சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, July 15, 2013

பஞ்சேந்திரியா - ஏக் காவுன் மே ஏக் கிஸான் ரஹ தாத்தா

எல்லோரும் ஏதாவது ஒரு ஆங்கில வார்த்தையை உச்சரிக்கும் போது சிரமம் ஏற்படலாம். ஒரு சிலர் தமிழ் வார்த்தைகளுக்கே ததிங்கிணத்தோம் போடுவர். நானும் இது போல் சிக்கி தடுமாறுபவர்கள் பலரை பார்த்திருக்கிறேன்.

எனக்கு கூட ஒரு வார்த்தையில் தந்தியடிக்கும். அது எக்ஸ்கியூஸ் மீ. தனியாக அமர்ந்து பலமுறை வாய்விட்டு சொல்லிப் பார்த்து இருக்கிறேன். அப்போது எல்லாம் சரியாக வரும் அந்த வார்த்தை பொது இடத்தில் அதுவும் முக்கியமாக ஏதாவது ஒரு பெண்ணைப் பார்த்து சொல்ல வேண்டியிருந்தால் எப்படி முக்கினாலும் எச்சூச் மீ என்று தான் வரும்.

நானும் எத்தனையோ முறை இந்த வார்த்தைக்காக பல்பு வாங்கியிருக்கேன். இன்று கூட ஒரு மருத்துவமனையில் ஒரு பெண்ணைப் பார்த்து சொல்ல முயற்சிக்கும் போது எச்சூச் மீ என்று தான் வந்தது. அடங்கொன்னியா, நமக்கு நாக்குல வசம்ப வச்சித்தான் தேய்க்கணும் போல.

இதற்கு இணையான ஒரு சம்பவம். நான் இதற்கு முன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். அந்த நிறுவனத்தின் சென்னை கிளைக்கு பொது மேலாளராக வந்தவர் ஒரு சட்டம் இயற்றினார். அனைவரும் உடனடியாக ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு மாதத்திற்கு பிறகு அனைவரும் ஹிந்தியில் மட்டுமே பேச வேண்டும். தவறிப் போய் தமிழில் பேசினால் ஐநூறு ரூபாய் அபராதம் என்று. ஹந்திக்காரன் எல்லாம் எங்களை கலாய்த்துக் கொண்டு இருக்க தமிழ் ஆட்கள் எல்லோரும் ரெபிடெக்ஸ் ஹிந்தி ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் வாங்கி நாள் முழுக்க படிக்க ஆரம்பித்தனர்.

என்னுடன் அண்ணாதுரை என்றொருவர் வேலை பார்த்து வந்தார். அவருக்கு இந்த விஷயத்தில் உடன்பாடே இல்லை. இருந்தாலும் மற்றவர்கள் பார்க்கும் போது "ஏக் காவுன் மே ஏக் கிஸான் ரஹ தாத்தா" என்று சத்தம் போட்டு படிப்பது போல் பாவ்லா காட்டுவார்.

ஒரு மாதத்திற்கு பிறகு அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் தேர்வு நடந்தது. மேலாளர் ஒவ்வொருவராக கூப்பிட்டு இந்தியில் கேள்வி கேட்பார். சரியாக பதில் சொன்னவர்களை பாராட்டி அனுப்பினார்.

சொல்லத் தெரியாமல் திணறியவர்களுக்கு 500 அபராதம் போட்டு அனுப்பினார். கடைசி நிமிடம் வரை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அண்ணாதுரை ஒரு நொடி டக்கென யோசித்து தெரியாது என்ற வார்த்தைக்கு மாலும் நஹி என்று கேட்டு தெரிந்து கொண்டார்.

அவரது முறையும் வந்தது உள்ளே சென்றதும் மேலாளர் கேள்வியை தொடங்கினார், அது

மேலாளர் : தேரா நாம் கியா ஹை

அண்ணாதுரை : மாலும் நஹி சாப்

மேலாளர் : (பேனாவைக் காட்டி) ஏ க்யா ஹை

அண்ணாதுரை : மாலும் நஹி சாப்

மேலாளர் : ஏ ஷெகர்கா நாம் க்யா ஹை

அண்ணாதுரை : மாலும் நஹி சாப்

மேலாளர் : எஹா தேரா மாலிக் கோன் ஹை

அண்ணாதுரை : மாலும் நஹி சாப்

இன்னும் பத்துக்கும் மேற்பட்ட கேள்விகளை மேலாளர் கேட்டார். எல்லாவற்றிற்கும் பதில் மாலும் நஹி சாப் தான்.

ஒரு கட்டத்தில் கடுப்பாகிப் போன மேலாளர் தமிழில் திட்ட ஆரம்பித்து விட்டார். திட்டி முடித்ததும் "நான் தமிழில் பேசி விட்டேன். அதற்காக பைன் இந்தா ஐநூறு ரூபாய்" என்று கொடுத்து அனுப்பி விட்டார்.

அதன் பிறகு அலுவலகத்தில் இருந்து அந்த சட்டமே எடுக்கப்பட்டு விட்டது. தமிழனா கொக்கா

--------------------------------------

பங்காளிகள்


---------------------------------------

நம்மளை விட வயதில் சிறியவர்கள் நம்மை விட பெரிய போஸ்ட்டுக்கு வருவதால் ஏற்படும் இயலாமையை தவிர்க்க முடியவில்லை. எங்கள் தொழிற்சாலைக்கு புதியதாக ஒரு டெபுடி சிஎம்ஈ வந்துள்ளார். வயது முப்பதுக்குள் தான் இருக்கும். ஐஆர்எஸ் பாஸ் பண்ணி இந்த உத்யோகத்திற்கு வந்துள்ளார். ஆறாயிரம் தொழிலாளர்களுக்கும் அவரே உயரதிகாரி. அவரை பார்த்ததிலிருந்து காதில் புகையாக வந்துக் கொண்டுள்ளது

# அதுக்கு முதல்ல ப்ளஸ்டூவை பாஸ் பண்ணியிருக்கனும்டா வெண்ணை - மைண்ட் வாய்ஸ்

---------------------------------------

நம்ம நக்கீரன் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர்


-----------------------------------------

மூன்று நாட்களுக்கு முன்பு ஐசிஐசிஐ வங்கியில் ஒருவருக்கு பணம் கட்ட வேலையின் நடுவே சென்றிருந்தேன். உடனடியாக திரும்ப வேண்டிய சூழ்நிலை. பணம் கட்ட காத்திருந்தவர்கள் நாலுபேர், கவுண்ட்டர்கள் 7 ஆனாலும் அரைமணிநேரம் வரை என் நம்பர் வரவேயில்லை.

உள்ளே எட்டிப் பார்த்தால் கேஷியர் செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டு இருந்தார். வேலைநேரத்தில் செல்போன் வேறு வெளங்கிடும் என நினைத்துத் கொண்டேன். ஒரு வழியாக என் நம்பர் வந்ததும் பணம் கட்ட செலானை கொடுத்தேன்.

அந்த இந்திக்கார அம்மிணி என்னிடம் பேங்க் அக்கவுண்ட் ஒப்பன் செய்யச் சொல்லி கவுன்சிலிங் செய்து கொண்டே பணத்தை பெற்றுக் கொண்டு கவுண்ட்டர் செலானை கொடுத்தது.

என் அவசரத்திற்கு வேகவேகமாக வந்து வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். தெரு தாண்டுவதற்குள் போன் வந்தது. அழைத்தது அந்த பேங்க் அம்மிணி. தவறு நடந்து விட்டது உடனே வங்கிக்கு வரவும் என்று சொன்னார்.

கடுப்புடன் திரும்பி வங்கிக்கு சென்றால் அந்த அம்மிணி என்னுடன் பேசிக் கொண்டே அக்கவுண்ட் நம்பரை தவறுதலாக அடித்து விட்டு இருக்கிறார். வேறொருவருக்கு பணம் சென்று விட்டது.

மேலாளருக்கு தகவல் தெரிவித்து டெபிட் ஸ்டேட்மெண்ட், கிரெடிட் ஸ்டேட்மெண்ட் எல்லாம் போட்டு அடுத்தவன் அக்கவுண்ட்டிலிருந்து பணத்தை எடுத்து என் நண்பன் அக்கவுண்ட்க்கு கட்டி முடிப்பதற்குள் கூடுதலாக அரைமணிநேரம் கடந்திருந்தது.

# எனக்கு மட்டும் ஏண்டா இந்த மாதிரியே நடக்குது. என்னவோ போடா மாதவா.

ஆரூர் மூனா செந்தில்

37 comments:

  1. எச் கிஸ் மீ என்று சொல்லாத வரையில் சந்தோசம்...

    காதில் புகை வருவதால்... முதல் படம் ஆறுதலுக்கா...? ஹா... ஹா...

    அம்மிணியாக இருந்ததால் தப்பித்தார்கள்...!...?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா நன்றி தனபாலன்

      Delete
  2. எனக்கும் எக்ச்சூஸ் மீ....

    ReplyDelete
    Replies
    1. நீயும் என் தோழனே.

      Delete
  3. அலுவலகத்தில push /pull பல்பு வாங்கினதில்லையா நீங்க? நான் கரெக்டா முக்கியமான, யாராவது ஆக்களுக்கு முன்னால வாங்கிடுவேன்! :-)

    ReplyDelete
    Replies
    1. உண்டு உண்டு, எனக்கும் இந்த மறதி உண்டு. சில சமயம் கதவின் மீது கை வைத்து சில நொடிகள் யோசித்து Push / pull வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டுபிடித்தே கதவை நகர்த்துவேன். நன்றி நண்பா.

      Delete
    2. me too, will stop for a while before push/pull :(

      Delete
    3. நன்றி அறிவு

      Delete
  4. எச்சூஸ் மீ... ஏக் காவ் மே எக் கிஸான் ரகுதாத்தா...

    ReplyDelete
    Replies
    1. ஏனுங்கோ அது ரகுவோட தாத்தா, இது ரகதாத்தா, ரஹ ரஹ, ஹ ஹ, வெளங்கிடும். அடுத்த ஹிந்தி புரொபசர் தயாராகிறார் போல இருக்கு.

      Delete
  5. பாஸ் உங்களுக்கு இங்லீஸில excuse me தான் பிரச்சனை, எனக்கு இந்த இங்கிலீஸே பிரச்சனை.

    ReplyDelete
    Replies
    1. பாஸ் நீங்க எங்க குரூப், இந்த குரூப்ல ஏகப்பட்ட பேரு இங்க உலாவுறாங்க

      Delete
  6. நேற்று தான் நான் என் குழந்தைகளுடன் பேசும்போது ஸ்விம்மிங் என்பதற்கு ஸும்மிங் எண்டு சொன்னேன். வாரு வாரு என்று வாரிவிட்டார்கள்!

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீங்க. நாம தான் வளரணும்.

      Delete
  7. தெளிஞ்சா....இப்படித்தான்...ஆகும்.....

    அதுக்குதான்...தெளிய கூடாது-ன்னு சொல்லுறது....
    இனி நான் சொன்ன மாதிரியே..இருக்கவும்...

    யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....என் பக்கத்து வீட்டுக்காரன் எல்லாம் ஓடியே போயிட்டான்யா....பின்ன...பிளாக்கர் என்று தான் சொன்னேன்...!!!!!????

    ReplyDelete
    Replies
    1. உன் காத்துப் படாத வேற யாருய்யா இப்படி போன் பேசிக்கிட்டு இருப்பா. நீங்க சொன்னது மாதிரியே இருக்க முயற்சி பண்றேன்

      Delete
  8. Replies
    1. ஏக் மார் - இல்லை

      ஏக் மால்.....தோ துக்கடா

      Delete
    2. துக்கடானா சூடா போட்ட பக்கடாவாசார்

      Delete
    3. மால்னா ஷாப்பிங்மாலா, நீங்க வேற அது மார் தான்

      Delete
    4. சாக்கிரத சாமி.. யாரயோ பொளந்துருவே -ன்னு சொல்றார்.

      Delete
  9. kalakkal thalai innum sirichukitte irukkiren...!

    ReplyDelete
  10. யே பதிவு பகுத் அச்சா ஹை ! !

    மாப் கீஜியே ! ! மே ஹிந்தி நஹி ஜாந்தா ! !

    ReplyDelete
    Replies
    1. ஆப்கோ அச்சி தரப் ஹிந்தி ஜான்த்தாஹை

      Delete
  11. இது பாரின் கொளாபுரேசன் கம்பெனி எவனும் ப்ரெஞ்சிலதான் பேசோனும்,ப்ரெஞ்ச் தாடி வெச்சிக்கோனும்னு சொல்லியிருந்தா என்ன செஞ்சிருப்பீங்க?.. கொசக்ஸி பசப்புகள்..ஹா.ஹா..ஹா..

    ReplyDelete
    Replies
    1. ப்ரென்ச் கிஸ் முயற்சி பண்ணியிருப்பேன்

      Delete
  12. அண்ணே அந்த பங்காளிகள் படத்த தூக்குங்க. அந்த குரங்குக்கு பாருங்க எவ்ளோ கோவகோவமா வருதுன்னு!
    டிஸ்கி: ரெண்டு பதிவா வரவேண்டியத ஒரே பதிவாக முடித்துக்கொண்ட அண்ணன் ஆனா மூனா சேனா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அஜீஸ்

      Delete
  13. எனக்கு கூட ஒரு வார்த்தையில் தந்தியடிக்கும். அது எக்ஸ்கியூஸ் மீ. தனியாக அமர்ந்து பலமுறை வாய்விட்டு சொல்லிப் பார்த்து இருக்கிறேன். அப்போது எல்லாம் சரியாக வரும் அந்த வார்த்தை பொது இடத்தில்
    ..
    நானும் இந்த எச்சூஸ்மீ வார்த்தைக்காக இப்படி அவஸ்தை பட்டதுண்டு. யாராவது நின்னுட்டு இருந்தா மனசுல சொல்லிக்கிட்டே போயி, கொஞ்சம் நகருங்கன்னு சொல்லுவேன்

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ சேம் பிளட்

      Delete
    2. இன்னொரு வார்த்தை ஞாபகம் வந்தது.."எச்சுகுட்டிவ்" executive

      Delete
  14. நீங்க இங்கலி பீசுல ! பேசும்போது எனக்கும் நான் பேசும் சில வார்த்தைகள் (நண்பர்கள் ஓட்டுவது ) ஞாபகம் வருகிறது !

    டை வரு ... பெற்றோல்(betrol) .... என்ன பண்றது ஒவோருதருக்கும் ஓவ்வொரு பீலிங்

    ReplyDelete
  15. எனக்கு ஒரு கோவை நண்பர் இருந்தார். அவருக்கு ழா வரவே வராது. தமிழில் மட்டுமல்ல. ஆங்கிலத்திலும் zha என்று முடியும் வார்த்தைகள்/பெயர்களை உச்சரிக்கும்போதும் அப்படித்தான். கேரள நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய இருவரும் பணியாற்றியபோது அங்குள்ள Muvattpuzha, Alapuzha என்ற நகரங்களின் பெயர்களை முவாட்டுப்புச்சா, ஆலப்புச்சா என்று உச்சரிப்பது வேடிக்கையாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜோசப்

      Delete
  16. மாலும்நஹி சாப்//

    தமிழன்டா விட்ருவோமா என்ன ?

    முன்பு நான் வேலை பார்த்த ஹோட்டலில் மலையாளம் பேசினால் பத்து தினார் ஃபைன் போட்டு விடுவார்கள், மற்றபடி ஹிந்தி ஆங்கிலத்தில் பேசிக்கொள்ளலாம்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...