சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Wednesday, February 8, 2012

ஆட்டோ சங்கர் - வழக்கு விசாரணை - வாக்குமூலம் - பகுதி 4



ஆட்டோ சங்கரின் கூட்டாளிகளில் ஒருவரான பாபு என்கிற தேவேந்திரபாபு (34) அரசு தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறி விட்டார். இவர் கட்டிட காண்டிராக்டர் ஆவார். இந்த வழக்கு முக்கியமாக கருதப்பட்டதால் மாநில ரகசிய குற்றப்புலனாய்வு போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சவுக்கத் அலி, விசாரணையை மேற்கொண்டார்.

ஆட்டோ சங்கர் தனது தொழிலுக்கு போட்டியாக இருந்தவர்களையும், தனக்கு வேண்டாதவர்களையும் கொலை செய்தது எப்படி என்பது பற்றி போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தான். சங்கரின் வாக்குமூலம் வருமாறு:-

"எனது பெயர் கவுரிசங்கர் என்ற சங்கர். நான் இளமையில் பெற்றோர்களுடன் கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்தேன். என் தந்தை சென்னையில் டீக்கடை நடத்தினார். என்னை கல்லூரியில் பி.யு.சி. வரை படிக்க வைத்தனர். அதன் பிறகு எனக்கு படிப்பு வரவில்லை. இதனால் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

படித்துக்கொண்டிருந்தபோது ஆட்டோ டிரைவர்கள் பலர் எனக்கு நண்பர்கள். அவர்கள்தான் எனக்கு ஆட்டோ ஓட்டுவதற்கு கற்றுத்தந்தனர். அதன் பிறகு நான் தனியாக ஒரு வருடம் ஆட்டோ வாடகைக்கு வாங்கி ஓட்டி வந்தேன். ஒரு நாளைக்கு சாப்பாடு போக எனக்கு 15 ரூபாய் கிடைக்கும்.

திருவான்மியூரில் இருந்து கோவளத்துக்கு வாடிக்கையாக கள்ளச்சாராயம் ஏற்றிக்கொண்டு போவதற்கு ஒரு சாராய வியாபாரி என்னை அழைத்தார். அதிக பணம் தருவதாகச் சொன்னார். இதனால் நான் ஆட்டோவில் கள்ளச்சாராயம் கடத்தினேன். எனக்கு அதிகப்பணம் கிடைத்தது.

இதனால் நான் தினமும் சாராயம் குடித்துவிட்டு விபசார விடுதிக்குச் செல்லும் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு நானே சொந்தமாக கள்ளச்சாராய வியாபாரம் செய்தேன். அதில் எனக்கு பணம் அதிகம் கிடைத்தது. இதனால் நான் ஆட்டோ ஓட்டும் வேலையை விட்டுவிட்டு சாராய வியாபாரி ஆனேன்.

ஆட்டோவில் கள்ளச்சாராயம் கடத்திக்கொண்டு வருவதற்கு சுடலை என்ற ஆட்டோ டிரைவரை ரவி அறிமுகப்படுத்தினான். சுடலை மிகவும் தைரியமானவன். "நான் மதுரைக்காரன். எதையும் துணிந்து தைரியமாக செய்வேன். வேலைக்கு தகுந்தாற்போல் சம்பளம் கொடுத்துவிடு" என்று என்னிடம் அடிக்கடி சுடலை சொல்வான்.

சுடலையின் தைரியத்தில் நான் திருவான்மியூரில் குடிசை வீட்டில் அழகிகளை அழைத்து கொண்டுவந்து விபசார தொழில் நடத்தினேன். கோடம்பாக்கம் மற்றும் திருவான்மியூர் ஆகிய இடங்களில் இருந்து அழகிகளை விபசார விடுதிக்கு அழைத்து வருவதில் சுடலை கில்லாடி. அவனை வைத்துத்தான் எனது விபசார விடுதி ஓகோ என்று ஓடியது. இதனால் நான் சுடலையை நம்பினேன். எனது தொழில் ரகசியங்கள் அத்தனையும் அவனுக்கு தெரியும்.

நான் தாலி கட்டிய மனைவியின் பெயர் ஜெகதீசுவரி. அதன் பிறகு விபசார விடுதிக்கு வந்த அழகி சுந்தரி மீது எனக்கு ஆசை ஏற்பட்டது. இதனால் அவளை விபசார விடுதிக்கு அனுப்பாமல் தனியாக வீடு எடுத்து அவளை தங்கச் செய்தேன். அவளை தாலி கட்டி மனைவியாக்கினேன். அதன் பிறகு சுமதி என்ற அழகியையும் நான் மனைவியாக சேர்த்துக் கொண்டேன்.

என் காதலி என்னைத்தவிர வேறு யாருடனும் பேசக் கூடாது என்ற கொள்கையுடையவன் நான். யாராவது காதலியுடன் பேசினால் எனக்கு பொல்லாத கோபம் வரும். சுடலைதான் சுந்தரி, சுமதி ஆகியோரை விபசார விடுதிக்கு அழைத்து வந்து எனக்கு அறிமுகப்படுத்தியவன். இதனால் அவன் அவர்களிடம் கள்ளத்தனமாக பேசிக்கொண்டு வந்தான். இதை நான் பலமுறை கண்டித்து இருக்கிறேன். ஒருநாள் நான் வெளியே போய்விட்டு வீட்டுக்கு வந்தபோது சுந்தரியை சுடலை கட்டாயப்படுத்தி கற்பழித்ததை பார்த்துவிட்டேன். அன்று அமாவாசை தினம். நான் பார்த்தது அவனுக்குத் தெரியாது.

ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் எனக்கு அந்த சம்பவம் நினைவுக்கு வரும். அப்போது நான் அதிகமாக குடிப்பேன். ஒருநாள் அமாவாசை தினத்தில் சுடலை என்னை வந்து சந்தித்து, அழகிகளுக்கு சம்பளம் கொடுக்க பணம் கேட்டான். அவனுக்கு நான் பிராந்தி கொடுத்தேன். இஷ்டம் போல குடித்தான். போதையில் அவன் தரையில் சாய்ந்தபோது அவனை கழுத்தை நெரித்து கொன்றேன். அவன் மூச்சு நின்றது. நான் நினைத்தபடி அவனை வஞ்சம் தீர்த்தேன். எனக்கு எதிராக விபசார விடுதி நடத்தியவனும், எனது காதலியை கற்பழித்தவனும் தொலைந்தான் என்று பெருமூச்சு விட்டேன். பிணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன்.

அப்போது என்னுடன் இருந்த எனது தம்பி மோகன், மச்சான் எல்டின் ஆகியோர் சரியான `ஐடியா' கொடுத்தனர். "ஏன் தயக்கம்? காருக்கு வாங்கி வைத்துள்ள பெட்ரோல் கைவசம் இருக்கிறது. ஊற்றி எரித்து கணக்கை தீர்த்துவிடலாம்" என்று கூறினார்கள். அவர்கள் 2 பேரும் சுடலையின் உடலில் பெட்ரோலை ஊற்றினார்கள். நான் பாண்ட் பாக்கெட்டுக்குள் வைத்து இருந்த தீப்பெட்டியை எடுத்து `குச்சி'யை பொருத்திப்போட்டேன். சுடலையின் சடலத்தை எரித்து தீர்த்தோம். அதன் பிறகு சாம்பலை முட்டுக்காடு கோவளம் கடற்கரையில் கரைத்தேன். நிம்மதியோடு வீடு வந்து சேர்ந்தேன்.

ஒரு வாரம் கழித்து சுடலையை தேடி அவனது நண்பன் ஆட்டோ டிரைவர் ரவி வந்தான். அவனையும் கொலை செய்துவிட முடிவு செய்தோம். ரவியை மோகனும், எல்டினும் நைசாக குடிசை வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். வழக்கம்போல ரவிக்கு சாராயம் ஊற்றிக்கொடுத்து அவனை மயங்க வைத்தனர். அப்போது நான் வீட்டில் இருந்தேன். மோகனும், எல்டினும் என்னிடம் வந்து, "ரவி தம்பி பயணத்துக்கு ரெடியாக இருக்கிறான். காரியத்தை முடிச்சுட வேண்டியதுதான்" என்று சொன்னார்கள்.

உடனே நான், மோகன், எல்டின் ஆகியோருடன் சென்றேன். அப்போது இரவு 11 மணி இருக்கும். ரவி காக்கிப் பேண்ட், முழுக்கை சட்டை, சிகப்பு தொப்பியுடன் தரையில் குடிபோதையில் மயங்கிக் கிடந்தான். நாங்கள் 3 பேர்களும் சேர்ந்து ரவியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தோம். உடலை வீட்டிற்குள் புதைத்து விட்டோம்.

இதேபோல்தான் மைலாப்பூர் சம்பத், மோகன், கோவிந்தராஜா ஆகிய 3 பேர்களும் என்னிடம் வந்து "ஓசி"யில் அழகிகளை அனுபவித்துவிட்டு பணமும் தராமல் தொடர்ந்து தகராறு செய்து கொண்டிருந்தனர். அவர்கள் 3 பேர்களை "சிவப்பு ரோஜாக்கள்" சினிமா பாணியில் கதையை முடித்தோம். ஒரே வீட்டில் 3 பேர்களையும் குழி தோண்டி புதைத்தோம். இதற்கு பாபு மிகவும் உதவியாக இருந்தான்."

இவ்வாறு சங்கர் போலீசாரிடம் கூறியிருந்தான்.

ஆரூர் மூனா செந்தில்

இதன் முந்தைய பாகங்கள் பகுதி 1 / பகுதி 2 / பகுதி 3Link
(தொடரும். . .)

Monday, February 6, 2012

வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் - பகுதி 3

இரண்டாம் பாகத்தின் கடைசி வரிகள் (அந்த சமயத்தில் நான் எனது டீம் புல்பேக் போசிசனில் இருந்த சிவக்குமாரிடம் சத்தமாக ஒரு பெண்ணை பற்றி வில்லங்க கமெண்ட் அடிக்க அது பெண்கள் அணியின் ஆண் கோச்சுக்கு கேட்டு விட்டது. என்னை நோக்கி கோபத்துடன் நடந்து வந்தார்.)

இதன் முந்தைய பாகங்களான முதல் பகுதி / இரண்டாம் பகுதி படிக்க

நேரே என்னிடம் வந்த கோச் எப்படி நீ இவ்வாறு பேசலாம் என்று கேட்டார் அவ்வளவு தான். அவருக்கு தபதப வென அடி விழுந்தது. அவர் என்னை நோக்கி வந்ததும் ஆட்டக்களத்தில் இருந்த மற்ற நண்பர்கள் எப்படி அந்த கோச் என்னிடம் வந்து பேசலாம் என்று கோபப்பட்டு என்ன ஏதுவென்று விசாரிக்காமல் அவரை பின்பக்கத்திலிருந்து அடி வெளுத்து விட்டார்கள். பிறகு பள்ளித் தாளாளர் வரை பிரச்சனை சென்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த பிறகே பிரச்சனை முடிந்தது.

பத்தாவது தான், நான் என் நண்பர்களுடன் பிட்டு படங்களுக்கு செல்ல ஆரம்பித்தக் காலம். திருவாரூரில் செங்கம் மற்றும் பேபி ஆகிய தியேட்டர்களில் பிட்டு படங்கள் போடுவார்கள். டிக்கெட் 4 ரூபாய் தான் இருக்கும். முக்கால்வாசி மதிய நேரங்களில் தியேட்டரில் தான் இருப்போம். சில நாட்களில் எங்கள் பள்ளியின் உதவி தலைமையாசிரியாராக இருந்த ராஜமாணிக்கம் வாத்தியாரும் தியேட்டருக்கு படம் பார்க்க வந்து விடுவார். அவரைப் பார்த்தவுடன் மறைவாக போய் பால்கனியில் அமர்ந்தெல்லாம் படம் பார்த்திருக்கிறோம். இப்பொழுது அந்த இரண்டு தியேட்டர்களும் மூடப்பட்டு விட்டன.

அப்பொழுது தான் சிராக்கோ என்ற உலகப்புகழ் பெற்ற ஆங்கில பிட்டுப் படம் வந்தது. திருவாரூரிலேயே 80 நாட்களுக்கு மேலாக ஓடிய படம் அது. கிட்டத்தட்ட அந்தப்படத்தை 40 முறைக்கு மேல் பார்த்திருப்பேன். போதும், இதற்கு மேல் அசைவமாக வேண்டாம்.

அதே போல் பெண் பிள்ளைகளை சைட் அடிக்க ஆரம்பித்த நேரமும் இது தான். முதல் பெண்ணின் பெயர் புவனி*. திருவாரூரில் புதுத்தெருவில் இருந்த எங்கள் வீட்டுக்கு எதிர்ப்புறம் அவர்கள் வீடு இருந்தது. அவள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோகோ விளையாட்டில் வீராங்கனையாக இருந்தாள். அவர்கள் தினமும் பயிற்சி செய்யும் வேலுடையார் மேல்நிலைப்பள்ளிக்கு நானும் என் நண்பன் கணேசும் சைக்கிளில் செல்வோம். அங்கு அவள் பயிற்சி முடியும் வரை காத்திருந்து அவளுக்கு பின்னாலேயே வீடு வரை வருவோம். ஏன் அவனுடன் என்றால் அவனும் அவளை சைட் அடித்தான். எங்களுக்குள் ஜென்டில்மேன் அக்ரிமென்ட் இருந்தது. அவள் யாரை நோக்குகிறாளோ மற்றவர் விலகி விடுவது என்று. ஆனால் நடந்ததே வேறு. அவள் வேறு ஒருவனை காதலித்து அந்த வயதிலேயே வீட்டை விட்டு ஒடி விட்டாள்.

சில நாட்கள் நாங்கள் விரக்தியுடன் திரிந்தோம். இந்த பெண் பிள்ளைகளை புரிந்து கொள்ளவே முடியவில்லையே. என்று முழுதாக முளைக்காத தாடியை வைத்துக் கொண்டு சோகமாக திரிந்தோம். பிறகு ஒரு நாள் மடப்புரம் தெட்சணாமூர்த்தி மடத்தில் புவனி1*ஐப் பார்த்தோம். பிறகென்ன மீண்டும் ஷேவிங் செய்து கொண்டு மனதில் கனவுகளுடன் வியாழக்கிழமை தோறும் மடத்திற்கு சென்றோம் அவளுக்காக. இந்த கணேஷ் பயலும் என்னுடனே சேர்ந்து அவளுக்காக மடத்திற்கு வந்தான். பிறகு அந்த பிகரும் ஊத்திக் கொண்டது வேறு ஒரு சோகக்கதை.

பத்தாம் வகுப்பில் ஒரு வழியாக முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்று பதினொன்றாம் வகுப்பு அதே பள்ளியில் முதல் குரூப்பில் சேர்ந்தேன். ஏற்கனவே இருந்த நண்பர்கள் குழாம் பிரிந்து புதிய நண்பர்கள் குழாம் அமைக்கப்பட்டது. தினேஷூம் மஞ்ச ரொட்டி விஜயனும் என்னுடன் நெருங்கிய சினேகிதர்களானார்கள். தியேட்டரில் பிட்டு படம் பார்த்த காலம் முடிந்து எவன் வீட்டில் உறவினர்களெல்லாம் ஊருக்கு போகிறார்களோ அடுத்த சிலமணிநேரத்திலேயே விசிஆர் வாடகைக்கு எடுத்துக் கொண்டு அந்த இரவு முழுவதும் பிட்டு படம் பார்க்க ஆரம்பித்தோம். ஒரு நாள் அதிலும் எசகு பிசகாக மாட்டிக் கொள்ள இருந்ததை தனி பதிவாக ஏற்கனவே போட்டிருக்கிறேன்.

பதினொன்றாம் வகுப்பில் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு ஒரு சிறப்பு இருந்தது. ஆமாம் அந்த வகுப்பறையில் கடைசி பெஞ்ச்சில் தான் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் பத்தாம் வகுப்பு படித்தாராம். நாங்கள் கூட அதே கடைசி பெஞ்ச்சில் தான் அமர்ந்திருப்போம். பதினொன்றாம் வகுப்பில் காலாண்டுக்கு பிறகு சுத்தமாக மதியம் வகுப்புக்கு வருவதை நிறுத்தி விட்டு ஊர் முழுவதும் சுற்ற ஆரம்பித்து வீணாய் போக ஆரம்பித்தேன்.

ஆரூர் மூனா செந்தில்

(தொடரும்...)

Sunday, February 5, 2012

சஞ்சய் காந்தியின் கடைசி நாள்...



அரசியலில் இந்திரா காந்திக்குத் துணையாக இருந்தவர், அவருடைய இளைய மகன் சஞ்சய் காந்தி. இந்திராவின் அரசியல் வாரிசு என்று கருதப்பட்டவர். துணிச்சல் மிக்கவர். அரசியல் வியூகங்களை வகுப்பதில் வல்லவர். ஜனதாவை முறியடித்து, இந்திரா காந்தி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற 6 மாத காலத்தில், சஞ்சய் காந்தி எதிர்பாராத விதமாக விமான விபத்தில், 33வது வயதில் மரணம் அடைந்தது, நாட்டையே அதிர்ச்சி அடையச் செய்தது.

இந்திரா காந்தியின் மூத்த மகன் ராஜீவ் காந்தி, விமானம் ஓட்டுவதில் பயிற்சி பெற்று, விமானி (பைலட்) ஆக வேலை பார்த்தார். அரசியலில் தாயாருக்குத் துணையாக இருந்து வந்த சஞ்சய் காந்தி, "மாருதி" கார் தொழிற்சாலையைத் தொடங்கினார். அத்துடன் சிறிய விமானங்களை ஓட்டுவதற்குப் பயிற்சி பெற்றுத்தேறினார். விமான ஓட்டுவோருக்கான சங்கத்தில் ("பிளையிங் கிளப்") உறுப்பினராக இருந்தார். காலை வேளையில், சிறிய விமானத்தில் ஏறி, டெல்லியை ஒரு சுற்று சுற்றி விட்டுத் திரும்புவது சஞ்சய் காந்தியின் பொழுது போக்கு. 1980 ஜுன் 23ந்தேதி காலை, சிறிய விமானத்தில் ஏறி டெல்லி மீது பறந்தார்.

சஞ்சய் பயணம் செய்த விமானம் "புஷ்பக்" என்ற சிறிய பயிற்சி விமானம் ஆகும். சஞ்சய் காந்தியுடன், விமானப் பயிற்சியாளர் சக்சேனாவும் பயணம் செய்தார். விமானத்தை சஞ்சய் காந்தி ஓட்டினார். காலை 8 மணிக்கு விமானம் புறப்பட்டது. இந்திரா காந்தி வீட்டுக்கு மேல் விமானம் பறந்து சென்றது. சிறிது நேரத்திற்கெல்லாம், விமானம் நொறுங்கி விழுந்தது. "12, வெலிங்டன் கிரசென்ட்" என்ற இடத்தில் உள்ள சஞ்சய் வீட்டுக்குப் பின்புறத்திலேயே விமானம் விழுந்தது. விபத்து நடந்த இடம் பாராளுமன்றத்தில் இருந்து 2 மைல். விமானம் மூன்று முறை வட்டமிட்டதாகவும், 4வது முறை வட்டமிடும்போது மரத்தில் மோதி நொறுங்கி விழுந்ததாகவும், விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள். விபத்து நடந்த இடத்திலேயே சஞ்சய் காந்தி இறந்துவிட்டார்.

சஞ்சய் காந்தியுடன் பயணம் செய்த சக்சேனாவும் அங்கேயே மரணம் அடைந்தார். விமானம் தரையில் மோதிய வேகத்தில், சஞ்சய் காந்தியின் தலை நொறுங்கி விட்டது. கை, கால் எலும்புகள் நொறுங்கிப் போய்விட்டன. உடலில் தலை முதல் கால் வரை காயங்கள் இருந்தன. ரத்த வெள்ளத்தில் கிடந்தார். விமானம் நொறுங்கி விழுந்த செய்தி கிடைத்ததும், தீயணைக்கும் படையினர் விரைந்து சென்றார்கள். நொறுங்கிய விமான பாகங்களை உடைத்தும், அறுத்தும் உள்ளே ரத்த வெள்ளத்தில் கிடந்த சஞ்சய் காந்தியின் உடலையும், சக்சேனா உடலையும் வெளியே எடுத்தார்கள். விமானம் நொறுங்கிய தகவல், இந்திரா காந்திக்கு டெலிபோன் மூலம் தெரிவிக்கப்பட்டது. அவர், விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தார். இதற்குள் சஞ்சய், சக்சேனா உடல்கள் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டு விட்டன. ஆம்புலன்ஸ் வண்டி, ராம்மனோகர் லோகியா ஆஸ்பத்திரியை நோக்கிப் பறந்தது. டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, சஞ்சய் காந்தி ஏற்கனவே இறந்துவிட்டார் என்றும், காலை 8.15 மணி அளவில் அவர் இறந்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

சஞ்சய் காந்தி உடல் சிதைந்து போயிருந்ததால், டாக்டர்கள் பல மணி நேரம் ஆபரேஷன் செய்து, சிதைந்த பாகங்களை ஒன்று சேர்த்து தையல் போட்டனர். நெற்றியில் பெரிய தையல் போடப்பட்டது. சஞ்சய் உடல், இந்திரா காந்தி வீட்டுக்கு பகல் 1.40 மணி அளவில் கொண்டு செல்லப்பட்டது. சஞ்சய் காந்தியின் உடலைப் பார்த்ததும் இந்திரா காந்தி துயர மிகுதியால் கதறினார். பின்னர் சோகத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டார். எனினும், கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது. சஞ்சய் காந்தியின் உடலைப் பார்த்து, அவர் மனைவி மேனகா கதறித் துடித்தார். சஞ்சய் காந்தியின் திடீர் மரணம், இந்தியாவையே அதிர்ச்சி அடையச் செய்தது. டெல்லியில் கடைகள் மூடப்பட்டன. மந்திரிகள், "எம்.பி"க்கள், பொதுமக்கள் சாரிசாரியாக இந்திரா காந்தி வீட்டுக்குச் சென்று சஞ்சய் காந்திக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

விமானம் நொறுங்கிக்கிடந்த இடத்துக்கு, இந்திரா காந்தி இரண்டு முறை சென்று பார்த்தார். நொறுங்கிக்கிடந்த பாகங்களில் எதையோ தேடினார். (சஞ்சய் காந்தியின் கெடிகாரத்தையும், சாவிக்கொத்தையும்தான் இந்திரா தேடினார் என்றும், சுவிஸ் பாங்கியில் சஞ்சய் காந்தி கணக்கு வைத்திருந்தார் என்றும், அதன் நெம்பர் சாவியிலோ, கெடிகாரத்திலோ இருந்திருக்கலாம் என்றும், பின்னர் சில பத்திரிகைகள் எழுதின.) விபத்து நடந்தபோது, ராஜீவ் காந்தி இத்தாலி நாட்டில் இருந்தார். அவருக்கு டெலிபோனில் இந்திரா தகவல் தெரிவித்தார். உடனே, விமானம் மூலம் ராஜீவ் டெல்லிக்குப் புறப்பட்டார். மறுநாள் இறுதி ஊர்வலம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட டிரக் வண்டியில், சஞ்சய் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மந்திரிகளும், "எம்.பி"க்களும், லட்சக்கணக்கான பொதுமக்களும் ஊர்வலத்தில் நடந்து சென்றனர். ஊர்வலம், யமுனை நதிக்கரையை அடைந்தது. அங்கு, நேரு சமாதிக்கு அருகே அமைக்கப்பட்ட "சிதை"யில் சஞ்சய் காந்தி உடல் தகனம் செய்யப்பட்டது.

சஞ்சய் காந்தியின் ஒரே மகன் வருண். சஞ்சய் இறந்தபோது, வருண் மூன்று மாதக்குழந்தை. எனவே, "சிதை"க்கு ராஜீவ் காந்தி தீ மூட்டினார். முன்னதாக, துணை ஜனாதிபதி இதயதுல்லா, பாராளுமன்ற சபாநாயகர் பலராம் ஜாக்கர், "எல்லை காந்தி" கான் அப்துல் கபார்கான், தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர், தி.மு.கழகத் தலைவர் கருணாநிதி, மாநில முதல் மந்திரிகள், கவர்னர்கள், மத்திய மந்திரிகள், "எம்.பி"க்கள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். "சிதை"யில் வைக்கப்பட்ட சஞ்சய் முகத்தை இந்திரா காந்தி கடைசி முறையாகப் பார்த்தபோது, துயர மிகுதியால் கதறினார்.

சஞ்சய் மனைவி மேனகா அழுதபடி மயக்கம் அடைந்தார். தனது அரசியல் வாரிசாக உருவாகி வந்த சஞ்சய் காந்தி திடீரென்று மரணம் அடைந்தது, இந்திராவுக்குத் தாங்கமுடியாத துயரம் அளித்தபோதிலும், மனதைத் திடப்படுத்திக்கொண்டார். விமானம் ஓட்டும் பைலட்டாக வேலை பார்த்த ராஜீவ்காந்தியை ராஜினாமா செய்யச்சொன்னார். அதன்படி வேலையை விட்டு விலகிய ராஜீவ் காந்தி, தாயாருடைய பணிகளில் அவருக்கு உதவியாக இருந்து வந்தார்.

ஆரூர் மூனா செந்தில்

Saturday, February 4, 2012

ஆட்டோ சங்கர் - தூக்கு தண்டனை - வழக்கு விவரம் - பகுதி 3



பிணங்கள் தோண்யெடுக்கப்பட்டதை தொடர்ந்து ஆட்டோ சங்கரும், அவனது 7 கூட்டாளிகளும் 07.07.1988 அன்று கைது செய்யப்பட்டனர். சங்கரின் மனைவி ஜெகதீசுவரி மற்றும் சில அழகிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கூட்டாளிகள் வாக்குமூலம் அளித்தனர். ஆட்டோ சங்கர் தனது கொலை படலத்தை எப்படியெல்லாம் நிறைவேற்றினான் என்ற நெஞ்சை பதபதைக்க வைக்கும் தகவல்களை வெளியிட்டனர்.

பிணங்களை எடுத்துச் செல்ல பயன்படுத்திய கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வீட்டில் சோதனை நடத்தியபோது ஆட்டோ சங்கரின் டைரி சிக்கியது. அழகிகளுடன் சங்கர் எடுத்துக்கொண்ட ஆபாச படங்கள் கட்டுக்கட்டாக இருந்தன. அழகிகளுக்கு சங்கர் முத்தம் கொடுப்பது போல் உள்ள கலர் போட்டோக்களும் இருந்தன.

சங்கர் அவனுடைய காதலி விஜி, மது, லலிதா ஆகியோர்களின் பெயர்களை கையில் "பச்சை" குத்தி இருந்தான். அவனுடைய தம்பி மோகனின் பெயரையும் பச்சை குத்தி இருந்தான். மார்பில் 3வது மனைவி சுமதியின் பெயரை பொறித்திருந்தான்.

சங்கரின் 4வது மனைவியான பெங்களூர் லலிதாவை காணவில்லை. போலீசுக்கு பயந்து அவள் ஓடி இருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்த லலிதாவும் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக மோகன் (ஆட்டோ சங்கர் தம்பி) போலீசாரிடம் தெரிவித்தான். இதனை அடுத்து திருவான்மியூர் பெரியார் நகரில் அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு குடிசை வீட்டிற்கு சென்று தோண்டினார்கள்.

சமையல் கூடத்தில் இருந்த அடுப்பை அகற்றியதும் சிமெண்டு தரை இருந்தது. அதை தோண்டியபோது நீண்ட வரிசையில் செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு சிமெண்டு பூசப்பட்டு இருந்தது. அந்த செங்கற்களை போலீசார் அகற்றினார்கள். அதற்கு கீழே மேலும் தரையைத் தோண்டியபோது உள்ளே எலும்புக் கூடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எலும்புக்கூட்டின் மீது எந்தவித துணியும் இல்லை. நிர்வாணமாக இருந்தது. எலும்புக்கூட்டை போலீசார் வெளியே எடுத்தனர். லலிதாவை கொலை செய்து நிர்வாணமாக புதைத்து உள்ளனர் என்று தெரியவந்தது. அது பெண்ணின் உடல்தான் என்று டாக்டர்கள் உறுதி செய்தனர். இதனால் ஆட்டோ சங்கர் செய்த கொலை பட்டியலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. கொலை செய்யப்பட்டவர்கள் விவரம்:-

1. பெங்களூர் அழகி லலிதா (வயது 22).

2. சுடலை (வயது 28). ஆட்டோ டிரைவர், தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சியைச் சேர்ந்தவன்.

3. திருவான்மியூர் ரவி. ஆட்டோ டிரைவர் (வயது 27).

4. சம்பத் மந்தைவெளியை சேர்ந்த டெய்லர் (வயது 30).

5. மோகன், பொதுப்பணித்துறை ஊழியர் (வயது 29)

6. கோவிந்தராஜ் (வயது 28).

கைது செய்யப்பட்ட ஆட்டோ சங்கர், மோகன் (சங்கர் தம்பி), எல்டின் என்கிற ஆல்பர்ட் (மைத்துனர்) கூட்டாளிகள் சிவாஜி, ஜெயவேலு, செல்வராஜ், தாமன் என்கிற ராஜாராமன், ரவி, பழனி, பரமசிவன் ஆகிய 10 பேரும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

ஆரூர் மூனா செந்தில்
(தொடரும். . .)

இதன் முந்தைய பாகங்கள் பகுதி 1 / பகுதி 2

Friday, February 3, 2012

மெரீனா - சினிமா விமர்சனம்


வர வர ராக்கி தியேட்டர் காரனுங்க சதி பண்றானுங்கப்பா, அனேகமா நான் முதல்ல படம் பார்த்து விமர்சனம் எழுத கூடாதுன்னு நம்ம சிபி அண்ணன் பண்ற சதின்னு உளவுத்துறை சொல்லுது. காலையில 11.30க்கு படம்னு டிக்கெட் கவுன்டர்ல சொன்னானுங்க. படத்தின் நீளம் 2.10 மணிநேரம், இடைவேளை 20 நிமிஷம்ன்னு வச்சாக்கூட 2 மணிக்கு வந்து எழுதலாம்னு நினைச்சா கருமம் புடிச்சவனுங்க 12 மணிவரைக்கும் உள்ளேயே விடல, 12.15க்கு தியேட்டரில் உட்கார்ந்தா விளம்பரமா போட்டு கொன்னுபுட்டு படத்தைப் போட்டானுங்க. படம் முடிஞ்சு வீட்டுக்கு வந்து பார்த்தா மணி 3.15 ஆகிடுச்சி. சே.

மெரீனா படத்தின் கதை என்ன?

ஊரில் படிக்க முடியாததால் வேலை பார்த்துக் கொண்டே படிக்கலாம் என சென்னைக்கு பிழைப்பு தேடி வரும் பக்கடா பாண்டி சில நாட்கள் அலைஞ்சி திரிஞ்சி மெரீனாவுல வாட்டர் பாக்கெட் விக்கிற வேலையை தொடங்குகின்றான். அங்குள்ள மற்ற சிறுவர்களின் நட்பு கிடைத்து அவர்களுடனே தங்குகின்றான். அவன் மற்றவர்களுடன் மெரீனாவில் சுண்டல் விற்றுக் கொண்டே படிக்க துவங்குகின்றான். அவ்வளவு தான் கதை. படத்தில் கதையென்று ஒன்றும் இல்லை. பலரின் சம்பவங்களே கதை. அவற்றில் பெரும்பாலானவை நிஜம் என்று நினைக்கிறேன்.

படத்தின் கதை பக்கடா பாண்டியை சுற்றியே வருகிறது. ஆனால் படத்தில் பல கேரக்டர்கள், அவர்களுடைய லட்சியங்கள், அவர்களின் வாழ்க்கை ஆகியவை மனதை தொடுகிறது.

அம்பிகாபதி என்ற கேரக்டரில் பக்கடா பாண்டி அருமையாக நடித்துள்ளார். அவருக்கு நடிப்பு நன்றாக வருகிறது. தனக்கு சொந்தமில்லை என்ற காரணத்தால் சந்திக்கும் அனைவரையும் நட்பு வைத்துக் கொள்ளலாமா என்று கேட்பதும், பிச்சை எடுக்கும் தாத்தாவிடம் பிச்சை எடுப்பதை விட சொல்வதும், தந்தையுடன் சென்று நடனமாடி பிச்சையெடுக்கும் சிறுமியிடம் நட்பாக இருப்பதும், சிவகார்த்திகேயனிடம் கதை கேட்பதுமாக அசத்தியிருக்கிறார்.

அடுத்ததாக சிவகார்த்திகேயன், அறிமுகமாகும் படத்திலேயே தியேட்டரில் கைதட்டல் அதிர்கிறது. மிக இயல்பாக அவர் வழக்கமாக விஜய்டிவியில் செய்யும் அதே நக்கலான கேரக்டர். தான் காதலிக்கும் ஓவியாவிடம் தவறாக பேசி மாட்டிக் கொண்டு ஒவ்வொரு முறையும் எதாவது சொல்லி சமாளிக்கும் போதும், மிகப் பெரிய பார்சலில் இரண்டு இட்லியும் கெட்டிச் சட்னியும் கட்டி காதலிக்கு பரிசாக கொடுக்கும் போதும் காதல் தோற்ற பிறகு காதலியை பழி வாங்கும் விதமாக ஆப்பு, ரிவிட்டு, பன்னாடைகளை பார்சல் செய்து சிரிக்கும் போதும் அசத்துகிறார்.

ஓவியா அப்படியே அக்மார்க் சென்னைப்பொண்ணுகளின் கதாபாத்திரம். சிணுங்கும் விதம், டக்கென காதலனை கழட்டி விடுதல், அவன் காசிலேயே செலவு செய்தல், கடைசியில் கணவனிடம் ஒன்னும் தெரியாத பெண்ணாக நடிக்கும் போதும் நன்றாக இருக்கிறது.

அந்த பிச்சை எடுக்கும் பெரியவர் நடிப்பில் கலக்கியிருக்கிறார். நானே அவர் இறந்து கிடக்கும் காட்சியில் சிறிது கண்கலங்கி விட்டேன். மற்ற சுண்டல் விற்கும் சிறுவர்கள், குதிரை ஒட்டும் தாடிக்காரன், தன் பெயர் அன்புச்செல்வன் ஐபிஎஸ் என்னும் பைத்தியக்காரன், கடைசியில் சிறுவர்களை வேலை செய்வதிலிருந்து மீட்டு வரும் அதிகாரியாக நடித்துள்ள ஜெயப்பிரகாஷ் ஆகியோர் அசத்தியுள்ளனர். போஸ்ட்மேனாக வரும் சித்தன் மோகன் பசங்களுக்கு பொங்கல் வாழ்த்து அட்டை அனுப்பும் போதும், தன் மகளின் கல்யாணத்திற்கு பத்திரிக்கை வைத்து கூப்பிடும் போதும் நெகிழ வைக்கிறார்.

முதல் பாதி படத்தின் கதைக்கு உள்ளே செல்லாமல் பசங்களின் ஆட்டம் பாட்டம், சிவகார்த்திகேயன் ஓவியா காதல் என கொண்டு செல்வது சற்று அயர்ச்சியை கொடுக்கிறது. இருந்தாலும் பார்க்கலாம்.

படத்தின் தத்துவ வசனம் உதாரணத்திற்கு

காதல்ங்கிறது காக்கபீ மாதிரி யார் மேல வேணும்னாலும் படும்.

பேன்டவன விட்டுப்புட்டு பீயை திட்டாத.

இது தான் கெடுக்குது. அது போல் நிறைய ஒன்னுக்கு, காட்சிகளாகவும் இருக்கிறது. இது போன்ற ஒரு சில குறைகளை ஒதுக்கி வைத்து விட்டு சிறுவயதில் வேலை செய்யும் பசங்களை படிக்க வைக்க வேண்டும் என்ற கருத்துடன் வந்துள்ள மெரீனாவை கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம்.

ஆரூர் முனா செந்தில்

Thursday, February 2, 2012

லால் பகதூர் சாஸ்திரியின் கடைசி நாள்...




வரலாற்று சிறப்பு மிக்க தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரத்தில், லால்பகதூர் சாஸ்திரி மாரடைப்பால் திடீரென்று காலமானார். ரஷியாவில் உள்ள தாஷ்கண்ட் நகரில், பிரதமர் சாஸ்திரியும், பாகிஸ்தான் அதிபர் அயூப்கானும் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றி பெற்று, 1966 ஜனவரி 10ந்தேதி இரவு சமரச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, டெல்லியில் இருந்த மூத்த மந்திரி நந்தாவுக்கு டெலிபோன் செய்து சாஸ்திரி பேசினார். இருவரும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

பின்னர் டெல்லியில் இருந்த தன் மனைவி லலிதா தேவியுடன் டெலிபோனில் பேசினார். "பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தது. நாளை டெல்லி திரும்புகிறேன்" என்று தெரிவித்தார். நள்ளிரவு 3 மணிக்கு (அப்போது இந்தியாவில் நேரம் இரவு 2 மணி) சாஸ்திரிக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. டாக்டர் வந்து பரிசோதித்தார். சாஸ்திரியின் நாடித்துடிப்பு தளர்ந்திருந்தது. டாக்டர் ஊசி போட்டார். மற்றும் பல டாக்டர்கள் வந்து சிகிச்சை அளித்தனர். எனினும் பலன் இல்லை. சாஸ்திரி மரணம் அடைந்தார். உயிர் பிரிவதற்கு முன் அவர் உதடுகள் "ஹரே ராம்" என்ற வார்த்தையை முணுமுணுத்தன. சாஸ்திரி மரணம் அடைந்ததை அறிந்து, பாகிஸ்தான் அதிபர் அயூப்கான், ரஷிய பிரதமர் கோசிஜின் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். விரைந்து சென்று சாஸ்திரி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது அயூப்கானும், ஜோசி ஜின்னும் கண் கலங்கினார்கள்.

11ந்தேதி காலை, தாஷ்கண்டில் இருந்து சாஸ்திரி உடல் விமானம் மூலமாக டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டது. சாஸ்திரி உடல் தாஷ்கண்ட் நகரில் இருந்து டெல்லிக்கு அனுப்பப்பட்ட காட்சி உள்ளத்தை உருக்குவதாக இருந்தது. சாஸ்திரியின் உடல் அவர் தங்கியிருந்த மாளிகையில், மூவர்ணக் கொடியால் போர்த்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. ரஷியப் பிரதமர் கோசிஜின் கண்ணீர் ததும்ப இறுதி மரியாதை செலுத்தினார். பின்னர் சாஸ்திரி உடல், ஒரு பீரங்கி வண்டியில் வைக்கப்பட்டு, தாஷ்கண்ட் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. வழி நெடுக சுமார் 10 லட்சம் பேர், சோகத்துடன் நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.

தாஷ்கண்ட் விமான நிலையத்துக்கு சாஸ்திரி உடல் கொண்டு செல்லப்பட்டதும், 21 பீரங்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. சாஸ்திரி உடல் வைக்கப்பட்டு இருந்த சவப்பெட்டி, விமானத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அயூப்கானும், கோசி ஜின்னும் தோள் கொடுத்து சுமந்தனர். சாஸ்திரியுடன் தாஷ்கண்ட் சென்றிருந்த மந்திரிகள் ஒய்.பி.சவான், சுவரண்சிங் ஆகியோரும் சவப்பெட்டியை சுமந்தனர். சாஸ்திரி உடலைப் பெற்றுக்கொள்வதற்காக, டெல்லி விமான நிலையத்தில் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கையில் மலர் வளையத்துடன் காத்திருந்தார்.

சாஸ்திரி மரணச் செய்தியை அறிந்ததும், காங்கிரஸ் தலைவர் காமராஜர் விமானம் மூலம் டெல்லிக்கு விரைந்தார். சாஸ்திரி உடல் வந்து சேருவதற்கு முன்பே டெல்லியை அடைந்து, விமான நிலையத்தில் காத்திருந்தார்.

மத்திய மந்திரிகள், தலைவர்கள், வெளிநாடுகளின் தூதர்கள், சாஸ்திரி குடும்பத்தினர் ஆகியோரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். சாஸ்திரி உடலுடன் தனி விமானம் பிற்பகல் 2.31 மணிக்கு டெல்லி வந்து சேர்ந்தது. சாஸ்திரியின் உடலை இறக்க, 6 ராணுவ அதிகாரிகள் விமானத்துக்குள் சென்றனர். சாஸ்திரியின் மகன் அரிகிஷணை மந்திரி சவான், விமானத்துக்குள் அழைத்துச்சென்றார். சாஸ்திரியின் உடலைப் பார்த்து, அரிகிஷண் கதறி அழுதார்.

சாஸ்திரி உடல், பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு அவர் வீட்டுக்கு கொண்டு போகப்பட்டது. கணவரின் உடலைப் பார்த்து லலிதா சாஸ்திரி கதறி அழுதார். பல லட்சக்கணக்கான மக்கள் இறுதி மரியாதை செலுத்தினர். மறுநாள், யமுனை நதிக்கரையில் நேரு சமாதி அருகே சாஸ்திரியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. "சிதை"க்கு, சாஸ்திரியின் மூத்த மகன் அரிகிஷண் தீ மூட்டினார். இறுதிச் சடங்குக்கு ரஷிய பிரதமர் கோசிஜின், அமெரிக்க துணை ஜனாதிபதி அம்ப்ரே, அமெரிக்க வெளிவிவகார மந்திரி டீன்ரஸ்க், ராணி எலிசபெத்தின் தூதராக மவுண்ட்பேட்டன் பிரபு, இங்கிலாந்து உதவிப்பிரதமர் பிரவ்ன், பாகிஸ்தான் வர்த்தக மந்திரி பரூக் மற்றும் பல அயல்நாட்டுத் தலைவர்கள் வந்திருந்தனர். இறுதி ஊர்வலத்தில் சுமார் 15 லட்சம் பேர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

ஆரூர் மூனா செந்தில்


Wednesday, February 1, 2012

ஆட்டோ சங்கர் - தூக்கு தண்டனை - வழக்கு விவரம் - பகுதி 2


சென்னை மந்தைவெளியை சேர்ந்த சம்பத், மோகன், கோவிந்தராஜ் ஆகிய 3 பேர் ஆட்டோ சங்கர் வீட்டுக்கு சென்றனர். அதன் பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. இதுபற்றி அவர்களது பெற்றோர்கள் 29.5.1988ல் போலீசில் புகார் செய்தார்கள். இது தொடர்பாக செங்கல்பட்டு டி.ஐ.ஜி.யாக இருந்த ஜாபர் அலி, சூப்பிரண்டு சுப்பையா ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஏறத்தாழ ஒரு மாத கால தீவிர விசாரணைக்கு பிறகு அதில் துப்பு துலங்கியது.

காணாமல் போன அந்த 3 பேரும் ஆட்டோ சங்கரின் விபசார விடுதிக்கு சென்றது தெரியவந்தது. இதனால் ஆட்டோ சங்கரையும், சில கூட்டாளிகளையும் பிடித்து வைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். "இந்த 3 பேர்களை பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது" என்று பொய் சொல்லி போலீசாரின் பிடியில் இருந்து ஆட்டோ சங்கர் தப்பித்துக்கொண்டான்.

மற்றொருபுறம் சங்கரின் கூட்டாளிகளான ஆட்டோ மணி, பாபு, ஜெயவேல் ஆகியோரிடம் விசாரணை நடத்த பல்லாவரம் இன்ஸ்பெக்டர் தங்கமணி நியமிக்கப்பட்டார். மணியும், ஜெயவேலுவும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர். ஆனால் பாபு போலீசாரிடம் உண்மையை கக்கிவிட்டான். சம்பத், மோகன், கோவிந்தராஜ், ரவி, சுடலை ஆகிய 5 பேரை கொலை செய்ததாக தெரிவித்தான். பிணத்தை வீட்டிற்குள் புதைத்ததாகவும் ஒப்புக்கொண்டான்.

சம்பத், மோகன், கோவிந்தராஜ், ரவி ஆகிய 4 பேர் பிணங்களையும் திருவான்மியூர் பெரியார் நகர் ரங்க நாதபுரத்தில் தெனாலி கால் வாய்க்கு அருகில் உள்ள 2 வீடுகளில் புதைத்துவிட்டதாக கூறினான். சுடலையின் உடலை எரித்து சாம்பலை மட்டும் காட்டிற்கு எடுத்துச்சென்று கடலில் கரைத்துவிட்டதாகவும் தெரிவித்தான்.

அவன் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பெரியார் நகருக்கு விரைந்து சென்று பிணங்களை தோண்டி எடுக்கும் வேலையில் ஈடுபட்டனர். ஒரு வீட்டின் 3வது அறையில் போலீசார் தோண்டினார்கள். 15 அடி ஆழமுள்ள குழியில் சம்பத், மோகன் ஆகியோரின் பிணங்கள் ஒன்றாக புதைக்கப்பட்டிருந்தன. 2வது அறையில் புதைக்கப்பட்டிருந்த கோவிந்தராஜனின் பிணத்தையும் போலீசார் வெளியே எடுத்தனர்.

அந்த வீட்டுக்கு பக்கத்தில் உள்ள இன்னொரு கூரை வீட்டில் பின்புறத்தில் ரவியின் பிணம் புதைக்கப்பட்டிருந்தது. அதையும் போலீசார் தோண்டி எடுத்தனர். 4 பிணங்களும் அழுகிப்போய் இருந்தன. அவர்கள் அணிந்து இருந்த உடைகள் மக்கிப்போகாமல் அப்படியேருந்தன. ரவி காக்கிச்சட்டையும், பாண்டும் அணிந்து இருந்தான். மற்ற 3 பேர்களும் சட்டையும் பேண்டும் அணிந்து இருந்தனர். உடல்கள் எலும்புக்கூடாக இருந்தன. அந்த இடத்திலேயே பிரேத சோதனை நடத்தப்பட்டது.

ஆரூர் மூனா செந்தில்


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...