சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, April 3, 2012

பஞ்சேந்திரியா 03/04/2012

பெட்ரோல் விலை உயர்த்தப்படுமா?

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அடம் பிடிக்கின்றன. மத்திய அரசு விலையை ஏற்ற விடாமல் செய்கிறது. இன்றைய நிலையில் டீசலினால் ஒரு லிட்டருக்கு ரூ.16.16 ம், சமையல் எரிவாயுவினால் ரூ.570.50 ம் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதாக தெரிகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் பெட்ரோலை ஒரு லிட்டருக்கு ரூ.7/- ஏற்றினால் தான் நஷ்டம் சரியாகும் என்று தெரிகிறது. ஆக இந்த முறை கடுமையான விலை உயர்வினால் நடுத்தர வர்க்கம் மிகக்கடுமையாக பாதிக்கப்படும் என்பது மற்றும் உறுதி. மத்திய அரசு கலால் வரியாக மட்டும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 14.78/- ஐ பெறுகிறது. இவனுங்க இது போன்ற சூழ்நிலையில் கலால் வரியை சற்று குறைப்பதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும், செய்வானுங்களா.

----------------------------------------------

சென்னையில் குளிப்பவர்கள்

தற்போது எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் மூலம் சென்னையின் சில சுவையான விவரங்கள் தெரிய வருகின்றன. சென்னை நகரில் உள்ள 95.6 சதவீத வீடுகளில் முழுமையான குளியலறை உள்ளது. மேல்கூரையில்லாத குளியலறைகள் 1.4 சதவீதம் வீடுகளில் உள்ளன. குளியலறையே இல்லாத வீடுகள் 3 சதவீதம் மட்டுமே. மற்ற ஊர்களை விட சென்னையில் தான் தினமும் குளி்ப்பவர்கள் அதிகமுள்ளனர் என தெரிய வருகிறது. அதுபோல் சென்னை நகரில் உள்ள 94.3 சதவீத வீடுகளில் சமையலறை உள்ளது. சமையலறை இன்றி சமைப்பவர்கள் 4.8 சதவீதம் பேர். வீட்டிலேயே சமைக்காதவர்கள் 0.4 சதவீதம் பேர் மட்டுமே. இந்தியாவிலேயே குளிப்பதிலும் சமைப்பதிலும் சென்னைவாசிகள் தான் முன்னணியில் உள்ளனர். அருமையான கணக்கெடுப்பு, வெளங்கிடும்.

------------------------------------------------

எங்கள் ஊரின் பெருமை



------------------------------------------------

மீண்டும் தமிழ்நாட்டில் பரவும் பன்றிக் காய்ச்சல்

மீண்டும் தமிழ்நாட்டில் AH1N1 என்னும் வைரஸ் மூலம் உருவாகும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்நோய் சாதாரணமாகவும், சில வேளைகளில் தீவிரமாகவும் பாதிக்கும். முக்கியமாக வயதானவர்கள், சிறுகுழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு மற்றும் கல்லீரல் நோய் இருப்பவர்களுக்கு தீவிரமாக உடல் நிலையை பாதிக்கக்கூடும். காய்ச்சல், தொண்டை வலி, இருமல், உடல் வலி ஆகியவை இந்த நோய்க்கான அறிகுறியாகும். இந்த அறிகுறி காணப்படும் நபர்கள் காய்ச்சல் குணமாகும் வரை வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும். அருகில் உள்ள மருத்துவமனையை அணுகி சரியான சிகிச்சையை பெற வேண்டும். தும்மல் மற்றும் இருமலின் போது கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும். தினமும் நான்கு அல்லது ஐந்து முறை கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும்.

------------------------------------------------

இந்த வார புகைப்படம்


------------------------------------------------

சச்சின் விலகல்

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து சச்சின் விலகியுள்ளார். ஹர்பஜன் சிங் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நான்கு முறை கேப்டனாக இருந்தும் ஒரு முறை கூட சச்சினால் கோப்பையை பெற்றுத்தர முடியவில்லை. ஆனால் கடந்த முறை சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஹர்பஜன் கேப்டனாக இருந்து கோப்பையை பெற்றுத் தந்தார். எனவே தான் சச்சினை தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுமாறு கட்டாயப்படுத்தியாக தெரிய வருகிறது. அடப்பாவிகளா, எப்படியெல்லாம் செண்ட்டிமென்ட் பாக்குறானுங்கப்பா.

--------------------------------------------------

தந்தையின் உடல்நலம்

என் தந்தைக்கு நீண்ட நாட்களாக மலக்குடலில் பிரச்சனை இருந்து வந்தது. அவர் மூலம் (Piles) என்று சொல்லி அதற்காக மட்டும் மருந்து எடுத்து வந்தார். பிரச்சனை தொடரவே மீண்டும் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று சொல்லி தஞ்சாவூரில் உள்ள ரோகிணி மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் மற்றும் ஸ்கோப்பி எடுத்துப் பார்த்ததில் கட்டி இருப்பது தெரிய வந்தது. எனவே அவருக்கு நாளை மறுநாள் தஞ்சையில் ஆபரேசன். இன்றிரவு சென்னையிலிருந்து புறப்படுகிறேன். மீண்டும் சென்னை வர 15 நாட்களாகும். இடையில் நான் பார்த்தாக வேண்டும் என்று எதிர்ப்பார்க்கும் சகுனி மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் வந்தால் மட்டும் விமர்சனம் எழுதுவேன். உணவு உலகம் சங்கரலிங்கம் அய்யா வீட்டு திருமணத்திற்கு சென்று அதன் பிறகு சென்னை திரும்ப உத்தேசம். அதுவும் சிதம்பரத்திலிருந்து நாய்-நக்ஸ் நக்கீரனுடன் இணைந்து திருநெல்வேலி பயணம், திருமணம் முடிந்து திரும்பி வரும் வரை அவருடன் தான். அதை நினைத்தால் தான் வயித்தை கலக்குகிறது. எனக்கு மட்டும் தான் சோதனையா, அட ஆண்டவா.

--------------------------------------------------

இந்த வார பலசாலி



------------------------------------------------

இந்த வார மொக்க கவிதை

காதல் ! காதல் !
காதல்
ஒரு கழட்டிப் போட்ட செருப்பு !
சைஸ் சரியா இருந்தா
யார் வேணும்னாலும்
எடுத்து மாட்டிக்கலாம் !


ஆரூர் மூனா செந்தில்


6 comments:

  1. Ungal thanthai....
    Nalamudan......
    Vaazhattum.....

    Ellaam nallapadiyaaga.....
    Mudium....

    ReplyDelete
  2. செந்தில் தம்பி அவர்களுக்கு ,
    இன்றுதான் தங்களின் வலைபூ பற்றி ஆனந்த விகடனில் படித்தேன். ( நான் தற்பொழுது கத்தாரில் பொறியாளராக வேலை பார்க்கிறேன் ). உடனே தங்கள் வலைபூவிற்கு சென்று , 4 மணி நேரம் தங்கள் செய்திகளை படித்தேன் . நேரம் போனதே தெரியவில்லை. ஆனந்த விகடனில் வட்டியும் -முதலும் எழுதும் ராஜு முருகன் போல் தங்கள் எழுத்து நடை உள்ளது . வாழ்த்துக்கள் தம்பி ( என் வயது 36 என்பதால் தம்பி ).

    - கணேசன்

    ReplyDelete
  3. /// NAAI-NAKKS said...

    Ungal thanthai....
    Nalamudan......
    Vaazhattum.....

    Ellaam nallapadiyaaga.....
    Mudium.... ///

    நன்றி நக்கீரன்

    ReplyDelete
  4. /// Nesan said...

    செந்தில் தம்பி அவர்களுக்கு ,
    இன்றுதான் தங்களின் வலைபூ பற்றி ஆனந்த விகடனில் படித்தேன். ( நான் தற்பொழுது கத்தாரில் பொறியாளராக வேலை பார்க்கிறேன் ). உடனே தங்கள் வலைபூவிற்கு சென்று , 4 மணி நேரம் தங்கள் செய்திகளை படித்தேன் . நேரம் போனதே தெரியவில்லை. ஆனந்த விகடனில் வட்டியும் -முதலும் எழுதும் ராஜு முருகன் போல் தங்கள் எழுத்து நடை உள்ளது . வாழ்த்துக்கள் தம்பி ( என் வயது 36 என்பதால் தம்பி ).

    - கணேசன் ///

    தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி கணேசன் அண்ணே.

    ReplyDelete
  5. ///அதனால் இனிமேல் வாரம் ஒரு முறை ஐந்து செய்திகளுடன் கூடிய பஞ்சேந்திரியா உண்டு.///
    அதை விட செய்தி அதிகமா இருந்தாலும் நல்லா இருக்கு....

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...