சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Wednesday, February 20, 2013

வாஞ்ஜூர் என்னும் கடவுள்பக்தன்

ஏற்கனவே படித்த மாதிரி இருக்கே என்று நீங்கள் நினைக்கக்கூடாது. ஏற்கனவே நான் எழுதியது வாஞ்சூர் பற்றி. இந்த கட்டுரை வாஞ்ஜூர் என்று அழைக்கப்படும் ஒரு தூய கடவுள் பக்தனைப் பற்றி.


இவனும் அதே வாஞ்சூரை சேர்ந்தவன் தான். ஆனால் பிழைப்பதற்காக நீடாமங்கலம் அருகில் இருக்கும் ஆதனூர் என்ற கிராமத்திற்கு வந்து செட்டிலானவன். என் தாத்தா ஊர் அது என்பதால் எனக்கு பழக்கமானவன் அவன். என்னை விட வயதில் பெரியவன்.

ஆள் நல்ல சிகப்பாக இருப்பான். நீண்ட நரைத்த முடி தாடி வைத்திருப்பான். எங்கள் தோட்டத்திற்கு அடுத்த தோட்டம் அவனுடையது. எல்லோரும் வயலில் நெல் போட்டிருந்தால் அவன் மட்டும் கரும்பு போடுவான். மற்றவர்கள் தாளடியில் கரும்பு போடும் போது அவன் மட்டும் நெல்லைப் போட்டிருப்பான்.

வயதில் பெரியவரை அவன் இவன் என்று பேசுகிறானே என்று யாரும் தப்பாக நினைக்க வேண்டாம். அவன் வயசு வித்தியாசம் பார்க்காமல் என் செட்டு நண்பர்களுடன் தான் வயலில் சாராயம் குடிப்பான். எங்களுடன் சேர்ந்து சைட் அடிப்பான். பிறகு எங்கிருந்து அவனை நான் மதிப்பது.


இந்த பதிவை நான் எழுதுவதற்கு காரணம் மேற்சொன்னது எல்லாம் அல்ல. அவன் கடவுள் பக்தி என்ற பெயரில் அடிக்கும் அட்டகாசத்தைப் பற்றி தான். இவனது குலதெய்வம் ஆதனூர் அருகில் உள்ள கீழப்பட்டு என்ற கிராமத்தில் இருக்கிறது. அதன் பெயரை நான் குறிப்பிட்டால் நான் அவன் சாமியை அவமதிக்கிறேன் என்று போஸ்டர் ஒட்டுவான்.

சொந்தமாக எழுதி போட்டால் கூட பரவாயில்லை, நாளிதழ்களில் வந்த விஷயத்தை எடுத்து தலைப்பு மட்டும் "மற்ற சாமி கும்பிடுபவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள்" என்று போட்டு போஸ்டர் ஒட்டுவான்.


அவன் போஸ்டரை படிக்கும் மற்றவர்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும். இவன் ஒரு வெளங்காதவன். சொந்த சரக்கில்லா காலி பெருங்காய டப்பா என்று. ஆனால் அவனது குலதெய்வத்தை கும்பிடும் சிலர் வந்து ஆமாம் பயங்கரவாதிகளுடன் பழகக்கூடாது என்று போஸ்டரில் எழுதி வைத்து செல்வார்கள்.

இவனுக்கு ஒரு குலதெய்வம் இருப்பது போல் தான் எனக்கும் இருக்கிறது. அவன் கும்பிடுவது போல் தான் நானும் கும்பிடுகிறேன். ஆனால் கீழப்பட்டில் இருப்பது மட்டும் சாமியாம். நெடுவாக்கோட்டையில் இருப்பது கல்லாம். என்ன கொடுமை சார் இது.

என்னுடன் எங்கள் குலதெய்வம் கோயில் இருக்கும் நெடுவாக்கோட்டைக்கு வருவான். சாமியாடி வந்து குறி சொல்லும் போது என் அருகில் வந்து இவன் மேல் சாமியே இறங்கவில்லை. நடிக்கிறான் என்று கலாட்டா செய்வான்.


அதே போல் நான் அவனது கோயில் கடாவெட்டுக்கு சென்று இதே போல் சாமியாடியை கலாய்த்தால் எங்கள் சாமியை திட்ட நீ யாரடா. வெளியில் போடா என்று கோயிலை விட்டே விரட்டுவான். என்னவோ இவன் தான் கோயிலுக்கு சொந்தக்காரன் மாதிரி.

உண்மையில் அந்த கோயிலின் நிர்வாகியே என் குடும்ப நண்பராக இருப்பார். அவரே இதனை பொருட்படுத்த மாட்டார். இவனோ கோயிலுக்கு போவதே திருவிழாக் காலங்களில் தான், இந்த காமெடி பீஸை நினைத்து எனக்கு பயங்கர சிரிப்பாக இருக்கும்.

சொந்த சரக்கு இருக்கிறவனே அமைதியாக இருக்கும் போது இவன் ஒரு காப்பிபேஸ்ட் போஸ்டர். இவனுக்கு எதுக்கு இந்த வீராப்புன்னு தான் தெரியலை. கருமம் புடிச்சவன் குளிச்சிருக்கவே மாட்டான். ஆனால் வெளியில் வரும்போது நல்லா செண்ட் அடிச்சு நெத்தியில் திருநீறு பட்டை அடித்து தான் வெளியில் வருவான்.

ஒரு முறை நாங்கள் எல்லாம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தோம். இந்த காமெடி பீஸு வந்து எங்களுடன் இணைந்து விளையாடியது. இவனது அணியில் ஆடியவர்கள் எல்லாம் ரன் அடித்து நல்ல ஸ்கோர் எடுத்திருந்தனர். ஆனால் நம்ம வாஞ்ஜூர் டக்அவுட் ஆகியிருந்தான்.

ஆனால் எங்களிடம் வந்து "நான் விளையாடியதால் தான் இவ்வளவு ஸ்கோர் எடுக்க முடிந்தது. நீங்கள் எல்லாம் தோற்கப் போகிறீர்கள்" என்று எகத்தாளம் பாடிக் கொண்டிருந்தான். நாங்கள் பேட்டிங் ஆரம்பித்ததும் ஆறு ஓவரிலேயே ரன்களை அடித்து ஜெயித்து விட்டோம்.

அப்பக்கூட தாங்கள் விளையாடிய அணி தோற்றது தெரியாமல், "நாங்கள் தான் ஜெயித்தோம், ஆனால் எதிரணியினர் எங்களை விட அதிக ரன்கள் எடுத்து தோற்றனர்" என்று போஸ்டர் ஒட்டிய அறிவாளி.

இவனது பிரச்சனையே இவனது குணாதிசியம் தான். இவனுக்கு கடவுள்பக்தி அதிகமாக இருக்கலாம். அதற்காக மற்றவர்கள் பக்தியில் குறைந்தவர்கள் என்று நினைப்பது அறிவீனம் என்று தெரியாதவன். அது மட்டுமில்லாமல் அடுத்தவர்கள் வீட்டு சுவரில் அனுமதியின்றி தங்கள் குலசாமி தான் உயர்ந்தது என்று போஸ்டர் ஒட்டி சென்று விடுவான்.

ஒரு முறை எங்கள் வீட்டு சுவற்றில் போஸ்டரை ஒட்டி விட்டு சென்றான். மறுநாள் நான் காண்டாகி அவனை வூடு கட்டியதெல்லாம் பெரிய கதை. நான் கூட தான் சாமி கும்பிடுகிறேன், அதற்காக பொதுவெளியில் வந்து நான் வீரனார் பக்தன் என்று நெத்தியில் பச்சைக் குத்திக் கொண்டு திரிவதில்லை.

யாரைப் பார்த்தாலும் ஜெய்ஸ்ரீராம் என்று கூறியே வணக்கம் சொல்லுவான். ஒரு முறை போதையில் அவனைப் பிடித்து "ஏண்டா படவா வணக்கம் என்று நல்ல தமிழில் சொல்லலாம் அல்லவா. எதுக்கு நான் இந்த பிரிவை சேர்ந்தவன் என்று மற்றவர்கள் அறிய ஜெய்ஸ்ரீராம் என்று சொல்கிறாய்" என்று ரைடு விட்டும் பார்த்து விட்டேன், திருந்த மாட்டேன் என்கிறான்.

பக்தியும் பசி போன்ற உணர்வு தான் என்பதை உணர்ந்து கொண்டால்  மற்றவர்களுடன் எந்த உரசலும் ஏற்படாது. இந்த அறிவு கூட இல்லாத இவனை வைத்துக் கொண்டு இனி காலம் தள்ளுவது ரொம்ப சிரமம் என்றே நினைக்கிறேன்.


ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : முதன் முறை இட்ட பதிவே போதும் என்று இருந்து விட்டேன். இது நான் எழுத வேண்டும் நினைக்கவேயில்லை. போன பதிவில் வாசக நண்பர் ரான் கண்ணா கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதப்பட்டுள்ளது.

54 comments:

  1. அண்ணே... !! அந்த மூஞ்சூறு சாரி சாரி வாஞ்சூரு முகத்த ஒரு தடவ பாக்கணும் போல இருக்கு...!!!?????

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக உங்களுக்காக போட்டோ எடுத்து அடுத்த பதிவுல போடுறேன் அன்பு

      Delete
  2. இவன் வாஞ்சூர் அல்ல டேஞ்சூர் !

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி நன்றி ராபின்

      Delete
  3. /// பக்தியும் பசி போன்ற உணர்வு தான் என்பதை உணர்ந்து கொண்டால்... ///

    சரியாக... மிகச் சரியாக புரிந்து வைத்துக் கொண்டுள்ளீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்

      Delete
  4. பாத்து அண்ணே ...இப்போ வந்து உங்க சாமிக்கு எதிரான ஆதாரங்களை போட்டு ....மேலும் அறிந்து கொள்ள சுட்டிகளை" சொடுக்கி "பாருங்கள்னு மறுமொழி போட போறான்

    ReplyDelete
    Replies
    1. உண்மை இருந்தா ஒத்துக்குவோம், பொய்யா இருந்தா ப்பூன்னு சிரிச்சிட்டு போயிடுவோம்.

      Delete
  5. இப்ப இந்த இடம் தான் மூத்திர சநதா.....????

    அப்ப கூட்டிட்டு வாரும்...

    ReplyDelete
    Replies
    1. வரலையே, என்னங்கண்ணா பண்றது.

      Delete
  6. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமானவர்கள்... அதைப்போல் இவரையும் நினைத்து துடைத்துப்போட்டு போய்க்கொண்டேயிருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா.

      Delete
  7. வாஞ்சூர் என்றால் காமெடி பீஸ் என்கிறீர்கள். ஆமோதிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா.

      Delete
  8. அந்த நோஞ்சூரை இன்னுமா விட்டு வைச்சிருக்கிறீங்க?

    ReplyDelete
    Replies
    1. நன்றி காட்டான்

      Delete
  9. எங்கப்பா போனாங்க "சுட்டி"ப் பயலுக..!;-)

    ReplyDelete
  10. worth இல்லாத சொரி நாய் அத build up கொடுத்து பெரிய ஆள் ஆக்க வேண்டாம் அண்ணா

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரான் கண்ணா.

      Delete
  11. என்ன செந்தில் சார் ஒண்ணும் பிரச்சனை இல்லையே. ரொம்ப கோவமா இருக்க மாதிரி தெரியுது

    ReplyDelete
    Replies
    1. என்னைப் போல் நிறையப் பேர் கருத்து சுதந்திரமில்லாமல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் நண்பரே.

      Delete
  12. ஆமாண்ணே, ரொம்ப சரிண்ணே....

    இதே மாரிக்கா எங்கூர்ல ஒருத்த"ரு" இருக்காருண்ணெ, அவு"ரு" பேரு கூட எதோ ஆனா வுல ஆரம்பிக்குமோ என்னவோ.... அவு"ரு" ஒரு நாளு, நாலு பிரண்ட்ஸ் கூட பப்ளிக்கா பேசிகிட்டு இருக்கும்போது ஒடம்புக்கு தெம்பூற்ற "டானிக்" குடிக்க அவுஹல வரச்சொன்னாருங்க.. அத கேட்டுகிட்டு இருந்த இன்னோருத்தரு, அந்த "டானிக்" மேட்டர அவுரு பிரண்ட்ஸ் கிட்ட பப்ளிக்கா சொன்னாருங்க... அதுக்கு அந்த "ஆனா"காரருக்கு வந்துச்சு பாருங்க கோவம், ப்ப்பா, என்னா கோவம்..... "தனி மனித சுதந்திரம்", "தனி மனித தாக்குதல்" அப்புடி இப்புடின்னு என்னென்னமோ சொன்னாருங்க, எதசொன்னாலும் கய்ய தட்டுற நம்ம பயலுவோ அதுக்கும் துள்ளி குதிச்சி மன்னிப்பெல்லாம் கேக்க சொன்னாங்கே.. ஒருவலியா, அந்த மேட்டரு முடிஞ்சுச்சு....

    இப்ப என்னடான்னா, அந்த ஆனா காரரு தெருவுல வாரவங்கே, போரவங்கே எல்லாம் கூப்ட்டு அவு"ரே" "தனி மனித தாக்குதல்" சும்மா ஒரு சாலிக்கு நடாத்திகிட்டு இருக்கா"ரு". அத ஏன்னு கேட்டாக்க, அவரயும் "அந்த லிஸ்ட்டுல" சேத்துடுதாரு... அத பத்தியும் எழுதுங்கண்ணே.. நாங்க எப்பயும் போல கய்ய தட்ட ரெடிண்ணெ...

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சஹா, ஆரம்பிங்க இத எதிர்பார்த்து தான் காத்திருந்தேன். இப்பக் கொஞ்சம் வேலையிருக்கிறது. நான் வெளியில் கிளம்புகிறேன். திரும்பவர லேட் நைட்டாகும். வந்து பதிலளிக்கிறேன். அதுவரை தோன்றிய வரை பின்னூட்டமிட்டு என்சாய் செய்து கொண்டு இருக்கவும்.

      Delete
    2. அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, அண்ணன் சஹா அவர்களும் ஒரு அவரச வேலையாக ஆகாய மார்க்கமாக இன்றே லண்டன் செல்லவிருப்பதால் அவரது பதிலை தந்தி மூலம் அனுப்பி நம்மை கவுரவிப்பார்... நன்றி.

      இப்படிக்கி,
      அண்ணனின் விழுதுகள்..

      Delete
    3. அன்பார்ந்த விழுதுகளே, வந்து விழுந்து வைக்கவும். நான் வந்து ப்ளாஸ்திரி போட்டு விடுகிறேன்.

      Delete
  13. செந்திலு காரு...

    கைல ""எதையாவது"" எடுத்து வச்சிக்கிட்டு தட்டினா....நல்ல வாசனையா இருக்கும்ல....அப்படியே நம்ம முகத்துலையும் தெறிக்கும்ல .....எனக்கு தெரியலை.....சொல்லிகொடும்....நானும் இப்ப வெளியில போய் வேய்ட்ஆ திரும்பி வரேன்....

    நீ வந்து எனக்கு ஒரு காலிங் பெல் அடி....பை....நவ்...

    ReplyDelete
    Replies
    1. ஏங்க, நான் ஒன்னும் சரக்கடிக்க போகலைங்க, எங்க அப்பா திருவாரூர் போகிறார், அவரை ரயில் ஏற்றி விட எழும்பூர் செல்கிறேன். வர 12 மணி ஆகும். அதுவரை நீங்களே வலைதளத்தை கவனித்துக் கொள்ளவும்.

      Delete
    2. மறக்காமல் அவருக்கு தண்ணி பாட்டல் வாங்கிகுடுத்து வழியனுப்பி வைக்கவும்.

      Delete
    3. கண்டிப்பா உங்க பேரை சொல்லி கொடுத்தனுப்புறேன்.

      Delete
  14. சஹா அண்ணனுக்கு லண்டன்ல கேக்ரான் மேக்ரான் கம்பெனில வேலையா

    ReplyDelete
    Replies
    1. ஒரு வேளை ஆப்பீசரா இருப்பாரோ.

      Delete
  15. Ayyanaare! Indhap payalai velangaathavanta irundhu kaappaaththu

    ReplyDelete
    Replies
    1. இந்த வெளங்காதவனா இல்லை அந்த வெளங்காதவனா?

      Delete
  16. Replies
    1. ஃபாலோவ அப்புறேன்

      Delete
  17. யாரைப் பார்த்தாலும் ஜெய்ஸ்ரீராம் என்று கூறியே வணக்கம் சொல்லுவான்.////

    ஹா ஹா மொத்தத்துல இந்தப் பேருல இருக்குறவங்க இம்சை தாங்க முடியல செந்தில்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்கோ, நன்றி மணி.

      Delete
  18. வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்... (From : http://blogintamil.blogspot.in/2013/02/4.html)

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன், இதோ பார்க்கிறேன்.

      Delete
  19. உங்கள் பதிவை படிக்கும் போது ஒன்று மட்டும் நன்றாக புரிகின்றது
    "வாஞ்சூரின் உடனடி தேவை கோயில் அல்ல நல்ல மனநல மருத்துவர்"

    ReplyDelete
    Replies
    1. நன்றி சொர்ணாக்கா.

      Delete
  20. வாஞ்சூரின் ஆன்மீக குரு பிஜே என்பவர் வாஞ்சூரை மத பணி என்று வெளியில் அனுப்பி விட்டு வாஞ்சூரின் மனைவிக்கு சகல உதவிகளும் (!!!!!!!!!!!!!!)செய்வதாக உறுதிப்படுத்தப்பட்ட தவல்கள் தெரிவிக்கின்றன.
    (பிஜே என்பவர் விஸ்வரூப பிஜே அல்ல)

    ReplyDelete
  21. சஹா தம்பி சவுதியில் சவூதி இளவரசருக்கு ................... கழுவி விடும் பணியில் இருப்பதால் அவருக்கு தண்ணி TANK வாங்கி அனுப்பி வைக்கப்படும்

    ReplyDelete
  22. "ஆள் நல்ல சிகப்பாக இருப்பான். நீண்ட நரைத்த முடி தாடி வைத்திருப்பான். "

    கண்ணில் எப்போதும் ஒரு வெறி இருக்கும். அதை விட்டு விட்டீர்கள்.

    சஹா தம்பி உன்னுடைய மதவெறி கூட்டத்துக்கு தண்ணி அடிக்காமலீயே வெறி பிடித்து தான் அலைந்து கொண்டு இருக்கின்றது

    ReplyDelete
  23. செந்தில், வாஞ்ஜூர் கோமாளியோட ஆட்டு தாடியை பார்த்து யாரோ ஆடுன்னு நினைச்சு அந்த பிரியாணி போட்டுத்ததா இல்ல நான் நினைச்சுட்டு இருந்தேன். ஆனா ஆடு எப்படியோ தப்பிச்சு எல்லா செவுதிளையும் வாந்தி எடுத்துகிட்டு இருக்கு.

    ReplyDelete
  24. "வயதில் பெரியவரை அவன் இவன் என்று பேசுகிறானே என்று யாரும் தப்பாக நினைக்க வேண்டாம். "

    வயசு கூடினவன் என்றால் பெரிய மனிதனா? நன் நடத்தையும், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க கூடியவனே பெரிய மனிதன். "

    இந்த வாஞ்சூர் அப்படியா??? கேடு கெட்டவன். நன் நடத்தை உள்ளதா??? இவன் ஒரு தேச துரோகி.

    இவனை எப்படி பெரிய மனிதன் என்று சொல்ல முடியும்.

    இவனுக்கு வக்காலத்து நாகூர் மீரான் வருவான். அவனுக்கு இருக்கு அப்புறம்?

    தூத்தேரி நாய்கள்

    ReplyDelete
  25. அந்த ஊர் ராசியோ அல்லது அந்த ஊர் தண்ணி ராசியோ தெரியல ..
    நிறைய பேரு இப்படிதான் சுத்திக்கிட்டு இருக்காங்க ... உங்க ப்ளாக் மேல இவ்விடம் இலவசமாக நறுக்கி விடப்படும் என்று ஒரு வாசகத்தை வைத்து கொள்ளலாம் .

    ReplyDelete
  26. ".. உங்க ப்ளாக் மேல இவ்விடம் இலவசமாக நறுக்கி விடப்படும் என்று ஒரு வாசகத்தை வைத்து கொள்ளலாம் ."

    நறுக்குவதட்க்கு ஏதாவது இருந்தால் .....................................

    ReplyDelete
  27. அத்துடன் வாஞ்சூர் தொடர் இத்துடன் நின்றுவிட கூடாது.
    தொடர வேண்டும் செந்தில் ..............

    ReplyDelete
  28. வாஞ்சூர் மாதிரியான மூதேவி ஒன்றின் பதிவு பற்றி தோழர் கரிகாலன் ஒரு பதிவு போட்டிருக்கின்றார்.படித்து பார்க்கவும் .....
    http://karikaalan.blogspot.com/2013/02/blog-post.html

    ReplyDelete
  29. அண்ணா நீங்க உண்மையிலேயே அதனூரா இல்ல சும்மா பதிவுக்காக அப்படி எழுதினீர்களா? ஏன் கேக்குறேன் என்றால், நீங்கள் அதனூராக இருக்கும் பட்சத்தில் நான் கூட உங்களுடன் ஒன்னா விளையாடி இருந்திருக்க வாய்ப்புண்டு (சிறு வயதில்). என் அப்பா, தாத்தா (அப்பாவோட அப்பா) எல்லாம் ஆதனூர் தான். அதே கோவில்வெண்ணி அடுத்துள்ள ஆதனூர். நேரம் கிடைக்கும் போது தங்களை அலை பேசியில் அழைக்கிறேன்.

    ReplyDelete
  30. வழக்கம் போல் ஆர்வத்துடன் படிக்க வந்த எனக்கு சிறிது ஏமாற்றமே.இது என் தனி பட்ட மன நிலையே.

    தவறு இருப்பின் தம்பியை மன்னிக்கவும்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...