பதிவுலக நட்புகளே,
கடந்த வருடம் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா(மாநாடு) சென்னையில் சிறப்பாக
நடத்தப்பட்டது தாங்கள் அறிந்ததே. சுமார் 200க்கும் அதிகமான பதிவர்கள் (பெண்களும்
கணிசமான எண்ணிக்கையில்) கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் பதிவர் சந்திப்பு திருவிழா சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பதிவர் திருவிழாவிற்கான பணிகள் மேற்கொள்வதற்காக கடந்த ஆண்டை போலவே பல்வேறு பதிவர் குழுக்கள் அமைக்கப்பட்டு அடுத்தடுத்த ஏற்பாடுகள் செய்ய முனைந்திருக்கிறார்கள். இந்த பதிவர் சந்திப்பு திருவிழா பணிகளில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பும் விருப்பமுள்ள பதிவர்கள் இணைந்து கொள்ளலாம்.
இந்த மாநாட்டிற்காக ஆகும் செலவுகளை சமாளிக்க விருப்பமுள்ள பதிவர்களிடம் அன்பளிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. ஏதோ ஒரு வகையில் அன்பளிப்பு குடுக்க இயலாமல் இருக்கும் பதிவர்கள், தங்களின் வருகையையே அன்பளிப்பாக தருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
கடந்த வருடம் வருகைதந்த பதிவர்கள் அனைவருக்கும் பண உதவி கேட்டு
மின்னஞ்சலாகவும் ஏனைய பதிவர்களுக்கு இந்த மாதிரி வெளிப்படையான பதிவுகளின் மூலமும்
அன்பளிப்பு கோர உத்தேசிக்கபட்டுள்ளது. அன்பளிப்பு அளிப்பது என்பது கட்டாயம் அல்ல,
என்பதனை இங்கே தெரியபடுத்தப்படுகிறது.
விழாவினை சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் நடத்த பதிவர்கள் தங்களது ஆலோசனைகளை
ஞாயிற்றுக் கிழமை தோரும் கே,கே.நகரில் உள்ள DISCOVERY BOOK PALACE-ல் மாலை 4 மணிக்கு நடக்கும் ஆலோசனைக்
கூட்டங்களின் போது தெரியப்படுத்தலாம், விழக்குழுவினர் அனைவரது கருத்துக்களையும்
திறந்த மனதோடு கேட்டு, ஒரு நாளில் நடக்கும் நிகழ்ழ்சி நிரலில் சாத்தியப்படும்
அனைத்தையும் சேர்க்க முனைவார்கள். யாரேனும் விழாக்குழுவினருடன் இணைந்து
பொறுப்புகளை ஏற்று நடத்த முன்வந்தால் அவர்களையும் இனைத்துக்கொண்டு பதிவர்
சந்திப்பு விழாவினை நடத்த விழாக்குழுவினர் முன் வந்திருக்கிறார்கள்.
இந்த விழாவிற்காக கதை, கட்டுரை, நகைச்சுவை, கவிதை போன்ற பிரிவுகளில் போட்டிகள்
நடத்தப்பட்டு, அதில் முதல் மூன்று இடங்களை பெறும் பதிவர்களுக்கு விழாவின் போது
பரிசுகள் வழங்க தீர்மானிக்கபட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் இன்னும் ஒரு
வாரத்தில் விழா ஏற்பாட்டு பதிவர்களின் பதிவுகள் மூலம் வெளியிடப்படும்.
இந்த சந்திப்பிற்கு வருகைதர விரும்பும் பதிவர்கள் மற்றும் அன்பளிப்பு அளிக்க
விரும்பும் பதிவர்கள் கீழ் கண்ட பதிவர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு தங்கள்
பெயர், வலைதளமுகவரி, எந்த ஊரிலிருந்து/நாட்டிலிருந்து வருகிறீர்கள் போன்ற தகவல்களை
குடுக்கவும். இந்த தகவல்கள், உணவு மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்ய மிகவும்
உதவியாக இருக்கும்.
செப்டம்பர் 1ம் தேதி (01-09-2013) ஞாயிற்றுக் கிழமை மாநாட்டு தேதியாக முந்தைய
ஆலோசனைக் கூட்டங்களில் முடிவ் செய்யப் பட்டு, சென்னை வடபழனியில் கமலா தியேட்டரை
ஒட்டி இடதுபுரத்தில் இருக்கும் “CINE MUSICIAN’S UNION” க்கு சொந்தமான கட்டடம் மாநாட்டுக்காக
புக் செய்யபட்டுள்ளது.
மாநாடு நடை பெறப்போகும் கட்டிடத்தின் முகத்தோற்றம்.
(வாசலில் திருஷ்டி பொம்மை போல் நிற்பது பட்டிக்காட்டான் ஜெய்)
கட்டிடத்தின் முன் பகுதியில் போதுமான இடவசதி உள்ளது.
வாயில்பகுதியிலிருந்து எடுத்த படம்.
வாகனங்கள் நிறுத்த போதுமான இடம் உள்ளது.
முதலில் கடந்த வருடத்தைப் போல் ஆகஸ்டு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான
ஆகஸ்ட் 25 ல் நடத்தலாமா என்று ஆலோசித்து அன்று பல பதிவர்கள் TNPSC தேர்வு எழுத
இருப்பதாக தெரிவித்ததை அடுத்து அந்த தேதி நிராகரிக்கபட்டது. செப். மாத
ஞாயிற்றுக்கிழமைகளில், செப்.8 முகூர்த்த தினமென்பதால் பல பதிவர்கள் அந்த தேதிக்கு
ஆட்சேபம் தெரிவிக்க அந்த தேதியும் வேண்டாம் என்று, முடிவில் செப். 1 ல் நடத்தலாம்
என்று முடிவெடுக்க பட்டுள்ளது.
பதிவர் மாநாட்டிற்கான தங்களது வருகையை தெரிவிக்க, தொடர்புகொள்ள வேண்டிய
பதிவர்கள் :
- மதுமதி – kavimadhumathi@gmail.com
- பட்டிகாட்டான் ஜெய் – pattikattaan@gmail.com
- சிவக்குமார் – madrasminnal@gmail.com
- ஆரூர் மூனா செந்தில் – senthilkkum@gmail.com
- அஞ்சாசிங்கம் செல்வின் – selwin76@gmail.com
- பாலகணேஷ் – bganesh55@gmail.com
- சசிகலா - sasikala2010eni@gmail.com
உங்களது பெயர், உங்கள் வலைதளமுகவரி, ஊர்/நாடு, தொலைபேசி எண்(optinal) தெரிவித்தால்,
உணவு தயார் செய்ய, வெளியூர் எனில் தங்கும் இட வசதி செய்து குடுக்க மிகவும் உதவியாக
இருக்கும்.
வரவேற்புக்குழுவில் சென்னையில் தங்குமிடம் ஏற்பாடு செய்தல், வாகன ஏற்பாடு செய்தல், டிக்கெட் முன்பதிவு செய்ய உதவுதல் போன்ற பணிகளை ஆரூர் மூனா செந்தில், அஞ்சாசிங்கம் செல்வின், மெட்ராஸ் பவன் சிவக்குமார், பிலாசபி பிரபாகரன் ஆகியோர் பொறுப்பேற்று செய்கின்றனர்.
சென்னை தவிர ஏனைய பகுதிகளில் உள்ள உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் மின்னஞ்சலில் அனுப்பியும் அலைபேசியில் அழைத்தும் விழாவுக்கு அழைத்து வரும் பொறுப்பை தமிழ்வாசி பிரகாஷ், சதீஷ் சங்கவி, வீடு சுரேஷ், பாண்டிச்சேரி கோகுல், திண்டுக்கல் தனபாலன் ஆகியோர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
பெண் பதிவர்களின் வரவேற்பு பொறுப்பை மின்னல் வரிகள் கணேஷ், தென்றல் சசிகலா ஆகியோர் ஏற்கின்றனர்.
மற்ற பதிவர்கள் இவர்களை தொடர்பு கொண்டு தங்களது வருகை, தங்குமிடம், வாகன வசதி பொன்றவற்றை உறுதி செய்து கொள்ளவும்.
சென்னை தவிர ஏனைய பகுதிகளில் உள்ள உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் மின்னஞ்சலில் அனுப்பியும் அலைபேசியில் அழைத்தும் விழாவுக்கு அழைத்து வரும் பொறுப்பை தமிழ்வாசி பிரகாஷ், சதீஷ் சங்கவி, வீடு சுரேஷ், பாண்டிச்சேரி கோகுல், திண்டுக்கல் தனபாலன் ஆகியோர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
பெண் பதிவர்களின் வரவேற்பு பொறுப்பை மின்னல் வரிகள் கணேஷ், தென்றல் சசிகலா ஆகியோர் ஏற்கின்றனர்.
மற்ற பதிவர்கள் இவர்களை தொடர்பு கொண்டு தங்களது வருகை, தங்குமிடம், வாகன வசதி பொன்றவற்றை உறுதி செய்து கொள்ளவும்.
ஆரூர் மூனா செந்தில்
பின்குறிப்பு : வலையுலக நட்புகள் இந்த தகவலை தங்கள் வலைதளத்தில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மச்சி மகிழ்ச்சி தங்களை சந்திப்பதில்...
ReplyDeleteசந்தோஷம் மச்சி.
Deleteசிறக்க நடத்திடுவோம்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎனது தளத்தில் சிறிய ப்ளக்ஸ் பேனர் போல் வைத்தாயிற்று...! நன்றி...
சிறப்பாக நடத்திடுவோம் தனபாலன்
Deleteஎனது பிறந்த நாள் அன்று பதிவர் சந்திப்பா நடக்கட்டும் நடக்கட்டும் இனிதே நடைபெற வாழ்த்துக்கள்
ReplyDeleteகண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் தம்பி
Deleteமிகச் சிறப்பாக நடைபெற என் மனப்பூர்வ வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி ஐயா
Deleteவாழ்த்துக்கள். ஒரு டவுட்டு: வருடத்துக்கு ஒரு முறை பதிவு போடும் நானும் ஒரு பதிவரா என்று தெரியவில்லை. எனக்கும் அனுமதி உண்டா?
ReplyDeleteகண்டிப்பாக அனுமதி உண்டு விஜய்
Deleteஅங்க இருந்த அதே பதிவா?! அப்போ அங்கே போட்ட அதே கமெண்டை இங்கயும் போட்டா போதுமில்ல!!
ReplyDeleteஒரே சமயத்தில் பல பதிவுகளி்ல் பகிர்ந்தால் பலபேரை சென்றடையும் என்பதற்காகவே பகிரப்பட்டுள்ளது.
Deleteவிழா சிறக்க வாழ்த்துகள் !
ReplyDeleteநன்றி பாலா
Deleteபதிவர் சந்திப்புக்கு நானும் வருகிறேன்.
ReplyDeleteபோன வருடம் கோவை புத்தகக்கண்காட்சியில் ஸ்டால் போட்டிருந்ததால் வர முடியவில்லை.
என்னுடைய பதிவில் நாளை பகிர்ந்து விடுகிறேன்.
பரிசுப்போட்டியில் ‘சினிமா சம்பந்தமாக’ ஏதாவது இணைக்கலாமே.
விழா சிறக்க வாழ்த்துக்கள்.
நன்றி சார். தங்களின் ஆலோசனைக்கு நன்றி, வரும் கலந்தாலோசனை கூட்டத்தில் இது பற்றி விவாதித்து பின்னர் முடிவை தெரிவிக்கிறேன்.
Deleteஅன்பின் செந்தில் - பதிவர் சந்திப்பு - திருவிழா சிறப்புற நடைபெற நல்வாழ்த்துகள் - நானும் எனது துணைவியும் ( இருவருமே பதிவர்கள் தான் ) தற்போது அயலகத்தில் இருக்கிறோம் - கலந்து கொள்ள இயலாமைக்கு வருந்துகிறோம் - தாயகம் செப்டம்பர் இறுதியில் தான் திரும்புகிறோம். நட்புடன் சீனா
ReplyDeleteபரவாயில்லை சீனா ஐயா. தாங்கள் வெளிநாட்டில் இருந்தாலும் தங்களின் வாழ்த்து இந்த சந்திப்பை வெற்றியடைய வைக்கும்.
Deleteசிறப்பான விசயம்! சென்ற வருடம் கலந்துகொள்ள இயலவில்லை! இந்த வருடம் கண்டிப்பாக கலந்துகொள்ள முயற்சிக்கிறேன்! விரிவான தகவல்களுடன் பதிவிட்டமைக்கு நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி நண்பா
Delete
ReplyDeleteஇந்த தடவையாவது சரக்கு தண்ணினு எந்த பிரச்சனையும் வராம சிறப்ப்பா நடத்துங்கன்னே...
வாங்க வாங்க உங்களைத்தான் எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன். இந்த வருடத்திய பிள்ளையார் சுழிய நீங்க தான் போட்டிருக்கீங்க, இனி பதிவர் சந்திப்பு களை கட்டும். ஸ்டார்ட் த மியுசிக்.
Deleteசென்ற வருடம் கலந்து கொள்ள முடியவில்லை.. இந்த வருடம் நிச்சயம் கலந்து கொள்கிறேன்.. ஆவலுடன் செப்.1 ஐ எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்..
ReplyDeleteவாருங்கள் ஆவி தங்கள் பங்களிப்பு மிக முக்கியம்
Delete
ReplyDeleteபதிவு போடுறமோ இல்லையோ பதிவர் சந்திப்பையாவது சிறப்பா நடத்துங்கனு சொன்னது ஒரு தப்பாண்ணே....
இப்படித்தான் ஆரம்பிக்கும் நண்பா, நடக்க நடக்க அதுவா பாதைய மாத்திக்கும்.
Deleteசிறப்பாக நடத்திடுவோம் மச்சி..
ReplyDeleteஒரு வாரமாவது ஆலோசனை கூட்டத்திற்கு வரலாமே மச்சி
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி மாம்ஸூ
Deleteரைட்டு.... அதிரடி பதிவர்களின் சங்கமத்திற்கு தேதி குறிச்சாச்சா?
ReplyDeleteஆமாம் பிரகாஷ், தங்களின் பங்களிப்பும் இருக்கிறது. விவரங்கள் விரைவில் சாட்டில் தெரிவிக்கிறேன்.
Deleteவெற்றிக்காக பாடுபடுவோம்...
ReplyDeleteபாட்டு கூட பாடுவோம்
Deleteகண்டிப்பாக நாணும் வருகிறேன் எனது மின்னஞ்சல் shameempims@gmail.com
ReplyDeleteநான் விழாவின் அழைப்பிதழை தங்களுக்கு மெயில் அனுப்புகிறேன்
Deleteபட்டாசு கெளப்புங்கய்யா.........
ReplyDeleteதிரியை நீ்ங்க தான் பத்த வைக்கனும் பன்னி
Deleteபதிவர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஆரம்பம்லேய் அசத்துங்க, வாழ்த்துக்கள்....!
ReplyDeleteநான் இதை எனது தளங்களில் ஷேர் செய்துவிட்டேன்.
நன்றி மனோ.
Deleteவிழா சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராஜ். இந்த முறை நீங்க மிஸ் ஆனது தான் வருத்தமா இருக்கு.
Deletegood
ReplyDeleteநன்றி கண்ணன்
Deleteஆவி, மாங்கொட்டை.... கட்டட நிர்வாகிங்க என்ன ஆகப்போறாங்களோ?
ReplyDeleteசாதா கொட்டை இல்லை சிவா சப்பிப் போட்ட மாங்கொட்டை
Deleteமாநாடு சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி மணிமாறன்
Deleteமகிழ்ச்சி.
ReplyDeleteவாழ்த்துகள்.
நன்றி ஐயா
Deleteவிழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteவிடுப்பு கிடைத்தால் விருதுநகரில் இருந்து கலந்து கொள்கிறேன்
நன்றி, கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள் வேல்முருகன்.
Delete