நானும் ஒரு வாரமா பாக்குறேன் ஒரு பய நமக்கு அழைப்பு விட மாட்டேங்குறான். பிரபல பதிவர்களில் ஆரம்பிச்சு போன வாரம் வந்த பதிவர்கள் வரை ஒருத்தரை மாத்தி ஒருத்தர் அழைப்பு விடுத்துகிறாங்க. நம்மளை ஒருத்தனும் கண்டுகிட மாட்டேங்கிறாய்ங்க. சரி யாரும் நம்மளை மனுசனாகவே மதிக்கலை போல. நாமளும் யாரிடமும் ஓழுங்கா பழகியது இல்லையே. எங்க பார்த்தாலும் சண்டையும் சச்சரவுமாத்தேன் போய்க்கிட்டு இருக்கு.
சரி நாமளே வாண்டட்டா வண்டியில ஏறினாத்தான் நாமளும் ரவுடின்னு முடிவு பண்ணுவாங்கன்னு முடிவு பண்ணி என்னை நானே நானும் என் முதல் கணினி அனுபவமும் தொடரை எழுத அழைப்பு விடுத்துக்கிறேன். (கொஞ்சம் மரியாதை குறைவா தெரிஞ்சா கண்டுக்கிட வேண்டாம், நண்பர்களுக்குள் என்ன எழவு மரியாதை வேண்டிக்கிடக்கிறது)
என்னை நானும் என் முதல் கணினி அனுபவமும் என்ற தொடர் பதிவை எழுதும் படி என்னிடமிருந்து வந்த அழைப்பை ஏற்று அந்த அனுபவத்தை நான் உங்களுடன் பகிர்ந்திக்கிறேன்.
இருபது வயது வரை நான் கணினியை அருகில் இருந்து பார்த்தது இல்லை. படத்தில் பார்த்தது கூட காதலர் தினம் படத்தில் தான். அதிலும் கவுண்டமணி கைமுட்டியால் அடிப்பதையெல்லாம் நிஜம் என்று நம்பிக் கொண்டு இருந்த அப்பாவி(நீயாடா, வெளங்கிடும்) நான்.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இடங்களில் கம்ப்யூட்டரை பின்பக்கமாக பார்த்து ரசித்து இருக்கிறேன். வங்கிக்கணக்கு கூட இல்லாததால் பேங்க்கு பக்கம் கூட அதுவரை சென்றதில்லை. அதனால் வங்கியில் கணினியை பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை.
சென்னையில் படிப்பை முடித்து திருவாரூருக்கு திரும்பிய பிறகு திருவாரூரில் புதிதாக பிரவுசிங் சென்ட்டர்கள் முளைக்கத் தொடங்கியிருந்தன. மணிநேரத்திற்கு 60 ரூபாய். ஆனாலும் முன்ன பின்ன கணினி பற்றி தெரிந்திருந்தால் தானே அங்கு சென்று கணினியை (உற்றுப் பார்க்கவும் not கன்னி only கணினி) நோண்ட முடியும்.
அப்பொழுது என்னுடன் பள்ளியில் படித்து கீழக்கரையில் உள்ள பொறியியல் கல்லூரியில் சிவில் இஞ்சினியரிங் முடித்த நண்பன் ஊருக்கு திரும்பியிருந்தான். பார்க்கும் நண்பர்களிடம் எல்லாம் கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்ததற்கான சர்ட்டிபிகேட்டை காண்பித்து பந்தா செய்து கொண்டிருந்தான்.
நான் கூட மிரண்டு இருந்தேன். இஞ்சினியரிங் படித்து இருக்கிறான். கம்ப்யூட்டர் கோர்ஸ் எல்லாம் முடித்து இருக்கிறான். பெரிய அப்பாடக்கர் ஆகிட்டான் போல என்று. ரொம்ப நாள் கழித்து தான் தெரியும் அவன் முடித்தது எம்எஸ் ஆபிஸ் கோர்ஸ் என்று.
அப்பவே ஐநூறு ரூவா கொடுத்து பத்து நாள் வகுப்புக்கு சென்று வேர்ட்டில் எப்படி தட்டச்சு செய்வது என்றும், எக்செல் சீட்டை எப்படி சேவ் செய்வது என்றும் மட்டுமே தெரிந்து வைத்து இருக்கிறான் பயபுள்ள.
ஒருநாள் எங்கள் பகுதியில் இரவு முழுவதும் பார்க்கில் உக்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கும் போது தான் தெரிய வந்தது கம்ப்யூட்டரில் பிட்டு படங்கள் பார்க்க முடியுமென்று. வெறும் எண்கள் மட்டுமே திரையில் தெரிய வரும் என்று நினைத்துக் கொண்டிருந்த நான் கணினியின் மகிமையை எண்ணி வியந்து போனேன்.
உடனே ஒரு பிரவுசிங் சென்ட்டருக்கு சென்று பிட்டு படங்கள் பார்க்க திட்டம் போட்டோம். இருவரும் பணத்தை தேத்திக் கொண்டு பிரவுசிங் சென்ட்டருக்கு சென்று அமர்ந்த பிறகு தான் தெரிய வந்தது. பிட்டு படம் வரும், ஆனால் எந்த வெப்சைட்டில் எப்படி ஓப்பன் செய்து பார்க்க வேண்டும் என என் நண்பனுக்கு கூட தெரியாது என்று.
நமக்கு அதுவரை வெப்சைட்டு என்றால் கூடத்தான் என்னவென்று தெரியாது. அதுக்காக கவலைப்படும் ஆளா நாம். ஆனால் அந்த கடை நடத்தும் பெரியவரிடம் பிட்டு படம் எப்படி பார்ப்பது என்று கேட்கவும் பயம்.
வந்ததற்கு கணினியை ரசித்து விட்டு என் விரல்களால் கீபோர்டை தொட்டு தடவிப் பார்த்து நண்பனின் உதவியால் செந்தில் என்ற பெயரில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து ஸ்க்ரீன் சேவரின் ஸ்க்ராலிங்கில் ஒட விட்டு கம்ப்யூட்டரை இயக்கி விட்டோம் என்ற பெருமிதத்துடன் 60 ரூவாயை கொடுத்து விட்டு வந்தோம்.
எப்படி பிட்டு படம் பார்ப்பது என தெரியாததால் என் நண்பன் அவனுடன் கல்லூரியில் படித்த மற்றோரு நண்பனுக்கு படம் பார்க்கும் வழிமுறைகளை விரிவாக எழுதி அனுப்பி வைக்கும்படி கடிதம் போஸ்ட்டில் அனுப்பினான்.
நான்கு நாட்கள் கழித்து நண்பன் கடிதம் வந்து விட்டதாக கூறி பிரவுசிங் சென்ட்டருக்கு அழைத்தான். மறுபடியும் சிரமப்பட்டு 60 ரூவாய் சேகரித்து மீண்டும் பிரவுசிங் சென்ட்டருக்கு சென்றோம். நாங்கள் அமர்ந்த கணினியின் ஸ்கிரீன் சேவரில் நடராஜ் பிரவுசிங் சென்ட்டர் என்று ஸ்க்ராலிங் போய்க் கொண்டு இருந்தது.
எனக்கு பொறுக்கவில்லை. எனக்குத்தான் என் பெயரை எப்படி வரவழைப்பது என்று தெரியுமே உடனே மாற்றி பார்த்து பெருமிதப்பட்டுக் கொண்டேன். நண்பனோ வந்த வேலையை விட்டு உனக்கு எதுக்குடா இந்த வேலை என்று திட்டினான்.
சரி என்று அந்த கடிதத்தை வைத்து நான் மெல்ல படிக்க அவன் அது மாதிரி ஓப்பன் பண்ணினான். இரண்டு நிமிட காத்திருந்த பிறகு படங்கள் திரையில் விரிவதை கண்டேன். கண்டேன், மெய்மறந்து கண்டேன். அது இந்த கட்டுரைக்கு முக்கியமில்லாததால் இத்துடன் போதும்.
என்னையே யாரும் கூப்பிடலை, பின்ன என்ன இதுக்கு நான் இன்னும் ஐந்து பேரை கூப்பிடனும். அதுனால இது ஒரு தொடராத தொடர் பதிவு. படிங்க, பிடிச்சிருந்தா.... அய்யய்யோ ஒட்டுலாம் போட சொல்ல மாட்டேன். பயப்படாதீங்க. அதுக்கு நாங்க வேற டிப்பார்ட்மெண்ட் வச்சிருக்கோம்.
அதுனால படிங்க, பிடிச்சிருந்தா....... மறுபடியும் படிச்சு ரசிங்க.
ஆரூர் மூனா செந்தில்
"கட்டு"ரை...?! கணினியின் மகிமை...!!!
ReplyDeleteமகிமையோ மகிமை, நன்றி தனபாலன்
Deleteஇடுகை நன்றாக இருக்கு...இந்த இடுகையை மக்கள் கூர்ந்து படிக்க ஒரு வழி....செந்திலுக்காக...
ReplyDeleteஇங்கு சில பரிட்சைகளில் open book exam உண்டு. அப்படியென்றால் எளிதாக பாஸ் செய்ய முடியும் என்று நினைக்கவேண்டாம். முழு புத்தகத்தையும் நன்கு ஆழ படித்திருந்தால் மட்டுமே பதில் எழுதமுடியும்.
இந்த இடுகையை ஒட்டி கேள்வி...
கணினிக்கும் கன்னிக்கும் உள்ள ஒற்றுமை என்ன? கணினிக்கும் கன்னிக்கும் உள்ள வேற்றுமை என்ன?
பதில் உங்கள் இடுகையிலே இருக்கு...!
நன்றி, மற்றவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன்
Deleteமுன்னத ஆன் பண்ணலாம்
Deleteபின்னத ஆ.....சாரி அணைக்கலாம்...
முன்னத சட்டவுன் செய்யலாம்
பின்னத கழட்டி விடலாம்!(கல்யாணம் செய்யாமல் ஏமாற்றுதல்)
நீங்க இதை டவுள் மீனிங்கா நெனைச்சா கனவுல நமீதா உங்களை கற்பழிக்க கடவாயாக...!
நமீதாவே வேணுமா மச்சி.
Deleteஅட.. ஒரு நல்ல படைப்பாளியை கூப்டாம வீணாக்கிட்டாங்களே...!!!
ReplyDeleteஅதானே, ஒருத்தருக்கும் புரிய மாட்டேங்குது. நன்றி தங்கம் பழனி
Deleteஅன்பின் செந்தில் - அனுபவம் புதுமை ...... நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteமிக்க நன்றி சீனா அய்யா
Deleteஅடடா.. யாருமே கூப்பிடலையா....
ReplyDeleteஇது கூப்பிடாததற்காக வருத்தப்பட்டு போட்ட பதிவில்லை. உற்று நோக்கவும் இது பகடி.
Deleteஅடடா! உங்களை எப்படி மறந்தாங்க! ஆச்சர்யமாத்தான் இருக்கு
ReplyDeleteநன்றி முரளிதரன். கிண்டலுக்காகத்தான் போட்டேன்.
Deleteடெம்ப்ளேட் சித்தர் அன்பின் சீனா அவர்களுக்கு வாழ்த்துகள்
ReplyDeleteநாமக்கல் சிபி அவர்களுக்கு வணக்கங்கள். ஆமா நாளைக்கு வர்றீங்கள்ல.
Deleteஇது ஒரு தொடராத தொடர் பதிவு. படிங்க, பிடிச்சிருந்தா....//ஆமாமா நாமலே கிரீடத்த தலையில வைச்சுக்க வேண்டுயதுதான்.தவறில்லை.
ReplyDeleteகிரீடம் தலையில இருந்தா பத்தாதா, யாரு வச்சா என்ன, என்னண்ணே நான் சொல்றது
Deleteசேம் ப்ளட்
ReplyDeleteநாளைக்கு ட்ரீட்டா செல்வின்?
Deleteஜமாய்க்கலாம்
Deleteரைட்டு
Deleteமுண்டங்களா...சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லுங்கள்...உங்களுக்கு உள்ளேயே பேச கமெண்ட் செக்சன் எதுக்கு...????????????
Deleteயோவ் நக்ஸூ நீ டைட்டா?
Deleteநண்பரே
ReplyDeleteநானும் ஒரு வண்டியில ஏறிக்கிட்டேன்...
ஓரமா சீட்டு கிடைச்சுச்சு..
ரைட்டு ரைட்டு என்சாய், நடத்துங்க நண்பரே.
Deleteஎன்னா ஒரு அனுபவம்...!!! இதை அப்படியே ஒரு கல்வெட்டுல எழுதி தஞ்சாவூர் கோவில்ல வெச்சி பக்கத்துலயே நீங்களும் உக்காந்துகோங்க. வருங்கால சந்ததிகள் படிச்சி உங்க வரலாறை தெரிஞ்சிக்கட்டும்.
ReplyDeleteதங்கள் சித்தம் என் பாக்கியம், அப்படியே செய்கிறேன் மகாபிரபு
Delete"கம்ப்யூட்டரை இயக்கி விட்டோம் என்ற பெருமிதத்துடன் 60 ரூவாயை கொடுத்து விட்டு வந்தோம்." எப்படியோ கணினியை பார்த்தாகி விட்டதே.
ReplyDeleteஅதானே, நன்றி மாதேவி
Deleteசெந்திலாண்டவா என்னை மறந்தனையோ ?
ReplyDeleteநான் வந்துவிட்டேன். கவலை வேண்டாம்.
இந்த குவைத்துக்கு வந்து மாட்டிகொண்டு ஒரு போனுக்கும் இன்டெர் நெட் இணைப்புக்கும் ஏழு மாசமா நான் பட்ட பாடு நம்ம ஊரு தெரு நாய் கூட பட்டதில்லை.
எப்படியோ மறுபடியும் வந்துவிட்டேன்.
தம் முதல் கணணி அனுபவம் பற்றி எழுதி எங்களை எல்லாம் புல்லரிக்க வைக்க நம்ம செந்திலை அனைவரின் சார்பாக அழைக்கிறேன் பராக் .
அண்ணா மாணிக்கம் அண்ணா, எவ்வளவு நாள் ஆச்சு உங்களிடம் பேசி. நன்றிங்கண்ணா, மீண்டும் பதிவு எழுத வாங்கண்ணா. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
Deleteமச்சி கலக்கல் அனுபவம் மச்சி...
ReplyDeleteஉங்களை நானும் மறந்திட்டேன் மச்சி...
அட நான் அதுக்காக எழுதலை மச்சி. இது வேற, கலாய்ப்பு. ஒருவேளை சிரிப்பு வந்தா என்ஜாய் செய்யவும். இல்லைனா மொக்கைனு டெம்ப்ளேட் கமெண்ட் போட்டா சாப்டர் ஓவரு.
Deleteமச்சி நான் முதன் முதலா இன்டர்நெட் பார்த்ததை பற்றி எழுத ஐடியா கிடைச்சிடுத்து அத தொடர்பதிவா போடலாம்ன்னு யோசிக்கிறேன்...
Deleteஎன்ன முதல் இன்டர்நெட் அனுபவம் இருவருக்கும் ஒன்று தான்... என்பதில் மகிழ்ச்சி மச்சி....
ஆமாம் மச்சி. எனக்கும் மகிழ்ச்சி.
Deleteஹிஹி அண்ணே நானும் உங்கள் வலி வந்தவன் தான் எனது கணினி அனுபவமும் பிட்டு பிட்டு பிட்டு
ReplyDeleteஅது வேற வழி தம்பி, நீங்க சொல்றது வலி, ஆனா ரொம்ப வலிக்குமே.
Deleteபுரியலையா ஹியூமர், ஹியூமர். (நேத்து பட்டத்து யானை படம் பாத்தீங்கள்ல)
அந்த கொடுமைய அனுபவிச்சேன் அண்ணே
Deleteஅன்புக்குரிய நண்பரே !
ReplyDeleteஉண்மையாக நடந்த ஒரு கதையை சொல்கிறேன் >>
முழுமையாய் படித்த உடன் உங்கள் மனதில் ஒரு மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் !
-----------------------------------------------
ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.
தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.
‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.
வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பன. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.
இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.
வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.
‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைததுக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி...!
நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரும் வெற்றி உனக்காக காத்திருக்கும்...!
-----------------------------------------------------------
தொடரட்டும் உங்கள் வெற்றி பதிவுகள்
நன்றி நண்பா
Deleteசூப்பர் கதை
Deleteசுவாரசியமா அனுபவத்தை எழுதுறதுல உங்களை அடிச்சுக்க ஆளே இல்ல செந்தில்.
ReplyDeleteநன்றி ராஜ். நலமா. மீண்டும் தாயகம் திரும்பல் எப்போ. இந்த பதிவர் சந்திப்பில் உங்களை மிஸ் பண்ணுவேன்
Deleteசுவாரஸ்யமா எழுதி இருக்கீங்க! உங்களை தொடர் பதிவு எழுத கூப்பிடாதது தப்புதான்! பிரபல பதிவராச்சே யாராவது அழைப்பு விடுத்திருப்பாங்கன்னு நானும் கூப்பிடாம விட்டுட்டேன்!
ReplyDeleteயாரும் எனக்கு அழைப்பு விடனும்னு நான் எதிர்பார்க்கவில்லை. அது இங்கு அவசியமும் இல்லை. இதனை முழுவதும் படித்துப் பாருங்கள். இன்னும் நுண்ணரசியல் கற்கவில்லையா நீங்கள்.
Deleteஅருமை.., கலக்கல்..., நல்லாயிருக்கு..., great writeup. keep it up..tm-36
ReplyDeleteமொய்யிக்கே மொய்யா, இது இங்க செல்லாது. யாராக இருந்தாலும் எந்த வகை கமெண்ட்டாக இருந்தாலும் இங்கு பதிலளிக்கப்படும்.
Delete
ReplyDelete//பிரபல பதிவர்களில் ஆரம்பிச்சு போன வாரம் வந்த பதிவர்கள் வரை ஒருத்தரை மாத்தி ஒருத்தர் அழைப்பு விடுத்துகிறாங்க. நம்மளை ஒருத்தனும் கண்டுகிட மாட்டேங்கிறாய்ங்க.//
உங்களை தொடர் பதிவுக்கு அழைப்பது என்பது சூரியனுக்கே டார்ச்ச் அடிக்கிறமாதிரி... நாங்க சும்மா சிம்ளி விளக்கு. விடுங்க தல.
ஓ இப்படி வேற இருக்கா, இத்தனை நாளா இது தெரியாம போயிடுச்சே.
Delete//என்னையே யாரும் கூப்பிடலை, பின்ன என்ன இதுக்கு நான் இன்னும் ஐந்து பேரை கூப்பிடனும். அதுனால இது ஒரு தொடராத தொடர் பதிவு. படிங்க, பிடிச்சிருந்தா.... அய்யய்யோ ஒட்டுலாம் போட சொல்ல மாட்டேன். பயப்படாதீங்க. //
ReplyDeleteஆத்தாடி கொலையே விழும் போல... :-)))))
இங்கு அதெல்லாம் நடக்காது. அன்புக்கு அன்பும், எதிர்ப்புக்கும் அன்பே திருப்பித்தரப்படும். சும்மா அப்ப அப்ப இப்படித்தான் வூடு கட்டுவோம், கண்டுக்கிடப்பிடாது.
DeleteNandru... !!! valthukkal....
ReplyDeleteநன்றி மணிகண்டன்
Deleteஆமா சார் .... நானும்தான் 1998ல் தான் கம்ப்யூட்டர்-ய் தொட்டு பார்த்தேன் .
ReplyDelete