எப்போதுமே பூபதி பாண்டியனுக்கு ஒரு இடத்தில் தவறு நடக்கும். தேவையில்லாத இடங்களில் எல்லாம் பாட்டை வைத்து கடுப்பேத்துவார். இந்த படத்திலும் சரியாக அதே விஷயத்தை செய்திருக்கிறார். தம்மு விக்கிறவன் நல்லா கல்லா கட்டுறான்.
அது மாதிரி ஒரு சின்ன கதாபாத்திரத்தில் மயில்சாமி வந்து விடுவார். அந்த காமெடியும் வாய்விட்டு சிரிப்பது போல் இருக்கும். இன்னும் சில காட்சிகள் மயில்சாமி வரமாட்டாரா என ஏங்க வைக்கும், இதிலும் அதே நடந்திருக்கிறது.
மலைக்கோட்டை படத்தில் ஒரு மெடிக்கல் படிக்கும் திருச்சி மாணவிக்கு ரவுடியால் பிரச்சனை வரும். வெளியூரில் இருந்து திருச்சிக்கு வரும் விஷால் காப்பாற்றி பரிட்சை எழுத வைப்பார். இந்த படத்தில் மெடிக்கல் படிக்க ஆசைப்படும் பள்ளியில் படிக்கும் திருச்சி மாணவிக்கு ரவுடியால் பிரச்சனை வரும். அதே போல் வெளியூரில் இருந்து வரும் விஷால் பள்ளி இறுதி பரிட்சையை எழுத வைத்து டாக்டராக்குகிறார்.
மத்தபடி இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஒரே மாதிரியான கதை தான். சில இடங்களில் திரைக்கதையை பட்டி டிங்கரிங் பார்த்து மாத்தியிருக்கிறார்கள். மலைக்கோட்டை பிடித்திருந்தால் பட்டத்து யானையும் உங்களுக்கு பிடிக்கும்.
சந்தானம் தான் படத்தின் வசூலுக்கு காரணமாக இருப்பார். படம் பாதி வரை எடுத்த பிறகு யார் கதாநாயகன் என்ற சந்தேகம் வந்திருக்கும் போல. இடைவேளைக்கு அரைமணி நேரம் முன்பும் அரைமணிநேரம் பின்பும் காணாமல் போகிறார். அந்த இடங்கள் தான் போரடிக்கிறது.
படத்தின் கதைனு சொல்லனும்னாக்கா மூணு கொலை சரவணன் சந்தானத்துக்கிட்ட சமையற்காரராக தன் நண்பர்கள் நால்வருடன் சேர்கிறார். வந்த இடத்தில் பிரச்சனை ஏற்பட திருச்சி இடம் பெயர்கிறார்கள். வந்த இடத்தில் ஹீரோயினுடன் காதல் ஏற்படுகிறது.
வில்லன் ஒருவன் ஹீரோயினை அடைய முயற்சிக்க ஏகப்பட்ட அடிதடிகள் கொஞ்சம் காமெடி சேர்த்து வில்லன்களை வீழ்த்தி விட்டு காதலியை கைப்பிடிக்கிறாரா என்பதை சந்தானத்தின் உதவியுடன் கொஞ்சமே கொஞ்சம் பார்க்க முடியுமாறு சொல்லியிருக்கிறார்கள்.
மலைக்கோட்டைக்கு பிறகு சுமாரான வெற்றி கூட விஷாலுக்கு வரவில்லை. அந்த ரெக்கார்டை இந்த படம் தட்டி உடைக்கப் பார்த்து இருக்கிறது.விஷாலும் விஜய் மாதிரி நடனமாடுகிறார். சந்தானத்துடன் சேர்ந்து கிச்சு கிச்சு மூட்ட முயற்சிக்கிறார். ஆனால் பத்தவில்லை.
இந்த படத்திற்கு இந்த பொண்ணு எதற்கு என்று தான் தெரியவில்லை. முகத்தில் களையில்லை. கடாமுடான்னு முகத்தின் அமைப்புகள் இருக்கின்றன. மிகவும் ஒல்லியாக வேறு இருக்கிறார். தமிழனுங்களுக்கு கொஞ்சம் கொழுக் மொழுக்குன்னு இருந்தாத்தான் பிடிக்கும், இனி தேறாது.
ரொம்ப புகழ்ந்தாலும் வேற வழியில்லாமல் சந்தானம் தான் படத்தை சந்தோஷமாக துவக்கி வைத்து முடித்தும் வைக்கிறார். ஆனால் சில காமெடிகள் கடுப்பேத்துகிறது. குரூப் டிஸ்கசனில் கவனம் செலுத்துங்க சந்தானம் சாரே.
பாடல்கள் இரண்டு முன்பே கேட்டிருந்ததால் பார்க்க வைக்கிறது. மற்றபடி இசை சொல்லிக் கொள்வது போல் ஏதும் இல்லை. நடனமும் அப்படித்தான்.
படத்தில் கார்த்திக் சபேஷூக்கு காமெடி நன்றாக வருகிறது. வாய்ப்புகள் சரியாக அமைந்தால் தனியாவர்த்தனம் செய்து நல்ல காமெடியனாக வருவார் என்று தோன்றுகிறது. நண்டு ஜெகனை வீணடித்து இருக்கிறார்கள்.
படம் ஆவரேஜ் ஹிட் தான். டிரெய்லரில் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பினை படம் பூர்த்தி செய்யவில்லை.
ஆரூர் மூனா செந்தில்

பூனை...?
ReplyDeleteஹி ஹி ஆமாம் தனபாலன்
Deleteஅப்படியா...???
ReplyDeleteஆமாங்கோ
Deleteஇனி படத்தை பார்த்துட்டு கொஞ்சம் சீக்கிரம் விமர்சனம் போட்டால் பரவாயில்லை . ஏன்னா உங்க விமர்சனம் படிச்சுட்டு நிறைய மொக்க படத்துக்கிட்டுருந்து தப்பிச்சுருக்கேன் ஆனால் இந்த விமர்சனம் லேட்டா வந்ததால நான் படத்தை பார்த்து தொலைச்சிட்டேன் . படம் எடுக்குறதுக்கு கதையே இல்லாம தன்னோட படத்தை தானே ரீமேக் பண்ணிண டைரக்டர் பூபதிபாண்டியனாத்தான் இருக்கும் அதுவும் .இவ்வளவு சீக்கிரத்தில்
ReplyDeleteஇல்லீங்க. ஒரு மருத்துவ வேலையாக பாண்டிச்சேரி வந்திருக்கிறேன். அதனால் முதல் காட்சி பார்க்கமுடியவில்லை.
Deleteபாண்டிசேரியில மருத்துவ வேலையா....???? மத்தபடி ஒன்னும் விசேஷம் ஒன்னும் இல்லையா...????
Deleteஅட சத்தியமா இல்லீங்க, அப்பாவுக்கு உடம்பு சரியில்ல, மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது.
Deleteஅது மாதிரி ஒரு சின்ன கதாபாத்திரத்தில் மயில்சாமி வந்து விடுவார். அந்த காமெடியும் வாய்விட்டு சிரிப்பது போல் இருக்கும். இன்னும் சில காட்சிகள் மயில்சாமி வரமாட்டாரா என ஏங்க வைக்கும், இதிலும் அதே நடந்திருக்கிறது.
ReplyDelete.........நல்ல காமெடி செய்கிறார்...இந்தப் படம் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கும் என்றே நினைக்கிறேன்
ஆமாம் நன்றி முத்தரசன்
Deleteஇதல்லாம் நாங்க ஒத்துக்க மாட்டோம் அமாம் படம் பாக்க போன கதை என்னாச்சி ஏன் எழுதலா ?
ReplyDeleteதனி பதிவா போட்டுடுறனே நண்பா
Deleteவிஷால் முகத்தைப் பார்த்தாலே எரிச்சலா இருக்கு....படம் ஊத்திக்குச்சா ஹா ஹா ஹா ஹா....!
ReplyDeleteசுமார் தான், நன்றி மனோ
Deleteநேத்து தான் இந்த கொடுமையை போயி பார்த்தேன் அண்ணே மலைகோட்டை எவ்வளவோ தேவலாம் பூபதி பாண்டியன் தேவ இல்லாம இப்படி எடுபதர்க்கு பதில் திருவிளையாடல் ஆரம்பம், காதல் சொல்ல வந்தேன் இதுபோல முயற்சிக்கலாம்
ReplyDeleteசரியா சொன்ன தம்பி
Deleteமச்சி காத்திருந்தேன் உங்க முதல் விமர்ச்சனத்தை பார்க்க... சரி நாளைக்கு வேற படத்துக்குத்தான் போகனும் போல...
ReplyDeleteமச்சி அப்பா எப்படி இருக்கார்....
நன்றி மச்சி, அப்பாவுக்கு தேவலாம். டிஸ்சார்ஜ் பண்ணியாச்சி
Deleteதேறாது...தேறாது...தேறவே தேறாது. படம் எடுங்கடான்னா பப்படம் எடுக்குறாங்ய.. அய்யய்யோ மறுபடியும் பாட்டா..ன்னு தியேட்டர்ல எல்லாறும் கதறுனது காதுல இன்னமும் இருக்கு. அப்புறம் ஹீரோயின்.. ஸ்ஸோஸோஓஓஒ. இதெல்லாம் நடிக்கலைன்னு யார் அழுதா? தண்ணியடிக்காதவன்கூட வாந்தி எடுக்குறது கேரண்டி. ஒரே ஆறுதல் சந்தானம்தான். “கலர் ஜெராக்ஸ் எடுத்த காட்ஸில்லா மாதிரி”ன்னு சொல்லும்போது உண்மையிலேயே அந்தாளு மூஞ்சி அப்படித்தான் தெரியுது.
ReplyDeleteசரியாக சொன்னீங்க, நன்றி கார்த்திகேயன்
DeleteMokka padam.songs konjam paravalla
ReplyDelete