பாண்டிச்சேரியிலிருந்து பதிவு வாசகர் நண்பர் மனோகரனை முதன்முறையாக சந்தித்தேன். நானே சற்றும் எதிர்ப்பார்க்காத நான் படித்த பள்ளியை பற்றி எழுதிய பதிவை சிலாகித்து பேசினார். நண்பர்களுடன் சந்திப்பு மிகுந்த கலாட்டாவாக இருந்தது. அப்பொழுதே மணி இரவு 08.30 ஆகி விட்டிருந்ததால் நான் திருவாரூரைப் பற்றி குடவாயி்ல் பாலசுப்பிரமணியன் எழுதிய புத்தகங்களை வாங்க வேண்டியிருந்ததால் அப்பொழுதே அரட்டை குழுவிலிருந்து விலகி சென்றேன். அங்கு சென்றால் அண்ணன் வீடு திரும்பல் மோகன் குமார் வந்தார். அவரிடமும் அளவளாவி விட்டு மணி 9 ஆனதால் வளாகத்தை விட்டு வெளியேறினோம்.

இரண்டாம் முறையாக சென்ற போது நான் வாங்கிய நூல்கள் :
குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய திருவாரூர், தஞ்சாவூர் கோயில்கள், டாக்டர் காயத்ரி எழுதிய ரஜினி பேர கேட்டாலே, நல்ல தமிழ்ப் பெயர்கள், தியாகத்தின் பாதையில் திலீபனுடன் 12 நாட்கள், Kbb. நவீனின் நீங்களும் இயக்குனராகலாம், காந்தியும் காங்கிரசும் - ஒரு துரோக வரலாறு, கேபிள் அண்ணனின் தெர்மகோல் தேவதைகள், சினிமா வியாபாரம், மீண்டும் ஒரு காதல் கதை, முனைவர்.வெ.மு. ஷாஜகான் கனியின் சினிமா எடுக்கலாம் வாங்க, புலவர் மு.பசுமலையசுவின் செந்தமிழும் சித்த மருத்துவமும், அமரர் கல்கியின் தியாக பூமி, ஒரு யோகியின் சுயசரிதம், சிவசங்கரியின் நண்டு, ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஆதனூர் சோழனின் அமெரிக்க எதிர்ப்பின் சிற்பி பிடல் காஸ்ட்ரோ, யுவகிருஷ்ணாவின் அழிக்கப்பிறந்தவன், ஜெயகாந்தனின் யுக சந்தி, சுஜாதாவின் ஓலைப்பட்டாசு, சுஜாதாட்ஸ், பா. தீனதயாளனின் கமல், ஆர். முத்துக்குமாரின் வாத்யார் எம்ஜிஆர், ரகோத்தமனின் ராஜீவ் கொலை வழக்கு ஆகியவை.


இந்த ஆண்டு புத்தகங்கள் வாங்கிய வரை போதும் என்று நினைக்கிறேன். இனிமேல் அடுத்த ஆண்டு புத்தக திருவிழாவில் தான் வாங்க வேண்டும்.

ஆரூர் முனா செந்திலு


Sunday, January 8, 2012

பி.யூ. சின்னப்பா கடைசி நாட்கள்...

"நடிக மன்னன்" என்று புகழ் பெற்றவரும், வீரதீரச் செயல்கள் செய்வதில் இணையற்ற வருமான பி.யு.சின்னப்பா, யாரும் எதிர்பாராத வகையில் ரத்த வாந்தி எடுத்து மரணம் அடைந்தார். அப்போது, அவருக்கு வயது 35. சின்னப்பா மிகவும் சிக்கனமானவர். பீடிதான் குடிப்பார்; சாராயம்தான் அருந்துவார். சினிமா மூலம் கிடைத்த வருமானத்தை வீணாக்காமல், புதுக்கோட்டையில் வீடுகள் வாங்கிக் குவித்தார். எங்கு பார்த்தாலும், சின்னப்பாவின் வீடுகள். இதுபற்றி புதுக்கோட்டை மன்னருக்கு தகவல் போயிற்று. "இனிமேல் சின்னப்பா வீடு வாங்கக்கூடாது" என்று தடை விதிக்கப்பட்டது. இதனால், சென்னையில் வீடுகள் வாங்கினார்.

1951ல் "வனசுந்தரி" என்ற படத்தில் சின்னப்பா நடித்தார். ஜோடி டி.ஆர்.ராஜகுமாரி. படம் சுமார் ரகம். இந்த சமயத்தில், தமிழ்ப்பட உலகில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், பின்னணி பாடும் முறை வந்துவிட்டது. எனவே, கதாநாயகனாக நடிப்பவர்கள் சொந்தமாகப் பாடும் திறமை பெற்றிருக்க வேண்டும் என்ற நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

1946ல் வெளிவந்த "ஸ்ரீவள்ளி" மூலம், டி.ஆர்.மகாலிங்கம் ஒரு சூப்பர் ஸ்டாராக உருவானார். "நாம் இருவர்" படம், அவர் புகழை மேலும் உயர்த்தியது. ஜ×பிடர் தயாரிப்பான "ராஜகுமாரி" மூலம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக அறிமுகமாகி முன்னேறிக்கொண்டிருந்தார். கே.ஆர்.ராமசாமியும் நட்சத்திர அந்தஸ்து பெற்றார். "சந்திரலேகா", "ஞானசவுந்தரி", "ஏழைபடும்பாடு", "வேலைக்காரி" முதலிய தரமான படங்கள் வெளிவந்து வெற்றி பெற்று, ரசிகர்களின் ரசனையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. இதனால், சின்னப்பாவின் முன்னேற்றத்தில் தேக்க நிலை ஏற்பட்டது. படம் குறைந்து போனதால், சின்னப்பா ஸ்பெஷல் நாடகங்களில் நடித்தார்.

"வானவிளக்கு" என்ற பெயரில் நடத்தி வந்த நாடகத்தை சொந்தத்தில் படமாகத் தயாரிக்கத் திட்டமிட்டார். கத்திச்சண்டையில் "சுருள் பட்டா" என்பது புதுமையானது; ஆபத்தானது. சுருளின் முனையில் கூரிய கத்தி பொருத்தப்பட்டு இருக்கும். கைப்பிடியை பிடித்தபடி "சுருள் பட்டா"வை வீசினால், கத்தி சுழன்றபடியே சென்று, எதிரியின் தலையை கொய்து கொண்டு வரும்! குறி தவறினால், வீசியவனின் தலைக்கு ஆபத்து! இந்த "சுருள் பட்டா" சாகசச் செயலை "வான விளக்கு" படத்தில் புகுத்த சின்னப்பா திட்டமிட்டிருந்தார். புதுக்கோட்டையில் தன் வீட்டில் தங்கியிருந்த சின்னப்பா, அன்றைய தினம் "மணமகள்" சினிமா படம் பார்க்க நண்பர்களுடன் சென்றார்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சொந்தமாகத் தயாரித்து, டைரக்ட் செய்திருந்த படம் இது. லலிதா, பத்மினி, டி.எஸ்.பாலையா நடித்திருந்தனர். படம் பார்த்துவிட்டு இரவு சுமார் 10 மணிக்கு வீடு திரும்பிய சின்னப்பா, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று, "மயக்கம் வருகிறதே" என்றார். உடனே ரத்த வாந்தி எடுத்தபடி மயங்கி விழுந்தார். ஒரு சில நிமிடங்களில் மரணம் அடைந்தார். உடன் இருந்த நண்பர்கள் கதறி அழுதனர். சின்னப்பா இறந்தபோது, அவருடைய தந்தை உலகநாதப் பிள்ளை உயிருடன் இருந்தார். மகன் புகழின் சிகரத்தை அடைந்ததைக் கண்டு மனம் மகிழ்ந்திருந்த அவர், மகனின் எதிர்பாராத மரணத்தால் கதறித் துடித்தார். மறுநாள் இறுதி ஊர்வலம் நடந்தது.

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். சின்னப்பாவின் சொந்த தோட்டத்தில், அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறக்கும்போது சின்னப்பாவுக்கு வயது 35தான். நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருந்த அவர் திடீரென்று மரணம் அடைந்தது, திரை உலகை அதிர்ச்சி அடையச் செய்தது.

இறக்கும்போது, "சுதர்சன்" என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே சின்னப்பா நடித்துக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் படமாகி முடிந்துவிட்டன. "கோராகும்பர்" என்ற பெயரில் ஏற்கனவே படமாக வெளிவந்த புராணக் கதைதான் இது. சின்னப்பாவுடன் ஜோடியாக கண்ணாம்பாவும் (யோக) மங்களமும் நடித்தனர். பாகவதர் நடித்த "ஹரிதாஸ்" படத்தை எடுத்த ராயல் டாக்கீசார்தான் இப்படத்தைத் தயாரித்தனர். கதை வசனத்தை ஏ.எஸ்.ஏ.சாமியும், இளங்கோவனும் இணைந்து எழுதினர். "ஹரிதாஸ்" படத்தை இயக்கிய கந்தர்ராவ் நட்கர்னியும், ஏ.எஸ்.ஏ.சாமியும் டைரக்ட் செய்தனர். சின்னப்பாவின் மரணத்துக்குப் பின்னர் இந்தப்படம் வெளிவந்தது. சரியாக ஓடவில்லை.

ஆரூர் முனா செந்திலு

------------------------------------

எனது முந்தைய பதிவு : சிங்கப்பூரில் ஹோட்டல் வெயிட்டர் வேலை வாய்ப்பு / கல்வித்தகுதி : 10ம் வகுப்பு

-----------------------------------

சிங்கப்பூரில் ஹோட்டல் வெயிட்டர் வேலை வாய்ப்பு / கல்வித்தகுதி : 10ம் வகுப்பு

சிங்கப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வெயிட்டர் மற்றும் கிளீனர் ஆக பணிபுரிய ஆட்கள் தேவை.

கல்வித்தகுதி : குறைந்த பட்சம் 10ம் வகுப்பு

சம்பளம் : 1100 சிங்கப்பூர் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 44,000)

உணவு தங்குமிடம் இலவசம்

விசா : இரண்டு வருடம்.

விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 8883072993
ஈமெயில் ஐடி : senthilkkum@gmail.com

**********

சிங்கப்பூரில் உள்ள ஹோட்டலில் பணிபுரிய பரோட்டா மாஸ்டர், தென்னிந்திய சமையற்காரர் தேவை.


சம்பளம் : 1200 சிங்கப்பூர் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 48,000)

உணவு தங்குமிடம் இலவசம்.

விசா : இரண்டு வருடம்.

விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 8883072993
ஈமெயில் ஐடி : senthilkkum@gmail.com

********
மற்றும் சிங்கப்பூரில் வீட்டுவேலைக்கு பெண்கள் தேவை.
மாத சம்பளம் ரூபாய் : 12000
உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்
விசா இலவசம்

விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள : 8883072993



Saturday, January 7, 2012

புத்தக கண்காட்சியில் முதல் சுற்றும், நாய் நக்ஸின் ஜெனரேட்டரும்

நேற்று மாலை 4 மணிக்கு புத்தக கண்காட்சிக்கு சென்று முதல் சுற்று முடித்து விடுவோம். அப்பொழுது தான் ஞாயிறன்று குடும்பத்தாருடன் செல்லும் போது வசதியாக இருக்கும் என்று நினைத்து சென்றேன். வழக்கம் போல் பார்க்கிங்கில் வண்டியைப் போட்டு விட்டு நுழைவுக் கட்டணம் வாங்கிக் கொண்டு உள் நுழைந்தேன். சில ஸ்டால்களில் புத்தங்கள் வந்து அடுக்கிக் கொண்டு இருந்தனர். கூட்டமும் குறைவாக இருந்தது. பதிவர்கள் யாராவது தட்டுபடுவார்களா என்று பார்த்தேன். யாரும் சிக்கவில்லை. உள்ளே நுழைந்ததும் கேஆர்பி அண்ணனுக்கு போன் செய்து பணம் புத்தகம் கிடைக்கும் இடத்தை பற்றி கேட்டு அறிந்து கொண்டேன்.

கண்காட்சியில் நேற்று எழுத்தாளர் ஞானி மற்றும் திலகவதி ஐ.பிஎஸ் ஆகியோரை பார்த்தேன். என் மனைவி மற்றும் என் அக்கா, அத்தானுடன் வந்தால் நிறைய புத்தகங்களை வாங்க முடியாது என்பதால் முதல் சுற்றிலேயே சில புத்தகங்கள் வாங்கினேன். மெட்ராஸ் பவன் சிவக்குமாரிடம் போன் செய்து விசாரித்த போது தான் இன்று (சனிக்கிழமை) வருவதாக கூறினார். அவருடன் இரண்டாவது ரவுண்டு செல்ல வேண்டும்.

சு. வெங்கடேசனின் காவல் கோட்டம், தி.ஜா வின் மரப்பசு, எல்.கே.எம் பப்ளிகேசனின் வெளியீடான பொன்னியின் செல்வன், பாலகுமாரனின் தாயுமானவன், சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள், தோழமை வெளியீடான பிரபாகரன் - இவன் ஒரு வரலாறு, பெரியாரைப் பற்றி கிழவனல்ல கிழக்கு திசை, ஜெயகாந்தனின் ஊருக்கு நூறு பேர், சுஜாதாவின் சில வித்தியாசங்கள், சுஜாதாவின் ஜே.கே., சுஜாதாவின் வண்ணத்துப் பூச்சி வேட்டை, சுஜாதாவின் சிறுகதை எழுதுவது எப்படி, சுஜாதாவின் தோரணத்து மாவிலைகள் மற்றும் கேஆர்பி அண்ணனின் பணம் ஆகிய புத்தகங்களை வாங்கினேன். வாங்க நினைத்து வாங்க முடியாமல் வந்தது கேபிளின் சினிமா வியாபாரம், நீங்களும் இயக்குனராகலாம் ஆகியவை. எங்குமே கிடைக்கவில்லை டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டாலில் கூட.

அந்த சமயத்தில் எனக்கு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க போன் வந்தது. யாரென்று பார்த்தால் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமியாக வலம் வரும் நம்ம நாய் நக்ஸ். காலையில் தான் அவருக்கு உங்கள் பதிவில்லாமல் பதிவுலகில் பலர் பித்து பிடித்து திரிகிறார்கள். பதிவிடுங்கள் அய்யா என்று பின்னூட்டமிட்டிருந்தேன். அதற்காக போன் செய்தாராம். போனை ஆன் செய்ததுமே யோவ் சிதம்பரத்திற்கு உடனடியாக ஓரு ஜெனரேட்டர் பார்சல் அனுப்பு என்றார். ஏன் என்றால் இன்னும் அங்கெல்லாம் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லையாம். யோவ் உனக்கு ஜெனரேட்டர் அனுப்பும் செலவை கணக்கிட்டால் நீயே பஸ் பிடித்து சென்னை வந்து பதிவிட்டு செல் என்றேன். அவர் பதிவெல்லாம் எவ்வாறு எழுதலாம் என்று கணக்கிட்டு விட்டாராம். கரண்ட் வந்ததும் உடனடியாக பதிவிட்டு பதிவர்கள் அனைவரையும் கொல்லப் போவதாக சொல்லி போனை கட் செய்தார். ஆஹா இதற்கு தானே புயல் என்னையும் கொண்டு சென்றிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

இன்னும் சில புத்தகங்கள் வாங்கியிருப்பேன், அதற்குள் என் அக்கா எனக்கு போன் செய்து தனக்கு ஆன்லைன் தேர்வு இருப்பதாகவும் உதவும்படியும் கேட்டுக் கொண்டதால் 5 மணிக்கே கண்காட்சியை விட்டு வெளியேறி விட்டேன். எனக்கு 'சோ'வின் சில புத்தகங்கள், வண்ணநிலவனின் நாவல்கள், வல்லிக்கண்ணனின் நாவல்கள் வாங்க வேண்டுமென்று ஆசை. ஆனால் நேற்று தேடிய ஸ்டால்கள் வரை கிடைக்கவில்லை. ஞாயிறன்று காலையிலேயே வந்து தேடிப்பார்த்து வேண்டிய புத்தகங்களை வாங்கி செல்ல வேண்டும்.

ஆரூர் முனா செந்திலு


Friday, January 6, 2012

சத்யஜித் ரே...

சத்யஜித்ரே 1921ம் ஆண்டு மே 2ந்தேதி கொல்கத்தாவில் பிறந்தார். தந்தை பெயர் சுகுமார்ராய். தாயார் சுப்ரபா. பாடகி. பட்டப்படிப்பை முடித்த பிறகு அவர் சாந்தினிகேதன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஓவியக்கலை பயின்றார். சத்யஜித்ரே தயாரித்த "தேவி" என்ற படத்தில் சார்மிளா டாகூர். இளம் வயதிலேயே திரைப்படத்துறையிலும், இசையிலும் நாட்டம் உடையவர், சத்யஜித்ரே. இதனால் 1950ம் ஆண்டு அவர் லண்டனுக்குச் சென்றார். அங்கே உலகின் மிகச்சிறந்த படங்களை காணும் வாய்ப்பு கிடைத்தது. சினிமா படத்தின் நுட்பங்களை நன்கு கற்றறிந்தவராய் இந்தியா திரும்பினார்.

தனது முதல் படமான "பாதர் பாஞ்சாலி"யை தயாரிக்கத் தொடங்கினார். படத்தை முடிப்பதற்கு பணம் இல்லாமல் அவதிப்பட்டார். பல இடங்களில் கடன் வாங்கினார். மனைவியின் நகைகளை அடகு வைத்தார். இறுதியில், மேற்கு வங்காள அரசின் பண உதவியுடன் படத்தை முடித்து `ரிலீஸ்' செய்தார். முதலில், தியேட்டர்களில் கூட்டமே இல்லை. முதல் வாரத்தை விட இரண்டாவது வாரம் கூட்டம் அதிகரித்தது. நாட்கள் செல்ல செல்ல படத்தின் புகழ் பரவியது. அதன் பிறகு கொட்டகை நிறைந்த காட்சிகளாக படம் நீண்ட காலம் ஓடியது.

அந்த ஆண்டு, ஜனாதிபதியின் தங்கப்பதக்கம், "பாதர் பாஞ்சாலி"க்கு கிடைத்தது. பின்னர் பல்வேறு நாடுகளில் நடந்த உலகப்பட விழாக்களுக்கு "பாதர் பாஞ்சாலி" அனுப்பப்பட்டு பல பரிசுகளைப் பெற்றது. தொடர்ந்து அவர் தயாரித்த "அப்ராஜிதோ", "அபூர் சன் சார்", "சாருலதா", "ஜல் சாகர்", "தேவி", "ஆஷானி சங்கேத்", "ஜன ஆரண்யா" முதலான படங்கள் உலக நாடுகளில் திரையிடப்பட்டு, சத்யஜித்ரேக்கு உலகப் புகழை தேடித்தந்தன.

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சத்யஜித்ரே முழுக்க முழுக்க யதார்த்தமான முறையில் படம் தயாரித்து உலகப்புகழ் பெற்றவர். "டைரக்டர்களின் டைரக்டர்" என்று போற்றப்பட்டார். 1955ம் ஆண்டில் இவர் தயாரித்த "பாதர் பாஞ்சாலி" என்ற வங்காளி மொழிப்படம், உலகப் பட விழாக்களில் திரையிடப் பட்டு பரிசுகள் பெற்றது.


சத்யஜித்ரே திரை உலகுக்கு செய்த சேவையைப் பாராட்டி, 1989ல் அன்றைய பிரான்ஸ் அதிபர் மிட்ரண்ட் பதக்கம் வழங்கினார். அதைத்தொடர்ந்து அவர் தயாரித்த எல்லா படங்களுமே, அகில உலகிலும் திரையிடப்பட்டு, பரிசும், பாராட்டும் பெற் றன. உலக திரைப்பட அரங்கில் அவர் தனக்கென்று தனி முத்திரை பதித்ததோடு, இந்திய திரைப்படங்களுக்கும் கவுரவத்தைத் தேடிக்கொடுத்தார்.

திரைப்பட டைரக்ஷன் மட்டுமின்றி, இசை அமைப்பு, ஓவியம் தீட்டுதல், குழந்தைகளுக்கான கதைகள் எழுதுதல் ஆகியவற்றிலும் சத்யஜித்ரே வல்லவர். சத்யஜித்ரே தயாரித்து டைரக்டு செய்த படங்களில் பெரும் பாலானவற்றுக்கு அவரே இசை அமைத்தார். அவர் தயாரித்த படங்களில் பெரும்பாலானவை வங்க மொழிப்படங்கள். ஒரு சில படங்கள் மட்டும் இந்தியில் வெளிவந்தன. செய்தி படங்களும் (டாக்குமெண்டரி) குழந்தைகளுக்கான படங்களும் தயாரித்தார்.

கலைத்துறைக்கு அவர் ஆற்றிய சேவைகளை பாராட்டி லண்டன் பல்கலைக்கழகமும், இந்தியாவில் டெல்லி உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களும் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தன. அதோடு 1959ல் "பத்மஸ்ரீ" பட்டமும், 1965ல் "பத்மபூஷண்" பட்டமும், 1976ல் "பத்ம விபூஷன்" பட்டமும் அவருக்கு கிடைத்தன.

உலக அளவில் சிறந்த சினிமா படங்கள், திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகப் பெரிய விருது "ஆஸ்கார்" விருது ஆகும். சிறந்த டைரக்டருக்கான "ஆஸ்கார்" விருதை சத்யஜித்ரேக்கு வழங்க ஆஸ்கார் குழு முடிவு செய்தது. 1991ம் ஆண்டு இறுதியில் இது அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் `ஆஸ்கார்' விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள சத்யஜித்ரேக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேரில் சென்று இந்த விருதை பெற சத்யஜித்ரே விரும்பினார். ஆனால் சத்யஜித்ரேக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மாரடைப்பு காரணமாக உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் ஆஸ்கார் பரிசை அவரிடம் ஒப்படைக்க லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 2 பேர் கொண்ட "ஆஸ்கார் குழு" கொல்கத்தாவுக்கு வந்தது. சினிமா உலகுக்கு சத்யஜித்ரே செய்த சிறப்பான சேவைகளை பாராட்டி தங்கத்தினால் ஆன "ஆஸ்கார்" விருதை அவரிடம் இந்த குழுவினர் ஆஸ்பத்திரிக்கு சென்று ஒப்படைத்தனர். சத்யஜித்ரேயின் குடும்பத்தினர் அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டது. படுத்த படுக்கையில் இருந்த சத்யஜித்ரே கண்களில் கண்ணீர் மல்க "ஆஸ்கார்" பரிசை பெற்றுக்கொண்டு நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்தார்.

இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் மிக உயர்ந்ததான "பாரத ரத்னா" விருது சத்யஜித்ரேக்கு வழங்கப்பட்டது. சத்யஜித்ரே ஆற்றியுள்ள தொண்டுகளுக்காக அவருக்கு "பாரத ரத்னா" விருது வழங்கப்படுகிறது என்று ஜனாதிபதி மாளிகை அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. இந்திய சினிமாத்துறையில் "ஆஸ்கார் விருது", "பாரத ரத்னா" விருது ஆகிய இரண்டு மிகப்பெரிய விருதுகளை பெற்றவர் சத்யஜித்ரே ஒருவர்தான். "பாரத ரத்னா" விருது கிடைத்ததை யொட்டி சத்யஜித்ரே தயாரித்த புகழ் பெற்ற சினிமா படங்கள் டெலிவிஷனில் ஒருவார காலம் ஒளிபரப்பப்பட்டன.

சுமார் 3 மாத காலம் ஆஸ்பத்திரியிலேயே இருந்த சத்யஜித்ரே உடல் நிலையில் அவ்வப்போது முன்னேற்றம் ஏற்பட்டபோதிலும் அபாய கட்டத்திலேயே இருந்து வந்தார். மூச்சு திணறல் காரணமாக அவர் அவதிப்பட்டார். 23.4.1992 அன்று அவரது உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது. மாலை 5.45 மணிக்கு உயிர் பிரிந்தது. சத்யஜித்ரே உடல் கொல்கத்தாவில் உள்ள நந்தன் அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன்பிறகு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

ஆரூர் முனா செந்திலு

Thursday, January 5, 2012

அடிமையாக்கும் வலைப்பூ




கடந்த சில நாட்களாக கம்ப்யூட்டரில் வைரஸ் பிராப்ளம் இருந்ததால் என்னால் பதிவெழுத முடியவில்லை. கடந்த 6 மாதங்களாக மட்டும் தான் நான் தீவிரமாக பதிவெழுதி வந்தேன். ஆனால் அதன் பாதிப்பு அதனை விட்டு சில நாட்கள் விலகியிருந்தால் தான் தெரிகிறது. ஒருநாள் எழுதாவிட்டால் ஏதோ நம்மை விட்டு ஒன்றை இழந்த அளவுக்கு மனது பாதிப்படைகிறது. தூங்கும் போதும் கனவுகள் பதிவு, ஒட்டு, பின்னூட்டம், சர்ச்சை, ஈரோடு பதிவர் சந்திப்பு, மெட்ராஸ் பவன் சிவக்குமார், கேஆர்பி அண்ணன், அபி அப்பா ஆகியவைகளை தொடர்பு படுத்தியே அமைகின்றன. இனிமேல் இணையத்தில் இருக்கும் நேரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். தற்பொழுது பரவாயில்லை, வேலையில் சேர்ந்த பிறகு இந்த அளவுக்கு நேரத்தை செலவிட முடியுமா என்பது சந்தேகம் தான்.

முன்பெல்லாம் காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை இணையத்தில் இருப்பேன். சாப்பிடுவதும் கம்ப்யூட்டர் முன்பு தான். இந்த ஐந்து நாட்களாக அது இல்லாமல் தரையில் அமர்ந்து சாப்பிடுகிறேன். மாற்றம் தெரிகிறது. வாங்கி பல நாட்களாக படிக்காமல் இருந்த பல புத்தகங்களை இந்த ஐந்து நாட்களுக்குள் படித்து முடித்து விட்டேன்.

ஆனால் பாருங்கள். இன்று கம்ப்யூட்டர் சரி செய்யப்பட்டு விட்டது. மறுபடியும் இணையத்தில் இருந்தால் மற்ற வேலைகள் கடினம் என்பது புரிய ஆரம்பித்து விட்டது. ஆனால் மனது பதிவெழுது, பின்னூட்டமிடு என்றே தூண்டுகிறது. இது போதாது என்று வலைச்சரத்தில் எழுதுமாறு சீனா அய்யா அவர்கள் கேட்டிருக்கிறார். அதில் புதிய பதிவர்களை அறிமுகப்படுத்த வேண்டுமாம். அதற்காக புதிதாக வந்துள்ள பதிவர்களின் பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். அந்த வேலை முடித்தவுடன் இணையத்தில் இருக்கும் நேரத்தை குறைக்க முயற்சிப்பேன் என்று நினைக்கிறேன்.


ஆரூர் முனா செந்திலு

டிஸ்கி : சில நாட்களாக என்னால் எனது பதிவை தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை. யாராவது உதவி செய்யுங்கள்.

Monday, January 2, 2012

முதறிஞர் ராஜாஜியின் கடைசி நாள்...

தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இரண்டு முறை பதவி வகித்தவர் ராஜாஜி. "இந்தியாவின் ஒரே இந்திய கவர்னர் ஜெனரல்" என்ற பெருமைக்கு உரியவர். "என் மனச்சாட்சியின் காவலர்" என்று மகாத்மா காந்தியால் புகழப்பட்டவர். உலகின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். ரத்தத்துடன் சிறுநீர் கலந்துவிடும் "யூரிமியா" என்ற நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக, 17.12.1972 அன்று சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் ராஜாஜி சேர்க்கப்பட்டார். தொடக்கத்தில் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டபோதிலும், பிறகு பின்னடைவு ஏற்பட்டது. மூன்று நாட்கள் மரணத்துடன் போராடினார். டாக்டர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், குணம் ஏற்படவில்லை. டிசம்பர் 25ந்தேதி மாலை 5.44 மணிக்கு ராஜாஜி மரணம் அடைந்தார். உயிர் பிரியும்போது சி.ஆர்.நரசிம்மன், மகள்கள் நாமகிரி, லட்சுமி, பேரப்பிள்ளைகள், முதல் அமைச்சர் கருணாநிதி ஆகியோர் அருகில் இருந்தனர்.

ராஜாஜி மரணம் அடைந்த செய்தியை, டாக்டர் சத்தியநாராயணா அறிவித்தார். அப்போது, ஆஸ்பத்திரியில் கூடி இருந்தவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். ராஜாஜியை பார்க்க, நிருபர்கள் அனுமதிக்கப்பட்டனர். இறந்த பின்னும் தூங்குவது போலவே ராஜாஜியின் முகம் அமைதியாக காட்சி அளித்தது. அருகே, ராஜாஜியின் மகன் நரசிம்மன், மகள்கள் நாமகிரி, லட்சுமி, குடும்ப நண்பர் "கல்கி" சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் கதறி அழுதபடி இருந்தனர். ராஜாஜியின் உடலைப் பார்த்து முதல் அமைச்சர் கருணாநிதி, பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர் ஆகியோரும், அமைச்சர்களும், சுதந்திரா கட்சி பிரமுகர்களும் கண் கலங்கிய படி நின்றனர். ராஜாஜியின் உடல் மீது, டாக்டர்கள் சார்பில் மலர் மாலை ஒன்று வைக்கப்பட்டது.

சில மதச் சடங்குகளுக்குப்பின், மாலை 6.50 மணிக்கு ஆஸ்பத்திரியில் இருந்து ராஜாஜி மண்டபத்துக்கு ராஜாஜியின் உடல் கொண்டு போகப்பட்டது. ராஜாஜியின் உடலை ராணுவ அதிகாரிகள் ஒரு "ஆம்புலன்ஸ்" வண்டியில் ஏற்றினார்கள். இந்த ஆம்புலன்சுக்கு முன்னால் 4 ராணுவ வீரர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றார்கள். அதன் பிறகு போலீஸ் அதிகாரிகள் 2 "ஜீப்" களில் சென்றார்கள். இதன்பின் "ஆம்புலன்ஸ்" வண்டி சென்றது. "ஆம்புலன்ஸ்" வண்டியில் ராஜாஜியின் மகன் நரசிம்மன், பேரன் ராஜ்மோகன் காந்தி, சுதந்திரா கட்சித் தலைவர் ஹண்டே ஆகியோர் இருந்தார்கள். ராஜாஜி உடல் வந்து சேருவதற்கு முன்பாகவே முதல் அமைச்சர் கருணாநிதியும், மற்ற அமைச்சர்களும், தலைவர்களும் ராஜாஜி மண்டபத்திற்கு வந்து இருந்தார்கள். ராஜாஜியின் உடல் கொண்டு வந்து வைக்கப்பட்டதும் அதன் மீது கருணாநிதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மற்றவர்களும் மலர் வளையம் வைத்தனர். 6 அடி உயர மேடை மீது ராஜாஜி உடல் வைக்கப்பட்டது. உடல் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டது. மேடையின் 4 பக்கங்களிலும் ராணுவ வீரர்கள் துப்பாக்கியை தலைகீழாக பிடித்தபடி நின்றார்கள். ராஜாஜி மரணச்செய்தி சென்னை நகரில் காட்டுத்தீ போல் பரவியது. மக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக ராஜாஜியின் உடல் மேடை மீது வைக்கப்பட்டதும், ஆண்களும், பெண்களும் சாரி சாரியாகச் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்கள். ராஜாஜியின் உடல் அருகே மகன் நரசிம்மன், மகள்கள், பேரன் பேத்திகள் சோகமே உருவா அமர்ந்திருந்தனர். ராஜாஜி மறைவுக்கு தமிழக அரசு சார்பில் 7 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று, முதல் அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். "இந்த 7 நாட்களும், அரசு விழாக்கள் ரத்து செய்யப்படும். எல்லா கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்" என்று அவர் அறிவித்தார். மத்திய அரசும், 7 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தது.

ரேடியோவில், வழக்கமான நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, சோக இசை இசைக்கப்பட்டது. ராஜாஜி மறைவையொட்டி, மறுநாள் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. கடைகள் மூடப்பட்டன. ராஜாஜியின் உடல் ராஜாஜி மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம், ஜனாதிபதி வி.வி.கிரி வந்து, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கறுப்பு உடை அணிந்திருந்தார். சிறிது நேரம் வரை ராஜாஜியின் உடலைப் பார்த்தபடி கைகூப்பி நின்றார். அப்போது அவர் கண்கள் கலங்கின. பிறகு கவர்னர் கே.கே.ஷா ராஜாஜியின் உடல் மீது மலர் வளையம் வைத்து வணங்கினார். கைகூப்பியபடி மூன்று முறை மேடையை சுற்றி வந்தார்.

பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், டெல்லி மந்திரிகள் சி.சுப்பிரமணியம், மோகன் குமாரமங்கலம், தமிழ்நாடு தலைமை போலீஸ் அதிகாரி (ஐ.ஜி.) அருள், எம்.ஜி.ஆர். ஆகியோரும் மலர் வளையம் வைத்து வணங்கினார்கள். ராஜாஜிக்கு அனைத்து கட்சிகள் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

ஆரூர் முனா செந்திலு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...